வெள்ளி, 16 செப்டம்பர், 2016

நிறைவு பெறும் அபீதிஸ்தவம்

அபீதிஸ்தவம்

சுலோகம் 29.

प्रबुद्धगुरुवीक्षण प्रथितवेङ्कटेशोद्भवां
            इमां अभयसिद्धये पठत रङ्गभर्तुः स्तुतिम् ।
भयं त्यजत भद्रमित्यभिदधत् स वः केशवः
            स्वयं घनघृणानिधिः गुणगणेन गोपायति ॥

ப்ரபு³த்³கு³ருவீக்ஷண ப்ரதி²தவேங்கடேஶோத்³வாம்
         இமாம் அபயஸித்³யே பட²த ரங்க³ர்து: ஸ்துதிம் |
யம் த்யஜத பத்³ரமித்யபி³த் ஸ வ: கேஶவ:
         ஸ்வயம் க⁴ன்ருணாநிதி⁴: கு³ணக³ணே கோ³பாயதி ||

ப்ரபுத்த -- சிறந்த ஞானமுள்ள; குரு -- ஆசார்யனுடைய; வீக்ஷண -- கடாக்ஷத்தால்; ப்ரதித -- யஶஸ்ஸைப் பெற்ற; வேங்கடேச -- வேங்கடேசரிடமிருந்து; உத்பவாம் -- தோன்றிய; இமாம் -- இந்த; ஸ்துதிம் -- ஸ்தோத்ரத்தை; ரங்கபர்த்து -- ரங்கப்பிரபுவின்; அபயஸித்தயே -- அபயம் ஸித்திப்பதற்காக; (கோயில் நிர்பயமாயிருப்பதற்காக); படத -- படியுங்கோள்; பயம் -- பயத்தை; த்யஜத -- விட்டுவிடுங்கள்; (அஞ்சல் ! அஞ்சல்!); வ -- உங்களுக்கு; பத்ரம் -- சுபம் (உண்டாகட்டும்); இதி -- என்று; அபிததத் -- சொல்லிக்கொண்டு; கனக்ருணா நிதி -- கருணாநிதியான ; ஸ -- அந்த; கேஶவ -- (ப்ரஹ்ம, ஈசாதிகளுக்குக் காரணமான) கேசவன்; குணகணேன -- தம் கல்யாண குணங்களால்; கோபாயதி -- ரக்ஷிப்பான்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

உயர்ஞான குருக்கள்தம் உளம்குளிரும் நோக்குதன்னால்
உறும்புகழோன் வேங்கடேசன் உளத்துதித்த அரங்கனது
வியப்பான இத்துதியை விருப்போடு பயிலுங்கள்!
விட்டகலும் பயமெல்லாம் விரைவாக உமையெல்லாம்!
பயந்தன்னை ஒழித்திடுவீர் பெரும்நலனே உறுவீரென
பரிந்துரைத்த மிகுங்கருணைப் பெருநிதியாம் கேசவனே
உயர்ந்தநல்ல பண்புகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தால்
உம்மையெலாம் எவ்விதத்தும் காத்தருள்வான் தானாவே! 29.

அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்

         இந்த ஸ்துதி ஸ்ரீரங்கபர்த்தாவான ரங்கநாதன் விஷயமென்றும், இதன் ப்ரயோஜனம் அரங்கத்திற்கும் ரங்க பர்த்தாவுக்கும் அபயஸித்தியே என்றும் விஷயம்  ப்ரயோஜனம் இரண்டிலும் வரவேண்டும் என்பதற்காக "ரங்கபர்த்து" என்னும் பதம் 'அபயஸித்தயே', 'ஸ்துதிம்' என்ற இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது. அவன் விஷயமான நமது அச்சம் தீருவதும் அவனைத் துதித்தைதான் ஸித்திக்க வேணும்.

         இந்தத்துதி தோன்றினது 'கவிஸிம்ஹம்', 'வேதாந்தாசார்யர்' என்று ப்ரஸித்தி பெற்ற வேங்கடேசனிடமிருந்து. அந்த பிரஸித்திக்குக் காரணம் ப்ரபுத்தர்களான (ஸர்வஜ்ஞர்களான) ஆசார்யர்களின் கடாக்ஷம்.

