படித்தேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்தேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 ஜூன், 2013

ச்ராத்தம் உண்டானது எப்படி?

உலகில் முதலில் ச்ராத்தம் உண்டானது எப்படி என்று அறிந்துகொள்வது அவசியம்.

அது ஸ்ரீமன் மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 138வது அத்யாயத்தில் பரக்க நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதைப்பற்றி ‘ஸ்ரீவேதாந்த தீபிகை’யில் அடியேன் படித்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ருஹ்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மஹரிஷி உண்டானார். அந்த மஹரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் மஹா தபஸ்வியாயிருந்து ஒரு ஆயிரம் வருஷம் தபஸ் செய்துகொண்டிருக்கையில் ஒரு நாள் அவன் காலமாய்விட்டது. நிமி புத்ர சோகத்தால் மனவருத்தமுற்று மிகவும் வருந்தி அவனுடைய சரீரத்தை ஸம்ஸ்காரம் செய்து தனக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். சதுர்த்தசியன்று அநேக த்ரவ்யங்களைச் சேர்த்து அன்று ராத்திரி துக்கப்பட்டே நித்ரையை அடைந்தார். விடியற்காலத்தில் எழுந்து என்ன செய்கிறது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில பிராஹ்மணர்களை அழைத்து, போஜனம் செய்வித்தால் தன் பிள்ளையின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகும் என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. அதை யோஜித்துப் பார்க்க மிகவும் சரி என்று அவர் மனதில் பட்டது. பொழுது விடிந்ததும் அமாவாஸ்யை அன்று தன் பிள்ளைக்கு எந்த எந்த பதார்த்தங்களிலிஷ்டமோ அவை அவ்வளவையும் சேகரித்து அவைகளை அவனுக்கு இஷ்டமானபடி பாகம் செய்வித்து, ஏழு ப்ராஹ்மணர்களை அழைத்து, அவர்களுக்கு அர்க்ய, பாத்ய, ஆசமநீயம் கொடுத்து, தர்ப்பாஸனத்தில் அவர்களை உட்காரவைத்து, ச்யாமாகான்னத்தையும் இன்னும் ஸித்தம் பண்ணிவைத்த எல்லா   பதார்த்தங்களையும் உப்பு இல்லாமல் போஜன பாத்ரத்தில் பரிமாறி அமுது செய்வித்து, அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பத்தைத் தெற்குநுனியாக வைத்து அதன்மேல் (தன் பிள்ளையின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி) அன்னத்தால் செய்த பிண்டங்களை வைத்துத் தத்தம் செய்தார். எல்லாம் முடிந்து ப்ராஹ்மணர்களும் அவரவர்கள் க்ருஹங்களுக்குப் போனபிறகு, நிமிக்கு இதுவரை ஒருவராலும் அனுஷ்டிக்கப்படாத கார்யத்தைச் செய்தோமே, அது சரியாகுமோ ஆகாதோ என்று பச்சாத்தாபமும், ருஷிகள் இதைக்கண்டு தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்கிறது என்று பயமுமுண்டாயிற்று. இந்தத் துக்கத்தால் மிகவும் வருத்தமுற்று, தன் வம்சகூடஸ்தரான அத்ரிமஹரிஷியை த்யானம் செய்தார். இந்த வருத்தத்தை அறிந்த அத்ரிமஹரிஷியும் உடனே நிமி முன் ப்ரத்யக்ஷமாகி, புத்ர சோகத்தால் வருந்தும் நிமிக்கு ஸமாதானம் பண்ணி ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி, “ உன் மனஸில் தோன்றி, பிறகு நீ அனுஷ்டித்த கர்மாவானது பித்ருக்களுக்குச் செய்த யாகம்; நீ பயப்படாதே, நீ தபோதனன் அல்லவா, இறந்துபோனவர்களுக்கு இவ்விதம் கர்மா செய்யவேண்டுமென்று ப்ருஹ்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் ஸங்கல்பிக்கப் பட்டிருந்தது. நீ செய்த காரியம் ப்ருஹ்மாவால் முன்னமே ஸங்கல்பிக்கப் பட்டதுதான். உன் தபோபலத்தால் உன் மனதில் தோன்றும்படி அவர் அனுக்ரஹித்தார். ஆகையால் நீ செய்தாய். ப்ருஹ்மாவைத்தவிர எவர் இந்தக் கர்மாவை ஏற்படுத்த முடியும்? ச்ரத்தையுடன் செய்கிற கர்மாவாகையால் இதற்கு ச்ராத்தம் என்று பெயர்” என்று சொல்லி, பிறகு அவருக்கு ச்ராத்தம் செய்யும் ப்ரகாரத்தை விஸ்தாரமாய் உபதேசித்துவிட்டு ப்ருஹ்மலோகம் போய்ச்சேர்ந்தார். பிறகு நிமி அதேமாதிரி அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து மற்ற எல்லா ருஷிகளும் செய்யத் தொடங்கினார்கள். அதுமுதல் ச்ராத்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

பிறகு, பித்ருக்கள் என்பவர்கள் எவர்? ஏன் அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது? என்று விசாரிப்போம். முன் ஒரு காலத்தில் ப்ருஹ்மா தேவர்களை ஸ்ருஷ்டித்து நீங்கள் என்னை யஜ்ஞங்களால் ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் ப்ருஹ்மா கட்டளையிட்டபடி செய்யாமல் தங்களுடைய இந்திரியங்களை த்ருப்தி செய்துகொண்டு காமபரவசர்களாகி ஜ்ஞான சூன்யர்களாகி விட்டார்கள். இவர்களுடைய நடத்தையைப் பார்த்து ப்ருஹ்மாவும் ஜ்ஞானமில்லாமல் போகக்கடவீர்களென்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஜ்ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இந்தத் தேவர்கள் பிறகு வெட்கத்துடன் ப்ருஹ்மாவைச் சரணாகதி செய்தார்கள். அவர் நீங்கள் சரியான நடத்தை யில்லாதவர்களாயிருந்ததால் தபோதனர்களான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் ப்ராயச்சித்தம் செய்து ஜ்ஞாநோபதேசம் செய்துகொள்ளுங்கள் என்று உத்தரவு செய்தார். தேவர்களும் அப்படியே அவர்களுடைய பிள்ளைகளை ப்ராயச்சித்தம் செய்யும்படி வேண்டிக்கொள்ள, அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு ப்ராயச்சித்தமும் ஜ்ஞாநோபதேசமும் செய்து, “பிள்ளைகளே, போங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். தேவர்கள், தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் புத்திரர்கள் என்று சொன்னதால் கோபங்கொண்டவர்களாய் ப்ருஹ்மாவிடம் முறையிட, அவரும் “அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்குப் பிதாக்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு ஜ்ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்குப் பிதாக்கள் . ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான் . இதுமுதல் அவர்கள் ஜ்ஞானத்தால் உங்களுக்குப் பிதாவானதால் அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள்” என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.

இந்தப் பித்ருக்கள் ஏழுகணங்கள் அல்லது ஸமூஹங்கள். அவர்களில் நான்கு கணத்தார் உருவை உடையவர்கள். மூன்று கணங்கள் மூர்த்தி இல்லாதவர்கள். ஸுகாலர்கள், ஆங்கிரஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு கணத்தார்களும் மூர்த்தியையுடையவர்கள். இவர்கள் கர்மத்தால் பிறந்தவர்கள். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்று மூன்று கணத்தார்கள் மூர்த்தி இல்லாதவர்கள். தங்களுடைய தர்மபூத ஜ்ஞானத்தால் விபுவாயுமிருப்பார்கள். அணுவிலேயும் ப்ரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு இஷ்டமான ரூபங்களை எடுத்துக்கொண்டு ஸஞ்சரிக்கிறவர்கள். இவர்கள் வஸிக்குமிடத்துக்கு ஸநாதன லோகம் என்று பெயர். அதற்குப் பித்ரு லோகம் என்றும் பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர்.

