சனி, 17 பிப்ரவரி, 2007

தினம் ஒரு பாடல்

தேசிக நூற்றந்தாதி
2. மலர்மகள்கோன் தாளிணையை மன்னியிருப்பார்கள்
சிலர் அவரால் செய்கருமம் என்னாம்? -- மலம் அறுசீர்
வேதாந்த தேசிகனை வேறுஆகாது ஏத்துவார்
பாதாம்புயம் நமக்குப் பற்று.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2007

தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்

அச்ரத்ததாநமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம்
தேவ: ப்ரமாணமிஹ ரங்கபதிஸ் ததாத்வே
தஸ்யைவ தேவி பதபங்கஜயோர் யதா தத்வம்

ஸ்ரீமத் நம்மாண்டவன் :
ஏ பாதுகையே! உன்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டுமென்று எனக்கு ஆவலில்லை. நீ வலுவிலே பண்ணச் சொல்கிறாய். நீ பெருமாள் திருவடிக்கு எவ்விதமாயிருக்கிறாயோ, அதை அந்த ரங்கநாதன் எனக்குச் சொல்ல வேண்டும். பாதுகையின் குணம் போட்டுக்கொண்டவர்கள் சொன்னால்தானே பிறருக்குத் தெரியும். பிராட்டி (தாயார்) பெருமாள் ஸ்ரீபாஷ்யகாரர் முதலானவர் களை ஸ்தோத்திரம் பண்ணினேன். அந்த மாதிரி ஆழ்வார் ஸ்தோத்திரம் என்று ஒன்றும் நான் பண்ண வில்லை. எனக்கும் இன்னும் எல்லோருக்கும் க்ஷேமத்திற்காக ஆழ்வார் பெருமாள் விஷயத்தில் இருக்கிற இருப்பை எனக்கு எவ்விதமாகச் சொல்லத் தெரியும். ஸ்ரீரங்கநாதன்தான் தோன்றப்பண்ண வேண்டும்.
"யதா த்வாம்"( ywa Tva——
என்று பாடமிருந்தால் ஸ்வரஸமாயிருக்கும் என்று தோன்றுகிறது. "ததாத்வே" சிரத்தையில்லாதவனை நியமிக்கும் விஷயத்தில், ஸ்ரீரங்கநாதனானவர் ஸாக்ஷியாகிறார். எப்படியென்னில்: பகவான், "தஸ்யைவ" தன்னுடைய திருவடித் தாமரைகளில், "த்வாம்" சிரத்தையில்லாத உன்னை, "ததா நியோஜயஸி" எப்படி நியமிக்கிறாரோ, அப்படியே நீயும் என்னை நியமிக்கிறாய் என்று கீழோடு சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பகவான், சிரத்தையில்லாத உன்னைத் தன் திருவடிகளில் நியோஜநம் பண்ணுகிறாப்போலே (சேர்த்து வைக்கிறாப்போலே) நீயும் சிரத்தையில்லாத என்னை உன் ஸ்தோத்திரத்தில் நியமிக்கிறாய் என்று கருத்து.
A.ல.ந. : மணிபாதுகையே! தேவி! உன்னை ஸ்தோத்திரம் பண்ண வேண்டும் என்ற சிரத்தை (முயற்சி) சிறிதும் இல்லாதிருந்த எனக்கு, நீ கட்டளையிடுகிறாய் -- ஸ்தோத்திரம் இயற்ற. உன்னை அணிந்துகொண்டிருக்கும் அந்த அரங்கன்தான், எனக்கு உன்னுடைய விசேஷங்களைப் பற்றித் தெரிவித்து அருள வேண்டும். (The user knows BEST)

"விருப்பப்படி"

