திருப்புல்லாணி உத்ஸவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்புல்லாணி உத்ஸவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 மார்ச், 2014

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்சவம்

தேதி

விசேஷம்

காலை

இரவு புறப்பாடு

மண்டகப்படிதாரர்

2014 ஏப்ரல் 5

முதல் திருநாள்

துவஜா
ரோஹணம்

சூர்ய ப்ரபை

வண்ணாங்குண்டு ஸ்ரீ ராமமூர்த்தியா பிள்ளை குடும்பத்தார்

ஏப்ரல் 6

இரண்டாம் திருநாள்

பல்லக்கு

சிம்ம வாகனம்

சிவகங்கை சமஸ்தானம்

ஏப்ரல் 7

மூன்றாம் திருநாள்

பல்லக்கு

ஹனும வாகனம்

ஸ்ரீ புருஷோத்தமராயர்

ஏப்ரல் 8

நான்காம் திருநாள்

பல்லக்கு அதன்பின் பெருமாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம்

பெருமாளும் இராமனும் இரட்டை கருட வாகனம்

ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம்

ஏப்ரல் 9

ஐந்தாம் நாள்

பல்லக்கு

சேஷ வாகனம்

திருவனந்தபுரம் சமஸ்தானம்

ஏப்ரல் 10

ஆறாம் நாள்

பல்லக்கு

யானை வாகனம் அதன்பின் பெருமாள் தாயார் திருக்கல்யாணம்

ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அமெரிக்கா

ஏப்ரல் 11

ஏழாம் திருநாள்

மாலை மஞ்சள் நீராட்ட புறப்பாடு பல்லக்கு

ஹம்ஸ வாகனம்

ஸ்ரீ பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தார்

ஏப்ரல் 12

எட்டாம் திருநாள்

பல்லக்கு

மாலை வேட்டைக்கு எழுந்தருளுதல்
இரவு குதிரை வாகனம்
திருமங்கை ஆழ்வார் ஆட்கொள்ளல் கட்டுப் பட்டயம் வாசித்தல்

திருப்புல்லாணி ஊராட்சி

ஏப்ரல் 13

ஒன்பதாம் நாள்

திருத்தேர்

தேர்த்தடம் பார்த்தல்

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்

ஏப்ரல் 14

பத்தாம் நாள்

தீர்த்தவாரி பெருமாள், இராமன், சக்கரத்தாழ்வார் ஸ்ரீஆதிஸேதுவுக்கு எழுந்தருளி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி அதன்பின் மூவரும் ஏக ஆசனத்தில் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஸந்நிதியில் திருமஞ்சனம்

திருப்புல்லாணி திரும்பி மட்டையடி உத்ஸவம்
அதன்பின் சந்திரப்ரபை வாகனம்

திருப்புல்லாணி ஸ்ரீ ஜே.எஸ். வாசன் & சகோதரர்கள்

ஏப்ரல் 15

விடாயற்றி

பெருமாள் உபய நாச்சியார்
களுடன்
ஸ்ரீ வானமா
மலை மடத்துக்கு எழுந்தருளி
விசேஷ திருமஞ்சனம்

புஷ்ப பல்லக்கு

ஸ்ரீ பத்மாசனித் தாயார் கைங்கர்ய சபை

 

               உத்ஸவத்தின் அனைத்து தினங்களிலும் ஸ்ரீமத் ஆண்டவன்
ஸ்ரீரங்கராமாநுஜ மஹா தேசிகன் ஸ்வாமி நியமனப்படி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் விசேஷ ததீயாராதனம் நடைபெறும்.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 10 அக்டோபர், 2011

