வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அபீதி ஸ்தவம்

அபீதி ஸ்தவம்

சுலோகம் 13
न वक्तुमपि शक्यते नरकगर्भ वासादिकं
            वपुश्च बहुधातुकं निपुणचिन्तने तादृशम् |
त्रिविष्टपमुखं तथा *तव पदस्य देदीपत:
            किमत्र न भयास्पदं भवति रङ्गपृथ्वीपते ||
{ * दिवि पदस्य ते दीव्यत -- पा:   दिव्यत: --पा }
வக்துமபி ஶக்யதே நரககர்ப வாஸாதிகம்
        
வபுஶ்ச ஹுதாதுகம் நிபுணசிந்தநே தாத்ரு̆ஶம் |
த்ரிவிஷ்டபமுகம் ததா *தவ பதஸ்ய தேதீபத:
        
கிமத்ர யாஸ்பதம் வதி ரங்கப்ரு̆த்வீபதே ||
ர‌ங்க‌ப்ருத்வீப‌தே -- ர‌ங்க‌பூமிக்கு அர‌ச‌னே! ந‌ர‌க‌ க‌ர்ப்ப‌ வாஸாதிக‌ம் -- ந‌ர‌க‌ம் க‌ர்ப்ப‌வாஸ‌ம் முத‌லிய‌து, வ‌க்துமபி -- (இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌மென்று) சொல்வ‌த‌ற்குக்கூட‌, ந‌ ஶ‌க்ய‌தே -- ச‌க்ய‌ம‌ல்லை: (ஸாத்ய‌மில்லை), வ‌பு:ச‌ -- தேஹ‌மும், நிபுண‌ சிந்த‌நே -- உன்னி ஆலோசித்தால், தாத்ருஶ‌ம் -- அப்ப‌டியே துஸ்ஸ‌ஹ‌மான‌து, த்ரிவிஷ்ட‌ப‌முக‌ம் -- ஸ்வ‌ர்க்க‌ம் முத‌லிய‌தும், தேதீப‌த‌ -- ஜ்யோதிர்ம‌ய‌மாய் ப்ர‌காசிக்கும், த‌வ‌ ப‌த‌ஸ்ய‌ -- உம் ஸ்தாநத்தை (உம் சுட‌ர‌டியை) (யிட்டுப் பார்த்தால்), ததா -- அப்ப‌டியே (ந‌ர‌க‌ துல்ய‌மாகும்), அத்ர‌ -- இங்கே (இப்புவியில்), கிம் -- எதுதான்,  ப‌யாஸ்ப‌த‌ம் ந‌ -- ப‌ய‌த்திற்கிட‌மாவ‌தில்லை?
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி
நல்லவையே தருமென்றும் தீயவையே தருமென்றும்
தேசத்தையும் காலத்தையும் திறம்படவே பிரித்தாலும்
எல்லாமே வெவ்வேறு வழிகளிலே தீமையையே
அளிக்கும்படி அமைந்தனவாய் அச்சத்தையே தருமென்றே
எல்லையிலா பயம்கொண்ட என்மீதே அரங்கா! நீ
இரக்கம்தான் கொள்ளாயேல் இவ்வாறு அருள்புரியும்
நல்லானும் வேறுளனோ? நிலவுலகில் நின்னுடைய
நல்லருளைப் பெறும்தகுதி நிறைந்தவனும் வேறுளனோ? 14.
அன்பில் ஸ்ரீ ஏ.வி. கோபாலாசாரியார்
         தேஹ‌ ஸ‌ம்ப‌ந்திக‌ளான‌ சுற்ற‌த்தார் வேண்டாம், தேஹ‌த்தோடாவ‌து ஸுக‌மாயிருக்க‌ லாமோவென்னில், அதுவும் ஸாத்ய‌மில்லை.  विपद्गेहं देहं (விப‌த் கேஹ‌ம் தேஹ‌ம்) , விப‌த்துக்க‌ளுக் கெல்லாம் இல்லம‌ ச‌ரீர‌ம் என்று ப்ர‌போத‌ ச‌ந்த்ரோத‌ய‌ம். ந‌ர‌க‌ம் பெருந் துக்க‌ம‌ய‌மான‌து.  அதில் அடைப‌டுவ‌திலும் க‌ர்ப்பப் பைக்குள் அடைப‌டுவ‌து அதிகக் க‌ஷ்ட‌ம் என்ப‌தை அத‌ற்குப் பிற‌கு க‌ர்ப்ப‌வாஸ‌த்தைக் கூறுவ‌தால் ஸூசிப்பிக்கிறார்.
