Siddhantha traya sangraham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Siddhantha traya sangraham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 மார்ச், 2026

ஸித்தாந்த த்ரய சங்க்ரஹம் 9 -- ஜகத் சத்யத்வ நிரூபணம்

 

जगत्सत्यत्व निरूपणम्

ஜகத் ஸத்யத்வ நிரூபணம்


       ப்ருதிவீ, ஜலம், தேஜஸ் ,வாயு, ஆகாசம் என்கிற ஐந்து பூதங்களும்,அவைகளின் கலப்பினால் உண்டான சராசரரூபமான இந்த ப்ரபஞ்சமும் ஸத்யமாயுள்ளது. 1கானல் நீர்போல் அஸத்யமன்று. கானல்நீரில் ஸ்நாநம் பானம் முதலியவை செய்யமுடியாது. அவ்வாறில்லாமல் நதியிலுள்ள ஜலம் ஸ்நாநம் முதலியவைகளுக்கு உபயோகப்படுகிறபடியால், கானல் நீரைப்போல இதுவும் பொய்யாயிருக்க முடியாது. பொய்யாயிருந்தால் அதைக்கொண்டு கார்யம் நடவாது. ஆகையால் ஆற்றின் ஜலம் ஸத்யமானது. அது ஸத்யமானால், 2ப்ரவாஹத்திற்கு முன்னும் பின்னும் ஜலம் காணவேண்டுமே, அவ்விதம் இல்லாததை எப்படி உண்மையானது என்று சொல்லலாம் என்னில், முன்னும் பின்னும் காணாததால் ப்ரவாஹம் அநித்யமென்று கிடைக்குமேயொழிய அஸத்யமென்று கிடைக்காது. அஸத்யமாவது- ஒரு கார்யத்திற்கும் உதவாதது. அநித்யமாவது- கார்யத்திற்கு உபயோகப்பட யோக்யதையோடு சிலகாலமிருந்து அழிந்துபோவது. இதற்கு த்ருஷ்டாந்தம்-மண்ணை ஜலத்தைச் சேர்த்துப் பிசைந்தால் அது உருண்டையாகிறது. பிறகு குயவனால் பானையாகச் செய்யப்படுகிறது. அப்போது ஜலம் கொண்டுவருவது முதலிய கார்யங்களுக்கு உபயோகப் படுகிறது.. கல், தடி முதலானவைகளால் அந்தப் பானையை அடித்தால், அது பானை என்னும் 3ஆகாரத்தை விட்டு ஓடாகிறது. அந்த ஓட்டை உடைத்தால் பொடியாய் மண்ணாகிறது. ஆகையால் மண் என்னும் வஸ்து நித்யமாயுள்ளது. இடையிடையே வரும் ஆகாரங்கள் அநித்யம். முதலிலுள்ள வஸ்து எப்பொழுதும் உள்ளதுதான். ஆனால் நதிஜலமும் முன்னும் பின்னும் இருக்கவேண்டாவோவென்றால் - அதில் சிறிதுபாகம் மணலில் மறைந்தும், சிறிது ஸூர்ய கிரணங்களில் கலந்தும் போகிறபடியால் காணப்படுவதில்லை. வஸ்து உள்ளதுதான். ஆனால் ப்ரவாஹ மாயுள்ள ஆகாரம் அப்போது இல்லாதபடியால் 4கார்யகாரியாவதில்லை. இதனால் அது அஸத்யமாக மாட்டாது, அநித்யமாகும். நித்யமாவது எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. ப்ரவாஹாகாரம் எப்போதும் அநுவர்த்தித்து வராமையால் அநித்யமாய் முடிகிறது. இப்படியே, மண்பொன் முதலியவைகளுக்கு அப்போதைக்கப்போது வரும் பானை, காப்பு முதலிய ஆகாரங்களிலும் கண்டு கொள்வது. அநித்யமாயிருப்பது தான் அஸத்யமாகை என்றால், இப்படிப்பட்ட அஸத்யமாகை விருத்தமன்று. இந்த அஸத்யமாகையும் ப்ரவாஹாகாரத்திற்கே தவிர எப்போதும் அநுவர்த்திக்கும் ஜலத்திற்கு இல்லை. 