         பயம் த்யஜத பத்ரம் -- அபய முத்ரை காட்டுவதோடு மட்டும் நிற்காமல், அஞ்சல் என்று பேசுவார். பாலகாண்டத்தில் அஶ்வமேதத்தில் ப்ரஹ்மா முதலிய தேவர்கள் துதிக்கையில், भयं त्यजत भद्रं वः (பயம் த்யஜத, பத்ரம் வ:) என்று அபயமளித்த வார்த்தையையே இங்கே அமைக்கிறார்.

         குணகணேன கோபாயதி -- அவருடைய கல்யாண குணங்களின் கூட்டங்களின் அனுபவமே உங்களுக்கு ப்ரயோஜனம் . அந்த குணங்களை அனுபவிக்கத் தருவதே எங்களுக்கும் ரக்ஷணம்.  सोऽश्नुते सर्वान् कामान्  (ஸோ ஶ்நுதே ஸர்வாந் காமாந்) ஸ்வயம் அபிததத் -- யதிராஜனுடைய திருநாமத்தையும் ஸரஸ்வதீரஸத்தையும் பேசவே, பெருமாளும் வாய்திறந்து பேசுவார். 'பேரருளாளர்' போல் சோதி வாய்திறந்து பேசுவார் என்பதைக் காட்ட கனக்ருணாநிதி -- அருள்நிரம்பிய நிதி என்கிறார். முதலில் துர்யம் மஹ என்று ஆரம்பித்ததுபோல் முடிவில் கைடபதமோரவி மதுபராகஜஞ்ஜாமருத் என்று மத்ஸ ஹம்ஸ ஹயக்ரீவாவதாரங்களைப் பேசுகிறார். मत्स्याश्वकच्छप  (மத்ஸ்ய அஶ்வ கச்சப) என்று சுகரும் மத்ஸ்யாவதாரத்தோடு 'அஶ்வ”அவதாரத்தையும் அனுஸந்தித்தார். "ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நாராயண கீதாசார்யாத் யவதாரங்களாலே தானே வெளி நின்று தத்வ ஹிதங்களைப் பிரகாஶிப்பித்தும்" என்று ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம் குருபரம்பராதிகாரம்.

         கேஶவ -- அதிலங்கித த்ருஹிண ஶம்பு ஶக்ராதிகம் என்று முதல் சுலோகத்தில் விஸ்தரித்துக் கூறியதை இந்த ஒரு பதத்தால் சுருங்கக் காட்டுகிறார். न दैवं केशवात् परं  (ந தைவம் கேஶவாத் பரம்) என்று மஹரிஷிகளின் ஸபையில் வேதாசார்யன் தம் கையைத் தூக்கி சபதம் செய்தது ஸூசிப்பிக்கப் படுகிறது. அப்படியே "க:" என்ற ப்ரஹ்மாவின் பெயர், நான் ஸர்வதேஹீக்களுக்கும் ஈசன், நாங்கள் இருவரும் உம் திருமேனியிலிருந்து பிறந்தவர்கள். ஆகையால் உமக்குக் "கேஶவன்" என்று திருநாமம் என்று எதிரிகையாலே வீடு தீட்டானபடி அவர்கள் சொன்ன பாசுரங்களையே ஸூசிப்பித்து ஸ்திரப் படுத்துகிறார்.

         அபீதி: என்று தொடங்கி  ஓபாயதி என்று முடிப்பதால், அபயத்தை விரும்புவோருக்கு இந்த ஸ்தோத்திரத்தால் த்ருப்தனான ஸர்வேஶ்வரன் அபய ப்ரதானம் செய்து ரக்ஷிக்கிறான் என்ற ப்ரஸித்தி சொல்லப் படுகிறது.

कवितार्किकसिंहाय कल्याणगुणशालिने ।
श्रीमते वेङ्कटेशाय वेदान्तगुरवे नमः ॥

கவிதார்க்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ||

அபீதிஸ்தவம் நிறைவு பெற்றது.