         ஆதிக‌ம் -- முத‌லிய‌து. உள்ளேயிருக்கும் துன்ப‌ம் ஒரு புற‌மிருக்க‌, வெளியே வ‌ருவ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ம்.  योने शरीरं (யோநே: ஶ‌ரீர‌ம்) என்று ஸூத்ர‌காரர் வைராக்யபாதத்தை முடித்தார். அத‌ற்கு முன் ஸூத்ர‌த்தில் ரேத‌ஸ் ஸிக் யோக‌த்தைப் பேசினார். க‌ர்ப்பப்ப் பையின் யோக‌ம் கிடைக்க‌ ரேதோயோக‌ம் கிடைக்க‌வேண்டும் என்று ஜுகுப்ஸையைக் காட்டினார்.
          வ‌புஶ்ச‌ -- ந‌ர‌க‌த்திலும் கொடிய‌து தேஹ‌ம் என்றார் ப்ர‌ஹ்லாதாழ்வான். देहे चेत्प्रीतिमान् मूढो नरके भविता च स:   தேஹே சேத் ப்ரீதிமாந் மூட‌: ந‌ர‌கே ப‌விதா ச‌ ஸ‌) தேஹ‌மென்னும் ந‌ர‌கக் குழியில் ப்ரீதி வைப்பானாகில், அந்த‌ மூட‌னுக்கு ந‌ர‌க‌த்திலும் ப்ரீதியே ஏற்ப‌டும். தேஹ‌த்திலும் ந‌ர‌க‌ம் கொடிய‌தோ ? அவ‌னுக்கு ந‌ர‌க‌வாஸ‌ம் த‌ண்ட‌னை ஆகாது என்ப‌து க‌ருத்து.
          ப‌ஹுதாதுக‌ம் --सप्तधातुमयं त्रिमलं ஸ‌ப்த‌ தாதும‌ய‌ம் த்ரிம‌ல‌ம் என்ப‌ர்
          நிபுண‌ சிந்த‌நே -- ப்ர‌ஹ்லாத‌ன் நிரூபித்ததுபோல் அழ்ந்து யோசித்தால்,
          தாத்ருஶ‌ம் -- ந‌ர‌காதிக‌ள் போன்ற‌தே.
          த‌வ‌ ப‌த‌ஸ்ய‌ தேதீ ப‌த: அத்ய‌ர்க்காந‌ல‌தீப்த‌மாய் சுட‌ர்ச்சோதியான‌ ப‌ர‌மப‌த‌மென்னும் உம் ஸ்தான‌ம் ப்ர‌காசிக்கையில், அதை உத்தேசித்து உம் சுட‌ர‌டியின் இன்ப‌த்தை ஆலோசிக்குங்கால் என்று அர‌ங்க‌ன் விஷ‌ய‌முமாக‌லாம். அர‌ங்க‌மென்ப‌து ம‌ற்ற‌ திவ்ய‌தேச‌ங்க‌ளுக்கு உப‌ல‌க்ஷ‌ண‌ம்.
         த்ரிவிஷ்ட‌ப‌முக‌ம் ததா  ஸ்வ‌ர்க்க‌மும் ம‌ற்ற‌ ஸ‌த்ய‌லோக‌மும் அப்ப‌டியேயாகும்.  निरयो यस्त्वया विना (நிர‌யோ ய‌ஸ் த்வ‌யா விநா) உம்மை விட்டுப் பிரிவு ந‌ர‌க‌மே.
         அத்ர‌ கிம் ந‌ ப‌யாஸ்ப‌த‌ம்  -- இந்த‌ப் பூம‌ண்ட‌ல‌த்தில் எதுதான் ப‌ய‌த்திற்கு இட‌மில்லை?
         ர‌ங்க‌ப்ருத்வீப‌தே -- த‌ப்பிச் சொன்னேன். இந்த‌ப் பூம‌ண்ட‌ல‌த்தில் ர‌ங்க‌மென்னும் ப்ருத்வீ பாக‌ம் ஸுக‌த்தைத் த‌ருவ‌தே, ப‌ய‌ம‌ற்ற‌தே. இந்த‌ப் பூமியில் இருந்தாலும், அர‌ங்க‌மும் அர‌ங்க‌ம் போன்ற‌ திவ்ய‌ தேச‌ங்க‌ளும் அப‌ய‌த்தையும் ஸுக‌த்தையும் த‌ருப‌வையே. ஆகையால‌ ப்ருத்வீப‌தியான‌ நீர் அவ‌ற்றை ர‌க்ஷித்துத் த‌ர‌வேண்டும்.
         தேதீப‌த‌: என்ற‌ பாட‌ம் சுத்த‌ம்.     (13) 

புதன், 24 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதி ஸ்த‌வ‌ம்

சுலோக‌ம் 12
लघिष्ठसुखसङ्गदै: स्वकृतकर्मनिर्वर्तितै:
            कलत्रसुतसोदरानुचरबन्धुसंबन्धिभि: |
धनप्रभृतिकैरपि प्रचुरभीतिभेदोत्तरै
            न बिभ्रति धृतिं प्रभो ! त्वदनुभूतिभोगर्थिन: ||
லகிஷ்டஸுகஸங்கதை: ஸ்வக்ரு̆தகர்மநிர்வர்த்திதை:
        