நம்மால், நம்முடைய இறந்துபோன பிதா, பாட்டன், ப்ரபிதாமகன் முதலானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஹவிஸ்ஸு எப்படி அவர்களுக்குப் போய்ச்சேருகிறது? என்றால் இறந்துபோன பந்துக்களுக்கு நேராகப் போவதில்லை. அவைகள் பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோகபலத்தால் பூர்புவஸ்ஸுவ: என்னும் பெயருள்ள மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுஷ்யர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எவ்விடத்திலும் எந்த ரூபத்திலிருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள். பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய ச்ராத்தம் செய்து பிண்டதானம் செய்யும்போது பூமியைப்பிளந்துகொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்களும் கேயூரங்களும் அணியப்பட்டிருந்தன. அந்தக்கை அவருடைய தகப்பனாருடையது. அவர் செத்துப்போவதற்கு முன்னிருந்ததுபோலவே இருந்தது. பீஷ்மரும் இந்தக் கல்பத்தில் பிதா கையில் பிண்டதானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் தர்ப்பத்தைப் போட்டு அதில் தத்தம் செய்தார். தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் சந்தோஷப்பட்டு அவருக்கு ஸ்வச்சந்த மரணம் உண்டாகட்டும் என்று அனுக்ரஹம் செய்து மறைந்துவிட்டார். ஆகையால் நாம் செய்யும் பிண்டதானமும், ஹவிஸ்ஸும், மேற்கூறிய பித்ரு தேவதைகளுக்குப்போய் அவர்களால் இறந்துபோன பந்துக்களான ஜீவாத்மாக்களுக்குச் சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரஹஸ்யம் மார்க்கண்டேயருக்கு ஸநத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சத்தில் முதல் பர்வத்தில் 16, 17வது அத்யாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

நிமி ஏற்படுத்தின ப்ரகாரம் எல்லாரும் ச்ராத்தம் செய்ததும், பித்ருக்கள் ஏராளமான ஹவிஸ்ஸை புஜித்து அஜீர்ணமுண்டானவர்களாய் சந்த்ரனிடம் முறையிட்டார்கள். அவர் ப்ருஹ்மாவிடம் போகும்படி சொல்ல, பித்ருக்கள் ப்ருஹ்மாவிடம் போய்த் தங்களுடைய கஷ்டத்தை நிவிர்த்திக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அவர் அக்னி பகவான் உங்கள் குறையை  நிவர்த்திப்பார் என்றார்.  பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட, அவரும் இனி ஹவிஸ்ஸுக்களை என்னுடன் புஜியுங்கள், அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டுவிடுகின்றேன் என்று சொன்னார். அதுமுதல் அக்னியில் ஹவிஸ்ஸானது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.

ஆதலால் ச்ராத்தமென்பது ஆதிகாலத்திலேயே வேதங்களான ப்ரமாணங்களைக் கொண்டு, ப்ருஹ்மாவால் அறியப்பட்டு, அவருடைய ப்ரபௌத்ரனாகிய நிமிக்குத் தபோமஹிமையால் ப்ரகாசித்து, அதை, இது ப்ருஹ்மாவினுடைய இஷ்டத்தை அனுஸரித்ததுதான் என்று அந்த நிமி தெரிந்து, தான் அனுஷ்டித்து, பிறரை அனுஷ்டிக்கும்படி செய்த முக்யமான கார்யம். இதில் ப்ராஹ்மணர்களுக்குக் கொடுக்கப்படுகின்றனவும் அக்னியில் ஹோமம் செய்யப்படுகின்றனவுமான த்ரவ்யங்கள் எல்லாம் பித்ருகணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக நம்முடைய இறந்துபோன பந்துக்களுக்கு எந்த லோகத்திலும் எந்த ஜன்மத்திலும் போய்ச்சேர்ந்து அவர்களுக்கு த்ருப்தியை உண்டாக்குகிறதென்று சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட வ்யவஸ்தை.  இது இப்படிநிற்க, இறந்துபோன பந்துக்கள் ப்ரபன்னர்களாய் மோக்ஷத்தை அடைந்தவர்களாய் இருந்தால் அவர்களுக்குப் பசி, தாஹம் முதலியது ஒன்றுமில்லாமலிருந்தபோதிலும் சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட மரியாதையை ஒருவனும் குலைக்கக்கூடாது என்று பகவத்கீதை பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முதலியவைகளில் சொல்லப்படுகிறபடியினால் பகவானுடைய ஆராதனமாக எண்ணி ச்ராத்தங்களைச் செய்யவேண்டியது. அதனால் பகவான் தானே த்ருப்தியடைகிறார். அப்படிச் செய்யாதவர்களுக்குப் பொதுவான சாஸ்த்ர மரியாதையைக் குலைப்பதினாலுண்டாகும் பகவானுடைய கோபமும் அதனால் சிக்ஷையும் வருமென்று பூர்வாசார்யர்களுடைய தீர்மானம்.    

புதன், 22 ஆகஸ்ட், 2012

ஸ்தோத்ர ரத்னம் எளிய இனிய தமிழில்

1918லேயே இனிய எளிய தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள ஸ்தோத்ர ரத்னம்


Sthothra Rathnam Tamil

திங்கள், 14 மே, 2012

Sri Vishnu sahasranamam in Tamil

It is adiyen's bhagyam that adiyen is known to Srivilliputthur Sri Thirunarayana Iyengar swamy, now residing at T.Nagar, Chennai. He may be very rightly said as U.Ve.Sa. of the present century. Like Sri U.Ve.Sa. Iyer, this swamy also used to travel extensively in search of old Tamil books, village by village and even street by street all over Tamilnadu and Andhra. He has a huge collection of books and very soon he will be bringing out some books titled like, "Naranan Ayiram" "Thirumakal Ayiram" "Mamun Ayiram" etc. Each Ayiram will contain 1000 works of different authors on the subject. All in Tamil.
This swamy presented me the old copy of "Vishnu Sahasranamam in Tamil" authored by Sri Pakshirajan swamy of Thirunelveli and its recent reprint in 2010. He told that this Pakshirajan swamy is an authority in Kamba Ramayanam and used to recite it from the first line to the last line without referring to the book, in Divya Prabhanda santhai style.
I am happy to share the book here. I hope that those interested in Sri Vishnu Sahasranamam in Tamil will enjoy it. As I informed in my last post, daily atleast 15 visitors download "தமிழில் விஷ்ணு சஹஸ்ரநாமம்" already posted by me in this blog.
Those who find it difficult to download the book from here may download from here.
While Firefox displays the download link immediately on the RHS, IE and Chrome, the download link is at the end of the book.  Sri Vishnu Sahasranamam in Tamil

திங்கள், 9 ஏப்ரல், 2012

Sri Gunarathnakosam audio

Interested may listen to online "Sri Gunarathnakosam" here




Those who want to download it can get it from 

செவ்வாய், 6 மார்ச், 2012

Ramanuja Daya Pathram

From a book titled as "Pothu Thaniankal"
 (My sincere thanks to Sri S.R. Mukundan swami for directing me to this book at DLI) Ramanuja daya pathram

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஏழாட்காலம் பழிப்பிலோம்

ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலரிலிருந்து மேலும் ஓர் ரத்னம் நிகர் வ்யாஸத்தைப் பகிர்ந்து கொள்வதில் அடியேனுக்கு பெரு மகிழ்ச்சி. இதை எழுதிய ஸ்ரீ ஈகை ஸ்வாமியைப் பற்றி இருதினங்களுக்கு முன்னால்தான் சொஞ்சம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. தேசிகன் தவிர மற்று தெய்வமில்லை என்று வைராக்யமாக வாழ்ந்த பெரியார் என்றும் அவர் வாழ்நாளில் ஸ்ரீதேசிக த்வேஷிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்றும் கேள்விப் பட்டேன். இந்த  கட்டுரையுமே அதை மெய்ப்பிக்கின்றது.   அளவில் சிறியதுதான் என்றாலும் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் படிக்கின்ற அளவுக்கு விஷயகனமானது.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

கேநோபநிஷத் நாடகமாக

இன்று நூலகம் ஒன்றில் கிடைத்த ஒரு நூல் "உபநிஷத் நாடக மாலா". கையிலிருந்த ஸ்கானர் உதவியுடன் அதில் சிறியதாக இருந்த கேநோபநிஷத் நாடகத்தை மட்டும் வருடிக் கொண்டு வந்தேன். அதை இங்கு காணலாம். கடோபநிஷத், தைத்ரீயோபநிஷத், மாண்டூக்யோபநிஷத் என்று மேலும் பல உபநிஷத்துக்களும் நாடக வடிவில் அந்நூலில் உள்ளன. பிறவற்றை முடியும்போது பகிர்ந்து கொள்வேன். இந்த நூலும்கூட கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் வக்கீல் ஸ்ரீ மணி அய்யரால் எழுதப்பட்டு ஸ்ரீசிருங்கேரி மடத்தின் பத்திரிகையான 'ஸ்ரீ சங்கர க்ருபா' வில் தொடராக வெளியானதாம். 1974ல் ஒரே நூலாக வெளி வந்திருக்கிறது.

புதன், 15 பிப்ரவரி, 2012

ஆழ்வார்கள் உகந்த இராமனும் கண்ணனும்

"ஸ்ரீ இராமாநுஜன்" இதழில் திரு P B A ஸ்வாமி தொகுத்து எழுதியது. PBA--Raman & Kannan

திங்கள், 13 பிப்ரவரி, 2012

அஷ்டகா அன்வஷ்டகா

ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது.