வியாழன், 15 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்

சுலோகம் 28

यतिप्रवरभारतीरसभरेण नीतं वयः
            प्रफुल्लपलितं सिरः परमिह क्षमं प्रार्थये ।
निरस्तरिपुसंभवे क्वचन रङ्गमुख्ये विभो
            परस्परहितैषिणां परिसरेषु मां वर्तय ॥

யதிப்ரவரபாரதீரஸபரேண நீதம் வய:
         ப்ரபு²ல்லபலிதம் ஸிர: பரமிஹ க்ஷமம் ப்ரார்த்²யே |
நிரஸ்தரிபுஸம்வே க்வசந ரங்க³முக்²யே விபோ
         பரஸ்பரஹிதைஷிணாம் பரிஸரேஷு மாம் வர்த்தய ||

விபோ -- ப்ரபுவே! ; யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண -- யதிராஜனுடைய ஸார தம ஸரஸ்வதீ ரஸாநுபவ கனமாகவே; வய: -- யௌவன வயதானது; நீதம் -- சென்றது; சிர -- தலை; ப்ரபுல்ல பலிதம் -- மலர்ந்த புஷ்பம் போல் வெளுத்து விட்டது.; பரம் -- இனி; இஹ -- இவ்வுலகில்; க்ஷமம் -- (எனக்குத்) தக்கதை;  ப்ரார்த்தயே -- வேண்டுகிறேன்; நிரஸ்த ரிபு ஸம்பவே -- சத்ருக்கள் இருக்கலாம் என்று ஸந்தேஹிக்கக் கூட அவச்யமில்லாமல் நிர்ப்பயமான; ரங்க முக்யே -- அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில்; பரஸ்பர ஹிதைஷிணாம் -- ஒருவருக்கொருவர் ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்திருப்பவரின்; பரிஸரேஷு -- அருகில்; மாம் -- அடியேனை; வர்த்தய -- இருக்கச் செய்யவேணும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

எதிராசர் சொற்சுவையை அனுபவித்தே இளமைசெல
என்தலையும் நரைத்ததுவே முற்றிலுமே அப்படியே!
எதுவொன்று என்றனுக்கே இனியுமிங்கே ஏற்றதுவோ
அதனைநீயே அளித்திடுவாய்!அரங்கநகர் பெருமானே!
எதிரிகளாய் எவருமே இருந்திடாத நிலைகொண்ட
எழிலரங்கம் போலேதும் இடமொன்றில் ஓரொருவர்
இதந்தனையே விரும்புவரின் இடையினிலே அடியேனை
இருக்கவைத்து வரும்நாளை இனிதாக்கி அருள்வாயே! 28.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         அரங்கம் மட்டுமல்ல, நம் திவ்ய தேசங்கெல்லாம் சத்ரு ஹிம்ஸை இல்லாமல் இருக்க வேணும். கச்சியை விட்டு அரங்கம் வந்த எனக்கு ஸ்ரீபாஷ்யாதி ப்ரவசநம்  செய்வதிலேயே நீண்ட காலம் இன்பமாய் வயதெல்லாம் சென்றது. பரஸ்பரஹிதைஷிகளும் பரம பாகவதர்களுமான பெரியோர்களுடைய ஸத்ஸங்க ரஸமும் அனுபவிக்கப் பட்டது. இந்த ரஸங்களுக்கு விச்சேதமில்லாமல் ஆயுளின் மிகுதியும் அரங்கத்திலேயே கழிய வேணும்.

         யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண -- ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் எமக்கு நித்யம். प्रपद्ये प्रणवाकारं भाष्यं रङ्गमिवापरं  (ப்ரபத்யே ப்ரணவாமாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம்) दृष्टं श्रीरङ्गधामनि  (த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி) என்று சொல்லாமல் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் கூடுமோ? அரங்கத்திற்கு ஆபத்து வந்தால் பாஷ்ய காலக்ஷேபம்  இன்பமாக எப்படி நடக்கும்? நிர்ப்பரராயினும் பாஷ்யத்தின் ரஸபரம் அளவேயில்லை. யதிராஜனுடைய கத்யங்களை தினமும் அனுஸந்தித்து ரஸத்தில் முழுகுகிறோம். இங்கேயே  ஸ்ரீரங்கத்தில் ஸுகமாக வஸிப்பாய் என்று தேவரீர் நியமனத்தைச் சொல்லிக்கொண்டே யிருக்கிறோம். யதிராஜன் திருநாமத்தைச் சொல்லி, அவர் ஆக்ஞையை விருத்தியும் அபிவிருத்தியும் செய்யவேண்டுமென்றும், யதிராஜனுடைய அரங்கம் வாழவேண்டுமென்றும் பிரார்த்தித்தால் பெருமாள் மறுக்க மாட்டார் என்று முடிவில் அதைப் பிரார்த்திக்கிறார். ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் முடிவில் ஆழ்வானும் யதிராஜனோடு அரங்கத்தில் வஸிப்பதைப் பிரார்த்தித்தார். 