    ஸத்யமாவது- எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. இது இரண்டு விதம்-ஒன்று ஸ்வரூபத்தில் மாறுபாடில்லாமல் அநுவர்த்திக்கும்; மற்றொன்று ஸ்வரூபத்தின் மாறுபாட்டோடு அனுவர்த்திக்கும். முதலில்சொல்லியது அபரிணாமி, நித்யம். பரப்ரஹ்மமும் ஜீவாத்மாக்களும் இவ்வகைப்பட்டன. இரண்டாவது 5பரிணாமி, நித்யம் ; ப்ரக்ருதி, காலம் முதலியவைகள் இதைச் சேர்ந்தன.

_________________________________________________

1கானல் -- பாலைவனத்தில் மத்யானத்தில் ஸூர்யகிரணங்கள் பரவுவதால் காணப்படும் ஜலம் போன்ற பொய்த்தோற்றம்; 2 ப்ரவாஹம் -- வெள்ளம். 3 ஆகாரம் -- आकारः உருவம் 4.कार्यकारि –– குளிப்பது , குடிப்பது முதலிய கார்யங்களுக்கு உபயோகமாயிருப்பது. 5. परिणामि  -- மாறுதல் அல்லது விஹாரத்தை உடையது. அது இல்லாதது அபரிணாமி.

சனி, 21 பிப்ரவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 8

 

॥ विशिष्टाद्वैत सिद्धान्तप्रकरणम् ॥
விசிஷ்டாத்வைத ஸித்தாந்த
ப்ரகரணம்.

இனி விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிரூபிக்கிறோம்.

இதற்கு ப்ரவர்த்தகர்
ஸ்ரீ பகவத் ராமாநுஜன்.

श्रीमल्लक्ष्मणयोगिनस्तु भुवनं सत्यं तदीशः श्रियः-
कान्तो ब्रह्म स एव सोऽखिलतनुः भिन्नास्ततश्चेतनाः ।
सत्या संसृतिरीशनिग्रहकृता- मुक्तिस्तु भक्त्यादिना
तत्प्राप्तिः परमे पदे तदनुभूत्यारव्येति संचक्षते ||
ஸ்ரீமல் லக்ஷ்மண-யோகிநஸ்து புவநம் ஸத்யம் ததீச : ஸ்ரீய:
காந்தோ ப்ரஹ்ம ஸ ஏவ ஸோகில் -தந பிந்நாஸ்-தத: சேதநா ;।
ஸத்யா ஸம்ஸ்ருதி-ரீச-நிக்ரஹ-க்ருதா முக்திஸ்து பக்த்யாதிநா
தத்-ப்ராப்தி: பரமே பதே ததநு பூத்யாக்யேதி ஸஞ்சக்ஷதே!

இது இந்த ஸித்தாந்தத்திற்கு ஸங்க்ரஹ சலோகம். இதனர்த்தம்:-

ஸ்ரீ பகவத் ராமாநுஜரோ பின்வருமாறு ஸாதித்தருளுகிறார்:-'புவநம் ஸத்யம்'—ப்ரபஞ்சம் வாஸ்தவமாயுள்ளது. முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளியைப்போல் பொய்யன்று. அது ப்ராந்தியினால் காணப்படுவதே யொழிய ஒரு காரியத்துக்கும் உபயோகப்படுகிறதன்று. கடையில் காணப்படும் வெள்ளி பாத்திரம் முதலியவைகளாக செய்யப்பட்டு, அந்தப் பாத்திரங்கள் ஜலம் முதலியவை கொண்டுவர உபயோகப்படுகிறது. ஆகையால் இது பொய்யன்று. மேலும் ஈச்வரன் ப்ரக்ருதி என்கிற வஸ்துவைக்கொண்டு இந்த ப்ரபஞ்சத்தை தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கிறான் என்று ச்ருதி சொல்லுகிறபடியால், ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ப்ரபஞ்சம் பொய்யாகமாட்டாது. பொய்யான வஸ்துவுக்கு ஸ்ருஷ்டி ஸம்பவியாதன்றோ ? மாயையை உபகரணமாகவுடைய ஈச்வரன் இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான். 'மாயையாவது ப்ரக்ருதி,' என்று ச்ருதி சொல்லுகிறது. இங்கு ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு மாயை உபகரணமென்றும், அந்த மாயையாவது ப்ரக்ருதி என்றும் கிடைக்கிறது. இங்கு ப்ரபஞ்சத்துக்கு மூலமாகச் சொன்ன ப்ரக்ருதி விசித்ரமான ப்ரபஞ்சரூப கார்யத்தை உண்டாக்குகிறபடியால் மாயை என்று சொல்லப்பட்டதேயொழிய, அவாஸ்தவம் என்கிற அபிப்ராயத்தால் அன்று. மாயை என்கிற சப்தத்துக்கு அவாஸ்தவம் என்கிற அர்த்தமும் கிடையாது.