கலத்ரஸுதஸோதராநுசரபந்துஸம்பந்திபி: |
நப்ரப்ரு̆திகைரபி ப்ரசுரபீதிபேதோத்தரை
        
பிப்ரதி த்ரு̆திம் ப்ரபோ ! த்வதநுபூதிபோர்த்தி: ||
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி
நின்னையே அகலாது நுகர்கின்ற போகத்தை
நண்ணுகின்ற மனமுடைய நல்லோர்கள் யாவருமே
மின்னனைய அற்பசார மகிழ்வினையே தருகின்ற
முன்னாளில் தாம்செய்த கருமத்தால் விளைந்தனவாய்
எண்ணரிய பல்வகையாம் அச்சத்தையே தருவனவாம்
இல்லாளும் மக்களாலும் உடன்பிறந்தார் பணியாளர்
இன்னுமுள்ள உற்றத்தார் இவராலும் தனத்தாலும்
ஏற்படுமாம் இன்பத்தில் உளம்கொள்ள மாட்டாரே!
ப்ர‌போ --ஸ‌ர்வாந்த‌ர்யாமியான‌ ப்ர‌புவே! த்வ‌த் அநுபூதி போக‌ அர்த்திந‌: உம்மை அநுப‌விப்ப‌து என்னும் இன்ப‌த்தையே ஆசைப்ப‌டுகிற‌வ‌ர்க‌ள், ல‌கிஷ்ட‌ ஸுக‌ ஸ‌ங்க‌தை -- மிக‌வும் அற்ப‌மான‌ ஸுக‌த்தின் ஸ்ப‌ர்ச‌த்தைக் (ஸ‌ங்க‌த்தைக்) கொடுப்ப‌தும், ப்ர‌சுர‌ பீதி பேதோத்த‌ரை -- பெரிதான‌ ப‌ல‌வித‌ ப‌ய‌ங்க‌ளை மேல்மேல் விளைவிப்ப‌தும், ஸ்வ‌ க்ருத‌ க‌ர்ம‌ நிர்வ‌ர்த்திதை --தான் சிர‌மப்ப‌ட்டுச் செய்த‌ (புண்ய‌) க‌ர்ம‌ங்க‌ளால் ஸ‌ம்பாதிக்க‌ப்ப‌ட்ட‌துமான‌, க‌ள‌த்ர‌ ஸுத‌ ஸோத‌ர‌  அநுச‌ர‌ ப‌ந்து ச‌ம்ப‌ந்திபி -- கொண்ட‌ பெண்டிர், ம‌க்க‌ள், உட‌ன்பிற‌ந்தார், வேலைக்காரர், ப‌ந்துக்க‌ள் என்று ந‌ன்றாய் ந‌ம்மை ப‌ந்த‌ப் ப‌டுத்தும் இவ‌ர்க‌ளாலும், த‌ந‌ ப்ர‌ப்ருதிகை: அபி -- செல்வ‌ம், ஆயுள், ஆரோக்ய‌ம் முத‌லிய‌வ‌ற்றாலும், த்ருதிம் -- ச‌ந்தோஷ‌த்தை, ந‌ பிப்ர‌தி -- பெறுகிற‌தில்லை.
அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார் ஸ்வாமி
      "நான் ஞானிக்கு அத்ய‌ந்த‌ம் ப்ரிய‌ன். அவ‌னும் என‌க்கு அத்ய‌ந்த‌ம் ப்ரிய‌ன். ஞானி என‌க்கு அந்த‌ராத்மா என்று நான் அவ‌னை அபிமானிக்கிறேன்" என்ற‌ கீதா ச்லோக‌த்தைக் காட்டி நின்றார் கீழ். அப்ப‌டியே நீரே எங்க‌ளுக்கு அத்ய‌ந்த‌ம் ப்ரிய‌மான‌ வ‌ஸ்து. ம‌ற்ற‌வை எதுவும் பிரிய‌மான‌த‌ல்ல‌, ஸுக‌த்தைக் கொடுப்ப‌தும‌ல்ல‌, அவை மேன்மேலும் ப‌ய‌த்தையே த‌ருவ‌ன‌ என்கிறார்.
         அல்ல‌து, "முன்பே நீர் செய்த‌ ச‌ர‌ணாக‌திக்குப் ப‌ல‌மாக‌ இத்தேஹ‌த்தின் முடிவில் உம‌க்கு மோக்ஷ‌ம் நிச்ச‌ய‌ம். ஆகையால் இங்கே உள்ள‌வ‌ரையில் கொண்ட‌பெண்டிர் ம‌க்க‌ள் உற்றார் சுற்ற‌த்த‌வ‌ர் பிற‌ரோடு ஸுக‌மாயிருமே என்றால், இவையெல்லாம் துக்க‌மும் ப‌ய‌முமே" என்று விவ‌ரிக்கிறார் என்ன‌வுமாம்.
         ப்ர‌போ -- நீர் ஞானியை அந்த‌ராத்மாவாகக் க‌ருதினாலும், நாங்க‌ள் நீரே ஸ‌ர்வாந்த‌ர்யாமி, எங்க‌ள் ப்ர‌பு என்று அறிவோம்.
         ல‌கிஷ்ட‌ ஸுக‌ ஸ‌ங்க‌தை -- உம்மை அனுப‌விப்ப‌தே பேரின்ப‌ம் ம‌ற்ற‌வை சிற்றின்ப‌ம் என்ப‌ர். ஆனால் இவ‌ற்றை -- ல‌கிஷ்ட‌ம் -- மிக‌வும் அல்ப‌மான‌ (அதைக்காட்டிலும் சிறிய‌தில்லாத‌) இன்ப‌ம் என்ன‌ வேண்டும். அதிலும் ஸுக‌த்தையும் கொடுப்ப‌தில்லை. அத்ருப்தியை, மேல் மேல் அனுப‌விக்க‌ ஆசை என்னும் ஸ‌ங்க‌த்தையே கொடுக்கிற‌து. सुखसङ्गेन बध्नाति (ஸுக‌ஸ‌ங்கேன ப‌த்நாதி) என்ற‌ கீதா சுலோக‌த்தை ஸூசிப்பிக்கிறார். "ஸுக‌த்தில் ஆசையைக் கொடுத்து (பாச‌ங்க‌ளால்) க‌ட்டுகிற‌து. இங்கு மேன்மேலும் ப‌ந்த‌ம் உண்டாகிற‌து என்ப‌தைக் காட்ட‌ "ப‌ந்து" "ச‌ம்ப‌ந்தி" என்கிற‌ ப‌த‌ங்க‌ளைச் சேர்க்கிறார்.