சுலோகம் 27

स कैटभतमोरविः मधुपरागजञ्झा मरुत्
            हिरण्यगिरिदारणः त्रुटितकालनेमिद्रुमः ।
किमत्र बहुना ‍ भजद्भवपयोधिमुष्टिंधयः
            त्रिविक्रम भवत्क्रमअः क्षिपतु  मङक्षु रङ्गद्विषः ॥

ஸ கைடபதமோரவி: மதுபராக³ஜஞ்ஜாமருத்
ஹிரண்யகி³ரிதா³ரண: த்ருடிதகாலநேமித்³ரும: |
கிமத்ர ப³ஹுநா பஜத்³வபயோதிமுஷ்டிம்ய:
த்ரிவிக்ரம பவத்க்ரமஅ: க்ஷிபது மஙக்ஷு ரங்க³த்³விஷ: ||

த்ரிவிக்ரம -- த்ரிவிக்ரமனே!; கைடப தமோ ரவி -- கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்; மது பராக ஜஞ்ஜா மருத் -- மது என்னும் அஸுரனான தூசிக்குப் பெருங்காற்றுப் போன்றதும்; ஹிரண்ய கிரி தாரண -- ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும்; த்ருடித காலநேமி என்னும் வ்ருக்ஷத்தையுடையதும்; அத்ர -- இவ்விஷயத்தில்;  கிம் பஹுநா -- அதிகம் சொல்லுவானேன் (சுருக்கமாக); பஜத் பவ பயோதி முஷ்டிம்தய -- ஆச்ரிதருடைய ஸம்சார ஸமுத்ரத்தை ஒரு சிறங்கை ஜலத்தைப் போல் உறிஞ்சி விடுவதுமான; ஸ: -- அந்த (அவ்விதமான); பவத் க்ரம -- உம் பராக்ரமம்; மங்க்ஷு -- சீக்கிரத்தில்; ரங்கத்விஷ -- ரங்க க்ஷேத்ரத்தின் விரோதிகளை; க்ஷிபது -- நிரஸநம் செய்யட்டும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

இருளன்ன கைடபனை இரவியைப்போல் அழித்திட்டாய்!
சுழற்காற்றில் புழுதியைப்போல் சிதைந்தழிந்தான் மதுவரக்கன்!
இரணியனை மலையைப்போல் பிளந்தழித்தாய் திருவரங்கா!
மரத்தைப்போல் முறித்திட்டாய் காலநேமி அரக்கன்தனை!
உரைக்கமேலும் வேண்டாவே உன்றனது வீரந்தனை!
உன்றனையே புகலாக உற்றவரின் துயர்க்கடலை
உறிஞ்சிவிடும் உன்வலிமை அரங்கத்தை நலிந்திடவே
உற்றபகை அனைவரையும் ஒழித்திடட்டும் விரைவினிலே! 27.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         ஸங்கல்ப ஸூர்யோதயம் இரண்டாம் அங்கத்திலும் இந்தச் சுலோகம் உளது. உம் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தவர் அத்திருவடியாலேயே அபயம் பெறுவது உசிதமாகையால், உம் உலகளந்த திருவடி பலத்தால் எங்கள் சத்ருக்கள் அடங்கி நாங்கள் அபயம் பெறவேணும். "லோகவிக்ராந்தமான உம் சரணங்களை ஶரணம் பற்றினோம்"
         முன்பு மருத் தரணி பாவக என்றார். இங்கு ஸூர்ய ஸூர்யனான நீர்தான் ஸூர்யன். காற்றுக்கும் சண்டமாருதமான நீர்தான் பெருங்காற்று என்கிறார். முன் இரண்டாம் சுலோகத்தில் ஜகத்தின் பாபங்களையெல்லாம் உண்ணும் பெருவாயன் என்றார். இங்கு பாபக்கடலை உளிஞ்சுபவன் என்கிறார். தொடங்கியதுபோல முடிக்கிறார். எங்கள் பாபக்கடலை உம் திருவடி யல்லால் மற்றொன்று கடக்கவல்லதல்ல. ஆயுதங்களும் வேண்டாம். யுத்தமும் வேண்டாம். உம் திருவடி பலமே போதும்.
         ஹிரண்ய கிரி தாரண -- மலையைக் கிழிக்க நகங்களே ஆயுதம். .27.