मम योनिर्महद्ब्रह्म तस्मिन् गर्भ दधाम्यहम् ।
संभवः सर्वभूतानां ततो भवति भारत ॥

மமயோநிர் மஹத் ப்ரஹ்ம
தஸ்மிந் கர்ப்பம் ததாம் யஹம்|
ஸம்பவஸ்ஸர்வ பூதாநாம்
ததோ பவதி பாரத||

(பகவத் கீதை அத்.14. ச்லோகம் 3)

ஜகத்துக்கு மூலகாரணமான என்னுடையதான ப்ரக்ருதி என்கிற வஸ்துவில் ஜீவஸமுதாயத்தை நான் சேர்க்கிறேன். இந்தக் காரணத்தால் ஸர்வபூதங்களும் உண்டாகின்றன என்று இந்த ச்லோகத்தின் அர்த்தம். இதில் அசேதனமான ப்ரக்ருதியோடு சேதனவஸ்துவை பகவான் சேர்ப்பதால் இந்த ப்ரபஞ்சம் உண்டாகிறது என்று சொல்லியிருப்பதால் இந்த ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தின் அஜ்ஞானத்தால் கல்பிதமாகிறது என்று சொல்லுவதற்குக் கொஞ்சமும் இடமில்லை.
'
ததீச:--காந்த:'--ஶ்ரீய:பதியான ஸ்ரீமந்நாராயணன் அந்த ப்ரபஞ்சத்துக்கு ஈச்வரன்.

“
ப்ரஹ்ம ஸ ஏவ” அவன்தான் பரப்ரஹ்மம். தைத்திரீயோபநிஷத்தில் ப்ருகுவல்லியில், 'எது ஜகத்காரணமோ அது ப்ரஹ்மம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாராயணோபநிஷத்து முதலான சில உபநிஷத்துக்களில் நாராயணன் ஜகத்காரணம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் நாராயணன் தான் ப்ரஹ்மம் என்று கிடைக்கிறது. நிர்குணப்ரஹ்மம் என்று வேறொன்று கிடையாது. உபநிஷத்தில் ப்ரஹ்மம் என்று எதனால் சொல்லப்படுகிறது? என்று ஒரு கேள்வியைக் கேட்டு, இதனிடத்தில் பெரியதான குணங்கள் இருக்கிறபடியால், இது ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகையால், ப்ரஹ்மசப்தம் பெரியதான குணங்களையுள்ள வஸ்துவைச் சொல்லுகிறது என்று கிடைக்கிறபடியால், குணமில்லாத வஸ்துவை இது சொல்லமாட்டாது. ஆகையால், ஸகல கல்யாண குணங்களையும் உடையவனான ஸ்ரீமந்நாராயணனைத்தான் இந்த ப்ரஹ்ம சப்தம் சொல்லுகிறது. அவன் தான் ப்ரஹ்ம சப்தத்துக்குப் பொருள்.

ஸ:அகிலதநு:--அந்த ஈச்வரன் சேதனர்கள், அசேதன வஸ்துக்கள் இவை எல்லா வற்றையும் சரீரமாக உடையவன். ஒரு சேதனனுக்கு நியதாதேயமுமாய் (नियताधेय) நியத சேஷமுமான த்ரவ்யம் அந்த சேதனனுக்கு சரீரம் என்று சொல்லப்படுகிறது.

நியதாதேயமாகையாவது—அந்த சேதனனுடைய ஸ்வரூபத்தை எப்பொழுதும் ஆச்ரயித்திருக்கை, அதாவது, அவன் ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமலிருக்கை.
நியதநியாயம்யகையாவது- சேதனனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டிருக்கை.

நியதசேஷத்வமாவது- அந்த சேதனன் ப்ரயோஜனத்துக்காகவேயிருக்கை.