முகுந்த மாலை

முகுந்த மாலை இது குலசேகர ஆழ்வார் இயற்றியது என்ற அளவிலே மட்டுமே அடியேன் அறிந்திருந்தேன். அடியேனுக்குக் கிடைத்தவைகளோ பெரும்பாலும் சம்ஸ்க்ருத மூலம் அல்லது தமிழ் லிபியில் மூலம் மட்டுமே. அடியேனது சம்ஸ்ருத அறிவோ 0 to the power of infinity என்பது அனேகமாக இந்த வலையைத் தொடர்பவர்கள் எல்லாருமே அறிந்ததுதான். அதனால் கிடைத்த அந்த நூல்களெல்லாம் அடியேனது “இம்சை” இல்லாமல் நிம்மதியாக இருந்தன.  இதற்கிடையில், பங்களூரு ஸுஹ்ருதயர் ஒருவருக்காக '”ஸப்ததி ரத்ன மாலிகா” வியாக்யானங்கள் வந்த பழைய இதழ்களைத் தேட வேண்டி வந்தது. அப்போது சில வருடங்களுக்கு முன் ஸ்ரீ அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி டெல்லியிலிருந்து அனுப்பி வைத்திருந்த சில நூறு புத்தகங்களில் அடியேன் பார்வையில் இது வரை படாமல் ஒளிந்திருந்த “முகுந்த மாலை” தமிழ் அர்த்தங்களுடன் இருக்கக் கண்டேன். மிக மிக மோசமான நிலையில் இருந்த அந்தப் புத்தகம் 1937ல் ஸ்ரீ பார்த்தசாரதி அய்யங்கார் (காஞ்சிபுரம்) என்பவரால் எழுதப் பட்டிருக்கிறது. தமிழ் “அறிந்த” அனைவரும் மிகவும் மதிக்கும் ஸ்ரீ கோபாலய்யரின் மாணாக்கர் என்று பெருமையுடன் தன்னை இவர் சொல்லிக் கொள்கிறார். (அனேகமாக அந்தக் காலத்து அறிஞர்களெல்லாரும் தங்களை இன்னார் மாணவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்திருக்கிறார்கள். சிறந்த மாணவர்களைத் தேடிச் சேர்த்த ஆசான்களும், பேரறிஞர்களான ஆசிரியர்களிடம் பல முறை அலைந்து மாணவர்களாகச் சேர்ந்து உயர்ந்ததும் அந்தக் காலம். இன்றைய நிலை --- சொல்ல வேண்டாம்). 100 பக்கங்களுக்குள் இருக்கும் அந்தச் சிறு நூல் அடியேனுக்கு முகுந்த மாலையில் ஆழ்வார் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வைத்த முதல் புத்தகம். நூல் இருந்த நிலையில் ஸ்கான் பண்ணுவதா வேண்டாமா என்று ஆரம்பக் குழப்பங்களுக்குப் பின், ஸ்கான் பண்ண முடிவெடுத்து ஆரம்பித்தால், முதல் அட்டையே ஒரே கருப்பாக ஆக, resolution மாற்றி மீண்டும் முயற்சிப்போம் என்று ஸ்கானர் மூடியைத் திறந்தால், தூள்களுக்கு நடுவில் கொஞ்சம் அட்டை இருந்தது. அதன்பின் மிக மிக…………………..மிக எச்சரிக்கையாக, ஒவ்வொரு பக்கமாக ஸ்கான் செய்து, சுமார் 10 மணி நேரம் செலவழித்து,  இந்த 91 பக்க நூலை ஒரு வழியாக சேமித்தாயிற்று. 600 dpi resolutionக்குக் குறைந்தால் சரியாக வரவில்லை. அதன்பின் சைஸைக் குறைத்தால் தெளிவில்லை. எனவே 100 mbக்கும் மேல் ஆகிவிட்டதால் மூன்று பகுதிகளாகப் பிரித்து சேமித்திருக்கிறேன்.

நங்கநல்லூராரே! சுயபுராணம் ஓவர்.

அடியேன் போன்றே சம்ஸ்க்ருதம் அறியாதவர்களுக்கும் உபயோகப் படலாம் என்பதற்காக  MediaFire ல்

http://www.mediafire.com/?og1xwgj23qre8

என்ற போல்டரில் மூன்று கோப்புகளாக இந்நூல் உள்ளது. விரும்புகிறவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.

திருப்புல்லாணியில் ஸ்ரீதேசிகன் திருநக்ஷத்ரோத்ஸவ திருமஞ்சன வீடியோக்களைப் பார்க்க வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். விரும்புகிறவர்கள் பார்க்க