புதன், 14 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்

சுலோகம் 26

विधिस्त्रिपुर मर्दनस्त्रिदशपुङ्गवः पावको
            यमप्रभृतयोऽपि यद्विमतरक्षणे न क्षमाः ।
रिरक्षिषति यत्र च प्रतिभयं न किञ्जित् क्वचित्
            सः नः प्रतिभटान् प्रभो शमय रङ्गधामादिषु ॥

விதிஸ்த்ரிபுர மர்த்³நஸ்த்ரித³ஶபுங்க³வ: பாவகோ
யமப்ரப்ருதயோ
பி யத்³விமதரக்ஷணே ந க்ஷமா: |
ரிரக்ஷிஷதி யத்ர ச ப்ரதிபயம் ந கிஞ்ஜித் க்வசித்
ஸ: ந: ப்ரதிபடாந் ப்ரபோஶமய ரங்க³தாமாதி³ஷு ||

விதி -- ப்ரஹ்மாவும்; த்ரிபுர மர்த்தந -- மூன்று புரங்களை எரித்தவரும்; த்ரிதஶபுங்கவ -- தேவர்கள் தலைவனான இந்திரனும்; பாவக -- அக்னியும்; யம பரப்ருதய அபி -- யமன் முதலானோரும்; யத்விமத ரக்ஷண --எந்த உம் விரோதியை ரக்ஷிப்பதில்; ந க்ஷமா -- ஸமர்த்தரல்லவோ ; யத்ர -- எந்த நீர்; ரிரக்ஷிஷதி -- ரக்ஷிக்க இஷ்டப்பட்டபோது; க்வசித் -- ஓரிடத்திலும்; கிஞ்சித் -- ஒன்றும் (எதுவும்); ப்ரதிபயம் ந -- பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ; ஸ: -- அந்த நீர்; ரங்கதாமாதிஷு -- அரங்கம் முதலிய திவ்ய தேசங்களில்; ந: -- எங்களுடைய; ப்ரதிபடாந் -- எதிர்படரை; ஶமய -- அடக்கவேணும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

உன்னிடத்தே அபசாரம் உறுபவனைக் காத்திடவே
உந்திமலர் நான்முகனும் உருத்திரனும் இந்திரனும்
வன்னியனும் யமதேவு முதலான தேவர்களும்
வலிமையிலார் என்றைக்குமே ! ஒருவனைநீ காத்திடவே
எண்ணினாயேல் அவன்தனக்கு எங்கிருந்தும் எவராலும்
எள்ளளவும் அச்சமேதும் ஏற்படாதே நிச்சயமாய்!
அன்னவன்நீ அரங்கத்தும் அதுவனைய தலங்களிலும்
அல்லல்தரும் பகைவர்தமை அழித்தொழிப்பாய் பெருமானே! 26.

அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்

         உம் திருமேனியைக் காட்டிலும் எங்களுக்குப் பிரியமான வஸ்து இல்லை; அதற்குக் கெடுதலைச் செய்பவர்கள் எங்கள் சத்ருக்கள். எங்களுடைய சத்ருக்கள் உம் சத்ருக்களாகவேணும். "என் பஞ்ச ப்ராணரான பாண்டவர்களை நீ த்வேஷிக்கிறாய். ஆகையால் நீ எனக்கு த்வேஷி" என்றார் ஸ்ரீ கிருஷ்ணன். இப்படி உமக்கு விரோதியாயிருப்பவனை நீர் கொல்ல நினைத்தால் ப்ரஹ்மா, ருத்ரன், இந்த்ரன், யமன் முதலான ஒருவரும் அவனை ரக்ஷிக்க முடியாது. ஆகையால் எங்கள் ப்ரதிபடரை அடக்க வேண்டும்.