இதுநாள் வரை இதைப் பற்றித் தெரியாதவர்கள் இனிமேலாவது கடைப்பிடிப்போமே!

ashtaka

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஸ்ரீ சடகோப தாதாசாரியார் ---ஆரண தேசிகனும் அத்திகிரித் திருமாலும்

அடியேனின் பாக்யம்  இந்த ஜன்மாவில் தேசிக தர்சன குலத்தில் பிறந்தது. அதிலும் பெரும்பேறு ஸ்வாமி தேசிகன் கைங்கர்யத்தில் மனதுகந்தவர்கள் வம்சத்தில் வந்து அவர்களாலேயே ஸ்ரீ தேசிக கைங்கர்யத்தில் ருசி உண்டாக்கப்பட்டு வளர்ந்தது. இந்த பாக்யங்களின் விளைவாக இப்போது கூடுதல் பாக்யமாக ஸ்வாமி தேசிகன் தவிர தெய்வமில்லை என வாழும் ஸ்ரீ சடகோப தாதாசாரியார், ஸ்ரீ டி.ஸீ. ஸ்ரீநிவாஸன் போன்றோர் பிரியத்துக்குள்ளாகி இருப்பதும், அதனடியாக ஸ்ரீ சடகோப தாதாசாரியார் ஸ்வாமி அடியேனுடன் பல கருத்து(ட்டு)ரை விருந்துகளை பகிர்ந்து கொள்வதும்.  இதோ இன்று வந்த ஒன்று. 
ஸ்வாமி தேசிகனை இவர் எழுத்தின் மூலம் இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பிக்கிறேன்,


ஆரணதேசிகன் அனுபவித்த நம்மத்திகிரித்திருமால்
தாஸன்,
இன்று ஸுதினம், உத்திரம் , ஹஸ்தம், திவ்யதம்பதிகளின் (ஸ்ரீபேரருளாளன் பெருந்தேவிதாயார்) மாததிருநக்ஷத்ரம், ஸ்ரீகூரத்தாழ்வானின்  திருநக்ஷத்ரம் அவரை ஸ்மரித்து வணங்கி அவருகந்த அருளாளனை அனுபவிப்போம்,
ஸ்ரீப்ரதிவாதியங்கரம் அண்ணன் ஸ்வாமி, சொல் ஆகிற ரத்னங்களால் ஸ்ரீதேசிகனை அலங்கரித்து அனுக்ரஹித்தக்ரந்தம் ஸப்ததிரத்னமாலிகையாகும்,அதில் ஒரு ச்லோகம், யதீய சரிதம் ஸதாம் ஸுசரித வ்யவஸ்தாபகம், எவருடய சரித்ரம் ஸத்துக்களுக்கு நன்னடத்தையை வ்யவஸ்தை செய்கிறதோ என, இதிலிருந்து அவருக்கு ஸ்வாமியிடமுள்ள பக்தியை அறியலாம்,
(ஆயினும்  இதை அஸூயையினால் ஸஹியாமல்  சிலர் தனக்கு தேசிகத்வேஷமில்லை என கூறி அவரடியார்களிடம் நிறையத்ரவ்யத்தை ஸம்பாதித்தும் ,தன்னை ஸ்ரீஅண்ணன் ஸந்ததி என கூறி ஸப்ததிரத்னமாலிகையை ஸ்ரீஅண்ணன் ஸாதிக்கவில்லை என்றும் கூறுவர். இவர்களை குறித்தே ஆகும் ராவணானுஸாரிணாம்- ராவணானுஸாரிகள் என பிருதமிட்டதும்,அது நிற்க,)
ஸ்வாமியின் சரித்ரத்தில்  ஸ்வாமியின் தினசர்யை ஒருபாகமாகும். இதை குறித்து ஸ்ரீமத்வேதாந்தேசிகதிநசர்யா என ஒருஸ்தோத்ரத்தை ஸ்ரீகுமாரவரததேசிகன் அனுக்ரஹித்துள்ளார். அதில் ஒருதிநத்தில்  வகுக்கப்பட்ட பஞ்சகாலத்தில் ஸ்வாமின் அனுஷ்டானத்தை  விளக்குகிறார், இவர் இவைகளை நேரில் ஸேவித்தவர்,ஆதலால் மிகுந்த ப்ரமாணமாகும், இதில் பஞ்சகாலத்தில் மூன்றுகாலத்திலும்  ஸ்ரீதேவாதிராஜனை குறிப்பிட்டுள்ளார்.,
 1.வந்தே யஜந்தம் வரதம் ஸதாரம்  இஜ்யாகாலத்தில்  ஸ்ரீபேரருளாளனுக்கு திருவாரதனம்  செய்பவரை நமஸ்கிக்கிறேன் என,
2.ஸாயம்தநம் கர்ம ஸமாப்ய பச்சாத் ஸமேத்ய ச ஸ்ரீவரதாஹ்வயஸ்ய. ஸஹாந்தரங்கைஃ குலதைவதஸ்ய ஸமீபமாராத் ப்ரணதம் ஸ்மராமி,.
 ஸாயம் ஸந்த்யையை அனுஷ்டித்து குலதைவதமான ஸ்ரீவரதனை ஸேவிப்பவரை ஸ்மரிக்கிறேன் என,
3,யோககாலத்தில்
ஹ்ருத்புண்டரீகே வரதம் ஸதாரம் நிவேச்ய தத்பாதஸரோஜயுக்மே, ஆபத்யசித்தம் ஸுஸுகம சயாநம் ஆராதயே தேசிகமஸ்மதீயம்.,
 
ஹ்ருதயகமலத்தில் பிராட்டியுடன் ஸ்ரீவரதனை   வைத்து அவன்திருவடித்தாமரைகளில், மனதை வைத்து ஸுகமாய் யோகத்தை அனுஷ்டிக்கும் எனது ஆசார்யனை ஆராதிக்கிறேன் என,
 
இதில் ஸாயம்தந ச்லோகத்தின்  அடுத்த ச்லோகம்.
ஆசாஸ்ய சாஸ்மை பஹுமங்களானி தத்தத்ப்ரபந்தைஸ்ச ததீயபங்திம்.
ஸ்துத்வைகதாநம் ப்ரதிக்ருஹ்யதீர்தப்ரஸாதமேநம் க்ருதக்ருத்யமீடே.,
பல்லாண்டு முதலியைகளால் மங்களாசாஸனம் செய்து ப்ரபந்தங்களால் ஸ்தோத்ரம் செய்து தீர்தப்ரஸாதாதிகளை ஸ்வீகரித்து க்ருதக்ருத்யரான ஸ்வாமியை ஸேவிக்கிறேன், இங்கு ஸாவாமியை க்ருதக்ருத்யர் என அனுபவிக்கிறார், இதின் விசேஷத்தை அனுபவிப்போம்,
ஸ்வாமி ஸ்ரீமத்ஸாரத்தில்  க்ருதக்ருத்யாதிகாரத்தின் ஸங்க்ரஹமான பாசுரம் வருமாறு-
மன்னவர் விண்ணவர் வானோரிறையொன்றும் வான்கருத்தோர்
அன்னவர் வேள்வியனைத்துமுடித்தனரன்புடையார்க்கு
என்னவரந்தரவென்று நம்மத்திகிரித்திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம்முக்கியரே.
இங்கு இஞ்சிமேடு ஸ்ரீமதழகியசிங்கின் வ்யாக்யானம் மிகவும் ரஸநீயம்.
“தன்னுடைய உஜ்ஜீவனார்த்தமாக ஸஹஜஸௌஹார்தம் முதலாக மஹாப்ரயாசத்தை வஹித்த ஹஸ்திகிரீசனிடத்தில்  ந்யஸ்தபரர்கள் ஸர்வோத்க்ருஷ்டரான க்ருதக்ருத்யர்கள் என்று இவ்வதிகாரார்தத்தை ஒரு பாட்டாலே ஸங்க்ரஹிக்கிறார்.,
அன்புடையார்க்கு- ஸ்வவிஷயத்தில் ஸ்நேஹமுடையார்க்கு,
(அன்பு- ஸ்நேஹம், )என்ன வரம் தரவென்று-அனுபந்திபர்யந்தம் மோக்ஷத்தை கொடுத்தோம், இன்னும் என்ன வரம் தரக்கடவோமென்று
த்ருப்தியில்லாதவராய், நம்மத்திகிரித்திருமால்-நமக்கு ஸமீபத்தி்ல உள்ளபடியால் நமக்குச்சொந்தமான,அத்திகிரிமலையில் அவதரித்த,இதனால் ஆச்ரயணஸௌலப்யம் விளங்குகிறது, திருமால்-நமக்கு புருஷகாரத்தை செய்கிற லக்ஷ்மியிடத்தில் வ்யாமோஹத்தையுடையவனான பேரருளாளன், (மால்-வ்யாமோஹம்.) இதனால் புருஷகாரம் தவிர்க்கமுடியாதது என புலப்படுகிறது,” (யஸ்யா வீக்ஷ்யமுகம் ததிங்கிதபராதீனன் என ஆழ்வானின் அனுபவம் )
ந்யாசதசகம் அடைக்கப்பத்து முதலிய க்ரந்தங்கள் மூலமாக ஸ்வாமி தேசிகன்  ஆத்மபரத்தை ஸ்ரீபேரருளாளனிடம் ஸமர்ப்பித்தவர் என அறியலாம்.  நமக்குச்சொந்தம்  என்பது எப்போது, பரத்தை ஸ்வீகரிப்பதால் ஸ்ரீபேரருளாளனின் சொத்து தான் என ஸ்வாமியின் திருவுள்ளம்.
இப்படி செய்யவேண்டியதை எல்லாம் செய்தபடியால் இவன் க்ருக்ருத்யனாகிறான் என்பதால் இனி இவனுக்கு நித்யநைமித்திககர்மாக்களும் செய்யவேண்டியது இல்லையே என கேள்வி எழும், அதின் பதிலை மேல் ச்லோகமாக ஸாதிக்கிறார்,
பகவதி ஹரௌ பாரம் ,,,,,,,,,,,,,,,,,, விபோராஞ்ஞாஸேதுர்புதைரனுபால்யதே நித்யநைமித்திக கர்மாக்கள் எம்பெருமானின் ஆஞ்ஞையானபடியால்,  அதை அனுஷ்டிக்காவிடில்  பாபம் வரும், ஆனபடியால் ப்ரபந்நன் நித்யகர்மானுஷ்டானத்தை ஆஞ்ஞையை பரிபாலனம் செய்யும் விதமாகவே செய்யவேணும், மோக்ஷார்தம் , மற்றும் வேறுப்ரயோஜனத்தை  உத்தேசித்தும் 
தேஹயாத்ரையை உத்தேசித்தும் இனி செய்யவேண்டியது ஒன்றுமில்லை என்பதால் மாத்ரம் அவன் க்ருதக்ருத்யனாகிறான் என ஸித்தாந்தம்.
இதே பொருளில் அம்ருதரஞ்சனியில் ஒரு பாசுரத்தில்
 
