'
அடியார்க் கென்னை
யாட்படுத்த விமலன் '- அடியரான லோகஸாரங்கர் இவருக்கு ஆட்பட்டு இவரை தோளில் தூக்கிக்
கொண்டு சென்றிருக்க, அவருக்கு இவரை ஆட்படுத்தினதாகப் பாடுவது எப்படி,
பொருந்துமென்று சங்கை வரலாம். இவ்விஷயத்தை. ஊன்றி ஆராய வேண்டும்..நடந்த வ்ருத்தாந்தத்திற்கு
இந்த வார்த்தை முழுவதும் ரஸமாகப் பொருந்தும்படி பொருள் கொள்ளவேண்டும். ஸ்வாமியின் ஆஜ்ஞை தனக்கு எவ்வளவு அப்ரியமாயிருந்தாலும், இறாய்க்காமல் அதற்கு இணங்குவது தான் ஆட்பட்ட தாஸனுக்கு
முக்ய லக்ஷணம். ‘என் தோள் மேலேறு' என்றால், அது தனக்கு அத்யந்தம் அப்ரியமாயினும்,
அந்தச் சொல்லைக் கேட்கவேண்டும். தன்னிஷ்டம் என்பதை அடி யோடு தள்ளி, ஸ்வாமி இஷ்டத்தையே நிறைவேற்ற வேண்டும். ராமதாஸரான பரதர், கைகேயி ‘ராஜந்' என்று சொல்லுகையில் மிகவும் புண்பட்டார். அது அவருக்கு அருந் து தம். दासभूतोभविष्यामि
(தாஸ பூதோபவிஷ்யாமி) [' நான் பூர்ண ஸந்தோஷத்தோடு ராமனுக்குத் தாஸனாகப் போகிறேன் ']
என்று தாயாரிடம் சபதம் செய்தார் ;
அப்படியே தாஸரானார். 'ராஜ்யத்தை நீ ஆளத்தான் வேண்டும்’ என்று இவரை ராமன் திருப்பி விடுகையில்,
அவருக்குத் தாஸரானபடியால் அதற்கு உடன்பட்டார். ராமனுக்கு ஆட்பட்ட தாஸராக இருந்ததேதான் அவர் ராஜ்யம்
ஆண்டதற்குக் காரணம். திருப்பா ணாழ்வார் ஒருக்காலும் ஸ்ரீரங்கத்தை மிதிக்கத் -
துணியாதவர்.
ஸ்ரீரங்கத்வீபத்தை
மிதிக்க ஸம்மதியாதவரும்,
அம் மண்ணை மிதிக்க அஞ்சியவருமான அவர்,
விப்ரரான முனியின் தோளை மிதிக்க
ஸம்மதிப்பரோ? அவருக்குத் தாம் ஆட்பட்ட தாஸ ரானதால் தான்,
அவர் சொல்வது இவருக்குக் - கடோரமாயிருந்தும், அதற்கு உடன்பட்டார். அவரிடத்தில் தாஸ்யகாஷ்டையைப் பற்றியது
தான் அவர் அநுமதிப்படி உலகமறிய அவர் தோளிலே. 'அரங்கம் சென்றதற்குக் காரணம். 'உலகறிய....... உலோக சாரங்கமாமுனி தோள்தனிலே வந்து’ என்பது ப்ரபந்தஸாரம். அரங்கத்தில் ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்த விசித்ரக் காட்சி.
2) ப்ருகு மஹர்ஷியின் அடிபதிந்தது
திருமார்பில். ஸ்ரீவத்ஸரான
இவ்வாழ்வார் நித்யஸ்தாநத்தில் ப்ருகு வென்னு மடியார் திருவடியை இவர் தாங்கி அவ்வடியாருக்காட்பட்டவர்.