   நம்முடைய சரீரம் இந்த ஜீவாத்ம ஸ்வரூபத்தின் ஸம்பந்தம் இருக்கும்வரையில் இருந்து, அது தப்பிப்போனபோது அழிந்து போகிறது. ஆகையால் இந்த சரீரத்துக்கு சேதனஸ்வரூபம் ஆதாரமாய், அதனை ஆச்ரயித்திருக்கிறபடியால் இந்த சரீரம் ஆதேயமாய் இருக்கிறது. விழித்திருக்கும்போது அவனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு கீழே விழாமல் இருக்கிறது. அவனுடைய புண்ய பாபங்களாகிற கர்மத்தின் பலங்களான ஸுக துக்கங்களின் அநுபவமாகிற, அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே இந்த சரீரம் உண்டாயிருக்கிறது. ஆகையால் இது அவனுக்கு சரீரமாகிறது. இப்படியே சேதனாசேதன வஸ்துக்களெல்லாம், ஈச்வரனுடைய ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமல், அவன் ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு லீலா ரஸம் போகரஸம் ஆகிய அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கிறபடியால், இவையெல்லாம் ஈச்வரனுக்கு சரீரமாகிறது. இந்த அம்சம் பலச்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிந்நா.......சேதனா:'-இந்த ஜீவாத்மாக்களெல்லாம் ஈச்வரனைக்காட்டில் ஸ்வத: வேறுபட்டவர்கள்.

' ஸத்யா. க்ருதா' இஜ்ஜீவாத்மாவுக்கு கர்மத்தால் நேர்ந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் ஸம்ஸாரம். அந்த ஸம்பந்தம் ஈச்வரனுடைய நிக்ரஹ ஸங்கல்பத்தால் உண்டாகிறபடியால் வாஸ்தவமாயுள்ளது. அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் உண்டாகும் ஆசை, த்வேஷம், ஸுகம், துக்கம், இவை முதலானவைகளும், அவற்றின் அனுபவங்களும், வாஸ்தவமாயுள்ளபடியால் அது ப்ராந்தியன்று.

“முக்திஸ்து ..… ததநுபூத்யாக்யா" -- ஈச்வரன் விஷயத்தில் இந்த சேதனன் பண்ணும் பக்தி, ப்ரபத்தி இவையிரண்டில் ஒன்றால் பரமபதம் என்கிற ஒரு லோகத்தில் அந்த ஈச்வரனைக் கிட்டி அவனை அனுபவிப்பது மோக்ஷம்.

ச்வேதாச்வதரோபநிஷத்தில் ஈச்வரனைத் தொடங்கி 'ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் பதி' என்றும் 'ஸம்ஸாரத்தினின்றும் மோக்ஷத்துக்கும் ஸம்ஸார பந்தத்துக்கும் ஹேதுவானவன்' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு, ஈச்வரன் ஜீவாத்மாவுடைய ஸம்ஸார பந்தத்துக்கும் ஸம்ஸாரத்தினின்றும் விடப் படுவதற்கும் காரணபூதன் என்று சொல்லுகிற படியால், ஈச்வரன் ஜீவாத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கிடைக்கிறது.

तानहं द्विषतः क्रूरान् संसारेषु नराधमान् ।
क्षिपाम्यजस्रमशुभानासुररीष्वेव योनिषु ॥

"தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாங் ! க்ஷிபாம்யஜஸ்ரமசுபாநாஸுரீஷ்வேவ யோநிஷ'" (ப. கீ. 16-19. )

இந்தச்லோகத்தில் என்னிடத்தில் த்வேஷம் முதலான துஷ்கர்மங்களைச் செய்யுமவர்களை ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன். அதிலும், அஸுர ஜன்மத்தில் தள்ளுகிறேன் என்று பகவான்தானே சொல்லியிருக்கிறபடியாலும், 

तेषामहं समुद्धर्तामृत्यु संसारसागरात् ।
भवामि न चिरात् पार्थ मय्यावेशित चेतसाम् ॥ 

"தேஷாமஹம் ஸமுத்தர்த்தாம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்|
பவாமி நசிராத் பார்த்தமய்யாவேசிதசேதஸாம்]] ".   (ப.கீ.அத்-12, ச்லோ-7,)

    இந்தச்லோகத்தில், "என்னிடத்தில் மிகவும் பக்தி பண்ணுபவர்களை ஸம்ஸாரமாகிற ஸாகரத்தினின்றும் எடுத்து விடுகிறேன் மோக்ஷத்தை அடையும்படி செய்கிறேன்” என்று பகவானே சொல்லியிருக்கிறபடியாலும், பாபகர்மங்களைச் செய்பவர்களுக்கு அதற்குப் பலனாக ஜந்ம பரம்பரையாகிற ஸம்ஸாரத்தையும், பகவத்பக்தி பண்ணுபவர்களுக்கு மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கீழ்ச்சொன்ன ச்ருதியின் அர்த்தம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனால்,பகவானுடைய நிக்ரஹத்தால் (தண்டனையால்) ஸம்ஸாரம் என்றும், அநுக்ரஹத்தால் மோக்ஷம் என்றும் கிடைக்கிறது. ஆகையால் பகவானுடைய நிக்ரஹத்தால் ஏற்படும் ஸம்ஸாரம் ஸத்யம் என்று ஸ்பஷ்டமாகிறது.