ஒன்றே புகலென்று உண்ர்ந்தவர் காட்டத்திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம்மத்திகிரித்திருமால்.
 இன்றே இசையில் இனையடி சேர்ப்பர் இனிப்பிறவோம்
நன்றே வருவதெலாம் நமக்குப்பரமொன்றிலதே.
 இனி நாம் உஜ்ஜீவிக்க செய்யவேண்டியது ஒன்றுமில்லை, க்ருதக்ருத்யர்கள் என,
ஆக இவ்விரண்டு இடத்திலும் மோக்ஷார்தம் செய்யவேண்டியதை- பரந்யாசத்தை செய்தபடியால்  உஜ்ஜீவிக்க இனி  செய்யவேண்டியது ஒன்றுமில்லை, ஆதலால் க்ருதக்ருத்யர்கள் என,இவ்விரண்டு இடத்திலும் ஒரேவிதமாக
நம்மத்திகிரித்திருமால். என ஸாதிக்கிறார்,க்ருதக்ருத்யனாகிலும் நித்யநைமித்தக கர்மானுஷ்டனம் ஆவச்யகம் என்பதால்  ஸ்வாமிதேசிகன் இதை  ப்ரதிதினமும் அனுஷ்டித்துவந்தார்  என ஸாதிக்கும் ஸமயத்தில் க்ருதக்ருத்யமீடே  என ப்ரயோகித்தார் என்பதாக தோன்றுகிறது.
 
ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீபேரருளாளனிடத்தில் அளவு கடந்த அன்பு -ஸ்நேஹம்.அவர் அனுக்ரஹித்த அநேகக்ரந்தத்திலும் ஏதோ ஒரு வ்யாஜம் கொண்டு நம்மத்திகிரித்திருமாலை ஸ்மரித்தே ஸத்தையை அடைவார்,ஆயினும் ஸ்ரீபேரருளாளனின் ஸ்தோத்ரத்தில் ஸ்ரீவரதராஜபஞ்சாசத்தில்  திருமேனி வர்ணனை செய்யவில்லை. காரணம்  நம் கூரத்தாழ்வான்  எம்பெருமானின் திருமேனியை அனுபவித்து  ஸ்ரீவரதராஜஸ்தவத்தில் வர்ணித்தபடியால் எனலாம். ஆயினும் ஸ்ரீகூரத்தாழ்வான்  ஹேதீனாமதிபதயஸ்ஸதா கிமேதான் சோபார்தம் வரத பிபர்ஷி ஹர்ஷதோ வா, வரத, சங்க சக்ராதிகளை அழகுக்காக தரிக்கிறாயோ என கேள்வியாக ஸாதித்தார், ஸ்வாமி தேசிகன்  ஸாதிப்பது
அணி அத்திகிரியே,  அத்திகிரி- அந்த சக்ரம், அணியே- பூஷணமே என  அறுதியிட்டு கூறுகிறார்,காரணம் நம்மை காப்பதின் பொருட்டு.ஆனபடியாலேயே எம்பெருமானும் ஸத்யம் விதாதும் நிஜப்ருத்யபாஷிதம் கணக்கில் அபராதிகளான நம்மிடம் ஆயுதத்தை ப்ரயோகிக்கவில்லை  , மேலும் பல விஷயங்களில் ஆழ்வானின் ஸ்ரீஸூக்தியை ப்ரமாணமாக காண்பித்தவர் ஸ்வாமி தேசிகன்.இவ்விதம் ஆசார்யர்களால் கொண்டாடப்பட்ட கருணைக்கடல் நம்முடைய மனதில் என்றும் குடிகொள்ள கரீச பச்யேம பரச்சதம் ஸமாஃ என அர்திதார்தபரிதாநதீக்ஷிதம், -வேண்டித்தெல்லாம் தரும் வள்ளலை ப்ரார்த்திப்போம்,
இத்திவ்யதம்பதிகள் அனுரூபதம்பதிகள் ,த்வம் லஜ்ஜஸே கதய கோயமுதாரபாவஃ -அஞ்சலி செய்தவனுக்கு மோக்ஷத்தை கொடுத்தும் த்ருப்தியில்லாமல் வெட்கப்படுகிறாய் என பிராட்டியை பட்டர் அனுபவிக்க
என்ன வரம் தரவென்று இன்னும் என்ன வரம் தரக்கடவோமென்று
த்ருப்தியில்லாதவராய்  நம்மத்திகிரித்திருமால் என ஸ்வாமியின் அனுபவம்,இருவரையும் இங்கு தெப்பத்தில் ஸேவிக்கலாம்,

சனி, 11 பிப்ரவரி, 2012

ராமானுஜ தயா பாத்ரம்

மீண்டும் ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலரிலிருந்து
"ராமானுஜ தயா பாத்ரம்" வ்யாக்யானம்.
தட்டச்சிட முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
கை நடுக்கத்தால் சில இடங்களில் அடியேன் முதுகு போல் ஆகி விட்டது. பொறுத்துக் கொள்ள வேணும்.
கடலூர்க்காரர் சீத்தலைச் சாத்தனாராகாமலிருக்க வேண்டும்.
அவர் கற்றுக் கொடுப்பது எதையும் ஒழுங்காய்ச் செய்வதில்லை! Ramanuja daya pathram

திங்கள், 30 ஜனவரி, 2012

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஆண்டாள்

அடியேனுக்கு வெகு சமீபத்தில் அறிமுகமானவரே என்றாலும் அடியேன் மீது அபார ப்ரியம் கொண்டு திருப்புல்லாணி ஸ்ரீ தேசிக கைங்கர்யங்களிலும் மிகுந்த உதவிகள் செய்து வருபவர் ஸ்ரீ தேவநாதன் ஸ்வாமி. ஒரு சிறந்த நிறுவனத்தின் மிக முக்கியமான பொறுப்பிலிருந்தாலும் எப்படியாவது ஸம்ப்ரதாயத்துக்காக நாளின் சில மணிகளை ஒதுக்கி அவ்வப்போது அடியேனிடமும், இணையத்திலும் பல ஸம்ப்ரதாய விஷயங்களைப் பகிர்ந்து கொள்பவர். ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடி. இன்று வாடிக்கையான சம்பிரதாயமான வாழ்த்தாக இல்லாமல் ஒரு புத்தாண்டுப் பரிசாக அடியேனுக்கு அனுப்பி வைத்த ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இனி அவர் அனுப்பி வைத்தது:


கோதையின் திருப்பாவை! -
 





வராஹ அவதாரத்தின்போது பூமியை உத்தாரணம் பண்ணிக் கொண்டு வருகிறான் பரமாத்மா. 'உத்ரிதாமிவராஹேணா’ என்று உபநிஷத் கொண்டாடுகிறது. இவ்வாறு பூமியை உத்தாரணம் பண்ணிக்கொண்டு வரும்போது பூமாதா அழுகிறாள்.