         ஸ்வ‌க்ருத‌ க‌ர்ம‌ நிர்வ‌ர்த்திதை -- இப்ப‌டி அத்ய‌ல்ப‌மான‌ போலி இன்ப‌த்தை அடைய‌ எவ்வ‌ள‌வு பாடுப‌ட்டு புண்ய‌ க‌ர்மம் செய்திருக்க‌ வேண்டும்? ஓர் அஞ்ஜ‌லிக்குக் கிங்க‌ரரகும் நீர் இருக்கையில், ஓர் ச‌ர‌ண‌ நினைப்புக்கு சாச்வ‌த‌மான‌ பேரின்ப‌த்தை தாய‌க்கிர‌மமாக‌ அளிக்க‌ நீர் காத்துக் கொண்டிருக்கையில், அல்பால்ப‌ ஸுக‌த்தைத் தேடுகிறோம்.
         க‌ள‌த்ர‌ -- இது நித‌ம்ப‌த்திற்கும் இல்லாளுக்கும் பெய‌ர். பெரிய‌ நித‌ம்ப‌த்தையிட்டு ஸ்திரீயைக் கூறும். ஊன்றிப் பார்த்தால் இந்த‌ப் பெய‌ரே வெறுப்பைக் கொடுக்க‌ வேண்டுமே? ("ச‌ந்த்ர‌மூர்த்தியைப் போல‌ அழ‌கிய‌ விலாஸ‌த்தால் க‌வ‌ரும் குருக‌ள‌த்ர‌த்தை யுடைய‌வ‌ன்" என்று காத‌ம்ப‌ரியில் வ‌ர்ண‌ன‌ம். இங்கு குருக‌ள‌த்ர‌ம் என்ப‌த‌ற்கு பெரும் நித‌ம்ப‌ம் என்றும் குருப‌த்னியான‌ தாரை என்றும் பொருள்.)
         ஸுத‌ -- க‌ர்ப்ப‌த்திலிருந்து வெளியே ந‌ழுவ‌விட‌ப்ப‌ட்ட‌ சிசு, எத்த‌னை ஸோம‌ ஸுத‌ங்க‌ளான‌ க‌ர்ம‌ங்க‌ள் செய்ய‌வேண்டும் ஒரு ஸுத‌னைப் பெற‌. "தார‌மென்னும் சுழ‌ல், ம‌க்க‌ள் ஸ‌யுஜ‌ர் என்னும் முத‌லைக‌ள், இவ‌ற்றோடு கூடிய‌ ஸ‌ம்ஸார‌ம் என்னும் ப‌ய‌ங்க‌ர‌மான‌ க‌ட‌ல்" என்று முகுந்த‌மாலை.
         ஸோத‌ர‌ -- ப‌ங்காளிக‌ள். "ஞாதியிருந்தால் நெருப்பு வேறு வேண்டுமோ?"
         அநுச‌ர‌ -- உம‌க்கு நாங்க‌ள் அடிமை செய்ய‌ வேண்டியிருக்க‌, அடிமையான‌ எங்க‌ளுக்கு அடிமைக‌ளா? कुरुष्व मामनुचरं  (குருஷ்வ‌ மாம‌நுச‌ர‌ம்) என்ப‌த‌ன்றோ எங்க‌ள் நிலை?
         ப‌ந்து -- பாச‌ங்க‌ளால் க‌ட்டுகிற‌வ‌ர்க‌ள். ஸ‌ம்ப‌ந்திக‌ள் என்ப‌தால் இவ‌ர்க‌ள் எல்லாருமே ந‌ன்றாய்க் க‌ட்டுகிற‌வ‌ர்க‌ள்.
த‌ந‌ ப்ர‌ப்ருதிகைர‌பி -- த‌ன‌ம் முத‌லிய‌வ‌ற்றாலும், புத்ர‌னைக் காட்டிலும் ப்ரிய‌ம், வித்தத்தைக் காட்டிலும் ப்ரிய‌ம் என்ற‌து உப‌நிஷ‌த். புத்ர‌னைக் காட்டிலும் ப‌ண‌த்தில் ப்ரீதி வைப்ப‌ர். அது ஆப‌த்தே. कहदपि धनं भूरि निधनं (மஹ‌த‌பி த‌ந‌ம் பூரி நித‌ந‌ம்) என்று ப்ர‌போத‌ ச‌ந்த்ரோத‌ய‌ம் ऐश्वर्यं शत्रुशालिता (ஐஶ்வ‌ர்ய‌ம் ஶ‌த்ரு ஶாலிதா) என்று பார‌த‌ம்.
         ப்ர‌சுர‌ -- கொஞ்ச‌ம் ஸுக‌ம் இருப்ப‌தை ம‌றுக்க‌வில்லை. ஆனால் ப‌ய‌மே அதிக‌ம்.
         பீதிபேதோத்த‌ரை -- ப‌ல‌வ‌கையான‌ ப‌ய‌ங்க‌ளில் மிக‌வும் அதிக‌மான‌ ப‌ய‌ங்க‌ள். மேலும் ப‌ய‌த்தை விளைவிப்ப‌ன‌.
         த்வ‌த் அநுபூதி போக‌ அர்த்திந‌ -- अभयं प्रतिष्ठां विन्दते (அப‌ய‌ம் ப்ர‌திஷ்டாம் விந்ததே) என்று உம்மித‌மே அப‌ய‌த்திற்கு நிஷ்டையை விரும்பும‌வ‌ர்க‌ள்.
         த்ருதிம் -- ஸ‌ந்தோஷ‌த்தை, அப‌ய‌த்தை, த‌ரிப்பை