     தைத்திரீயோபநிஷத்தில் ஆநந்தவல்லியில், பகவானுடைய உபாஸனத்தைச் செய்யுமவன் பரம வ்யோமத்தில் (ஸ்ரீவைகுண்டத்தில்) ப்ரஹ்மத்தோடுகூட ப்ரஹ்மத்தின் குணங்களையும் அநுபவிக்கிறான் என்று சொல்லியிருக்கிற படியால் ஸ்ரீவைகுண்டத்தில் பகவானையும், அவனுடைய கல்யாண குணங்களையும் அநுபவிப்பது மோக்ஷம் என்று கிடைக்கிறது. ஆகையால் ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு என்கிற ப்ரமம் ஸம்ஸாரமென்றும், ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்ய ஜ்ஞானத்தால் உண்டாகும் அந்த ப்ரமநிவ்ருத்தி முக்தி என்னும் பக்ஷம், ச்ருதி ஸம்மதமன்று என்று ஸ்ரீ பகவத் ராமாநுஜரின் அபிப்ராயம்.

जगत्सत्यत्व निरूपणम्  (ஜகத் ஸத்யத்வ நிரூபணம்)
தொடரும்
.

சனி, 10 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 4

 

अद्वैतसिद्धान्त प्रकरणम् ॥
அத்வைத ஸித்தாந்த ப்ரகரணம்.
இனி அத்வைத ஸித்தாந்தத்தை நிருபிக்கிறேம்.
இதற்கு ப்ரவர்த்தகர் ஸ்ரீ சங்கராச்சாரியர்.



ब्रह्मैकं परमार्थसत्तदितरन्मायामयत्वान्मृषा
ब्रह्मैवैकमुपाधिबिम्बितमतो जीवेशभावं गतम् ।
भ्रान्तिस्संसृतिरस्य तत्प्रशमनं मुक्तिस्तदप्यात्मनो
ब्रह्मैक्यावगमाच्छूति श्रवणजादित्याद्दुरद्वैतिनः ॥

ப்ரஹ்மைகம் பரமார்த்த-ஸத் ததிதான் - மாயா - மயத்வான்-ம்ருஷா
ப்ரஹ்மைவைக முபாதி -பிம்பித-மதோ ஜீவேச-பாவம் கதம் 1
ப்ராந்திஸ் - ஸம்ஸ்ருதி-ரஸ்ய தத்-ப்ரசமனம் முக்திஸ்-ததப்யாத்மநோ
ப்ரஹ்மைக்யாவகமாத் ச்ருதி-சரவண-ஜாத் இத்யாஹு ரத்வைதிந்:11

இது இந்த ஸித்தாந்தத்தின் ஸங்க்ரஹ சலோகம். இதன் அர்த்தம்:-

ஏகம் = தனக்கு ஸஜாதீயமானதும், விஜாதீயமானதும், ஒன்றுமில்லாததாய், தன்னிலும்
ஒரு தர்மமும் இல்லாததான, ப்ரஹ்ம-ஆத்ம வஸ்து, பரமார்த்தஸத்பரமார்த்தமாயுள்ளது
(
ஆத்மவஸ்துவுக்கு ஸஜாதீயமானது மற்றொரு ஆத்மா, விஜாதீயமானது ஆத்மாவைக் காட்டில் வேறுபட்டது)
   இதனால் இரண்டாவது ஆத்மாயில்லை என்றும், ஆத்மாதவிர மற்றொரு வஸ்து இல்லை என்றும், ஆத்மவஸ்துவில் ஒரு தர்மமும் இல்லை என்றும் சொன்னதாகிறது. இங்கு 'ப்ராதிபாஸிகஸத்' 'வ்யாவஹாரி கஸத்' இவைகளைக்காட்டில் ஆத்ம வஸ்துவுக்கு வாசி தோன்றுவதற்காக 'பரமார்த்தஸத்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. 'ததிதரன் ... ம்ருஷா'-ப்ரஹ்மத்தைக் காட்டில் வேறுபட்டது மாயையின் கார்யமானதால் பொய்; 'ப்ரஹ்மை.......கதம்'-ஒரு ப்ரஹ்மமே உபாதியில் ப்ரதிபலித்ததாய் அந்த ப்ரதிபலனத்தால் ஜீவனாகவும் ஈச்வரனாகவும் ஏற்பட்டது.

