வியாழன், 22 நவம்பர், 2007

திருப்பாதுகமாலை

4. பணயப்பத்ததி

101. எவையு முய்யவெ னய்யன யோத்திமீண்
       டவனி யாண்டருள் செய்பய ணத்துமுன்
       னவணி நன்றத னுப்பலெ னத்தரும்
       சுவண மன்னிரு பாதுகை யுன்னுவாம்.

102. நீடுகுல மேறுதிரு நீதியர சோடும்
        நாடுகுடி யன்புநெடு நாடுடனு யிர்த்தோர்
        காடுதனி யேகியிறை  யாடிரகு வீரன்
        ஈடெனநி னைத்துனைநி லைத்துணைவ லித்தான்.

103.  நாடலற நாதனெடு காடுபுகு காலில்
         நாடிமன மீளவவ னைவளமொ லித்து
         வாடுமிள மெல்லிதய வஞ்சியென விஞ்சிக்
         கூடியடி கெஞ்சியருள் கொஞ்சினைம ராடீ !

104.  அச்சுதன கன்றரகு மன்னகரை நம்பி
         துச்சமென வெண்ணியவ னுச்சியிலு னைக்கொண்
         டுச்சினிய வந்திதுரை மோதயம யோத்தி
          யுச்சமவை பாது !நின தென்றுமதி பூத்தான்.
105.   தஞ்சமென வோங்குலகு தாங்கிரகு வீரக்
         கஞ்சவிழி யஞ்சனவ ணப்பானை யாங்கும்
         மஞ்சுமுடி தாங்குவலி கண்டிளையன் பாதூ !
         கொஞ்சுல ளித்தரசு கொள்ளுனையி ரந்தான்.

106.    அய்யனடி நின்றிளவ லன்பிலுனை வேண்டல்
          துய்யமணி பாது !தனி நிற்கவுனை வைய
          முய்யவரு மாதியென மூதறிஞர் காண
           மெய்யறையு மாமுனிவ சிட்டனுள மென்னோ?

107.  மூதரசு துஞ்சவிறை முன்னடவி யேகச்
        சாதுவொரு தம்பிபரி வாதமொழி யஞ்சச்
        சீதையென சாகசநீ செய்தனையெ னிற்பொற்
         பாதநிலை! கோசலரை யாற்றுநல ராரோ?

108. ஆமுயிரெ வைக்குமிறை யென்றறைம றைச்சீ
        ராமனதி னின்னிருமை மாணுமணி பாதூ!
        ஆமவனை யேபெறவ ரும்பரத னுக்கே
        மாமுதனி திப்பணய மாயினைம தித்தே.

109. முன்னமளி மன்னபய முன்னொளிதெ ளிக்கப்
        பின்னிளவ லண்ணநகர் பின்னடிபி டிக்க
       நின்னடையி லக்கடல்க டந்தடிநி லாயவ்
       வன்னிருதர் மன்னகரி றுத்தொளிப லித்தான்

110. அத்திறநெ டுஞ்செடிக ளத்தனையு மேநீ
       யொத்திபொறை மேனிகமை கொள்ளுமணி பாதுன்
       தொத்தறலி லத்தனொரு வீரனென மூரி
       யுத்தநிலை யெற்றுமுடி பத்துடனு திர்த்தான்.

111. செப்பமுற வப்பனுரை செய்துமிகு மன்னைச்
        செப்பலுநி ரப்புதன தின்னுளந லத்தோ
        வொப்பருதி ருப்பொலிய மோலிமணி யெம்பிக்
        கப்பனணி பாது!நினை யம்முடிக வித்தான்.

112. அய்யனரு ளங்கிரிசு ரத்தலிலு னைத்தான்
       செய்யதுற வொண்சடையி னம்பிநனி யேந்தி
        மெய்யனணி பாதநதி பாது!முடி மேவுந்
       துய்யபவ னத்தனிம மித்தவனு மொத்தான்.

113. மெய்யனிறை தேறுமடி சேருமணி பாதூ!
       உய்யவுல கேழுமர சாளுரிமை கொள்ளப்
       பொய்யலையு மோலியறு பொன்முடியி லுன்னைத்
       துய்யதுற வொன்றுதிரு நின்றவன்சு மந்தான்.

114. நன்றகில நோக்குமளி நாறுமணி பாதூ !
       ஒன்றுனையு ணர்ந்தனுச னுத்தமனை வேண்டத்
       தன்றிரும திச்சரண கச்சவியி லன்னான்
       நின்றருளி னிற்குமுடி யாட்டினனி வந்தே.

115. காதலினி தேறுனது மாலடிக லக்கும்
       நீதியிறை யந்தவிதி நந்தனனி யம்பப்
       பாதுனையி ராமகிரி மாதவர்ப ணிந்தெப்
       போதுநிறை யோதுவர்க ளோம்பனல றைக்கண்.