திருமஞ்சனம் பகுதி 1
http://youtu.be/QlJrmEzxzWY

திருமஞ்சனம் பகுதி 2
http://youtu.be/JPTlPlHgGYg

புதன், 5 அக்டோபர், 2011

வெண்ணெய் உண்ட பெருமாயனாய் எங்கள் தேசிகன்

திருப்புல்லாணியில் நடந்து வரும் ஸ்வாமி தேசிகனின் 744வது திருநக்ஷத்ர உத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று காலையில் சாற்று முறைக்குப் பின், ஸ்ரீ லக்ஷ்மீஹயக்ரீவ, ஸ்ரீ சுதர்சன, ஸ்ரீ தனவந்த்ரி ஹோமங்கள் நடைபெற்றன.
மாலையில், ஸ்வாமி தேசிகன் வெண்ணெய் தாழி கண்ணனாக, ஸேவை ஸாதித்தார். சென்னை நங்கநல்லூர் ரங்கராஜனின் தந்தை திருப்புல்லாணி ப்ருஹஸ்பதி பாஷ்யம் அய்யங்கார் பல காலம் இந்த தேசிகன் சன்னிதியில் ஆராதகராய் சிறப்பாய் கைங்கர்யம் செய்தவர். அந்த அனுபவத்திலே, ரங்கராஜன் ஸ்வாமியும் மிகுந்த ஈடுபாட்டுடன், மிக அழகாக தேசிகனுக்கு சாத்துப்படி செய்திருந்தார். ஸ்வாமி தேசிகன் அடியேனுடைய தாத்தா நாளில் தன்னை இப்படி விதவிதமாக அனுபவிக்க வைத்து மகிழ்ந்திருந்தவர். சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின் இன்று எங்களையும் மகிழ்வித்தார்.
ஆச்ரம சிஷ்யர். ஒரு அற்புதமான மனிதர். அனகாபுத்தூரில் வாழ்கின்ற வழுத்தூர் ரங்காச்சாரி ஸ்வாமி. இவரைப் பற்றி ஒரு தொடர் பதிவே போடலாம். அவ்வளவு அசாதாரண குணங்கள் நிரம்பிய அபூர்வமான நல்லவர். இப்போதைக்கு சுருக்கமாக, இவர் க்ருஹம் ஒரு புத்தகக் கடல். எந்த சம்பிரதாய விஷயமான நூல் என்றாலும் விவரங்கள் இவரிடம் கிடைக்கும். விவரமென்றால், அட்டை முதல் அட்டை வரை நூலின் பெயரைச் சொன்னால் எல்லாவற்றையும் சில நொடிகளில் சொல்ல வல்லவர்.  இவர் எத்தனை புத்தகம் படித்திருக்கிறாரோ அத்தனையும் அந்த மாமியும் படித்திருக்கிறார். ஸ்ரீ ரங்கநாத பாதுகா இதழ்கள் digitalse பண்ணப் பட்டபோது, இவருடைய பங்களிப்பு மிக அதிகம். ஆரம்ப காலத்தில் வெளியான பழைய இதழ்கள் பலவற்றை எங்கெங்கோ தேடிப் பெற்றுக் கொடுத்து மகிழ்ந்தவர். இந்த ஸ்வாமி திருப்புல்லாணி ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவர், தேசிகன் மூலவர் உத்ஸவர்களுக்கு வெள்ளி யஜ்நோபவீதம் செய்து கொடுத்து விட்டிருக்கிறாஃ. நாளை அவற்றை ஆசார்யர்கள் அணிந்து மகிழப் போகிறார்கள்.
DSC03165DSC03166DSC03167DSC03168DSC03169DSC03170 
வெண்ணெய் தாழி படங்கள் இங்கே.
DSC03184
 கண்ணாடியில் பின்னழகு
DSC03181

பின்னழகும் திருப்பாத கமலங்களும்
DSC03182

DSC03188


ஒரு சிறு வீடியோ இங்கு


தேசிகனே ! ஆடீர் ஊசல்!


இருகலையு மொருகலை யென்றாடிரூசல்
       ஈரடியு மோரடி யென்றாடிரூசல்
இருவிழியு மொருவிழி யென்றாடிரூசல்
        ஈரொளியு மோரொளி யென்றாடிரூசல்
இருவழியு மொருவழி யென்றாடிரூசல்
         ஈருலகு மோருலகென் றாடிரூசல்
பருமறையாம் திருமலையே ஆடிரூசல்
          பொறைபுனையும் பரமகுரு ஆடிரூசல்
.  (ஆர்.கேசவய்யங்கார்)


திருப்புல்லாணி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் திருக்குடந்தை தேசிகன் அவதார தினத்தன்று ஸ்ரீ தேசிகன் ஊஞ்சல் காட்சி.


நிறைவேறியது ஆசை!