   'ப்ராந்தி: அஸ்ய'ஜீவாத்மாவுக்கு நான்ஞாதா, நான்கர்த்தா, நான்போக்தா, இது முதலிய ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

'தத்ப்ரசமனம் முக்தி:' அந்த ப்ராந்தியின் நிவ்ருத்திதான் மோக்ஷம்,

   ததபி.........ச்ரணஜாத்' தத்வமஸி என்கிற வேதாந்தவாக்ய ச்ரவணத்தால் உண்டாகும் ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானத்தால் (தனக்கு ப்ரஹ்மத்தோடு ஐக்யஜ்ஞானத்தால்) அந்த ப்ராந்தி நிவ்ருத்தி யுண்டாகிறது.

'இத்யா... ந:' என்றிப்படி அத்வைதி வேதாந்திகள் சொல்லுகிறார்கள்.

 

1. ப்ரஹ்மத்துக்கு ஸத்யத்வ நிருபண ப்ரகரணம்.

ப்ரிதிவீ,(पृथिवी ––பூமி) ஜலம், தேஜஸ், (तेझः -அக்னி) வாயு, ஆகாசம் என்று பெயருடைய பஞ்சபூதங்களும், அவைகளுடைய கலப்பாலுண்டான 'பௌதிகம்'(भौतिकं - பூதங்களிலிருந்து உண்டானவை) என்று பெயருடைய சரம், அசரம் என்று இரண்டு வகைப்பட்ட நமக்குத் தென்படும் எல்லா வஸ்துக்களும் வாஸ்தவமானவையன்று. பாலைவனத்தில் மத்யாஹ்நத்தில் (मध्याह्नम्) ஸூர்யகிரணங்கள் பரவ அவ்விடத்தில் வாஸ்தவமாயில்லாத ஜலப்ரவாஹமும் அதின் அலைகளும் காணப்படுவதுபோல இந்த ப்ரபஞ்சமும் உண்மையாயில்லாதபோதிலும் உள்ளது போல் தோன்றுகிறது.அங்கே பரவிய சூரியகிரணங்கள் ஜலம்போல் தென்படுவதுபோல, இங்கும் எங்கும் பரவிய ஒரு வஸ்து இப்படி ப்ரபஞ்சரூபமாய்க் காணப்படுகிறது. இதுதான் பரப்ரஹ்மமென்று சொல்லப்படுகிறது.

  வாஸ்தவமாயுள்ள ப்ரஹ்மஸ்வரூபம் தெரியாமல் பொய்யான ப்ரபஞ்சம் காணப்படு வானேன் எனில்- வாஸ்தவமான ப்ரஹ்மஸ்வரூபத்திற்கு அநாதிகாலமாக மாயையென்று ஒரு வஸ்துவின் ஸம்பந்தம் வந்திருக்கிறது. இந்த மாயைக்குத் தனக்கு ஆதாரமான ப்ரஹ்மத்தை மறைப்பது ஸ்வபாவம். அப்படி மாயையினால் மறைக்கப்பட்டதால் ப்ரஹ்மஸ்வரூபம் உள்ளபடி ப்ரகாசிப்பதில்லை.
   இந்த ப்ரஹ்மத்துக்கு ஸத்தை, ப்ரகாசம், ஆநந்தம் என்று மூன்று ஆகாரங்கள் உண்டு. அதனால்தான் இது ஸச்சிதாநந்தஸ்வரூபமென்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று ஆகாரங்களும் ப்ரஹ்மஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று. இந்த ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் ஒரு குணமும் கிடையாது. ஆகையால் இது நிர்குணம் என்றும் நிர்விசேஷம் என்றும் சொல்லப்படுகிறது.

