சனி, 11 பிப்ரவரி, 2012

ராமானுஜ தயா பாத்ரம்

மீண்டும் ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலரிலிருந்து
"ராமானுஜ தயா பாத்ரம்" வ்யாக்யானம்.
தட்டச்சிட முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
கை நடுக்கத்தால் சில இடங்களில் அடியேன் முதுகு போல் ஆகி விட்டது. பொறுத்துக் கொள்ள வேணும்.
கடலூர்க்காரர் சீத்தலைச் சாத்தனாராகாமலிருக்க வேண்டும்.
அவர் கற்றுக் கொடுப்பது எதையும் ஒழுங்காய்ச் செய்வதில்லை! Ramanuja daya pathram

புதன், 8 பிப்ரவரி, 2012

ஒரு ஆயுள் போதுமோ?

ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலர் ஒரு அற்புதமான பொக்கிஷம்.
அதில் இருந்து ஒரு கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்வாமி தேசிகன் சொல்லும் இந்த உவமைகள் ஒவ்வொன்றையும் பூரணமாக
ரஸித்து அனுபவிக்க இந்த ஒரு ஆயுசு போதுமோ?
ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆயுசு அல்லவா வேண்டியிருக்கும்?
Desikan ---uvamai

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

குரு பரம்பரை வைபவம்

ஸ்ரீமத் அழகியசிங்கர்களின் திருப்புல்லாணி விஜயத்தால் சென்ற 31-1-2012 அன்று ஸ்ரீமத் திருக்குடந்தை தேசிகன் விஷயமாக நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸத்தை உடனேயே பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த உபந்யாஸத்தை நேரடியாகக் கேட்க.



To download it from Mediafire
http://www.mediafire.com/?xorr5ar7slrttcd

நேற்று (6-2-2012) அன்றைய உபந்யாஸத்தில் திருக்குடந்தை தேசிகனின் அருளுக்குப் பாத்திரமாகி நம் முனித்ரய ஸம்ப்ரதாயம் செழிக்க அவதரித்த ஸ்ரீமத் வழுத்தூர் ஆண்டவன் திவ்ய சரிதத்தை அற்புதமாக நாட்டேரி ஸ்வாமியின் வாக்கால் நேரடியாகக் கேட்க



To download from Mediafire
http://www.mediafire.com/?9jzi98fffzhba9k

HH Azhakiasingar's anugraha bhashanam 6-2-2012

பெண்களே! உங்களால்தான் முடியுமாம்! என்று தலைப்பில் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீமத் அழகியசிங்கர் திருப்புல்லாணியில் அருளிய அனுக்ரஹ பாஷணத்தை நிறைவு செய்திருந்தேன். இப்போது இங்கு முகாமிட்டுள்ள ஸ்ரீமத் அழகியசிங்கர் கடந்த நான்கு நாட்களாக அருளி வரும் அனுக்ரஹ பாஷணத்தில் பெண்களுக்கான ஸ்த்ரீ தர்மங்களைப் பற்றிச் சொல்லி இன்றைய தனது அனுக்ரஹபாஷணத்திலும் பெண்களால்தான் நாட்டையும் வீட்டையும் வளப் படுத்த முடியும் ஆனால் அதற்கு அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் என்ன என்பதை மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார். கேட்கும்போதே இக்காலப் பெண்கள் அவை எதையும் பின்பற்றுவதில்லை என்ற அவரின் வருத்தம் புரியும். முழுவதையும் கண்டிப்பாய்க் கேளுங்கள். பெண்களையும் கேட்க வையுங்கள். தெரிந்தவர் அறிந்தவர் என எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.


அடியேனது ப்ரார்த்தனையை ஏற்று ராமாயணத்தில் சரணாகதியைப் பற்றி ஒரு அனுக்ரஹ பாஷணம் அருளினார் அது இங்கே