அடியேனின் பாக்யம் இந்த ஜன்மாவில் தேசிக தர்சன குலத்தில் பிறந்தது. அதிலும் பெரும்பேறு ஸ்வாமி தேசிகன் கைங்கர்யத்தில் மனதுகந்தவர்கள் வம்சத்தில் வந்து அவர்களாலேயே ஸ்ரீ தேசிக கைங்கர்யத்தில் ருசி உண்டாக்கப்பட்டு வளர்ந்தது. இந்த பாக்யங்களின் விளைவாக இப்போது கூடுதல் பாக்யமாக ஸ்வாமி தேசிகன் தவிர தெய்வமில்லை என வாழும் ஸ்ரீ சடகோப தாதாசாரியார், ஸ்ரீ டி.ஸீ. ஸ்ரீநிவாஸன் போன்றோர் பிரியத்துக்குள்ளாகி இருப்பதும், அதனடியாக ஸ்ரீ சடகோப தாதாசாரியார் ஸ்வாமி அடியேனுடன் பல கருத்து(ட்டு)ரை விருந்துகளை பகிர்ந்து கொள்வதும். இதோ இன்று வந்த ஒன்று.
ஸ்வாமி தேசிகனை இவர் எழுத்தின் மூலம் இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பிக்கிறேன்,
ஆரணதேசிகன் அனுபவித்த நம்மத்திகிரித்திருமால்
தாஸன்,
இன்று ஸுதினம், உத்திரம் , ஹஸ்தம், திவ்யதம்பதிகளின் (ஸ்ரீபேரருளாளன் பெருந்தேவிதாயார்) மாததிருநக்ஷத்ரம், ஸ்ரீகூரத்தாழ்வானின்
திருநக்ஷத்ரம் அவரை ஸ்மரித்து வணங்கி அவருகந்த அருளாளனை அனுபவிப்போம்,
ஸ்ரீப்ரதிவாதியங்கரம் அண்ணன் ஸ்வாமி, சொல் ஆகிற
ரத்னங்களால் ஸ்ரீதேசிகனை அலங்கரித்து அனுக்ரஹித்தக்ரந்தம் ஸப்ததிரத்னமாலிகையாகும்,அதில்
ஒரு ச்லோகம், யதீய சரிதம் ஸதாம் ஸுசரித வ்யவஸ்தாபகம், எவருடய சரித்ரம்
ஸத்துக்களுக்கு நன்னடத்தையை வ்யவஸ்தை செய்கிறதோ என, இதிலிருந்து அவருக்கு ஸ்வாமியிடமுள்ள
பக்தியை அறியலாம்,
(ஆயினும் இதை
அஸூயையினால் ஸஹியாமல் சிலர் தனக்கு தேசிகத்வேஷமில்லை
என கூறி அவரடியார்களிடம் நிறையத்ரவ்யத்தை ஸம்பாதித்தும் ,தன்னை ஸ்ரீஅண்ணன் ஸந்ததி
என கூறி ஸப்ததிரத்னமாலிகையை ஸ்ரீஅண்ணன் ஸாதிக்கவில்லை என்றும் கூறுவர். இவர்களை
குறித்தே ஆகும் ராவணானுஸாரிணாம்- ராவணானுஸாரிகள் என பிருதமிட்டதும்,அது
நிற்க,)
ஸ்வாமியின் சரித்ரத்தில் ஸ்வாமியின் தினசர்யை ஒருபாகமாகும். இதை குறித்து
ஸ்ரீமத்வேதாந்தேசிகதிநசர்யா என ஒருஸ்தோத்ரத்தை ஸ்ரீகுமாரவரததேசிகன்
அனுக்ரஹித்துள்ளார். அதில் ஒருதிநத்தில் வகுக்கப்பட்ட பஞ்சகாலத்தில் ஸ்வாமின்
அனுஷ்டானத்தை விளக்குகிறார், இவர் இவைகளை
நேரில் ஸேவித்தவர்,ஆதலால் மிகுந்த ப்ரமாணமாகும், இதில் பஞ்சகாலத்தில்
மூன்றுகாலத்திலும் ஸ்ரீதேவாதிராஜனை
குறிப்பிட்டுள்ளார்.,
1.வந்தே யஜந்தம்
வரதம் ஸதாரம் இஜ்யாகாலத்தில் ஸ்ரீபேரருளாளனுக்கு திருவாரதனம் செய்பவரை நமஸ்கிக்கிறேன் என,
2.ஸாயம்தநம் கர்ம ஸமாப்ய பச்சாத் ஸமேத்ய ச
ஸ்ரீவரதாஹ்வயஸ்ய. ஸஹாந்தரங்கைஃ குலதைவதஸ்ய ஸமீபமாராத் ப்ரணதம் ஸ்மராமி,.