   ஸச்சிதாநந்த ரூபமான இந்த ப்ரஹ்மம் வாஸ்தவமாக உள்ளதென்று 'ஸத்யமாயும் விஜ்ஞானமாயும், ஆநந்தமாயும் உள்ளது ப்ரஹ்மம்' என்றிது முதலிய ஶ்ருதிகளாலும் அதற்கு ஒத்தாசையான யுக்திகளாலும் கிடைக்கிறது. யுக்தி எதுவெனில் -- கீழ்ச்சொன்ன த்ருஷ்டாந்தத்தில் பாலைவனத்தில் பரவின ஸூர்யகிரணத்தில் ஜலப்ரமம் உண்டாகிறது. இதுபோலவே அந்தந்த ப்ரமங்களில் ஒரு வஸ்துவிலே மற்றொரு வஸ்துவுக்கு ப்ரமம் உண்டாகிறது. அவ்விதமே இங்கும் இந்த ப்ரபஞ்சத்தினுடைய ப்ரமம் ஒரு வஸ்துவில் உண்டாயிருக்கவேண்டும். அந்த வஸ்து ஸத்யமன்று என்று ஒப்புக்கொண்டால், அதன் விஷயமான ப்ரமத்திற்கு *ஆதாரம் ஒன்று ஒப்புக்கொள்ளவேண்டும். இப்படியே மேல் மேல் ஆதார #பரம்பரை ஒப்புக்கொள்ளவேண்டியதாக வருகிறது. ஆகையால் ப்ரபஞ்ச ப்ரமத்திற்கு ஆதாரமான வஸ்து ஸத்யமாக உள்ளது என்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதே.

*ஆதாரம் -- எதில் ஒன்றுக்குத் தோற்றம் ஏற்படுகிறதோ அது ஆதாரம்.

#பரம்பரை -- ஒன்றின் மேல் ஒன்றாகத் தொடர்ந்து ஒரு முடிவின்றிக்கே வருவது.

தொடர்வது 
प्रपञ्चमिथ्यात्वनिरूपणम्  –– ப்ரபஞ்ச மித்யாதவ நிரூபணம் 

 


புதன், 7 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3

॥द्वैतसिद्धान्तप्रकरणम्॥

த்வைத-ஸித்தாந்த-ப்ரகரணம்.


இந்த ஸித்தாந்த-ப்ரவர்த்தகர்

ஸ்ரீ ஆநந்த-தீர்த்தர்.

श्रीमन्मध्वमते हरिः परतरः सत्यं जगत्तत्वतो

भिन्ना जीवगणा हरेरनुचरा नीचोच्चभावं गताः ।

मुक्तिर्नैजसुखानुभूतिरमला भक्तिश्च तत्साधनं

ह्यक्षादित्रितयं प्रमाणमखिलाम्नायैकवेद्यो हरिः ।।


ஸ்ரீமந்- மத்வ - மதே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத் தத்வதோ

பிந்நா ஜீவகணா ஹரோநுசரா நீசோச்சபாவம் கதா: |

முக்திர் - நைஜ-ஸுகாநுபூதி: அமலா பக்திச்ச தத் –– ஸாதனம்

ஹ்யக்ஷாதி - த்ரிதயம் ப்ரமாணமகில- ஆம்நாயைகவேத்யோ ஹரி: II


இந்த சலோகத்தின் தாத்பர்யத்தை விவரிக்கிறோம். ஸ்ரீ மஹாவிஷ்ணு எல்லாவற்றைக் காட்டிலும் மேற்பட்டவன். இவனிடத்தில் எல்லா குணங்களும் நிறைந்திருக்கின்றன; அஜ்ஞானம் முதலிய ஒருவித தோஷமும் கிடையாது. ஆகையால் இவனுக்கு ஸர்வோத்தமத்வம் ஏற்பட்டிருக்கிறது. இவன் தான் ஜகதீச்வரன்; இவன்தான் பர-ப்ரஹ்மம். இவன் ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி முதலான எட்டுக் காரியங்களைச் செய்கிறான். அவையாவன-ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், நியமனம், ஞானம், பந்தம், மோக்ஷம், இவன் ஸர்வஜ்ஞன், ஜகத்திலுள்ள ஸர்வ பதார்த்தங்களைச் சொல்ஓம் சப்தங்களால் மஹாயோக-வ்ருத்தியைக் கொண்டு அவனே சொல்லப்படுகிறான். மஹாயோக-வருத்தியாவது-சப்தத்தின் பூர்ணமான அவயவ-சக்தி-விசேஷம்.


    இவனுக்கு அப்ராக்ருதமாய் நித்யமான ஒரு சரீரமுண்டு. இந்த சரீரத்தில் பாதம் முதல் தலை யளவான ஸர்வாவயவங்களும் ஞானாநந்தாத்மகமாயிருக்கிறது. 'இதில் கண், காது முதலான எல்லா இந்திரியங்களும் நித்யமாயுண்டு, ஒவ்வொரு இந்திரியமும் தனித்தனியே ரூபம் ரஸம் முதலிய எல்லாவற்றையும் க்ரஹிக்க ஸாமர்த்தியமுள்ளது. இந்த விக்ரஹமும், இதன் அவயவங்களும் இவன் ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவை யன்று. இவன் ஒருவன் தான் 'ஸர்வத்திலும் ஸ்வதந்த்ரன்.