இப்போது நள்ளிரவு மணி 2.21. இப்போதுதான் சென்னையிலிருந்து வந்தேன். வரும் வழியில் புதுக்கோட்டையில் இறங்கி சர்மா சொலுஷன்ஸ் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்குச் சென்று அவர்கள் வெளியிடப் போகும் "விருப்பப்படி" எழுத்துரு மாற்றியை நேரடி செயல்விளக்கம் அறிந்து வந்தேன். பிரமிப்பு அடங்கவில்லை. எனவே அதே பிரமிப்புடன், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில் இதை எழுதுகிறேன். ஒரு வரியில் சொல்வதானால், தமிழில் கணிணி இனி எல்லாருக்கும் உரித்துக்கொடுத்த வாழைப்பழத்தைச் சாப்பிடுவதுபோல் என்பேன். 105 font familiesக்குள் எதிலிருந்து எதற்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். விசைப்பலகை நமக்கு எது பிரியமோ அதைப்பயன் படுத்தலாம். பிழைதிருத்தியோ ஒரு அற்புதம். அண்பு என நீங்கள் அடித்தாலும், அடித்துமுடித்து அடுத்த நொடியே அது அன்பு என மாறி அதன் பின்னேதன் நீங்கள் மேற்கொண்டு தொடரமுடியும். முழுவதும் சொல்வது நன்றாக இருக்காது. பிப் 28 வரை பொறுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு அருமையான மென்பொருள் நம் பயன்பாட்டுக்கு கிடைக்கும்.

மென்பொருள்தான் இப்படியென்றால், அதை உருவாக்கிக்கொண்டிருக்கும் திரு விஜய், திரு இப்ரஹிம் இருவரைப் பற்றி எப்படிச் சொல்வது என்றே புரியாமல் திகைக்கின்றேன்.GDநாயுடுவைப் பற்றி நிறையப் படித்துள்ளோம். அப்படி 10 நாயுடுக்கள் இன்று புதுக்கோட்டை சர்மாவிலே. திரு சுஜாதா போன்றோரெல்லாம் நீண்ட நாள் ஏங்கிகொண்டிருந்த ஒரு standardised Tamil keyboard and fonts utilityஉருவாகிவிட்டது. தமிழுக்கென்று எத்தனை எழுத்துருக்கள்?எத்தனை விசைப்பலகைகள்? எது சரியானது என்ற விவாதம் எப்போது முடியும்? தேவையில்லை உங்களுக்கு எந்த எழுத்துரு பிடிக்கிறதோ அதை உங்களுக்கு எந்த விசைப்பலகை பழக்கமோ அதில் அடித்துக்கொள்ளுங்கள் என்பது "விருப்பப்படி" வரவேற்கத் தயாராவோம்

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2007

தினமும் ஒரு பாதுகாஸஹஸ்ரம்

விஜ்ஞாபயாமி கிமபி ப்ரதிபந்தநபீதி:
ப்ராகேவ ரங்கபதிவிப்ரமபாதுகே த்வாம் I

வ்யங்க்தும் க்ஷமாஸ் ஸதஸதீ விகதாப்யஸூயா:

ஸந்த: ஸ்ப்ருசந்து ஸதயை: ஹ்ருதயை: ஸ்துதிம் தே II


ஸ்ரீமத் நம்மாண்டவன் : ஏ பாதுகையே! முன்னதாக விஜ்ஞாபனம் பண்ணுகிறேன். பயமாயிருக்கிறது. இது நல்லது இது பொல்லாதது என்று கண்டுபிடிக்கும்படியான ஸாமர்த்தியமுள்ளவர்களும் பொறாமையில்லாதவர்களுமான பெரியோர்கள் என்னிடத்தில் தயை பண்ணி நான் செய்கின்ற உன்னுடைய ஸ்தோத்திரத்தைக் கேட்க வேண்டும்.

A. லந: அரங்கனின் பாதுகே! உன்னை ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பிக்கும் முன்பே, என் பயத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பொறாமை அற்றவர்களும், நல்லவர்களும், உன்னைப் பற்றின இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்க வேண்டும்.