ஸாயம் ஸந்த்யையை
அனுஷ்டித்து குலதைவதமான ஸ்ரீவரதனை ஸேவிப்பவரை ஸ்மரிக்கிறேன் என,
3,யோககாலத்தில்
ஹ்ருத்புண்டரீகே வரதம் ஸதாரம் நிவேச்ய தத்பாதஸரோஜயுக்மே,
ஆபத்யசித்தம் ஸுஸுகம சயாநம் ஆராதயே தேசிகமஸ்மதீயம்.,
ஹ்ருதயகமலத்தில் பிராட்டியுடன் ஸ்ரீவரதனை வைத்து அவன்திருவடித்தாமரைகளில், மனதை வைத்து
ஸுகமாய் யோகத்தை அனுஷ்டிக்கும் எனது ஆசார்யனை ஆராதிக்கிறேன் என,
இதில் ஸாயம்தந ச்லோகத்தின்
அடுத்த ச்லோகம்.
ஆசாஸ்ய சாஸ்மை பஹுமங்களானி தத்தத்ப்ரபந்தைஸ்ச ததீயபங்திம்.
ஸ்துத்வைகதாநம் ப்ரதிக்ருஹ்யதீர்தப்ரஸாதமேநம் க்ருதக்ருத்யமீடே.,
பல்லாண்டு முதலியைகளால் மங்களாசாஸனம் செய்து ப்ரபந்தங்களால்
ஸ்தோத்ரம் செய்து தீர்தப்ரஸாதாதிகளை ஸ்வீகரித்து க்ருதக்ருத்யரான ஸ்வாமியை
ஸேவிக்கிறேன், இங்கு ஸாவாமியை க்ருதக்ருத்யர் என அனுபவிக்கிறார், இதின்
விசேஷத்தை அனுபவிப்போம்,
ஸ்வாமி ஸ்ரீமத்ஸாரத்தில்
க்ருதக்ருத்யாதிகாரத்தின் ஸங்க்ரஹமான பாசுரம் வருமாறு-
மன்னவர் விண்ணவர் வானோரிறையொன்றும் வான்கருத்தோர்
அன்னவர் வேள்வியனைத்துமுடித்தனரன்புடையார்க்கு
என்னவரந்தரவென்று நம்மத்திகிரித்திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம்முக்கியரே.
இங்கு இஞ்சிமேடு ஸ்ரீமதழகியசிங்கின் வ்யாக்யானம் மிகவும்
ரஸநீயம்.