யாராவது கிணற்றில் விழுந்து விட்டால் தூக்கிவிட்டவனைக் கொண்டாட வேண்டும். தன் பிராணன் பிழைத்தது என்று சந்தோஷப்பட வேண்டும். ஆனால், பூமாதாவோ அழுகிறாள். வராஹ மூர்த்தி, ''உன்னைத்தான் நான் காப்பாற்றி விட்டேனே? உன் சிரமத்தைத் தீர்த்து விட்டேனே? ஏன் அழுகிறாய்?'' என்று கேட்கிறார்.


அதற்கு பூமாதா சொல்கிறாள்.

ஸ்ரீப்ருத்யுவாச -
அஹம் சிஷ்யாச தாஸீச
பார்யாச த்வயி மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம்
லகூபாயம் வத ப்ரபோ


''உன் சிஷ்யை, பார்யை நான். நான் கூக்குரலிட்டு அழைத்தபோது வந்து என்னைக் காப்பாற்றிவிட்டாய். என்னை மாதிரி என் மேலே பல கோடி சராசரங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் அழைத்தால் நீ வருவாயா?'' என்று பூமாதா கேட்கிறாள்; 'ஸ¨கரமான மூர்த்தியே, நீ சொல்லு’ என்கிறாள். ஸ¨கரம் என்றால் பன்றி. ஸ¨கரம் என்றால் எளிதில் செய்யக் கூடிய என்றும் ஒரு அர்த்தம்.


'உலகில் உயர்ந்த கர்மா யக்ஞம்’ என்கிறது வேதம். ஆனாலும், அதில் பல சிரமங்கள் உண்டு. அதனால் சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை எனக்காகச் சொல்லு, என, ஜகன் மாதாவான பூமாதா பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். 'கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். ஆதியில் பூமாதா பகவானைப் பார்த்து எளிதில் செய்யக்கூடிய உபாயத்தைச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறாள். அப்போது பகவான் 3 விஷயங்கள் சொல்கிறார். பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும். தஸ்மை ப்ரசுரார்ப்பணம் என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். ப்ரபதன சுலபன் அவன் - ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார்!



ஆத்ம சமர்ப்பணம் என்பதை முதுமையில் பண்ண வேண்டும் என்றில்லை. 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்’ என்கிறார் நம்மாழ்வார் (திவ்ய ப்ரபந்தம் 2886, திருவாய்மொழி 2.10.1). நாடித்துடிப்பு ஒழுங்காக இருக்கும் போதே, புத்தி பிரகாசமாக இருக்கும்போதே, மனது சஞ்சலப்படாத நேரத்திலேயே, இளமையிலேயே செய்ய வேண்டும். 'அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒரு நாளும் கைவிட மாட்டேன்’ என்கிறார் பரமாத்மா.



பூமாதாவுக்கு ரொம்ப சந்தோஷம். மூன்று விஷயங்களையும் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டாள். எல்லா அவதாரங்களும் வரிசையாக நடந்தது. கிருஷ்ணாவதாரம் முடிந்து வைகுண்டத்தில் பகவான் நித்யசூரிகள் புடை சூழ உள்ளான். ஸதஸ் நடக்கிறது அங்கே. அங்கிருந்தபடி, பகவான் பூலோகத்தைப் பார்க்கிறான். பூலோகத்தில் பல அக்கிரமங்கள் நடக்கின்றன. 'பகவத் கீதையைச் சொன்னோமே! ஆனாலும் ஒன்றும் பிரயோஜனமின்றி போய்விட்டதே!’ என வருந்துகிறான். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவரும் பகவானைச் சுற்றி அமர்ந்திருக்க... மகாலட்சுமியிடம்... ''நான் கீதையைச் சொன்னது பிரயோஜனப்படவில்லை. என் வாக்கு சரியில்லை போலும்! அதனால் நீ அவதரித்து, கீதார்த்தத்தை பூலோகத்தில் சொல்லி உலகைத் திருத்த வேண்டும்'' என்கிறான்.



மகாலட்சுமிக்கு வந்ததே கோபம். ''ராமாவதாரத்தில், கிருஷ்ணாவ தாரத்தில் உங்களுடன் வந்தேன். அப்போதே பல சிரமங்கள். இப்போது தனியாகப் போகச் சொல்கிறீர்களே! இது சரியா?'' என்று கேட்டு, மறுத்தாள். ஆனால், பூமாதா உடனே ஏற்றுக்கொண்டுவிட்டாள்.



''நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்'' என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்! எப்போது போட்ட முடிச்சு அது..? வராஹ அவதாரத்திலே, வராஹ மூர்த்தியின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்தபோது, தான் கேட்ட மோட்சத்துக்கான வழிக்கு, பகவான் சொன்ன மூன்று விஷயங்களுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.



அவன் திருவடியிலே புஷ்பத்தை இட்டு அர்ச்சிக்க வேண்டும்; அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்; அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும் என 3 கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.



''இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக் கிறேன்'', என்றாள் பூமாதேவி. ''எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்?'' என்றார் பகவான். ''உங்களுடைய அனுக்ரஹம் உதவும்'' என்று புறப்பட்டாள் தேவி. ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்தாள், கோதா எனும் திருநாமத்துடன்! கோதா என்பதற்கு பல அர்த்தங்கள். அதில் முக்கியமானவை இரண்டு.


காம் ததாதி இதி கோதா
காம் தததே இதி கோதா

காம் என்றால் நல்ல வாக்கு. அவள் நல்ல வாக்கைக் கொடுப்பவள். அவளைத் தியானித்தால், அவளின் திவ்ய மங்கல விக்கிரகத்தை தியானித்தால் நல்ல வாக்கைக் கொடுப்பாள்.


''வாக் வை சரஸ்வதி சரஸ்வதி வை வாக் சரஸ்வதி’ என்கிறது வேதம். வாக்கு என்றால் சரஸ்வதி. அமங்கலமான வார்த்தை களைப் பேசக்கூடாது. அம்ருத வாக்கைக் கொடுக்கிறாள் கோதா. அவளும் நல்ல வாக்கை உடையவள். உத்தமமான வாக்கு உடையவள் ஆகவே, நல்ல வாக்கை நமக்கும் கொடுக்கிறாள். அப்படிப்பட்ட கோதா, திருமாலை கட்ட இரு மாலை கட்டினாள். ஒரு மாலை பாமாலை; மற்றொன்று பூமாலை. பாமாலையைப் பாடி சமர்ப்பித்தாள். பூமாலையைச் சூடி அவன் திருவடியில் சமர்ப்பித்தாள். அதனால் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆனாள்.



ஆண்டாளை 'பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை’ என்கிறார் வரவரமுனிகள். சின்னப் பெண்ணான ஆண்டாளுக்கு பகவானை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அதை எப்படித் தெரிவிப்பது என்று தெரியவில்லை.



திருமாலை (எம்பெருமானை) தன்னிடத்தில் ஈடுபடச் செய்ய திருமாலைகளை (பூமாலைகளை) தூதாக அனுப்பினாள். ''என் ஆசையை எம்பெருமானிடத்தில் தெரிவித்து, அவன் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தா’ என்று ஆண்டாள் பிரார்த்தனை செய்த அழகே அழகு! பகவானையும் ஆண்டாள்; நம்மையும் ஆள்கிறாள் என்பதால் ஆண்டாள் என்ற திருநாமம்.



வராஹ அவதாரமே இல்லை என்றால் ஆண்டாள் அவதாரம் இல்லை. அதனால் ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். அதனால்தான் நம்மாழ்வார் 'ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே’ (திவ்ய ப்ரபந்தம் 2576 திருவிருத்தம் 99) என்கிறார். 'அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்’ (மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்னமாலை) தோன்றியவள் ஆண்டாள். ஆழ்வார் கோஷ்டிக்கே கல்பலதிகையாக (கொடியாக) இருப்பதாலேயே இவள் அவதாரம் உயர்ந்தது.



சரி... வராஹ மூர்த்தியிடம் பூமாதா கேட்டதை ஆண்டாள் வெளியிட்டாளா?



திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் 'அவன் பெயர் பாடு’ என வலியுறுத்துகிறது. 2-வது பத்து பாசுரங்கள் 'அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது. 3-வது பத்து பாசுரங்கள் 'அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது. வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் வெளியிட்டாள் ஆண்டாள்.



திருப்பாவை என்பது தமிழ்ப் பாசுரம் மட்டுமல்ல. இது ஒரு மஹா யக்ஞம். திருப்பாவை என்ற யக்ஞத்தால் எல்லோரும் கட்டப்பட்டுள்ளோம். இது ஒரு வைஷ்ணவாத்மகமான வேத விகிதமான யக்ஞம். நாராயணனிடத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கச் சிறந்தது யக்ஞம்!