திருப்புல்லாணி ஆச்ரமத்தில் ஸ்வாமி தேசிகனின் 744வது திருநக்ஷத்ர உத்ஸவம் இன்று  திருக்குடந்தை தேசிகனின் அவதார தினத்தில் தொடங்கியது. ஸ்வாமி தேசிகனுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலையில் திருக்குடந்தை தேசிகன் செய்த “தேசிக சஹஸ்ரநாம”த்தைக் கொண்டு ஸ்வாமி தேசிகனுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. காலையில் திருமஞ்சனத்துக்குப் பின் நடந்த சாற்றுமுறை கோஷ்டியில் ஸ்ரீ ஆதி ஜகன்னாதப் பெருமாள் ஆலய அர்ச்சகர்கள், ஸ்தானிகர், கைங்கர்யபரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மூன்று நாள் உத்ஸவமாக ஆரம்பித்த பிறகு, தேசிக சஹஸ்ரநாம அர்ச்சனை, தொடர்ந்து நடந்து வருகிறது.

அது சரி! 743லிலும் இதைத்தான் எழுதினாய். 742ல் போய்ப்பார்த்தால் அதிலும் மாற்றமில்லை. என்ன ஆசை? எப்படி நிறைவேறியது? அதைச் சொல்லாமல் ……

உத்ஸவத்தை சிறப்பிக்க வந்திருக்கும் திரு J.S. வாசன் ஸ்வாமி, காலை திருமஞ்சனம் நடக்கும்போது, , மாலையில் தேசிகனுக்கு ஊஞ்சல் போடலாமே என்றார்.  தாத்தா நாளில் நடந்திருக்கிறது. அதன்பின் நின்று விட்டது. அடியேனுக்கும் ஆசைதான். ஆனால் தேசிகன் ஆடுமளவுக்கு ஊஞ்சல் இல்லையே  என்று நான் சொன்னதும், சரி அடுத்த வருடமாவது தயார் செய்யலாம் என்று அவர் சொன்னார். ஆனால், தேசிகனே திருவுளப் பட்டதால்தான் அப்படி அவர் சொன்னால் என்பது அடியேனுக்கு அப்போது புரியவில்லை. ததீயாராதனத்துக்குப் பின் மாலையில் அடியேன் மர மண்டையில் திடீரென்று ஒரு பல்ப் எரிந்தது. அதை எங்கள் ஆராதகர் ஸ்ரீதரனிடமும், சென்னை நங்கநல்லூர் ரங்கராஜன் ஸ்வாமியிடமும் தெரிவித்தேன். அந்த யோசனையை ஏற்று, சில நிமிடங்களில், தேசிகன் புறப்பாடு கண்டருளும் விமான மண்டபத்தை மாற்றி அமைத்து ஊஞ்சலையும் ரெடி பண்ணி ஸ்வாமி தேசிகனை ஏளப் பண்ணி அவரை மகிழ்வித்து விட்டார்கள். ஆக, தாத்தா நாளுக்குப் பின், அதாவது சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின்

“திருவாழத் திருவாழு மார்பர்வாழத்
        திருமார்பர் திருவடியே வாழவன்னார்
திருவடிப்பூப் போத சடகோபர்வாழத்
         தெள்ளியசீ ரெதிராசர் செங்கோல்வாழ
வருணநெறிச் செவ்விவளம் செழித்துவாழ
           வைணவர்கள் குடிகுடியாய் வாழவாழச்
சுருதிமுடிக் குருப்புனித ராடிரூசல்
            சீர்தூப்புல் வேங்கடவ ராடிரூசல்”

என்று கூடியிருந்தோரெல்லாம் உவந்து பரவ, எங்கள் தேசிகன் இன்று ஊஞ்சலில் ஆடிய வண்ணம், திருக்குடந்தை தேசிகன் அருளிய தன்னுடைய சஹஸ்ரநாமத்தையும் கேட்டு மகிழ்ந்திருந்தார்.

இப்போதைக்கு சில படங்கள் மட்டும்.

ஏனோ வீடியோக்கள் upload ஆவதில் மிகவும் தாமதம் ஆகிறது. இரவு 10 மணி முதல் இப்போது ஒரு மணி வரை முயன்று கொண்டிருக்கிறேன். 50% கூட ஏறவில்லை. அதனால் வீடியோ நாளை வரும். (அப்பாடி ……. என்று  சந்தோஷப்படுவது யார்? )

DSC03149

DSC03151

DSC03152

DSC03154

மாலையில்  ஊஞ்சலில், ஸ்ரீ ரங்கராஜனின் அருமையான சாத்துப் படியில்

DSC03156

DSC03163

DSC03164

திங்கள், 5 செப்டம்பர், 2011

Sundayன்னா மூணு

கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் ஸ்ரீ ஆதி சேதுவில் ஸ்நாநம் செய்த காட்சியினை திருப்புல்லாணி ஸ்ரீ அஹோபில மடம் மானேஜர் முத்துகிருஷ்ணன் மிக அருமையான விடியோவாகப் பதிவு செய்து பகிர்ந்து கொள்கிறார். அன்று அங்கே போயிருந்தவர்கள் வீடியோவில் இருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளலாம். போகமுடியாதவர்கள் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கலாம்.