3) தொண்டரடிப்
பொடியாழ்வாருக்கு அடுத்த அவதாரம் இவ்வாழ்வார். அரங்கனைத்தவிர ‘மற்றுமோர் தெய்வமுண்டோ ' என்று கேட்டவர் அரங்கன் தொண்டரே உத்தம தெய்வமென்று துணிந்து
அவர் அடிப்பொடியானார். பக்தாங்க்ரி ரேணுவுக்கு அடுத்த அவதாரமான இவர், தாமும் அடியார்க் காட்பட்டு, தொண்டரடிப்பொடி யாகுமாசையை முதற் பாசுரம் முதலடியிலேயே காட்டுகிறார்.
4) அடியார்க்குத் தன்னை யாட்படுத்துவதில் ருசியுள்ள அரங்கனாகிய பித்தன் வரித்து
க்ருபையால் பாகவத தாஸனாக்கினாரென்பதை நினைத்து விமலனென்று அவரைப் புகழ்கிறார். தனக்குத் தாஸராயிருப்பவர் பிறருக்கு ஸ்வாமியாவதை சாமாந்ய
ப்ரபுக்கள். ஸஹியார். இவர் விலக்ஷணமான ப்ரபு வென்று ஆச்சரியப்படுகிறார்.
5) 'மலம்'
என்பது சம்சயம். அச்யுதனை ஸேவிப்பவர்க்கு
மோக்ஷம் கிடைத்தாலும் கிடைக்கும், கிடையாமற்போனாலும் போகும். அச்யுதன் பக்தர்களைப் பரிசர்யை செய்வதில் இன் புறுபவர்க்கு அதில் சம்சயமே கிடையாது. அடியார்க்கு ஆட்படுத்துவதால் தனக்கு மோக்ஷம்
கிடைப்பதில் சம்சயத்தை நீக்குகிறார் என்று ஸூசகம்.
“விண்ணவர் கோன்” :- ' காண்பனவும் உரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்' என்றும், 'கோவலனும் கோமானுமான வந்நாள் குரவைபுணர் கோவியர் தம்
குறிப்பே கொண்டு சேவலுடன் பிரியாத பேடை போல் சேர்ந்து '
என்றும் முநிவாஹந போகப் பாசுரங்களின்படி,
கண்ணனிடமே இவ்வாழ்வாருக்குக்
காதல் மிகுதி. கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெயுண்ட
வாயன் இவருள்ளத்தைக் கவர்ந்ததால் இவர் கண்களும் மனமும் அங்கு லயித்து,
இவருக்கு பூமவித்யையிற் கூறிய மோக்ஷலயம்
கிடைத்தது. விண்ணவர் கோனும் இவருக்குக் கோவலக்கோன் என்று அநுபவம். அண்டர் கோன் என்று முடிவிலும் ‘கோன்’ என்றே அநுபவம்.
விரையார் பொழில் வேங்கடவன் :- (1) ஆதிமூர்த்தி வானின்றிழிந்து மத்தியில் திருமலையில் அவதரித்து,
அரங்கத்தில் பள்ளிகொண்டருளினார். சந்தி ரஸத்தில் இவ்வாழ்வார்
முழுகுகிறார். வாநரருக்கும் நரருக்கும் எப்படி சந்தி சமாகமம் நேர்ந்தது என்று பிராட்டி ஆச்சரியப்பட்டாள். அரங்கத்தரவணையான் கர்ப்ப
க்ருஹத்தில் ஸ்வப்நத்திலும் நேரக்கூடாததான ஒரு சந்தி
இவருக்கு நேர்ந்ததில் இவருக்கு விஸ்மயம். ஸ்வப்நத்தை விழிப்புக்கும் தூக்கத்திற்கும் நடுவிலுள்ள ஓர் சந்தி, சந்த்யம்
என்பர். சந்தியில் ஏற்படுவது 'சந்த்யம்’ . ஸ்வப்நத்தில் சேராததெல்லாம் சேர்வது போல் புலப்படும். தூக்கத்தில் ப்ரஹ்மத்திற்கும் ஜீவனுக்கும் ஓர் நெருங்கிய ஸம்ச்லேஷம் சந்தி). மனம் அஹங்காரம் முதலியன ஜீவனைத் தொடாமல் , ப்ரஹ்மத்தினிடம்