         விதி: -- ஊருக்கெல்லாம்  விதிப்பவர் ப்ரஹ்மா; அவருக்கும் விதிப்பவர் நீர்; ஸம்ஹரிப்பவனுக்கும் ஸம்ஹாரகர். ஸுரநாயகனையும் நியமிப்பவர். அக்னியைக் கொளுத்துபவர். ஜலரூபியாயிருந்து ஸம்ஹரிப்பவர். யமனுக்கும் யமன் என்று யமனே சொன்னான். ராவணனிடம்  ब्रह्मा स्वयंभुः  என்று திருவடி பாடிய சுலோகமும் இங்கே கொள்ளப்பட்டது. சிறிய திருவடியும் கோயிலில் காவலிருக்கிறார். முன் சுலோகத்தில் பெரிய திருவடியினுடையது போல இங்கு சிறிய திருவடியின் ஜிதந்தே.
         ப்ரதிபயம் ந கிஞ்சித் --  कदाचन  कुदश्चन  (கதாசந, குதஶ்சந) பயமில்லையென்றது சுருதி. க்வசந என்று முன்பு சேர்த்தார். இங்கு கிஞ்சித் என்கிறார். ஒன்றும் பயத்தை உண்டாக்க மாட்டாது என்று ஒரு பொருள்.கிஞ்சித்தும் (துளிக்கூட) பயமில்லை என்னவுமாம்.

         ந: ப்ரதிபடாந் -- யமனும் யமபடர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டியிருக்க, இம் மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும்படி நேரலாமோ?

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்

சுலோகம் 25

भुजङ्गम विहङ्गमप्रवर सैन्यनाथाः प्रभो
            तधैव कुमुदादयो नगरगोपुरद्वारपा ।
अचिन्तयबलविक्रमाः त्वमिव रङ्गसंरक्षकाः
            जितं त इति वादिनो जगदनुग्रहे जाग्रतु ॥

பு
ஜங்க³ம விஹங்க³ம ப்ரவர ஸைந்யநாதா²: ப்ரபோ
         ததைவ குமுதா³³யோ நக³ரகோ³புரத்³வாரபா |
அசிந்தயப³லவிக்ரமா: த்வமிவ ரங்க³ஸம்ரக்ஷகா:
         ஜிதம் த இதி வாதி³நோ ஜக³³நுக்³ரஹே ஜாக்³ரது ||

ப்ரபோ -- ப்ரபுவே!; அசிந்த்ய பல விக்ரம -- எண்ணுதற்கரிய பல பராக்ரமங்களை உடையவர்களும்; த்வமிவ -- உம்மைப்போல; ரங்க ஸம்ரக்ஷகா -- அரங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்; புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைந்யநாதா -- ஸர்பச்ரேஷ்டன் ({சேஷன்), பக்ஷிராஜன், ஸேனைநாதன் ஆகியவர்களும்; ததைவ -- அப்படியே; நகர கோபுர த்வார பா: -- நகரம், கோபுரம், த்வாரம் இவற்றைக் காப்பவர்களும், ஜிதம்தே -- உனக்கு ஜயம் வருக; இதி வாதிந -- என்று சொல்லிக்கொண்டு; ஜகதநுக்ரஹே -- எங்களை அனுக்ரஹிப்பதில்; ஜாக்ரது -- விழித்திருக்க வேணும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

அரவரசன் புள்ளரையன் சேனைநாதன் தம்மோடு
அணித்தலைவர் குமுதர்போல் ஆவாரும் நகரத்தின்
திருவாயில் கோபுரத்தின் திருக்கதவம் காப்போரும்
திருமாலுன் தனைப்போல திருவரங்கைக் காப்போரும்
பெரும்வாகை உனக்கென்று போற்றுகிற வாயினராய்
பேரரவம் இட்டவராய் பரவியெங்கும் செல்பவராய்
திருவரங்கம் மட்டுமின்றி திரைகடல்சூழ் உலகினையும்
சிந்தையுடன் நற்காத்துச் செயல்படவே வேண்டுகிறோம்! 25.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         பள்ளிகொண்டிருக்கும் எம்மை தாஸரான நீங்கள் எழுப்பலாமோ? 'பயத்தினால் இப்படிச் செய்கிறோம்' என்றால் உங்களைக் காக்க நம் காவல்காரர்களில்லையோ என்று சங்கை வர, அவர்கள் விழித்து இருந்து தங்கள் சேஷத்வத்திற்கு ஏற்றபடி "ஜிதம்தே" என்று மங்களம் பாடினால் போதும். அவர்களும் தூங்குகிறார்களோ என்றுதான் கவலை.