அன்று இங்கு வந்திருந்த ஸ்ரீ அய்யம்பேட்டை தேவநாத அய்யங்கார் ஸ்வாமியும் சில வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றை

http://www.youtube.com/user/rdevanathan1?feature=mhsn சென்று பார்க்கலாம்.

DSC03045இன்று 4-9-2011 திருப்புல்லாணியில் ஒரு முக்கியமான நாளாக அமைந்தது. திருப்புல்லாணி பத்மாசனித் தாயாருக்கு ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் வெள்ளி ஷோடசோபசாரங்களை சமர்ப்பித்தார்கள். திருமேனி களைப்பினால் தான் வரமுடியாததால், பெரிய அழகியசிங்கர் அனுக்ரஹித்துக் கொடுத்ததை, சின்ன அழகியசிங்கர் கோவிலுக்கு நேரில் வந்து சமர்ப்பித்தார். இன்று வந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சிஷ்யர்களுக்கு அது ஒரு ஆனந்த அனுபவமாக அமைந்தது. பெருமாளிடம் முதலில் சமர்ப்பித்து அவர் அனுமதியுடன்,

DSC05134

தாயாரிடம் அழகியசிங்கர் சமர்ப்பித்தது அனைவரையும் பரவசப் படுத்தியது. 2008ல், ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்தபோது பெருமாளுக்கு யக்ஞோபவீதம் சமர்ப்பித்தார். இப்போது தாயார் முறை. அதனால் ஒன்றுக்கு ஐந்தாகத் தாயார் பெற்றுக் கொண்டிருக்கிறாள்.

இங்கு இருக்கும் படங்கள் திரு முத்துகிருஷ்ணன் எடுத்தவை. அடியேன் ஏதோ அந்தக் கால மார்க்கஸ் பார்ட்லே என்ற நினைப்பில் ஒரு கையில் காமிராவும் ஒரு கையில் வீடியோ காமிராவுமாக எடுத்ததன் விளைவு விட்டலாசார்யா படங்களில் வரும் மாயா ஜாலக் காட்சிகள் போல் தெரிந்தும் தெரியாமலும் அமைந்துவிட, பாவம் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் எதையாவது எப்படியாவது சரி பண்ணி அந்த வீடியோவை மட்டுமாவது உலகுக்குக் காண்பித்து விடுகிறேன் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.

DSC03033  DSC03036

DSC03038DSC03039

DSC03043

DSC03049

DSC05144

எல்லா சந்நிதிகளிலும் மங்களாசாஸனம் செய்த ஸ்ரீமத் அழகியசிங்கர் ஒவ்வொரு சந்நிதியிலும் அந்தந்த சந்நிதியின் சிறப்புகள், அங்கு எழுந்தருளியிருக்கும் அர்ச்சா மூர்த்திகளின் விசேஷங்களை சிஷ்யர்களுக்கு அருளி பெரு மகிழ்வடைய வைத்ததும் இன்றைய தினத்தில் அடியோங்கள் பெற்ற பாக்யங்கள்.

மூன்றாவது விசேஷம் அழகியசிங்கரின் வழக்கமான அற்புதமான அருளுரை.

ஆன்லைனில் கேட்பவர்களுக்காக இங்கே!

 

இல்லை இல்லை குடும்பத்தோடு எல்லாரும் கேட்கவேண்டும் கேட்டு அழகியசிங்கர் சொல்வதைப் போல நடக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக
http://www.mediafire.com/?3u095o6ucvh5ubb

வியாழன், 1 செப்டம்பர், 2011

Srimad Azhakiasingars ‘s Sethu snanam

Sriman Muthukrishnan, manager, Thiruppullani Sri Ahobila Matam and SriSridhar,Manager, Srimad Andavan Ashramam, have shared some photos of the Sethu Snanam performed by HH Azhakiasingars atSethukkarai today, the 1stSeptember. adiyen is awaiting for the anugraha bhashanam by HH 46th Azhakiasingar today evening and also for the video of the sethu snanam. Thank you Muthukrishnan and Sridhar for making the world enjoy these rare moments. A slide show of the photos is below.

