திங்கள், 10 டிசம்பர், 2012

மங்களம் ! சுப மங்களம்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த “குரு பரம்பரை வைபவ” உபந்யாஸம் இன்றைய உபந்யாஸத்துடன் நிறைவு பெற்றது.  இன்றைய உபந்யாஸத்தில் இதுவரை நடந்த உபந்யாஸங்களின் ஸாரத்தைப் பிழிந்து, இந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்காதவர்கள் இன்றைய ஒரு உபந்யாஸத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே இதுவரை நடந்த 113 உபந்யாஸங்களில் தெரிவிக்கப் பட்டது என்ன என்பதை எளிதில் உணரும் வண்ணமும், கேட்ட மாத்திரத்தில் கேட்காத உபந்யாஸங்கள் அனைத்தையும் சேகரித்துக் கேட்கும் வண்ணமும் அருமையாக ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி தனது உபந்யாஸத்தை நிறைவு செய்திருக்கிறார்.
இந்த இரண்டு ஆண்டுகளாக விடாமல் இந்த உபந்யாஸங்களைப் பதிவு செய்து இங்கு பகிர்ந்து கொண்டது ஆசார்ய வள்ளல் ஸ்ரீமத் ஆண்டவனின் அனுக்ரஹ விசேஷத்தால் அடியேனுக்குக் கிடைத்த பெரும் பாக்யம்.  ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி,எழுத்திலே உணர்த்த முடியாத பல விஷயங்களை இங்கு சொல்லி நம்மை நெகிழ வைத்தார், இந்த ஆச்ரம சிஷ்யனாய் இருப்பதற்கு என்ன தவம் செய்தனம் என்று பெருமிதப் படவும்  வைத்தார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத வகையிலே இந்த உபந்யாஸங்கள் அமைந்தன. அவருக்கு எப்படி க்ருதஜ்ஞைகளைத் தெரிவிக்கப் போகிறோம்!
இந்த உபந்யாஸங்கள் அமெரிக்கா வாழ் ஆச்ரம சிஷ்யர்களின் ஏற்பாடு. ஆனால் வாராவாரம் இதைப் பதிவு செய்து பகிர்ந்து கொள்ள அவர்கள் அடியேனுக்கு அளித்த ஆதரவு அடியேனது இன்னொரு பாக்யம். குறிப்பாக, ஸ்ரீ வெங்கட், ஸ்ரீராம், இவ்விருவரது திருத்தகப்பனார் பூண்டி இராமாநுஜம் ஸ்வாமி அவர்களுக்கெல்லாம் அடியேன் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்!
இன்றைய உபந்யாஸத்தை வழக்கம்போல்  நகலிறக்க
http://www.mediafire.com/?tihi659edvw06d9

நேரடியாகக் கேட்டு மகிழ

 


எல்லா உபந்யாஸங்களையும் தரவிறக்க
http://sdrv.ms/SO842G 
இன்னொரு முக்கியமான சேதி!
அடுத்த வாரத்திலிருந்து "சரணாகதி தீபிகை" உபந்யாஸம் தொடர்கிறது. அநுபவிக்கத் தயாராவோம்!