விருத்தம்
பத்திராலம்பனம் பண்ணிவந்த பண்டிதன் கண்டி தமடைந்து
பணிந்துபின் பேகஅரங்கநாயகரும் பரிவொடுபேர்தாக்கிருபை
வைத்துநீருபயவேதநூல்களையும் வியாக்கியானம்புரிந்திங்கே
வசியுமென்றதையேசிரமதாய்ப்பெரிய வாச்சான்பிள்ளையைமுதலாய்ச்
சுற்றியசுருதப்பிரகாசிகாபட்டர் சுதரிசனாசார்யரிவர்கள்
துதிசெயநிகமாந்தப்பிரவசனந் தொடர்ந்திருந்தங்குளோர்புகழ
உற்றிடுவாதிபஞ்சானனனெனவே யுபயகாவேரிரங்கத்தி
லுபயர்தாமுஞ்செயு பீயநாமங்களுபயவேதாந்ததேசிகனே.
இதுவுமது
திருவாங்கங்கோயில் வாழ்ந்திருந்தியவர் கெடி
செலுத்திருவருகாலத்திலோர்
தினமிரவிலெதிவரருமிவர் சொப்பனத்திற்
சிறந்தெழுந்தருளிவந்து
திருவடியையிவர்சிரசில்வைத்துப்பதித்து நீர்
தெளிந்துநம்பாஷ்யமதனைக்
செகத்திற்பிரவர்த்திக்கை செய்தும்பிரபந்தங்கள்
திரளாகவுதவுமென்னக்
கருணைபெறவேகொண்டு திருவேணுதாரியிவர்
கண்ணனொரு வேணுவென்றே
கருத்தோத்தபத்தியாய்ச் சாரீரகத்தைவெளி
கண்டுதிருவோலக்கமேல்
தருகருணைபாடிடப் பெற்றுநமிராமாநு
ஜன்பாஷ்யந்தொடங்குஞ்
சருவப்பிரபந்தகுரு வுறுதியெங்குருசர்வ
தந்திரசுதந்திரகுரு .
இரகசியாதி கிரந்தங்கள் சாதித்தருளியது
நுவலுதிருவோலக்கந்தனிலே ராமா
நுஜபாஷ்யந்தொடங்கிப்பிரசங்கஞ்செய்த
இவரேவேதாந்தாசாரியராமென்று
மெம்பெருமானுகந்து திருப்பேரைச் சாற்றத்
தவறாமற்சீரங்கநாச்சியாருஞ்
சர்வதந்த்ரசுதந்த்ரரென் றுசாற்றக் கொண்டு
குவலயத்திற்பமதநிரசனமாகக்
கூட்டினார் பிரபந்தநிலைநாட்டினாரே.
தரு-இராகம்-தோடி-தாளம்-ரூபகம்
பல்லவி
பரமதநிரசனபூர்வக சுவமதஸ்தாபனரே வாதிபஞ்சானனரே.