 

 

The same photos may be viewed and downloaded from https://picasaweb.google.com/rajamragu/September12011?authuser=0&feat=directlink

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

On this Independence Day at Thiruppullani Sri Ahobila Matam

நாடு விடுதலை அடைந்த நன்னாளை நாம் எத்தனையோ விதங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நெய்வேலி ஸ்ரீஅஹோபில மட நித்யாராதன கமிட்டிக்காரர்கள் இந்தத் திருநாளை ஸ்ரீஅஹோபில மடம் மாலோலன், மற்றும் அவனுடன் மகிழ்ந்து உறைகின்ற கண்ணன், மற்றும் ஆழ்வார் ஆசார்யர்களோடு கொண்டாடுவதை கடந்த இருபது ஆண்டுகளாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்களாம்.எவ்வளவு உயர்ந்த நோக்கம்! அந்த ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் உளம் குளிர்ந்தால் நாடும் நகரும் செழிக்கும், அதனால் ஸர்வே ஜனோ சுகினோ பவந்து என்பது அவர்கள் எண்ணமாக இருக்கலாம். அந்த வழக்கப்படி இன்று 15/8/2011 அன்று திருப்புல்லாணியிலும் மிக மிக விசேஷமாக அவர்கள் திரளாக வந்திருந்து கொண்டாடி கூடியிருந்த அனைவரையும் ஆனந்தப்பட --- இல்லை இல்லை கைங்கர்யபரர்கள் அனைவரும் ஆத்மார்த்தமாக ஸ்ரீமடம் ஆராதன மூர்த்திகளுக்கு செய்த கைங்கர்யங்களைக் கண்டு உளம் நெகிழ ---- வைத்தனர். நெய்வேலிக்காரர்கள் உபயமாக இன்று நடந்தது பெரிய திருமஞ்சனம். இந்த ஆண்டு அவர்களுடன் டோம்பிவிலி ப்ருஹஸ்பதி ஸ்ரீ சந்தானம் வாத்தியாரும் உபயதாரராக சேர்ந்து கொண்டார். பெரிய திருமஞ்சனம் என்றால் மாலோலன் முதல் ஆராதன மூர்த்திகள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் மிக விசேஷமான திருமஞ்சனம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த திருமஞ்சனம். திருமேனி தளர்வையும் பொருட்படுத்தாமல் கூடவே இருந்து பெரிய அழகியசிங்கரும், சின்ன அழகியசிங்கரும் நடத்தி வைத்த திருமஞ்சனம். பார்த்தவர்கள் எல்லாரும் மெய்மறந்த திருமஞ்சனம். கண்டு களித்தோரெல்லாம் நெய்வேலிக்காரர்களை  மனம் நிறைந்து வாழ்த்த வைத்த திருமஞ்சனம்.
”வாழி நரசிங்க மால்கழல்கள் மாலடியார்
வாழி அகோபிலத்து மாதவர்தாள் – வாழி
அழகிய சிங்கர் அணிமரபு வாழி
பழகிய மெய்ச்சீர் பயின்று”
என்று பரவிப் பரவசப்பட வைத்த திருமஞ்சனம்.
சரி!சரி! திருமஞ்சன வீடியோ எங்கே? அதைக்காட்டாமல் என்ன வசனம்? என்கிறீர்களா?
தீர்த்தக்கரைப் பாவி என்று சொல்வார்களே! இன்று அடியேன் நிலையும் அதேதான்! மேலே வர்ணித்ததெல்லாம் பார்த்தவர்கள் சொல்லி மகிழ்ந்தது. அடியேனுக்கு அந்த பாக்யம் இன்று கிட்டவில்லை. வேறு ஒரு காரியத்தில் தவிர்க்க முடியாமல் ஈடுபட வேண்டியிருந்ததால் இங்கேயே இருந்தும் மடத்தின் பக்கம் திருமஞ்சனங்கள் முடியும்வரை போகவே முடியவில்லை. அதனால் அதைப் பதிவு செய்யும் நல்வாய்ப்பும் அடியேனுக்குக் கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லை. கடந்த 5 ஆண்டு காலமாக யாரை ஸேவிக்க வேண்டுமென்று மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தேனோ, யாரால் இன்று இந்திய மொழிகள் பலவற்றில் கம்ப்யூட்டர்களில் மிக எளிதாக எழுத முடிகிறதோ,  யார் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயங்களிலும் நிகரற்ற தேர்ச்சி பெற்று, கணிணி தொழில்நுட்பங்களிலும் அகில உலக அளவில் பேசப்படுகிறாரோ, அந்த ஸ்ரீ சோகத்தூர் ராமானுஜம் ஸ்வாமியை, அவராகவே அடியேனைப் பார்க்க விரும்பிய நேரத்திலும், அடியேனுடைய கமிட்மெண்ட் பார்க்க விடாமல் செய்தது அடியேனுடைய மிகப் பெரிய துர்பாக்யம்.
ஆக மடத்தில் திருமஞ்சனங்கள் முடிந்து தீர்த்த கோஷ்டி ஆகி ததீயாராதனம் நடந்தபோது மணி மாலை 4-30. மாலோலனை விட்டு மனம் அகலாமல் இருந்த நிலையில் யாருக்கும் பசிக்கவுமில்லை. இன்று வந்திருந்த சுமார் 250 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் அனைவரும் நிதானமாக இருந்து ததீயாராதனத்தில் அந்வயித்து பலமந்த்ராக்ஷதை பெற்றுச் சென்றது மற்றும் ஒரு சிறப்பு.