         புஜங்கம -- ஸ்ரீசங்கராசாரியாரும் இவ்வரங்கத்தை इदं हि रङ्गं (இதம் ஹி ரங்கம்) என்கிற சுலோகத்தையிட்டு தினமும் மங்களாசாஸனம் செய்தார். "पाणौ रथाङ्गं शयने भुजङ्गं  (பாணௌ ரதாங்கம் ஶயநே புஜங்கம்) என்று கையார் சக்கரத்தையும் நாகஶயனத்தையும் கீர்த்தனம் செய்வர். भुजङ्गमाङ्गशायिने विहङ्गमाङ्गगामिने तुरङ्गमाङ्गभेदिने नमो रथाङ्गधअरिणे ॥    என்று ஸர்வஜ்ஞமுனியின் ஸம்க்ஷேபஶாரீரகத்தின் முடிவு மங்களம். அவர் கிரந்தத்தை ஸ்ரீசங்கரர் பார்த்துப் புகழ்ந்தாரென்பர்.

         புஜங்கமப்ரவர -- "ஆங்கு ஆரவாரமது கேட்டு" என்றபடி சீற்றம் வேண்டாம். வாதிந  என்பதால் "ஜிதம்தே" என்று நாக்கினால் உச்சரித்தால் போதும்.

         ஸைந்யநாத -- இவர் விஷ்வக்ஸேநர். இவர் இல்லாத இடமில்லை. ஸேனைத்தலைவரும் ஸேனை வீரரும் தூங்குவரோ?

         நகர கோபுர த்வார பா -- நகரவாசல், கோபுர வாசல், ஸந்நிதி வாசல் எங்கும் காவல். இந்தக் காவலரெல்லாம் தூங்கவேணுமோ? ஸநத்குமாரர்களைத் தடுத்த காவல்காரர்கள் சத்ருக்களைத் தடுக்க வேண்டாவோ? 

திங்கள், 12 செப்டம்பர், 2016

अभीतिस्तवम्

அபீதி ஸ்தவம்

சுலோகம் 24

मनुप्रभृति मानिते महति रङ्गधामादिके
           
दनुप्रभव दारुणैर्दरमुदीर्यमाणं परैः
प्रकृष्ट गुणक श्रिया वसुदया सन्दुक्षितः
           
प्रयुक्त करुणोदधे प्रशमय स्वशक्त्य स्वयम् 

மநுப்ரப்ருதி மாநிதே மஹதி ரங்க³தாமாதி³கே
         ³நுப்ரபவ தா³ருணைர்த³ரமுதீ³ர்யமாணம் பரை: |
ப்ரக்ருஷ்ட கு³ணக ஶ்ரியா வஸுத³யா ச ஸந்து³க்ஷித:
         ப்ரயுக்த கருணோத³தேப்ரஶமய ஸ்வஶக்த்ய ஸ்வயம் ||

ப்ரயுக்த கருணா உததே -- கருணை நிறைந்தவனே! ப்ரக்ருஷ்ட குணக -- சிறந்த குணங்களை உடையவனே! மநு பரப்ருதி -- மனு முதலியவர்களால்; மாநிதே -- கொண்டாடப்பட்ட; மஹதி -- சிறந்த; ரங்க தாம ஆதிகே -- ஸ்ரீரங்கம் முதலியவற்றில்; தநு ப்ரபவ --தநுவென்னும் அஸுரகுலத்தோரான அஸுரர்களைப்போல்; தாருணை -- குரூரர்களான, கொடியவர்களான, பரை: -- சத்ருக்களால்; உதீர்யமாணம் -- வளர்க்கப்பட்டு வரும், உண்டாகி வளரும்; தரம் -- பயத்தை; ச்ரியா -- பெரிய பிராட்டியாராலும், வஸுதயா ச -- க்ஷமாதத்வமாகிய பூமிப்பிராட்டியாலும், ஸந்துக்ஷித -- தூண்டப்பட்டு உத்ஸாகப்படுத்தப் பட்டவனாய்; ஸ்வ சக்த்யா -- தன் சக்தியினால்; ஸ்வயம் -- தானே; ப்ரசமய -- ஒழிப்பாயாக.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

