கவனக்குறைவினால் ஏதோ தவறு நடந்து இங்கு ஏற்கனவே பதிந்த “வைத்தாமாநிதி” 20 மற்றும் 21 பகுதிகள் அழிந்திருக்கின்றன. அந்தப் பகுதிகளை மீண்டும் தட்டச்சிட சற்று சோம்பல். எனவே அவற்றை இங்கு படங்களாகக் கொடுத்திருக்கிறேன். யாரோ சிலர் இப்பகுதிகளை தொடர்ந்து சேமிப்பதாக அறிகிறேன். அவர்கள் அடியேனை க்ஷமிக்க வேண்டும்.
சனி, 24 மார்ச், 2012
வைத்தமாநிதி 22
நவநீத சோரம் முதலிய பால்ய லீலா வினோதங்கள்
.
“ தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள், உறிமேலைத் தடா நிறைந்த வெள்ளிமலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிவிட்டு கள்வன் உறங்குகின்றான், வந்து காண்மின்கள்; கை எல்லாம் நெய், வயிறு பிள்ளை பரம் இன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும், பேதையேன் என் செய்கேன் என் செய்கேனோ”
வெள்ளி, 23 மார்ச், 2012
வைத்தமாநிதி 19
உரலில் கட்டுண்டு மருதமரம் வீழ்த்தியது
ஆங்கு ஒருநாள்,
ஆய்ப்பாடி சீர்ஆர் கலை அல்குல் சீர்அடி
செந்துவர்வாய் வார்ஆர் வனமுலையாள்,
மத்து ஆரப் பற்றிக்கொண்டு,
ஏர்ஆர் இடை நோவ, எத்தனையோ போதும் ஆய்,
சீர்ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர்ஆர் நுதல் மடவாள் வேறுஓர் கலத்து இட்டு,
நார்ஆர் உறி ஏற்றி நன்கு அமையவைத்ததனைப்
போர்ஆர் வேல்கண் மடவாள் யசோதை போந்தனையும்,
வளர்க்கின்ற செய்த்தலை நீலநிறத்துச் சிறுபிள்ளை
பொய் உறக்கம் ஓராதவன்போல் உறங்கி,,அறிவு உற்று,
தார்ஆர் தடம்தோள்கள் உள்அளவும் கைநீட்டி,
ஆராத வெண்ணெய் விழுங்கி, அருகு இருந்த மோர்ஆர் குடம் உருட்டி,
முன்கிடந்த தானத்தே ஓராதவன்போல் கிடந்தானைக் கண்டு,
அவளும் வாராத்தான் வைத்தது காணாள்; வயிறு அடித்து,
”இங்கு ஆர்ஆர் புகுவார் ஐயர் இவர் அல்லால்,
நீர்ஆர் இது செய்தீர்?” என்று தாம் மோதிரக்கையால் ஆர்த்து
ஓர் நெடுங்கயிற்றால் ஊரார்கள் எல்லாரும் காண,
உரலோடே தீராவெகுளியள்ஆய், சிக்கென ஆர்த்து அடிப்ப,
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்,
துள்ளித் துடிக்கத் துடிக்க, அன்று
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் ஆப்புண்டு,
”இவன் வெண்ணெய் உண்டான்” என்று
ஆய்ச்சியர் கூடி இழிப்ப, ஏதலர் நகை செய்ய,
விம்மி அழுது, குரல் ஓவாது ஏங்கி நினைந்து
அயலார் காண இருந்தான்.
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு பாடும் மாயன்,
உரலினோடு ஆப்புண்டு இணைந்திருந்த எளியோன்,
தாமோதரன் உரலோடும் ஓடி, அடல்சேர் வலிமிக்க
கால்ஆர் இணை மருதுஊடு நடந்திட்டு,
தறிஆர்ந்த கருங்களிறேபோல் நின்று,
நடையால் நின்ற மருதமரம் சாய்த்து,
எண்திசையோரும் இமையவரும் வணங்கி ஏத்த
பொய்ம்மாய மருதுஆன அசுரரைப் பொன்றுவித்து
திருவில் பொலிந்த வழுஇல் கொடையான்
வயிச்சிரவணன் புதல்வர் சாபம் நீக்கினான்
செந்தாமரைக்கண்ணன்.,
செவ்வாய், 20 மார்ச், 2012
வைத்தமாநிதி 18
“பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே !
அக்காக்காய் அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்
வண்டு ஒத்து இருண்ட குழல் வார வாராய்!
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே!
அற்றைக்கு வந்து குழல் வாராய்!
பொன்னின் முடியினைப் பூஅணைமேல் வைத்து
பின்னே இருந்து கண்ணன் கருங்குழல் தூய்து ஆக வந்து
தந்தத்தின் சீப்பால் குழல் வார வாராய்!
திங்கள், 19 மார்ச், 2012
Guru Paramparai Vaibhavam on 19-3-2012
http://www.mediafire.com/?38ncyxhz2fnjxe0
To listen to it on line
ஞாயிறு, 18 மார்ச், 2012
வைத்தமாநிதி 17
“வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும்கொண்டு திண்ணென இவ்இரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்; எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்; காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்திற் பூரித்து வைத்தேன்; மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நறுஞ்சாந்தும் அஞ்சனமும் கொண்டுவைத்தேன்; அழகனே நீராட வாராய்; எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே! பள்ளிக் குறிப்பு செய்யாதே! உண்ணக் கனிகள் தருவன்! அப்பம் கலந்து சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன், தின்னல் உறுதியேல் நம்பி; செப்பு இளமென் முலையார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர், சொப்பட நீராட வேண்டும். வாய்த்த புகழ் மணிவண்ணா! மஞ்சனம் ஆட நீ வாராய்! பூணித் தொழுவினிற் புக்கு புழுதி அளைந்த பொன்மேனி காணப் பெரிதும் உகப்பன். ஆகிலும் கண்டார் பழிப்பர்; நாண் இத்தனையும் இலாதாய்! நப்பின்னை காணில் சிரிக்கும். இன்று நீ பிறந்த திருநாள் நன்னாள் திருவோணம் இன்று நன்று நீ நீராட வேண்டும். மாணிக்கமே என் மணியே! ஒலிகடல் ஓத நீர்போலே வண்ணம் அழகிய நம்பி! ஓடாதே நீராட வாராய்” என்று வார்மலிக்கொங்கை யசோதை, கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து மஞ்சனம் ஆட்டினாள்.
( ஒருவாறு மஞ்சனம் கண்ட கண்ணனுக்கு குழல்வாரி, செண்பகப்பூ சூட்டி, யசோதை காப்பிட்டது நாளை)