இழந்தோமே ஒரு நல் வாய்ப்பை என்று கவலைப்பட்டவனுக்கு மாலையில் ஒரு சந்தோஷம் காத்திருந்தது. இந்த நெய்வேலிக்காரர்கள் வழக்கமாக டோலோத்ஸமும் பண்ணுவார்களாம். சுமார் 7 மணிக்கு ஆரம்பித்த அந்த டோலையும் தொடர்ந்த ஆராதனங்களும் கோஷ்டியும் முடிய 9 மணிக்கு மேலாகி விட்டது.  அப்பப்பா! ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காத கைங்கர்யபரர்கள்! அதைக்காட்டிலும் அசராத மடைப்பள்ளிக்காரர்கள்! இரவு கோஷ்டியில் வந்துகொண்டே……….யிருந்த ப்ரஸாதங்கள்! மலைக்க வைத்தன. 
இப்போதைக்கு டோலையின்போது எடுத்த சில படங்கள் மட்டும் இங்கே! வீடியோ யூட்யூபில் ஏறிக்கொண்டிருக்கிறது. அதை நாளை தருவேன். இப்போதே மணி 12 ஆகி விட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள். யூட்யூப் அடியேனைப் போல் சோம்பேறியல்ல என்று நிரூபித்து விட்டது. இதை எழுதி முடிப்பதற்குள் அது பதிந்து விட்டது. வீடியோ பதிவின் இறுதியில் உள்ளது. 
ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் வரும் செப்டம்பர் முதல் நாள், 1.9.2011, அதாவது 44ம் பட்டம் முக்கூர் அழகியசிங்கர் திருநக்ஷத்திரத்துக்கு மறுநாள், ஸ்ரீஆதி ஸேதுவில் சமுத்திர ஸ்நானம் செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்கள். அன்று விநாயகர் சதுர்த்தி. அரசு விடுமுறை. ஸ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் வாய்ப்பை நழுவ விடமாட்டார்கள் இல்லயா! அவசியம் வந்து அழகியசிங்கர்களுடன் சமுத்திர ஸ்நானம் செய்யும் பாக்யசாலிகளாகப் போகிறார்கள்தானே! தங்குவதற்குத் தனி அறைகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை! இருக்கிற இடத்தில் சமாளித்துக் கொள்வோம் என்று இப்போதே பயணத்திற்குத் தயாராகிவிடுவார்கள்தானே!

டோலையில் எடுத்த சில படங்கள் இங்கே! கண்ணனை கண்ணாரக் கண்டு  அவன் அணிந்து நம்மை மகிழ்விக்கின்ற அந்த ஆபரணங்களை, குறிப்பாக அந்த ஜடை அலங்காரத்தைக் கண்டு களியுங்கள்.

 

இப்போது
“மாற்றுயர்ந்த செழும்பொன்னால் கால்கள் நாட்டி
வலிமிகுந்த வச்சிரத்தால் விட்டம் போட்டுத்
தோற்றமுறு மாணிக்கத் தொடர்கள் பூட்டித்
துங்கமுது நீலமணிப் பலகை தூக்கி
ஏற்றுதிரு மாமணிமண் டபத்தின் னூசல்
எழிலுடனா டியபடியே யிங்கு மன்பர்
ஆற்றலுறக் கடைக்கணித்தே யாடி ரூசல்
அலங்கார மாயவரே யாடி ரூசல்.