அதில், ஹவிஸை நெய்யினால் சுத்தி பண்ணி அக்னியில் சேர்க்கிறோம். ஆண்டாளும், திருப்பாவை எனும் யக்ஞத்தில், தன் உடல், பொருள், ஆவி என்கிற ஹவிஸை ஆச்சார்ய அனுக்ரஹம் (பெரியாழ்வாரின் அனுக்ரஹம்) என்ற நெய் தடவி, எம்பெருமான் வடபத்ரசாயியின் திருவடியில் சமர்ப்பிக்கிறாள்.



நாமும், நம்மை இறைப்பாதத்தில் சமர்ப்பிப்போம். மார்கழியில் திருப்பாவை பாடி, திருவருளைப் பெறுவோம்.

சனி, 31 டிசம்பர், 2011

ஆரணமும் அருளிச் செயலும்

அன்று தூப்புல் ஸ்வாமி தேசிக அவதார விசேஷத்தினால் பெரும்புகழ் அடைந்தது என்றால் இன்று அவர் புகழைப் பரக்கப் பாடி, பல்வகையால் அவர் ஸ்ரீஸூக்திகளைப் பாரெங்கும் உள்ளோர் உய்யும் வண்ணம் ப்ரவசநங்கள் செய்து தேசிகனல்லால் வேறோர் தெய்வமில்லை என்று வாழ்கின்ற வேதமோதுமுத்தமர்களால் தூப்புல் புகழ் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அப்படி ஸ்வாமி தேசிகன் திருவடித் தொண்டே தலையாய பேறு என்று வாழ்வோர் பலருள்ளும் ஸ்ரீ உ.வே. சடகோப தாதாசாரியார் ஸ்வாமி அடிக்கடி இணையத்தின் வழியாயும் பல அற்புதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு நம் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். ஆசார்ய அனுக்ரஹத்தால் இந்த நிர்மூடன் மீதும் அவருக்கு அளவற்ற ப்ரீதி, அதனால் அடிக்கடி பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். அப்படி நேற்று அடியேனுக்கு அனுப்பிய ஒரு கட்டுரையை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


ஆரணமும் அருளிச்செயலும்.
தாஸஸ்ய விஞ்ஞாபநம்.
 ,
தேவர்கள் யாகத்தில் எதை செய்தார்களோ அதையே அஸுரர்களும் செய்தார்கள் என்ற பொருளில்
வேதத்தில்  தேவா வை யத்யஞ்ஞேகுர்வத, ததஸுரா அகுர்வத என அநேக இடங்களில் ஓதப்படுகிறது.
இதுபோல் யதேவாத்வர்யுஃ கரோதி, தத்ப்ரதிப்ஸ்தாதா கரோதி,  ,
.யாகத்தில் அத்வர்யு என்கிற ரித்விக்கு செய்வதை ப்ரதிப்ஸதாதா எனகிற ரித்விக்கும்
செய்கிறார்,அத்வர்யுகணத்தில் அத்வர்யு பெரியவர் ஆவார், ப்ரதிப்ரஸ்தாதா சிறியவர் ஆவார்.பெரியவர் செய்வதையே
சிறியவரும் செய்வதை லோகத்திலும் காணலாம் என்பதை  வேதம் கூறுகிறது, தஸ்மாத் யத் ச்ரேயான் கரோதி தத் பாபீயான்கரோதி,
இதையே யத்யதாசரதி ச்ரேஷ்டஃ தத்ததேவேதரோ ஜனஃ, ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததனுவர்ததே,
லோகத்தில்  உயர்ந்தவன் எதை அனுஷ்டிக்கிரானோ,அதை ப்ரமாணமாக கொண்டு மற்றவர்களும் அதை பின்பற்றுகிறார்கள் என
ஸ்ம்ருதியில் கீதாசார்யன் குறிப்பிடுகிறார்..
,இதையே சற்று வேறுவிதமாக  பூர்வாசார்யர்கள் ஸாதித்த விஷயத்துக்கு விரோதமில்லாமல் பின்புள்ளவர்கள்  விஷயத்தை ஸாதிக்கவேணும் என
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனைப்பேசாதே.
 தம்நெஞ்சில் தோன்றியதே சொல்லி இது சுத்த உபதேசவரவார்தை என்பர் மூர்கராவார்  என ஸ்ரீரம்யஜாமாத்ருமுனி-ஸ்ரீமணவாளமுனி ஸாதித்தார்.
முன்பு கூறிய க்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் செய்ததை ஸ்ரீமணவாளமுனியும் செய்ததாக அமைந்தவிதத்தை நாம் சிறிது அனுபவிப்போம்
ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில்
ஆழ்வார்கள் அவதரித்த நாள் ஊர் திங்கள் அடைவுதிருநாமங்கள் அவர்தாம் செய்த
வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின் வகையான தொகையிலக்கம் மற்றுமெல்லாம்.
வீழ்வாக மேதினிமேல் விளங்கநாளும் விரித்துரைக்கும் கருத்துடனே ,,,,,,  என ஆழ்வார்கள் அவதரித்த
மாதம் நக்ஷத்ரம் திவ்யதேசம்  மற்றும் அவர்கள் செய்த பாசுரத்தின் தொகை முதலியவற்றை ஒரு பாட்டில் குறிப்பிட்டு 
ஆழ்வார்களை வரிசை படுத்தி அனுக்ரஹித்தார், பிறகு 15,16 பாட்டுகளில் பாசுரங்களை கூட்டி கணக்கிட்டு நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே  என ஸாதித்து பிறகு  வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார் என முன்பு ஸாதித்தக்ரமத்தில்  வரிசையாக ஸாதிக்கிறார்.இங்கு எம்பெருமானார்  ஆழ்வாரில்லை,ஆயினும் அவர் விஷயமாக இராமானுசநூற்றந்தாதி உள்ளபடியால் அதையும் சேர்த்தே 4000 பாசுரம் என கணக்கிடுவதால் அவருக்கும்  பாசுரத்தை சேர்த்துள்ளார்,ஸ்ரீமதுரகவியாழ்வார்  நம்மாழ்வார் விஷயமாக கண்ணினும் சிறுத்தாம்பு ப்ரபந்த்தை அனுக்ரஹித்தாலும் அதுவும் ப்ரபந்தத்தில்  சேர்ந்ததாலும்,அவரையும் மற்றும் ஆண்டாளையும் சேர்த்து ஆறிருவரோடொருவர் அவர்தாம் செய்த,துய்யதமிழ்மாலை இருபத்துநான்கின் பாட்டின் தொகை என ஸாதித்தார்.மற்றுமுள்ள ஆசார்யர்களை இங்கு குறிப்பிடவில்லை.ஸம்ப்ரதாய வரலாறையும் குறிப்பிடவில்லை.
இனி ஸ்ரீமணவாளமுனி ஸாதித்த உபதேசரத்நமாலையை அனுபவிப்போம்,
ஸ்வாமி தேசிகன் பரமபதஸோபானக்ரந்தத்தில்
1,யதிவரனார் மடப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்தையுள்மன்னியதே என எம்பெருமானாரின் சிஷ்யரான மடப்பள்ளி ஆச்சான் வழியாக கிடைத்த ரஹஸ்யார்தங்கள் கிடாம்பி அப்பிள்ளார் அநுக்ரஹித்த க்ரமத்தில்  தன் ஸ்ரீஸூக்தியில்  அமைந்ததை ஸாதிப்பதாக அனுக்ரஹித்த க்ரமத்தில்  ஸ்ரீமணவாளமுனி தமது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையின் அனுக்ரஹத்தால்  வந்த உபதேசத்தை பேசுவதாக ப்ரதிஞ்ஞை செய்கிறார்.ஸ்வாமி தேசிகன் பெற்றது ரஹஸ்யார்தம்,ஸ்ரீமணவாளமுனி பெற்றது ஸம்ப்ரதாயவரலாறு.,

2.ஸ்வாமி தேசிகன் அதிகாரஸங்க்ரஹத்தில் 52 வது பாட்டில் கோதற்றமனம் பெற்றார் கொள்வார் நம்மைஎன்றும் கூனுளநெஞ்சுகளால் குற்றமென்னு இகழ்ந்திடினும் என ஸாதித்தக்ரமத்தில் மற்றோர்கள் மாச்சர்யத்தால் இகழில்வந்ததெந்னெஞ்சே என ஸ்ரீமணவாளமுனி குறிப்பிடுகிறார்..

3.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார் மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவி, பொய்யில் புகழ் கோழியர்கோன்  விட்டுசித்தன் பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார், ஐயனருள் கலியன்என ஸாதித்தபடி,
பொய்கையார் பூதத்தார் பேயார்,புகழ்மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர்கோன்,துய்யபட்டநாதனன்பர்தாள்தூளி நற்பாணன் நன்கலியன்என ஸாதித்தார்.