         ந‌ பிப்ர‌தி -- த‌ரிக்கிற‌தில்லை, ஸ‌ந்தோஷ‌மில்லை யென்ப‌து ம‌ட்டுமில்லை, ம‌ரிப்ப‌தே அஸாத்ய‌மாகிற‌து.    (12) 

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

மன்னிக்க வேண்டுகிறேன். சுலோகம் 10 இடுவதற்கு விடுபட்டிருக்கிறது.

அபீதி ஸ்தவம்

சுலோக‌ம் 10

बिभेति भवभृत् प्रभो ! त्वदुपदेशतीव्रौषधात्
       कदध्वरसदुर्विषे बडिशभक्षवत् प्रीयते |
अपथ्यपरिहारधीविमुखं इत्थमाकस्मिकी
       तमप्यवसरे क्रमादवति वत्सला त्वद्दया ||

பிபேதி வப்ரு̆த் ப்ரபோ ! த்வதுபதேஶதீவ்ரௌஷதாத்
        
கதத்வரஸதுர்விஷே டிஶபக்ஷவத் ப்ரீயதே |
அபத்யபரிஹாரதீவிமுகம் இத்தமாகஸ்மிகீ
        
தமப்யவஸரே க்ரமாதவதி வத்ஸலா த்வத்யா ||

ப்ர‌போ -- ப்ர‌புவே, ப‌வ‌ப்ருத் -- ஸ‌ம்ஸார‌த்தையுடைய‌ சேத‌னன், த்வ‌த் உப‌தேச‌ தீவ்ர‌ ஔஷ‌தாத் -- உம்மால் உப‌தேசிக்க‌ப் ப‌டும‌ த‌ர்மம் என்னும் உக்ர‌மான‌ ம‌ருந்திலிருந்து, பிபேதி -- ப‌ய‌ப்ப‌டுகிறான். க‌தத்வ‌ ர‌ஸ‌ துர்விஷே -- கெட்ட‌ மார்க்க‌த்தில் ர‌ஸ‌ம் என்னும் கொடிய‌ விஷ‌த்தில், ப‌டிஶ‌ ப‌க்ஷ‌வ‌த் -- தூண்டிமுள்ளை ப‌க்ஷிப்ப‌தில் (மீன் ர‌ஸிப்ப‌துபோல‌), ப்ரீய‌தே -- ப்ரீதி ப‌ண்ணுகிறான்., இத்த‌ம் -- இப்ப‌டி, அப‌த்ய‌ ப‌ரிஹார‌ தீ விமுக‌ம் -- த‌ன‌க்குக‌ கெடுத‌லைப் ப‌ரிஹ‌ரிப்ப‌து என்னும் எண்ண‌த்தையே நோக்காத‌ப‌டி, த‌மபி -- அப்ப‌டிக் கெட்ட‌வ‌னையும், அவ‌ஸ‌ரே -- ஒரு கால‌ விசேஷ‌த்தில், ஆக‌ஸ்மீகி -- கார‌ண‌மின்ன‌து என்று அறிய‌க்கூடாத‌ (எங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ரையில் நிர்ஹேதுக‌ம் என்று நினைக்க‌ப்ப‌டும்), வ‌த்ஸ‌லா -- ஸ்நேஹ‌ம‌ய‌மான‌, த்வ‌த் த‌யா -- உம்முடைய‌ த‌யை, க்ர‌மாத் -- ப‌டிப்ப‌டியாக‌ (ச‌ன்ம‌ ச‌ன்மாந்த‌ர‌ம் காத்து), அவ‌தி -- ர‌க்ஷிக்கிற‌து.

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

பவக்கடலில் சுழன்றுழலும் மானுடவன் நீவழங்கும்
பரிந்துரையாம் கசப்பான மருந்துக்கு அஞ்சுகிறான்!