செங்கமலத் தோள்புரிந்த மாயங் கண்டு
சிறுவரோடு கன்றினமாய்ச் சென்றே யன்பர்
தங்கள்மனம் களித்திடவு மலரோன் கொண்ட
தருக்கன்று தாழ்ந்திடவுந் தாள்செய் திம்பர்ப்
பொங்கிவளந் தழைத்திடச்செய் யமுனை யாற்றிற்
போராவி னடித்ததகை தீரக் கொண்ட
அங்கைநவ நீதமுனீ ராடி ரூசல்
அலங்கார மாயவரே யாடி ரூசல்.

அண்டமெனுங் கூடத்தை நாள்கோள் தம்மால்
அலங்கரித்து மேருவினைத் தூண்க ளாக
விண்டலமார் துருவநிலை விட்ட மாக
விரவுதுரு வச்சுழல்சங் கிலிக ளாகக்
கண்டலஞ்சேர் வதிர்க்கடவுள் பலகை யாகக்
காலமெனுங் கடவுளுளக் கனிவொ டாட்டப்
பண்டைமறைப் பரம்பொருளே யாடி ரூசல்
பரிதினுட் பரஞ்சுடரே யாடி ரூசல்.”

என்று அன்று திரு ஹரிஹர அய்யர் பாடியதற்கேற்ப அந்த மாயக் கண்ணன் டோலையிலே வீற்றிருக்கும் அழகைப் பாருங்கள்.


 
 

வெள்ளி, 22 ஜூலை, 2011

ஆடி வெள்ளியில் ஆனந்தக் காட்சிகள்

திருப்புல்லாணியில்  இருந்தோருக்கு இன்று ஒரு ஆனந்தமான நாள். காலையிலே தாயாரும் பெருமாளும் குளிரக் குளிரத் திருமஞ்சனம் கண்டருளி இரவிலே பார்த்தவர்கள் எல்லாரும் பரவசம் அடையும் வண்ணம் ஊஞ்சலில் எழுந்தருளி மகிழ்வித்தனர்.

DSC02972

DSC02976

 

உள்ளே இருந்து ரஸி (க்ஷி)க்கின்ற தாயார்

DSC02977

அங்கு முடிந்து மடத்திற்கு வந்தால் அங்கும்  டோலை!  கண்கொள்ளாக் காட்சி!. அனுபவித்து அனுபவித்து அழகியசிங்கர்  செய்கின்ற கைங்கர்யங்கள், உபசாரங்கள் எல்லாம் அதைக் கண்டவர்களை மெய்மறக்க வைத்தன.

DSC02979

 

DSC02981

DSC02990

 

DSC02989

 

DSC02991

 

DSC02992

DSC02993

 

ஒரு அமெச்சூர்தனமான வீடியோ !

 

இன்று தனது அனுக்ரஹ பாஷணத்தில் 46ம் பட்டம் அழகியசிங்கர் இங்கு சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் மேற்கொள்வதற்கு ரசமான ஒரு விஷயம் சாதித்தார். அன்று தன்னை நாடி வந்து பூஜித்த இராமனை, அவன் சயனம் கொண்டிருக்கும் இங்கு வந்து அவனை ஆனந்தப்பட வைக்கவே ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹன் அழகியசிங்கர்களை இங்கு சங்கல்பம் மேற்கொள்ள வைத்திருக்கிறான் என்றார். இன்று ந்ருஸிம்ஹன் எழுந்தருளியிருந்த அழகு அதை உறுதிப் படுத்தியது.

அப்புறம், இன்று உள்ளூர் கேபிள் டி.வி. சானல்காரர்களின் ப்ரார்த்தனையை ஏற்று அவர்களுக்காக அனுக்ரஹ பாஷணம் அருளியபடியால், பெரும்பாலும் பொதுவாகவே அனுக்ரஹபாஷணம் அமைந்தது. சொல்ல நினைத்திருந்த தர்ம சாஸ்திர விஷயங்களை நாளை அருள்வதாக சாதித்தாயிற்று. ஆனாலும் இறுதியில், அடியேன் மூலமாக சிலர் கேட்டிருந்த ஐயங்களுக்கு அழகிய சிங்கர் அளித்த பதில் எல்லாருக்கும் பயனளிக்கும்.

சொல்ல மறந்ந்து விட்டேனே! தினமும் மாலையில் சின்ன அழகியசிங்கர் திருவீதி ப்ரதக்ஷிணமாக வந்து கோவிலில் இப்படி ஏகாந்தமாக எல்லா ஸந்நிதிகளிலும் ஸேவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

DSC02971

 

அனுக்ரஹ பாஷணம் கேட்க

 
பதிவிறக்கம் செய்து கொள்ள
 
 
அல்லது