4.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் மேதினிமேல் விளங்கநாளும் விரித்துரைக்கும் கருத்துடனே  என ஸாதித்தபடி
ஆழ்வார்கள் இந்தவுலகிலிருள் நீங்க வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாமென்றார்.ஆக இங்கு ப்ரதிஞ்ஞை செய்தது மாதமும் நாளும் மாத்ரமாகும் அவதரித்த ஊரை சொல்லவில்லை என்பது விசேஷம்..
 பிறகு பொய்கை பூதம் பேய்  என மூவரும் அவினாபூதர்களாதலால் ஆகலாம் மூவரையும் ஒரே பாட்டில் ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் என குறிப்பிடுவது,அடுத்து வரவேண்டியது பொய்கையார் பூதத்தார் பேயார்,புகழ்மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர்கோன் கணக்கில்  மழிசைப்பிரான் , ஆயினும் முன்பு சொன்னக்ரமத்தை மாற்றி  மாதகணக்கில் ஐப்பசிக்கு அடுத்ததான கார்திகை மார்கழி தை மாசி வைகாசி ஆனி என அம்மாதங்களில் அவதரித்த மங்கையர்கோன்,  பாணர் , தொண்டரடிப்பொடியாழ்வார்,மழிசைப்பிரான்,குலசேகரன்,சடகோபர், பெரியாழ்வார்,வரையில் ஸாதித்து மீண்டும்
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள்,மதுரகவியாழ்வார் எதிராசராமிவர்கள், வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும் இந்தவுலகோர்க்குரைப்போம் யாம். என குறிப்பிடுகிறார்.இங்கு ஓர் ஸமசயம் பிறக்கும்,முன்பு சொன்ன க்ரமம் வேறு தற்சமயம் கூறுவது வேறு,இது முகத்தில் வேறுவிதமாக ஊர்த்வபுண்ட்ரம் தரித்து மற்ற அங்கங்களில் வேறுவிதமாக தரிப்பது போல் உள்ளது.மேலும் ஆழ்வார்களில் மதுரகவியும் உண்டு எனில் முன்பே ப்ரதிஞ்ஞை செய்தபடியால் இங்கு மீண்டும் அவரை தனியே குறிப்பிடுவதும்  முன்பு கூறிய கோஷ்டியில் இவரை சேர்க்காததும் ஏன் என. பதிலை ஓரான் வழியாக உபதேசம் பெற்ற ஸம்ப்ரதாயமறிந்தவர்கள் கூறுவர்.

5.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் எண்ணின் முதலாழ்வார்கள் என 15,16 பாட்டுகளில்  ஆழ்வார்கள் அனுக்ரஹித்த பாசுரங்களை கூட்டி கணக்கிடுவதை போல் ஆழ்வார்கள் அவதரித்த ஊர்களை 30 முதல் 33 வரையில் 4 பாட்டுகளில் குறிப்பிடுகிறார்.
எண்ணரும் சீர்ப்பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர் வண்மைமிகு  கச்சிமல்லைமாமயிலை,மண்ணியினீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்.,ஓங்குமுறையூர் பாணனூர்,30,

தொண்டரடிப்பொடியாழ்வார் தோன்றியவூர் தொல்புகழ்சேர் மண்டங்குடியென்பர் மண்ணுலகில்,எண்டிசையுமேத்தும் குலசேகரனூரெனவுரைப்பர் வாய்த்த திருவஞ்சிக்களம்,31.

மன்னுதிருமழிசை மாடத்திருக்குருகூர், மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்,நன்னெரியோர் எய்ந்த பக்திசாரர் எழில் மாறன் பட்டர்பிரான்.வாய்ந்துதித்தவூர்கள்வகை.32.

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத்திருக்கோளூர்,ஏரார் பெரும்பூதூரென்னுமிவை, பாரில் மதியாருமாண்டாள் மதுரகவியாழ்வார்,எதிராசர் தோன்றியவூரிங்கு,33,
இங்கு ஓர் ஸமசயம் பிறக்கும்,இங்கு ஆழ்வார்களின் அவதாரஸ்தலங்களை கூறுவதாக ப்ரதிஞ்ஞை இல்லை.மேலும் வெண்பாவானபடியால் அவரவர்கள் பாட்டில்  ஊரையும் சேர்க்கமுடியாது என தனியாக கூட்டினாரோ என,பதிலை ஸம்ப்ரதாயமறிந்தவர்கள் கூறுவர்.

6.ஸ்வாமி தேசிகன் அதிகாரஸங்க்ரஹத்தில்
என்னுயிர் தந்தளித்தவரை சரணம் புக்கு என தனது ஆசார்யர்முதலாக ஸாதித்த க்ரமத்தில்
தெருளுற்றவாழ்வார்கள் சீர்மையரிவாரார்,அருளிச்செயலையறிவாரார். அருள் பெற்றநாதமுநிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமநமே யுண்டோ பேசு என  நாதமுனி முதலாக தேசிகன் என ப்ரஸித்திபெற்ற நம் ஸ்வாமிதேசிகன் பர்யந்தமாக ஸாதிக்கிறார்.

ஆழ்வார்களையும்  அருளிச்செயல்களையும்,தாழ்வாக நினைப்பவர்கள்தாம். நரகில் வீழ்வார்களென்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீயவர்பால்.சென்றணுகக்கூசித்திரி. என ஸாதிப்பதால் ஆழ்வார்களைப்போல் அநேகம் ப்ரபந்தத்தை அனுக்ரஹித்த ஸ்வாமி தேசிகனை தாழ்வாக நினைப்பவரிடம் செல்லவேண்டாமென்றும் உபதேசித்தபடி.

 ஸத்யமிப்படியிருக்க சிலர்  ஸ்வாமிதேசிகனுக்கு முன்பாக இருந்த ஆசார்யர்கள் ஸ்வயம் த்ராவிடப்ரபந்தத்தை ஸாதிக்கவில்லை ,ஸ்வாமிதான் தமிழ்ப்ரபந்தத்தை முதன்முதலாக ஸாதித்தார்,ஸ்வாமி தேசிகன் ஸ்ரீஸூக்தியை copy  அடித்து ரம்யஜாமாத்ருமுனி-ஸ்ரீமணவாளமுனி ஸாதித்தார் என்றும் .ஸ்வாமிதேசிகன் வாழித்திருநாமத்தை copy அடித்து மற்ற வாழித்திருநாமம் வந்தது என குற்றம் கூறுவது தவறாம்,ஏற்றத்தாழ்வை மத்யஸ்தர்கள் அறிவார்கள்.

புதன், 21 டிசம்பர், 2011

நித்ய கர்மாநுஷ்டானங்கள்


நேற்றைய பதிவில் "நித்யகர்மாநுஷ்டான விதிகள்" என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதியையும் நேற்றைய பதிவில் படித்திருக்கலாம். விதிகள் மீறப்பட வேண்டியவை என்பது நமது நாட்டில் மக்களின் மனோநிலை. சாலைப் போக்குவரத்து விதிகளிலிருந்து, ரெயிலவே முன்பதிவு, பள்ளி கல்லூரி சேர்க்கை என்று எங்கும் எதிலும் விதிகளை அலட்சியம் செய்தே வாழ்பவர்கள் நாம். இந்த கர்மாநுஷ்டான விதிகளை மட்டும் கடைப்பிடித்து விடுவோமா?

ஆனால், இந்நூலில் கண்டுள்ள விதிகளில் சந்த்யா வந்தனம் ஒன்றைத் தவிர மற்ற எதையும் நாம் பின்பற்ற முடியாத அளவுக்குக் கடுமையான விதிகள்! கர்மாநுஷ்டான விதி என்று தெரியாமலே நாம் அதில் ஒன்றைக் கடைப்பிடிக்கிறோம். அது என்ன என்று இங்கே நான் சொல்ல மாட்டேன். படித்துப் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய சூழலில் கடைப்பிடிப்பது என்பதும் முடியவே முடியாததுதான். ஆனால் அவைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் பாபங்களை அறிந்தால் ....... அது இன்னும் வேதனை! நூலைப் படித்த பிறகு, நான் தெரிந்து கொண்டது நம்மில் 99.9% இவற்றைக் கடைப்பிடிக்கவில்லை, முடியாது என்பதுதான். முன்னோர்கள் என்ன சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்நூலை வலையேற்றியிருக்கிறேன்.

ஸ்ரீமத் அழகியசிங்கர் திருப்புல்லாணியில் தனது அனுக்ரஹணபாஷணத்தில் மீண்டும் மீண்டும் சந்த்யாவந்தனம் செய்வதன் அவசியத்தைப் பற்றிக் கூறியது நினைவிருக்கும். இந்நூலைப் படித்த பிறகுதான் அவருடைய அபார காருண்ய குணம் புரிந்தது. நித்ய கர்மாநுஷ்டான விதிகளில் குறைந்த பக்ஷம் இன்றும் கடைப்பிடிக்கக் கூடியதான சந்த்யாவந்தனத்தின் மூலமாகவாவது நாம் சேர்த்துக் கொண்டிருக்கும் பாபச் சுமைகளைக் குறைத்துக் கொள்ளட்டும் என்ற கருணையினால்தான் அவர் அதை வலியுறுத்தியது என்று இப்போது உணர்கிறேன்.