சுவையென்னும் கொடும்விஷத்தை சுரக்கின்ற கீழ்மையிலே
தூண்டிற்புழு நாடும்மீன் தனைப்போல நச்சுகிறான்!
இவைபோன்ற தீய்மைகளை ஒழித்திடவும் எண்ணிடாதே
இருக்கின்ற மனிதனையும் இரக்கமுடன் திருவரங்கா!
தவறாமல் உன்தயைதான் காரணமே ஏதுமின்றி
தருணத்தில் பாய்வதனால் நாளடைவில் காத்திடுமே! 10

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி

         அர‌ங்க‌த்தில் ப‌ஜித்தால் ப‌ல‌ன்க‌ளைக் கொடுத்துக் கைதூக்கிவிட‌ ப‌க‌வ‌த் குண‌ங்க‌ள் க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்டிருக்கின்ற‌ன‌ என்றார். இதில் நாம் ப‌ஜிப்ப‌த‌ற்குப் பிர‌தியாக‌ ந‌ம‌க்குத் தெரியாம‌லே நாம் ஸுக்ருத‌மென்று புத்தி பூர்வ‌மாக‌ இத‌ற்கென்று செய்யாம‌ லிருக்கையிலேயே ப‌க‌வ‌த் த‌யை தானாக‌ அதிஸ்நேஹ‌த்தால் ந‌ம்மை ஜாய‌மான‌ த‌ஶையில் க‌டாக்ஷித்து, ஸாத்விக‌னாக்கி, மோக்ஷ‌ப்பொருளைச் சிந்திப்ப‌வ‌னாக‌ச் செய்கிற‌து என்கிறார்.

         உம்முடைய‌ ஆக்ஞையாகிய‌ சுருதியால் உப‌தேசிக்க‌ப்ப‌டும் த‌ர்ம‌த்தை அநுஷ்டிக்க‌ ந‌டுங்கி, நிஷேதிக்க‌ப்ப‌டும் கெட்ட‌ மார்க்க‌த்தில் ப்ரீதி ப‌ண்ணுகிறோம். செய்த‌ பாப‌த்திற்குப் பிராய‌ச்சித்தத்தைத் தேடும் எண்ண‌த்தையே தூர‌ வில‌க்குகிறோம். இப்ப‌டி க்ருத்யாக‌ர‌ண‌ அக்ருத்யாக‌ர‌ண‌ தோஷ‌ங்க‌ளைப் ப‌ரிஹ‌ரிக்கக்கூடிய‌ அநுதாப‌ம் பிராய‌ச்சித்த‌ம் முத‌லிய‌ வ‌ழிக‌ளைக் க‌ண்ணெடுத்தும் பாராம‌லிருக்கிறோம்.

         இப்ப‌டியிருந்தும், அஜ்ஞாத‌ ப்ராஸ‌ங்கித‌ யாத்ருச்சிக‌ ஸுக்ருத‌ம் என்று சில‌வ‌ற்றை ஸுக்ருத‌க் க‌ண‌க்கில் வைத்துக்கொண்டு, எங்க‌ள் தோஷ‌ங்க‌ளைப் பாராட்டாம‌ல் உம் த‌யை எங்க‌ளை ர‌க்ஷிக்கிற‌து. இப்ப‌டித் தானாக‌ ர‌க்ஷிக்கும் உம்முடைய‌ த‌யை உம் திருமேனியை ர‌க்ஷித்து அர‌ங்க‌த்தில் நித்ய‌மாக‌ நீர் எழுந்த‌ருளியிருக்க‌ வேண்டும் என்ற‌ எங்க‌ள் ம‌னோ ர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌ வேண்டாமோ? கேட்காம‌லே ர‌க்ஷிக்கும் த‌யை க‌த‌றிக்கேட்டும் ர‌க்ஷிக்க‌ வேண்டாமோ?