116. உன்னியன டைத்திடனெ னத்தனிவ னத்துத்
       துன்னொளிய ழைக்குமுறை யுன்னியிறை நின்மேல்
       தன்னடியை யொற்றிநடை யாடுவலி யுற்றே
       மன்னுகடு கற்கணெடு தண்டகா டந்தான்.

117. நாதனடி நின்றுமணி யாசனம மர்த்தி
       நீதியுல காளவொரு காளைமுடி யேறிப்
       பாது !வர வீதுபுர வாசிபெறு பேறென்
       றோதுனல வாசியிசை பாடிமகிழ் கூர்ந்தார்.

118. ஏறுநடை யண்ணனிறை யேவலுரு நின்னை
        நாறுமுடி மீதுமணி பாதுகை! தரித்தே
        வீறணிம திப்பரத னின்னரசு தன்னில்
        வேறரச றத்தரைநி றுத்தினன னைத்தும்.

119. இன்புறவை யகமகில மளித்துக்காக்கும்
               பீடுடைமெய் யோகியர்கண் கண்டுபாட
        நம்பிதிருப் பரதனொரு தம்பியென்றே
               நடையிரகு நாயகனா மரங்க நாதன்
        அன்பிலனு தினமுநெடி தவன்வ ணங்கத்
                தனதுபத விலையெனமெய் யுறுதி சாற்றி
        அம்பலநின் றன்றவனுக் களித்த வந்நல்
                லடிநிலையென் சிறுமையறப் போக்கி நோக்கும்.

120.  கட்டுதி ருப்பர தன்முடி போலென்
         மட்டப வாதம கற்றிம ராம !
         கிட்டியெ னுச்சியி னிச்சலுங் கோயில்
         நட்டலி னீபரி வட்டமெ னக்கொள்.
        
     

கொஞ்சம் மாறுதலுக்காக

www.காக்கை.com

www.காக்கை.com என வெப்சைட் முகவரியை அதற்குரிய இடத்தில் டைப் செய்தான் ராகுல். மின்னல் வேகத்தில் சில காகங்களின் போட்டோக்களுடன் வெப் சைட் திறந்தது. மவுஸில் ரோலிங் செய்து ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொண்டு வந்தவன், பிடித்த காகத்தின் மீது கர்ஸரை வைத்து க்ளிக் செய்தான். உடனே தகவல்களைப் பதிவு செய்யும் பகுதிக்குச் சென்றான்; பதிவு செய்தான். பணம் செலுத்தும் பகுதி வந்தது. கிரெடிட் கார்டு தகவல்களைப் பதிவு செய்தான். சற்று நேரம் பிராசஸிங் ஆனது. பிறகு "மிஸ்டர் ராகுல் உங்களின் விருப்பப்படி உங்கள் தாத்தாவின் இந்த வருஷ திதிக்கு, நீங்கள் விரும்பிய காகத்துக்கு, நீங்கள் குறிப்பிட்ட மெனுவின்படி உணவு வைத்துவிட்டோம்" என நேரடிக் காட்சிகளுடன் தகவல் வந்தது. உடனே அவனது அம்மாவிடம் , " அம்மா, காக்கா சாப்பிட்டுடுச்சு... நாம சாப்பிடலாமா?" என்று கேட்டான் ராகுல்..

      "கல்கி" 25.11.07ல் வந்த மின்னல் கதை.

    [ இன்று கற்பனை யார் கண்டது நாளை இப்படியேகூட நடக்கலாம்.   நாம்தான் எதற்கும், எல்லாவற்றுக்கும்  ஒரு
சமாதானம் சொல்லிவிடுவோமே!]

செவ்வாய், 20 நவம்பர், 2007

திருப்பாதுகமாலை

 

4. பணயப் பத்ததி

(சமர்ப்பண பத்ததி)

101.எவையு முய்யவெ னய்யன யோத்திமீண்
       டவனி யாண்டருள் செய்பய ணத்துமுன்
       னவணி நன்றத னுப்பலெ னத்தரும்
       சுவண மன்னிரு பாதுகை யுன்னுவாம்.