உயர்ந்தோங்கும் குணங்களுக்கு உறைவிடமே! மனுவாதி
உத்தமர்கள் புகழ்ந்திட்ட உயர்வுடைய அரங்கம்போல்
பெயர்பெற்ற தலங்களிலே பொல்லாத அசுரரையும்
மிஞ்சிநிற்கும் கொடுமையுள பகைவர்களால் தோன்றியுள்ள
பயந்தன்னைத் திருமகளும் மண்மகளும் ஊக்குவிக்க
பெருங்கருணை எனவிளங்கும் உன்குணமாம் பெருங்கடலை
பயன்படுத்தி நீதானே பேர்வலிதாம் உன்திறத்தால்
போக்கியுன்றன் அடியாரைப் பாலித்து அருளிடுவாய்! 24

மதுராந்தகம் வீரராகவாசாரியார்

கருணை முதலிய சிறந்த குணங்களுடையோனே! மனு முதலியவர் கொண்டாடிவரும் ஸ்ரீரங்கம் முதலிய க்ஷேத்ரத்தில் அசுரர்போல் பயங்கரர்களான சத்ருக்கள் வளர்த்து வரும் பயத்தை ஸ்ரீ, பூமி தேவிகளின் ப்ரேரணத்தைக்கொண்டு, தன் சக்தியினாலே ஒழித்தருள வேணும்.

அன்பில் .வி. கோபாலாசாரியார்

ப்ரக்ருஷ்ட - குணம் --  உம்முடைய உயர்ந்த குணங்களோடு கூடியிருந்து நீர் ரக்ஷகராகிறீர். அதனால் உமக்கு எப்படி அத்விதீயத்வத்திற்குக் குறைவில்லையோ, அப்படியே தேவிமாரோடுகூடி ரக்ஷகரானாலும் பாஹ்ய ஸஹாயாபேக்ஷை அற்றவர் என்று சொல்லக் குறைவில்லை. ஸ்ரீதேவியே கருணாதத்வம். பூதேவி க்ஷமாதத்வம். இதெல்லாம் தயாசதகத்தில் கூறப்பட்டிருக்கிறது. உம் தேவிமார்தான் உம்முடைய தயை முதலிய கல்யாண குணங்களை ஸந்துக்ஷணம் செய்பவர். त्वत्करुणानिरीक्षण सुधासन्धुक्षणात् (த்வத் கருணா நிரீக்ஷணா ஸுதா ஸந்துக்ஷணாத்) என்பதைக் காட்ட 'ஸந்துக்ஷித' என்கிறார்.

         '
பிராட்டி உம்முடைய ப்ரபை, உம் ஶக்திபோல் உமக்கு அநந்யை' என்பதை ஸ்வஶக்த்யா என்று காட்டுகிறார். இந்த சேர்த்தியைத்தானே மனு முதலானோர் பூஜித்தனர். முதலில் மனுவும் பின்பு மைதிலீரமணனாக அக்குலத்தில் மனுஷ்யனாகவே அவதரித்து நீரும் உம்மையே பூஜித்தீர். ஆகையால் மனுஷ்யராகிய எங்களுக்கு நீர் ஸ்வந்தமான பெருமாள். 'மனுவிடமிருந்து பிறந்தவர் மனுஷ்யர், மாநவர்' என்றார் பாணிணி. பெருமாள் ஸூர்யனுக்கும், ஸூர்யன் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தார்கள் என்று உபதேச பரம்பரை. இங்கு மனுப்ரப்ருதி என்பதால் அந்த ஆசார்ய பரம்பரையை ஸூசிப்பித்து, ஆழ்வார். நாதமுனிகள், ஆளவந்தார், பெரியநம்பிகள், எம்பெருமானார், ஆழ்வான், பட்டர் முதலிய பெரியோரையும் ஸூசிப்பிக்கிறார்.