         ப‌வ‌ப்ருத் -- ஸ‌ம்ஸார‌த்தை ம‌ங்க‌ள‌மென்று நினைத்து கிடையாதது கிடைத்ததென்று இருக்கிறான். "ப‌வ‌ம்" என்ப‌து ஸ‌ம்ஸார‌த்தையும் ம‌ங்க‌ள‌த்தையும் சொல்லும்.

         सत्य ज्ञानमुपतेश ச‌த்ய‌ ஞான‌ம் உப‌தேஶ‌: என்றார் ஜைமிநி. உப‌தேச‌ ப‌த‌ம் த‌ர்ம‌த்தைச் சொல்லுகிற‌து. ச்ருத்யுப‌தேச‌ம் -- சுருதி என்ப‌து உம்முடைய‌ ஆஜ்ஞை. அதை மீறின‌வ‌ன் உம‌க்குத் துரோஹி. "செய்யாத‌ன‌வ‌ற்றை" விரும்பிச் செய்கிறோம்.

         அப‌த்ய‌ ப‌ரிஹார‌ தீ விமுக‌ம் -- அப‌த்ய‌த்தை வில‌க்க‌ வேண்டும் என்று எண்ணுவ‌தில் ஆபிமுக்ய‌ம் இருந்தாலும் போதும், எண்ணுவ‌தில் கூட‌ விமுக‌ராயிருக்கிறோம்.

         இருப‌தாவ‌து இருப‌த்தொன்றாவ‌து சுலோக‌ங்க‌ளில் ச‌ர‌ணாக‌தி செய்ய‌ப் போகிற‌ப‌டியால் முன்புள்ள‌ த‌யா ப்ர‌ஸா க்ர‌ம‌ங்க‌ளை ஸூசிப்பிக்கிறார்.

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்

சுலோக‌ம் 11

अपार्थ इति निश्चित: प्रहरणादियोगस्तव
    स्वयं वहसि निर्भयस्तदपि *रङ्गपृथ्वीपते |
स्वरक्षणमिवाभवत् प्रणतरक्षणं तावकं
    यदात्थ परमात्मवित् नियतमन्तरात्मेति ते ||
  11

அபார்த₂ இதி நிஶ்சித: ப்ரஹரணாதி₃யோக₃ஸ்தவ
    ஸ்வயம் வஹஸி நிர்ப₄யஸ்தத₃பி *ரங்க₃ப்ரு̆த்₂வீபதே |
ஸ்வரக்ஷணம் இவ அப₄வத் ப்ரணதரக்ஷணம் தாவகம்
    யத₃ ஆத்த₂ பரமாத்மவித் நியதம் அந்தராத்மேதி தே ||  11

*रङ्गपृथ्वीधर  --     *ரங்க₃ப்ரு̆த்₂வீத₄ர  --        என்று பாட‌பேத‌ம்

ர‌ங்க‌ப்ருத்வீப‌தே -- ர‌ங்க‌ராஜ‌னே! ப்ர‌ஹ‌ர‌ணாதியோக‌ -- ஆயுத‌ம் முத‌லிய‌வை இருப்ப‌து, அபார்த்த‌: -- அநாவ‌ச்ய‌ம் (வீண்), இதி -- என்று, நிஶ்சித‌ -- நிச்ச‌யிக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து, நிர்ப்ப‌ய‌ -- ப‌ய‌மில்லாத‌ நீர், தத‌பி -- ஆயினும் (அவ‌ற்றை), ஸ்வ‌ய‌ம் வ‌ஹஸி -- நீரே த‌ரிக்கிறீர் (சும‌க்கிறீர்), ப்ர‌ண‌த‌ர‌க்ஷ‌ண‌ம் -- ஆச்ரித‌ர‌க்ஷ‌ண‌ம், ஸ்வ‌ர‌க்ஷ‌ண‌ம் இவ‌ -- உம் ர‌க்ஷ‌ண‌ம்போல‌, தாவ‌க‌ம் -- உம் சொந்த‌ப்ப‌ணியாக‌, அப‌வ‌த் -- ஏற்ப‌ட்ட‌து, ய‌த் -- ஏனெனில், ப‌ர‌மாத்ம‌ வித் -- ப‌க‌வானே! த‌ன‌க்கும் ம‌ற்ற‌ எல்லா உயிர்க‌ளுக்கும் உயிர் என்று அறிந்த‌ ஞானி, தே அந்த‌ராத்மா இதி -- உம்முடைய‌ அந்த‌ராத்மா , உம‌க்கும் ஆந்த‌ர‌மான‌ (உள்ளான‌) உயிர் என்று, ஆத்த‌ -- நீர் (கீதையில்) சொன்னீர‌ல்ல‌வா?