“தன்னுடைய உஜ்ஜீவனார்த்தமாக ஸஹஜஸௌஹார்தம் முதலாக
மஹாப்ரயாசத்தை வஹித்த ஹஸ்திகிரீசனிடத்தில்
ந்யஸ்தபரர்கள் ஸர்வோத்க்ருஷ்டரான க்ருதக்ருத்யர்கள்
என்று இவ்வதிகாரார்தத்தை ஒரு பாட்டாலே ஸங்க்ரஹிக்கிறார்.,
அன்புடையார்க்கு- ஸ்வவிஷயத்தில்
ஸ்நேஹமுடையார்க்கு,
(அன்பு- ஸ்நேஹம், )என்ன வரம் தரவென்று-அனுபந்திபர்யந்தம்
மோக்ஷத்தை கொடுத்தோம், இன்னும் என்ன வரம் தரக்கடவோமென்று
த்ருப்தியில்லாதவராய், நம்மத்திகிரித்திருமால்-நமக்கு ஸமீபத்தி்ல உள்ளபடியால்
நமக்குச்சொந்தமான,அத்திகிரிமலையில் அவதரித்த,இதனால் ஆச்ரயணஸௌலப்யம் விளங்குகிறது,
திருமால்-நமக்கு புருஷகாரத்தை செய்கிற லக்ஷ்மியிடத்தில்
வ்யாமோஹத்தையுடையவனான பேரருளாளன், (மால்-வ்யாமோஹம்.) இதனால்
புருஷகாரம் தவிர்க்கமுடியாதது என புலப்படுகிறது,” (யஸ்யா வீக்ஷ்யமுகம் ததிங்கிதபராதீனன் என ஆழ்வானின் அனுபவம் )
ந்யாசதசகம் அடைக்கப்பத்து முதலிய க்ரந்தங்கள் மூலமாக ஸ்வாமி
தேசிகன் ஆத்மபரத்தை ஸ்ரீபேரருளாளனிடம்
ஸமர்ப்பித்தவர் என அறியலாம். நமக்குச்சொந்தம் என்பது எப்போது, பரத்தை ஸ்வீகரிப்பதால் ஸ்ரீபேரருளாளனின்
சொத்து தான் என ஸ்வாமியின் திருவுள்ளம்.
இப்படி செய்யவேண்டியதை எல்லாம் செய்தபடியால் இவன்
க்ருக்ருத்யனாகிறான் என்பதால் இனி இவனுக்கு நித்யநைமித்திககர்மாக்களும்
செய்யவேண்டியது இல்லையே என கேள்வி எழும், அதின் பதிலை மேல் ச்லோகமாக ஸாதிக்கிறார்,
பகவதி ஹரௌ பாரம் ,,,,,,,,,,,,,,,,,, விபோராஞ்ஞாஸேதுர்புதைரனுபால்யதே
நித்யநைமித்திக கர்மாக்கள் எம்பெருமானின் ஆஞ்ஞையானபடியால், அதை அனுஷ்டிக்காவிடில் பாபம் வரும், ஆனபடியால் ப்ரபந்நன்
நித்யகர்மானுஷ்டானத்தை ஆஞ்ஞையை பரிபாலனம் செய்யும் விதமாகவே செய்யவேணும்,
மோக்ஷார்தம் , மற்றும் வேறுப்ரயோஜனத்தை
உத்தேசித்தும்
தேஹயாத்ரையை உத்தேசித்தும் இனி செய்யவேண்டியது ஒன்றுமில்லை
என்பதால் மாத்ரம் அவன் க்ருதக்ருத்யனாகிறான் என ஸித்தாந்தம்.
இதே பொருளில் அம்ருதரஞ்சனியில் ஒரு பாசுரத்தில்
ஒன்றே புகலென்று உண்ர்ந்தவர் காட்டத்திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம்மத்திகிரித்திருமால்.
இன்றே இசையில்
இனையடி சேர்ப்பர் இனிப்பிறவோம்
நன்றே வருவதெலாம் நமக்குப்பரமொன்றிலதே.
