புதன், 6 மார்ச், 2013

श्रीरङ्गश्री

திங்கள், 4 மார்ச், 2013

தோத்திரப் பத்து

ஸ்ரீ:

தோத்திரப்பத்து

காரானை கூவுங் கரியானை யுண்டு கடந்துமிழ்ந்த
பாரானை வஞ்சம் பரியானை மாயையிற் பட்டவராற்
றேரானை யார்க்குந் தெரியானைச் சீதச் செழுந்துளவத்
தாரானை மோகந் தரியானைப் பாடுதுந் தாழ்வறவே. .1.

வணத்தானைப் பூவை வணத்தானைச் சோதி மலிதருகங்
கணத்தானை யன்பர் கணத்தானைப் பச்சையங் கன்னித்துழாய்
மணத்தானைச் சீதை மணத்தானை மாதவர் வாழ்த்திடுசட்
குணத்தானை மாநிர்க் குணத்தானைப் பாடுதுங் கோளறவே. .2.

பரத்தானைப் பொன்னம் பரத்தானைச் சங்கம் பரிதியவிர்
கரத்தானை யெட்டக் கரத்தானை வேதக் கருத்திலெழுந்
தரத்தானை யெண்ணந் தரத்தானை ராவணன் றன்னையடுஞ்
சரத்தானைச் சம்வற் சரத்தானைப் பாடுதுந் தாழ்வறவே. .3.

நாதனை வெண்சங்க நாதனை யாரு நவிலருமைம்
பூதனைப் பூவிற்சம் பூதனைப் போற்றிப் புகழ்பவர்தம்
வேதனை தீர்த்தருள் வேதனை வீமற் கிளையவன்றேர்ச்
சூதனை வஞ்சற்குச் சூதனைப் பாடுதுந் துன்பறவே. .4.

கலையானை வெண்சங் கலையானைக் கொற்றக் கவிகையெனு
மலையானை யார்க்கு மலையானை நந்தன் வளர்த்திடும
தலையானை விண்ணந் தலையானை வண்ணஞ் சலதரத்தின்
றொலையானை யென்றுந் தொலையானைப் பாடுதுந் துன்பறவே..5.

கதியானை மோக்கக் கதியானைப் பாவக் கருத்தினரை
மதியானைக் காத்த மதியானை யன்பரை மாயையிடை
விதியானை வஞ்ச விதியானை வாரை வெறுத்துலகு
பதியானைக் கோவற் பதியானைப் பாடுதும் பண்புறவே. .6.

கட்டானைக் கட்டினைக் கட்டானை யீசன் கமலனிவர்க்
கெட்டானை யக்கர மெட்டானை நான்மறை யின்னதெனச்
சுட்டானை யூரறச் சுட்டானை வாழ்கெனச் சொல்லியுள
நட்டானைக் கற்பக நட்டானைப் பாடுது நாடொறுமே. .7.

திடத்தானைக் கம்பத் திடத்தானைப் பத்துச் சிரனெனுங்க
படத்தானை யாவி படத்தானை யேவும் பரமனைவெங்
கடத்தானை நீலக் கடத்தானை யேத்திலர்க் கானகர
வடத்தானைப் பள்ளி வடத்தானைப் பாடுதும் வாழ்வுறவே. .8.

தலத்தானை வற்சத் தலத்தானை மன்னு மணியணிப்பொற்
கலத்தானை யொண்பிங் கலத்தானை யானைக் கணிப்பருங்கூர்
அலத்தானை யன்ப ரலத்தானை யாம லருள்தங்கோ
குலத்தானைக் கோது குலத்தானைப் பாடுதுங் கோளறவே. .9.

பாண்டவர் தூதன்மெய் மாண்டவர் நாதன் பதமலரான்
மூண்டவன் பாம்பினிற் றாண்டவ மாடிய மூர்த்திமுனாட்
காண்டவ நீறெழ நீண்டவம் பேவிய கார்முகிலெம்
ஆண்டவன் மெய்யன்பு பூண்டவன் வாழ்க வனுதினமே. .10.

இது
கம்பம் அநுமந்தன்பட்டி
மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார்
இயற்றி அருளியது.

சென்னை
அம்பத்தூர் அறநெறி அரங்க
வெளியீடு 17
15-05-1957

Saranagati Deepikai upanyasam on 04-03-2013

 

Sri Natteri Rajagopalacharyar swami continues and elaborates the Saranagati Deepikai sloka that was discussed last week. Enjoy the arttha panchakam vyaakyanam. In the words of HH Srimad Therazhundur Andavan, “நான் பெருமாளுடைய கோபத்தைப் போக்கி பெருமாளுக்குக் கைங்கர்யங்கள் செய்யவேணும்”  is the essence of arttha panchakam.

The upanyasam can be downloaded from

http://www.mediafire.com/?dh757sewpgsauyn

It may be listened to online here