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

படைக்கலன்கள் தாங்குவதால் பயனில்லை உன்றனுக்கே!
பயமற்று விளங்கும்நீ படைக்கலனேன் தரிக்கின்றாய்?
வடிவரங்கத் தலத்தரசே! மேம்பொருளை உணர்ந்தவராய்
விளங்கும்நல் ஞானியுன்றன் உயிரென்று விளம்பியுள்ளாய்!
அடியார்கள் அவர்போல்வார் அனைவரையும் காத்திடவே
ஆயுதங்கள் தமைத்தாங்கி ஆயத்தமாய் நிற்கின்றாய்!
அடியாரைக் காக்கின்ற அருஞ்செயல்கள் எல்லாமே
உன்னையேநீ காப்பனவாய் உண்மையிலே ஆயிற்றே! 11.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி

    (ஆகையால் உம் ர‌க்ஷ‌ண‌த்தைப்போல‌ உம்முடைய‌ உயிரான‌ ஞானியின் ர‌க்ஷ‌ண‌மும் உம் சொந்த‌ ர‌க்ஷ‌ண‌மாய்விட்ட‌து. உம் ஆத்ம‌ ர‌க்ஷ‌ண‌ம் உம்முயிரின் ர‌க்ஷ‌ண‌ம் இர‌ண்டும் உம் சொந்த‌ ர‌க்ஷ‌ண‌ம்தானே!)

    ர‌ங்க‌ப்ருத்வீப‌தே -- ர‌ங்க‌ராஜ‌ என்னாம‌ல் ர‌ங்க‌ப்ருத்வீப‌தே என்ப‌தால் ப்ருத்வீக்கெல்லாம் (பூமிக்கெல்லாம்) ப‌தியாயிருந்தும், பூமியில் ஏக‌தேச‌மான‌ ஸ்ரீர‌ங்க‌ந‌க‌ர‌த்திற்கு ம‌ட்டும் ப‌தியாயில்லாம‌ல் இருக்க‌ வேண்டுமோ? என்னும் அர்த்த‌ம் த்வ‌னிக்கிற‌து.

    நிர்ப‌ய‌: உம‌க்கு உம் நிமித்த‌ம் ப‌ய‌மில்லை. உம்மைக் காக்க‌ உம‌க்கு ஆயுத‌மும் வேண்டாம். ந‌ர‌ஸிம்ஹ‌ த‌சையில் உம‌க்கு ஆயுத‌ங்க‌ளே இல்லையே!

    ததபி ஸ்வ‌ய‌ம் வைஸி -- ஆயினும் ஆயுத‌ங்க‌ளை நீரே எப்போதும் சும‌க்கிறீர். सदा पञ्जायुधीं बिभ्रत् (ஸ‌தா ப‌ஞ்சாயுத‌ம் பிப்ர‌த்) இப்ப‌டிச் சும்ப்ப‌து எங்க‌ளை ர‌க்ஷிக்க‌வ‌ல்ல‌வோ? இல்லாவிடில் நிஷ்ப்ர‌யோஜ‌ன‌மாம்.

    ப‌ர‌மாத்ம‌வித் --  ज्ञानी त्वात्मैव मे मतम् ஜ்ஞாநீ த்வாத்மைவ‌ மே ம‌த‌ம் -- ஞானியை ப‌ர‌மாத்மாவான‌ உம‌க்கு அந்த‌ராத்மா என்று நீர் சொல்லுவ‌து உம்முடைய‌ அபிமான‌ மாத்ர‌ ஸார‌மான‌ நினைப்பு (க்ருஷ்ண‌ ம‌த‌ம்) என்று ச‌ந்த்ரிகை. ஆகையால் ஞானியை ர‌க்ஷிப்ப‌தும் உம் ர‌க்ஷ‌ண‌ம் போன்ற‌து. ஆச்ரித‌ர் ப‌ய‌ப்ப‌டாம‌லிருக்க‌வே நீர் ஆயுத‌ம் த‌ரிக்கிறீர். 11.

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

நாட்டேரி ஸ்வாமி டெலி-உப‌ந்ய‌ஸித்து வ‌ரும் சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம் தொட‌ரில் இன்று முத‌ல் ஆர‌ண்ய‌ காண்ட‌ம் ஆர‌ம்ப‌ம்.
 ஆர‌ண்ய‌ காண்ட‌த்தில் முத‌லாவ‌தும் தொட‌ரின் 50வ‌துமான‌ இன்றைய‌ (22-08-2016) உப‌ந்யாஸ‌த்தைக் கேட்க‌
அல்ல‌து