இனி
நாம் உஜ்ஜீவிக்க செய்யவேண்டியது ஒன்றுமில்லை, க்ருதக்ருத்யர்கள்
என,
ஆக இவ்விரண்டு இடத்திலும் மோக்ஷார்தம் செய்யவேண்டியதை-
பரந்யாசத்தை செய்தபடியால் உஜ்ஜீவிக்க இனி செய்யவேண்டியது ஒன்றுமில்லை, ஆதலால் க்ருதக்ருத்யர்கள்
என,இவ்விரண்டு இடத்திலும் ஒரேவிதமாக
நம்மத்திகிரித்திருமால். என
ஸாதிக்கிறார்,க்ருதக்ருத்யனாகிலும் நித்யநைமித்தக கர்மானுஷ்டனம் ஆவச்யகம்
என்பதால் ஸ்வாமிதேசிகன் இதை ப்ரதிதினமும் அனுஷ்டித்துவந்தார் என ஸாதிக்கும் ஸமயத்தில் க்ருதக்ருத்யமீடே என ப்ரயோகித்தார் என்பதாக தோன்றுகிறது.
ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீபேரருளாளனிடத்தில் அளவு கடந்த அன்பு
-ஸ்நேஹம்.அவர் அனுக்ரஹித்த அநேகக்ரந்தத்திலும் ஏதோ ஒரு வ்யாஜம் கொண்டு
நம்மத்திகிரித்திருமாலை ஸ்மரித்தே ஸத்தையை அடைவார்,ஆயினும் ஸ்ரீபேரருளாளனின்
ஸ்தோத்ரத்தில் ஸ்ரீவரதராஜபஞ்சாசத்தில்
திருமேனி வர்ணனை செய்யவில்லை. காரணம்
நம் கூரத்தாழ்வான் எம்பெருமானின்
திருமேனியை அனுபவித்து ஸ்ரீவரதராஜஸ்தவத்தில் வர்ணித்தபடியால்
எனலாம். ஆயினும் ஸ்ரீகூரத்தாழ்வான் ஹேதீனாமதிபதயஸ்ஸதா
கிமேதான் சோபார்தம் வரத பிபர்ஷி ஹர்ஷதோ வா, வரத, சங்க சக்ராதிகளை அழகுக்காக
தரிக்கிறாயோ என கேள்வியாக ஸாதித்தார், ஸ்வாமி தேசிகன் ஸாதிப்பது
அணி அத்திகிரியே,
அத்திகிரி- அந்த சக்ரம், அணியே- பூஷணமே என அறுதியிட்டு கூறுகிறார்,காரணம் நம்மை காப்பதின் பொருட்டு.ஆனபடியாலேயே எம்பெருமானும் ஸத்யம் விதாதும் நிஜப்ருத்யபாஷிதம் கணக்கில் அபராதிகளான நம்மிடம் ஆயுதத்தை ப்ரயோகிக்கவில்லை , மேலும் பல
விஷயங்களில் ஆழ்வானின் ஸ்ரீஸூக்தியை ப்ரமாணமாக காண்பித்தவர் ஸ்வாமி தேசிகன்.இவ்விதம்
ஆசார்யர்களால் கொண்டாடப்பட்ட கருணைக்கடல் நம்முடைய மனதில் என்றும் குடிகொள்ள கரீச
பச்யேம பரச்சதம் ஸமாஃ என அர்திதார்தபரிதாநதீக்ஷிதம், -வேண்டித்தெல்லாம் தரும்
வள்ளலை ப்ரார்த்திப்போம்,
இத்திவ்யதம்பதிகள் அனுரூபதம்பதிகள் ,த்வம் லஜ்ஜஸே கதய கோயமுதாரபாவஃ -அஞ்சலி செய்தவனுக்கு மோக்ஷத்தை கொடுத்தும் த்ருப்தியில்லாமல் வெட்கப்படுகிறாய் என பிராட்டியை பட்டர் அனுபவிக்க
என்ன வரம்
தரவென்று இன்னும் என்ன வரம் தரக்கடவோமென்று
த்ருப்தியில்லாதவராய் நம்மத்திகிரித்திருமால் என ஸ்வாமியின் அனுபவம்,இருவரையும் இங்கு தெப்பத்தில் ஸேவிக்கலாம்,