அனுபல்லவி
திருமங்கையாழ்வார்மீனோடாமைகேழலெனுமதுபோல்
தசாவதாரத்துதியருள்-செய்யுபயவேதாந்ததேசிகர் (பா)
சரணங்கள்
தத்துவமுத்தாகலாபம் சருவார்த்தசித்தியுந்
தருநியாயசித்தாஞ்சன நியாயபரிசுத்தியுந்
தத்துவடீகையதிகரண சாராவலியாமுயர்த்தியுந்
தாத்பர்யசந்திரிகைவாதித்திரயகண்டனப்பிரசித்தியுஞ்செய்து (பா)
பூமித்துதிநீளாத்துதி யெதிராசசத்ததியும்
புகழ்சேசுவரமீமாஞ்சையெனவே சொலும்பத்ததியும்
மீமாம்ஸாபாதுகையும் நியாசதிலகமாநிதியும்
விளங்கவேயரிதினகிருத்தியகத்தியவியாக்கியானவிதியுஞ் செய்து (பா)
ஈசாவாசியோபநிடவியாக்கி யானரகசியரக்ஷை
யேற்குஞ்சத்சரித்திரரக்ஷையின்னம் நிக்ஷேபரக்ஷை
ஆசாரவிவத்தாபக மானபாஞ்சராத்திரரக்ஷை
ஆளவந்தார் செய்தருள்கீ தார்த்தசங்க்ரகரக்ஷைசெய்து (பா)
பகருஞ்சதுஸ்லோகிவியாக்யானம் பண்பாமிவைதந்தார்
பாஷியகாரரவதாரமோ பட்டரோவெனவந்தார்
மிகவுங்கிருபைகூர்ந்து ரங்கநாயகருமுவந்தார்
மேலாந்தரிசனம்விளங்கவே யெழுந்தருளியிருந்தாரிவர் (பா)
விருத்தம்
தருபுகழ்வேதாந்தாசார்யராயிங்கே
சருவதந்திரசுவதந்திரபேர்தனியேபெற்று
வருகவிதார்க்கிகசிங்கரென்னுநாம
வைபவத்தையுடையவராய் வளருந்தூப்புல்
திருவேங்கடம் முடையானிவர்தாமந்தச்
சீரங்கநகரில் வாழ்ந்திருக்குநாளில்
வரிசைமிச்சிரதேசத்தினவர்கள் வந்து
வாதுதான்செய்தனரப்போதுதானே.
கிருஷ்ணமிச்சிர டிண்டிம கவிகளை வாதில் வென்றது
இதுவுமது
அண்டிவரும்வாதிகளைச் செயித்திருக்க
அதைக்கேட்டுக்கிர்ஷ்ணமிச்சிரனொருவன்வாதிற்
சண்டையிட்டுமவன் தோற்றுத்தன்பிரபோத
சந்திரோதயமெனுநாடகத்தைக்காட்டக்
கண்டி தஞ்செய்தலுக்குபதிலாகவேசங்
கல்பசூரியோதயஞ் செய்தவனைவென்றார்
டிண்டிமசாருவபௌமன்வாதினிற்ப
டிக்கின்றான்கக்ஷிசொல்லி வெட்கின்றானே.
தரு-இராகம்-சங்கராபரணம்-தாளம் ஆதி
பல்லவி
கண்டாவதாரசுவாமியே யிவர் மகிமையைக்
கண்டீர்களோ சனங்காள்.
அனுபல்லவி
டிண்டிமகவிகண்டங்களை டிண்டிமவாத்தியமாகக்
கொண்டருளிய கவிசரபகண்டபேரண்டபிரசண்ட (கண்டா)
சரணங்கன்
மண்டலந்தனில்சுவ தாடியே- யாய்க்கவிவாதிகள்
மண்டிவருவரநேகங்கோடியே- அவர் கிரீடத்தில்
கொண்டமணியினுண்டாமொளி-அண்டிநிறைந்துபிரகாசமாம்
புண்டரீகப்பொற்பதமதில்-தெண்டஞ்செய்யத்தொண்டுகொண்ட (கண்)
பண்டிதன்ராகவாப்பியுதயமே-செய்தவன்காட்டக்
கண்டித்துயாதவாப்பியுதயமே-யிவரருளினார்
குண்டலத்துறையண்டர்பணி-கொண்டல்வண்ணர்சாளக்கிராம
கண்டிகையணிசேஷகிரிவை-குண்டருடைய கண்டிரண்ட (கண்)
டிண்டிமென்றிருஸ்லோகங்கூறியே-அவன்றாடைகளில்
ரண்டினுமடிகொண்டு மீதியே- பணிந்திடும்படி
கண்டனைசெய்தாரெண்டிசைப்புகழ்- புண்டரீகாக்ஷர்தம்பேரர்
சண்டபானுவுமிவர்நேர்நவ-கண்டங்களிற்கண்டாருண்டோ (கண்)