ஸ்ரீமத் நம்மாண்டவன்:

       இந்தப்பத்ததியில் ஸ்ரீராமன் பரதருக்கு  பாதுகைகளை  ஸாதித்த தைப் பற்றி ஸாதிக்கிறார். பரதர் ஸ்ரீ ராமனை அயோத்திக்கு எழுந்தருள வேணும் என்று நிர்ப்பந்தித்தார். அதில் ஸ்ரீராமனுக்கு இஷ்டமில்லை. அப்போது வஸிஷ்டர் இராமனைப் பாதுகையைக் கொடுக்கும்படி ஸாதித் தார். அதன் பேரில் கொடுத்தார் இதைப்பற்றி ஸ்ரீதேசிகன் வேடிக்கையாக ஸாதிக்கிறார் லோகத்தில் ஒருவன் ஒரு ஊருக்குப் போவதற்கு நல்ல நாள் பார்த்திருந்து, அன்றைக்கே புறப்படமுடியாது போனால் அவன் முக்கியமான வஸ்துக்களை வேறொரு இடத்தில் கொண்டு வைக்கிறது வழக்கம். அதற்கு பரஸ்தானம் என்று பெயர். அதுபோல், பரதர் அபேக்ஷித்த காலத்தில் ஸ்ரீராமனுக்குத் திருவயோத்யைக்கு எழுந்தருள முடியாததினால்  ஸ்ரீபாதுகைகளை பரஸ்தானம் பண்ணினார். 

உட்கருத்து  ஒரு ஜீவன், பெருமாளை "நீர் என்னிடத்தில் வரவேண்டும்" என்றாவது, "உம்மிடத்திற்கு என்னைக் கூப்பிட்டுக் கொள்ள வேணு" மென்றாவது மிக வருத்தத்துடன் அபேக்ஷித்தால் ஸ்ரீ பெருமாள் அவனுக்கு எப்பவும் தம் திருவடியை விட்டுப் பிரியாத நல்ல ஆசாரியனைக் கொடுக்கி றார். அவன் அந்த ஆசாரியர்களின் இஷ்டப்படி நடந்து அவர்களுடைய பரிபூர்ணானுக்கிரஹம் பெற்றால், அந்த ஜீவனும் பெருமாளும் ஒருகாலும் பிரியாமல் சேருகிறார்கள். ஸதாசார்யாநுக்கிரஹமில்லாதவன் பெருமாளோடு  சேர்வதில்லை என்று.

ஞாயிறு, 18 நவம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப்ரகாசிகைக் கீர்த்தனைகள்

வெண்பா

ஆழமண்டவும்படரவாமடுவிலோலமிட்ட
வேழமண்டவுக்கராவேசிதைந்து - வீழமண்ட
 சூழமண்டவாழியனைத்தூப்புலார்சேவிப்பர்
சோழமண்ட லந்தனில்வந்து
.

தரு-இராகம்- சங்கராபரணம்- தாளம்- சாப்பு.

பல்லவி

சேவித்தார்  எங்கள்திருவேங்கடநாதாரியர் - சேவித்தார்

அனுபல்லவி

வாவிகூவநிறைந்தகாவிரிவளநாட்டில்

மேவுசோழமண்டலத்தேவர் திருப்பதியை           (சேவி)

சரணங்கள்

திருப்பேர்நகரிலப்பக்     குடத்தானை - அம்பில்
     சேர்ந்தநாகத்தணையாந்  தடத்தானை - மிக

விருப்பமாங்கண்டியூரி   னிடத்தானை -அங்கே
       மிண்டியரசன் சாபந்தீர்   திடத்தானை --யின்ன

மருப்பரவியதஞ்சைமாமணிக்கோயில்வளர்ந்
      திருக்குமெனக்கரசை  யென்றஞ்சையாளியையும் (சேவி)
 

வடகரைப்புள்ளம்பூதங்குடி    கொண்டே வளர்
     வல்வில்லிராமனடி    யிணைகண்டே -- பணிந்

தடைவுடனாதனூர்   தனிற்பண்டே -- படி
  
     யாண்டளக்குமய்யர்க்கு வெகுதொண்டே - செய்து
தடமீதுவந்துகவித்தலத்திற்கண்ணனுக்கே
 யன்பிடுவார்கூடலூர்க்காவிரிப்பெருநீர்வண்ணனைக்கண்டு (சேவி)

மணந்தரும்பொற்றாமரைப் படர்ந்தையே -செழு
    மாமணிசேருந் திருக்    குடந்தையே - மலர்
அணிந்தகோமளவல்லி  மடந்தையே-  வாழு
    மன்பர்க்கேயிவரரு     ளுடந்தையே -- யென்று
தணிந்தேவணங்கியானந்தவெள்ளம்பெருகக்கொண்டு
     பணிந்தாராராவமுதத்தைப்பருகியனுபவித்து      (சேவி)

நந்திபுரவிண்ணகர     நாதனைத் - திரு
     நறையூர்நம்பியாம்வேதப்   பாதனை - யருள்
தந்ததிருச்சேறையின்    மீதனை - யெங்கள்
      தண்சேறைவள்ளலாம்வி   நோதனைப் -- பணிந்
துந்திருவிண்ணகரிலும்பர்கள்தொழவரும்
    அந்தவிண்ணகர்மேயப்பனடியைக்கண்டுஞ்   (சேவி)