ஜீவன் தாய்மார்பில் ப்ரஜை போல் வாத்ஸல்யத்தால் அணைக்கப்பட்டு,
மெய்ம்மறந்து, சரமமற்று சுகப்படும் சமயம். ப்ரஹ்மத்தோடு நேரும்
அந்த சந்தியில் ஜாதிபேதம், துஷ்டர் ஸாது முதலிய பேத மொன்றுமில்லை. ப்ரஹ்மத்தால்
கெட்டியாய் அணைக்கப்பட்டு, மெய் மறந்திருக்கும் தூக்க சமயத்தில் 'திருடன் திருடனல்ல;' 'பாபி பாபியல்ல ; சண்டாளன் சண்டாளனல்ல ' என்று உபநிஷத்து கூறுகிறது. பெருமாள் தன்னைத் தருவித்துத்
தனக்கு அவரோடு ஏற்படுத்திய சந்தி ரசத்தில் ஆச்சர்யப்படும் இவ்வாழ்வார் திரும்பவும்
திரும்பவும் பலவாறாக சந்தி ரசத்தில் ஈடுபடுகிறார். வேங்கடம் ஓர் சந்தி ஸ்தானம். 'வானவர்கள்
சந்தி செய்ய நின்றான்' என்று அங்கு மண்ணோரும் விண்ணோரும் வந்து ஒக்கத் தொழுது
சந்தி செய்யுமிடம் ; அரங்கன் ஆடையும் அந்தி . போல் நிறம் ' - அந்தி ஓர் சந்தி. “உந்தி” நடு மேனி யிலிருந்து மேலும் கீழும் சந்தி செய்கிறது. 'तत्रारूढैर् मेहति मनुजैः स्वर्गिभिश्वावती सत्वोन्मेषात् व्यपगतपिंथस्तारतम्यादिभिः । (தத்ராரூடைர்மஹதி மநுஜை: ஸ்வர்கிபிஸ்சாவ தீர்ணை: ஸத்வோமேஷாது வ்யபகதமிதஸ் தாரதம்யாதிபேதை :) என்று ஹம்ஸ சந்தேசத்தில் வடவேங்கடமாமலையில் வானவர் இறங்கி வந்தும்,
மண்ணோர் ஏறிவந்தும் சாந்தி செய்து சத்வம் தலையெடுத்துத் தாரதம்ய மன்றியில் தொழுவது வர்ணிக்கப்பட்டது.
2) பெருமாள் திருவடி வாரத்தில் நிற்கையில் “तं ब्रह्मगन्धःप्रविशति” (தம் ப்ரம்மகந்த : ப்ரவிசதி (கௌஷீதகி
உபநிஷத்து) என்றது போல ப்ரஹ்ம பரிமளம் வீசி இவருள் புகுகிறது. இங்கே திருக்கமலபாதத்தின் அநுபவம்.
' वेलातीतश्रुति परिमळं पादाम्भोजम्” (வேலாதீதச்ருதி பரிமளம் பாதாம்போஜம்)(பகவத்தியான
ஸோபாநம்) என்றதுபோல ஸர்வ கந்தனுடைய கந்தம் அலைத்து வீசுகிற அநுபவம். பரம பதத்தி லிருந்த ப்ரஹ்மகந்தம் அவதரிக்கும் பெருமாளுடன் கூட வேங்கடப் பொழில்களில் அமர்ந்து “கடியார் பொழிலரங்கத்தில்” அமர்ந்தது. ஸர்வ கந்தனுடைய திருமேனியி
லிருந்தும் ப்ரஹ்ம கந்தம் வீசுகிறது. ''துளபவிரையார் கமழ் நீண்முடி எம் ஐயனார் '' என்று திருமுடி வாசனை அ நு ப வ ம்.
3) वहते वासनां मौळिबन्धे (வஹதே வாஸா நாம் மௌளிபந்தே) யோகத்தில் சுபமான வாசனைகள் முக்யம்)
4) இவருக்கு அடுத்த அவதாரமான கலியன், 'விரையார் திருவேங்கடவா' என்று பாடியதும் இதையொத்தது. “வேயேய் பூம்பொழில் - சூழ்.'