    இவன் வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்றும், மத்ஸ்யம், கூர்மம் முதலானதும், கேசவன் முதலானதுமான அநேக ரூபங்களுள்ளவன். எல்லா ரூபங்களும் ஞான-ஆநந்தாதி-குணங்களால் நிறைந்தவைகள். அளவிடமுடியாதவைகள். இவனிடத்தி லிருக்கும் ஞான-ஆநந்தாதி குணங்கள், க்ரியைகள், ரூபரஸாதிகள் எல்லாம் 'ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று.


இவனுக்கு லக்ஷ்மி என்று ஒரு பத்னியுண்டு. இவள் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவள். இவனொருவனுக்கு மாத்ரம் ஆதீனப்பட்டவள். இவனைக் காட்டிலும் ஞான-ஆநந்தாதிகளால் குறைந்தவள். இவள் தான் பகவானுக்கு அடுத்தவள். ஜீவாத்மாக்களெல்லாம் இவளுக்குத் தாழ்ந்தவர்கள். பரமாத்மாவுக்குப் போலவே இவளுக்கும் ஞான-ஆனந்த-ரூபமாய் அப்ராக்ருதமான சரீரமுண்டு. அநேக ரூபங்களுமுண்டு. அஜ்ஞானாதி தோஷங்கள் கிடையாது. இவளும் பரமாத்மாவைப் போலவே மஹா-யோக வ்ருத்தியால் எல்லா-சப்தங்களாலும் சொல்லப்படுகிறாள். இவளும் ஸர்வதேசத்திலும் வ்யாபித்திருக்கிறாள்.


இவர்களிருவர்தான் நித்ய-முக்தர். ஜீவாத்மாக்களில் நித்ய-முக்தர் கிடையாது; எல்லோருமே ஸம்ஸாரத்திலிருந்து முக்தி அடைகிறவர்கள். இந்த ச்லோகத்தில் "ஹரி:" *பரதர: (परः – உயர்ந்தவன். परतरः –– அதற்கும் உயர்ந்தவன்) என்கிற வித்தால் எல்லா ஜீவர்களைக் காட்டிலும் லக்ஷ்மி மேற்பட்டவள் என்றும் இவளைக் காட்டிலும் விஷ்ணு மேற்பட்டவன் என்றும் ஸூசிப்பிக்கப் படுகிறது. சராசர ரூபமான ஸ்கல ப்ரபஞ்சமும் உண்மையாயுள்ளது; அஸத்யமன்று. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவைக்காட்டிலும் ஒருவருக்கொருவரும் வேறுபட்டவர் கள். இவர்கள் ஸ்த்ரீ-ஜாதி, பும்.ஜாதி என்று இருவகைப்பட்டவர்கள். புருஷ ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஸம்ஸார-தசையில் கர்மத்தால் ஸ்த்ரீ-சரீரத்தை யடைந்தாலும் மோக்ஷத்தில் புருஷ-ஜாதீயராகவே இருப்பார்கள்.. ஸ்த்ரீ-ஜாதியர் ஸம்ஸார-தசையிலும் மோக்ஷ-தசை யிலும் ஸ்த்ரீ-ஜாதியராகவே இருப்பார்கள்.


    இஜ்ஜீவர்கள் முக்தியோக்யர், நித்யஸம்ஸாரிகள், தமோயோக்யர் என்று மூன்று வகைப் பட்டிருப்பார்கள். இவர்களில் முக்தியோக்யர் தேவ-கணம், ரிஷி கணம், பித்ரு -கணம், சக்ரவர்த்தி-கணம், மனுஷ்யோத்தமகணம் என்று ஐந்து வகையினர். அந்தந்த கணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ஸ்தானத்தை அடைய யோக்யதை யுண்டு. ப்ரஹ்மா, வாயு முதலானவர் தேவ- கணங்கள் ; நாரதர் முதலியவர் ரிஷி-கணங்கள்; சிராதிகள் பித்ரு-கணங்கள்; ரகு அம்பரீஷன் முதலியோர் சக்ரவர்த்தி-கணங்கள்.

(தொடரும்)