கண்ணமங்கையிற்பத்த    ராவியே-- கண்டு
     கண்ணாலாநந்தவாரி    தூவியே - செய்ய
கண்ணன்மகிமையைக்கு     லாவியே - திருக்
     கண்ணங்குடியதனை     மேவியே - நல
மென்னுஞ்சிலையினாலிலங்கைதீயெழச்செற்ற
      அண்ணலுடனேநாகையழகியாரையுங்கண்டு  (சேவி)

திருக்கண்ணபுரத்துறை     கின்றானை -- அங்கே
     சேர்ந்துகருவரைபோல்  நின்றானை - வலம்
பெருக்குந்தொண்டர்வினையை வென்றானை - நல்ல
     பேறாஞ்சிறுபுலியூர  னென்றானை - அந்த
அருண்மாகடலமுதத்தையும்வெள்ளியங்குடியில்
      வருகோலவில்லிராமனையுமனதுட்கொண்டு   (சேவி)

திருவணியழுந்தூரில்     வந்தனை - செய்து
   தெய்வத்துக்கரசை    முகுந்தனை - யின்னந்
திருவிந்தளூரதனைச்    சிந்தனை - கொண்டு
   சேர்ந்து மருவினிய    மைந்தனைப் -- புகழ்
விரவுதலைச்சங்கத்தில்விண்ணோர்நாண்மதியையும்
     பரவியெம்பெருமானைப்படியளந்தோனேயென்று  (சேவி)

நலமேவியதுளவத்   தோளனை --நாளும்
    நான்மறைபரவிய  தாளனை - யென்று
நிலமையாகியகிருபை  யாளனை -- வள
    நேர்வயலாலிமண    வாளனைத் - தமிழ்க்
கலியன்முன்னிலையாகக்காணும்பரிவுகொண்டு
    நலதிருவாலிதிருநகரிதனிலேகண்டு                 (சேவி)

விருத்தம்

புயலாலிணைகளேசொல்லும்பூமேனியவனைவண்டு
செயலாலிகூறுகின்றதிருத்துழாய்மார்பினானை
வயலாலிதனிலேயேத்திவருகவிவாதிசிங்கர்
கயலாலிசையுஞ்செய்நன்னாங்கையில்வந்துபரவினாரே.

தரு - இராகம் -முகாரி - ஆதி.

கண்ணிகள்

நாங்கூர்ப்பதியினில் - மணிமாடக்கோயில்
   நந்தாவிளக்கையுமேத்திப் - புகழ்
வீங்கும்வைகுந்தவிண்ணகரிற்பின்னைசெவ்
     வித்தோள்புணர்ந்தானைப்போற்றி                       (1)

அரிமேயவிண்ணவர்குருமணியென்னா
    ரமுதத்தைவந்தனைநீடித் - தமிழ்
மருவுந்திருத்தேவனார் தொகைமேவிய
    மாதவப்பெருமானைப்பாடி.                                  (2)

சீர்புருஷோத்தமத்தண்ணனைவான்செம்பொன்
    செய்கோயில்வானவர்கோனைத் - தொழு
வார்திருத்தெற்றியம்பலத்திற்செங்கண்
    மாலானவானந்தத்தேனை.                                   (3)

மின்மணிக்கூடத்திற்கடுமழைகாத்த
     வேந்தினைக்காவளம்பாடி - நாகத்
தின்னடுக்கந்தீர்த்தானையெம்மண்ணலைத்
     திருவெள்ளக்குளத்திலேகூடி                                  (4)

பார்த்தன்பள்ளியிற்செங்கண்மாலவனைப்
     பணிந்தருள்பெற்றவிசேஷம் -  மிகுஞ்
சீர்த்தியாங்காழிச்சீராமவிண்ணகர்
     தில்லைத்திருச்சித்ரகூடம்                                      (5)

வந்துவிளங்கியகோவிந்தராஜனை
    மங்களாசாஸனங்கூறி - யங்கே
முந்துபரமாசாரியனாநாத
    முனியென்னும்பிரானருள்வீறி                                (6)

கொண்டுவீரநாராயணபுரத்திற்
     குருகாவலப்பன்பிரானைத் -  தேவ
மண்டலம்போற்றுந்திருமுட்டமேலாதி
    வராகநயினாரென்கோனை                                  (7)

திருப்பதிகளின்மீதிற்சிறந்தவான்சுடரைச்
    சேவைசெய்துமுகந்தாரே - அன்பு
பெருக்கியபேரருளாளரைச்சேவிக்கப்
       பெருமாள்கோயில் வந்தாரே.                            (8)