நூலைப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கிலிருந்து நகலிறக்கிக் கொள்ளலாம். இரண்டு பிடிஎப் கோப்புகளாக உள்ளன. 


 Mediafire லிங்கிலிருந்து நகலிறக்க (adiyen learnt from many thro' mail and phone that skydrive link is not properly opening and hence adiyen uploaded to Mediafire also)
Nithyakarmanushtanam 1 
http://www.mediafire.com/?6ymuq5kmr6n125m
Nithyakarmanushtanam 2
http://www.mediafire.com/?7cjwpotuin4mdnc



பரான்ன போஜனம்!

நேற்றைய நாட்டேரி ஸ்வாமியின் குரு பரம்பரைஉபந்யாஸத்தைக் கேட்டவர்கள் அவர் பரான்னத்தைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டிருப்பீர்கள்.

இன்று யதேச்சையாக நண்பர் ஒருவர் வீட்டில் விரோதி வருஷம் விஜயதசமி (அதாவது 1949-1950) அன்று ஸ்ரீ நே.ஈ. வேங்கடேச சர்மா என்பவர் ப்ரசுரித்த “வைத்யநாத தீக்ஷிதீய ஸ்ம்ருதி முக்தாபல ஆன்ஹிக ஸாரமான நித்ய கர்மானுஷ்டான விதிகள்” என்ற பழைய நூல் ஒன்று கிடைத்தது. அதில் பரான்ன போஜனத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதில் கண்ட அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்க இன்றைய சூழலில் முடியாவிட்டாலும் முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்போமே!

எப்போதே எழுதின அந்த நூலில் அடியேனுக்கும் ஒரு பெயர் சூட்டிவிட்டார். எவ்வளவு தீர்க்கதரிசிகள் நம் முன்னோர்கள்! என்ன பெயரா? கடைசி வரியில் இருக்கிறது.

அந்த நூலை முழுவதும் படித்தால் சாஸ்த்ர விரோதமில்லாமல் இன்று நடப்பவர் அநேகமாக யாருமேயில்லை என்று கூறலாம்.

நூலைக் கொடுத்தவர் அடித்த கமெண்ட்; அப்போ அந்த நாளிலேயே பரான்னம் புசிப்பது பரவலாக இருந்திருக்கிறது அதனால்தானே இவ்வளவு கடுமையாக எழுதியிருக்கிறார்கள்!

நூலை பிடிஎப் ஆக நாளை இணையத்தில் வெளியிடுவேன்.

 

பரான்ன போஜன தோஷங்கள்

பிறரது அன்னத்தைப் புசித்தலானது புத்தி, தைர்யம், வீர்யம், கண் காதுகள், மனஸ், ப்ராணன், நினைவு, அறிவுகள், யாவையையும் குலைத்துவிடும். இவன் செய்த ஜபம், தபம், ஹோமம், தானம், அத்யயனம், இவை யாவும் அன்னதாதாவைச் சேர்ந்துவிடும். ஒருவன் அன்னத்தையுண்டு புணர்ந்து புத்ரன் உண்டானால் பிறந்தவனின் ஸர்வ புண்ய கர்ம பலனும் அன்னதாதா வினுடையதே என்று வ்யாஸ பகவான் கூறுகிறார்.(வீர்யம் அன்னத்தினாலுண்டாவதால்). தவிரவும் அன்னமளிப்பவனுடைய பாவமும் இவனையடைந்து விடுகிறது. க்ருஹஸ்தன் பரான்ன போஜனத்தால் பதிதனா கிறான். பரான்ன நியமம் வைத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுபவர் புசித்துவிட்டால் நாய், பன்றி, கழுதையாய்ப் பிறக்கின்றனர். பரான்ன போஜனமே செய்பவர் பசுமாடாய் ஜனித்து அன்னமளித்தவர்க்கு உழைக்கின்றனர். தேவபித்ரு கர்மங்களைச் செய்துவிட்டுப் பிறர் வீட்டிற்போய்ப் புசிப்பவன் பாவத்தையே புசித்தவனாய் செய்துவிட்டு வந்த கர்ம பலன்களை அன்னமளிப்பவனுக்குக் கொடுத்தவனாய்விடுகி றான் என ஜமதக்னி மஹரிஷி கூறுகிறார்.

பரான்னத்தில் த்ருஷ்டியோடு தன் கர்மாக்களைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. பிறர் அன்னம் தேஹத்திலிருக்கும் பொழுது செய்யப்படும் வைதிக கர்மங்களின் பலன் மூன்றில் ஒரு பங்கு அன்னமளித்தவனை அடைகிறது. பூமி, பசு, பொன் ரத்னங்கள் முதலியவைகளை வாங்கிக் கொள்ளலாம். அன்னம் மட்டும் புசிக்கக் கூடாது என யமன் கூறுகிறார்.

பிறருடைய அன்னம், வஸ்த்ரம், தீர்த்தம், பெண்கள், க்ருஹம் யாவும் அனுபவிப்பவனுடைய தனத்தைக் குலைக்கும். க்ருஹஸ்தனுக்குப் பரான்ன போஜனம் பரிஹரித்துக் கொள்ள முடியாத ஒரு தனித்த பாவமாய் நிற்கிறது. சிஷ்டரான ச்ரோத்ரியருடைய ஒரு நாள் அன்னம் மட்டும் நம் ஸகல பாவங்களையும் நிவர்த்திக்கிறதால் அது க்ராஹ்யமாகும்.

பஞ்சமஹாயக்ஞங்களை அனுஷ்டித்துவிட்டுப் பிறருடைய அன்னத்தில் வயிறு வளர்க்கும் அதமர்கள் பரபாகரதர் என்றும், க்ருஹஸ்தனுக்கு உரிய கர்மாக்களை விதிப்படி அனுஷ்டித்து அவற்றை க்ரயத்திற்கு விற்பவன் அபசரென்றும் பெயராகும். அபசருக்குக் கொடுத்த தானம் தாதா ப்ரதிக்ரஹீதா இருவர்களையுமே நரகமடைவிக்கிறது. பரபாக நிவ்ருத்தர், பரபாகதர், அபசர், பரிவித்தி, பரிவேத்தர், குண்டன், கோளகன், தேவலன், புரோஹிதர்களது அன்னத்தைப் புசித்துவிட்டால் சாந்த்ராயண க்ருச்ரம் அனுஷ்டிக்கக் கடவர். அனாசாரன், நிஷித்தன், அசுசியாயுமுள்ள அந்தணன் அன்னத்தைப் புசித்துவிட்டால் ஒரு நாள் முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். ஔபாசனாக்கியை விட்டுவிட்டுத் தன்னை க்ருஹஸ்தனாய்ச் சொல்லிக்கொள்ளும் அசடுக்கு வ்ருதாபகன் எனப் பெயர்.. இவருடைய அன்னமும் த்யாஜ்யமே.

வியாழன், 8 டிசம்பர், 2011

An Obituary

Following is a mail message adiyen received from a friend.


Obituary printed in the London Times.....Absolutely Brilliant !!! 


Today we mourn the passing of a beloved old friend,
 Common Sense , who has been with us for many years. 
No one knows for sure how old he was, since his birth records were long ago lost in bureaucratic red tape.
 
He will be remembered as having cultivated such valuable lessons as:
- Knowing when to come in out of the rain;
- Why the early bird gets the worm;
- Life isn't always fair;
- and maybe it was my fault. 

Common Sense 
lived by simple, sound financial policies (don't spend more than you can earn) and reliable strategies (adults, not children, are in charge).

His health began to deteriorate rapidly when well-intentioned but overbearing regulations were set in place.
 
Reports of a 6-year-old boy charged with sexual harassment for kissing a classmate; teens suspended from school for using mouthwash after lunch; and a teacher fired for reprimanding an unruly student, only worsened his condition. 

Common Sense 
lost ground when parents attacked teachers for doing the job that they themselves had failed to do in disciplining their unruly children.

It declined even further when schools were required to get parental consent to administer sun lotion or an aspirin to a student; but could not inform parents when a student became pregnant and wanted to have an abortion. 

Common Sense 
lost the will to live as the churches became businesses; and criminals received better treatment than their victims. 

Common Sense 
took a beating when you couldn't defend yourself from a burglar in your own home and the burglar could sue you for assault. 

Common Sense 
finally gave up the will to live, after a woman failed to realize that a steaming cup of coffee was hot. She spilled a little in her lap, and was promptly awarded a huge settlement. 

Common Sense 
was preceded in death, by his parents, Truth and Trust, by his wife, Discretion, by his daughter, Responsibility, and by his son, Reason.

He is survived by his 4 stepbrothers;
I Know My Rights
I Want It Now
Someone Else Is To Blame
I'm A Victim 

Not many attended his funeral because so few realized he was gone.
 
If you still remember him, pass this on.
 
If not, join the majority and do nothing.