ஞாயிறு, 2 டிசம்பர், 2007

இன்று முதல்....இன்றுமுதல் பக்கத்திலே இருக்கிற labels போய் உங்களுக்கு விருப்ப மானதைப் படிக்க வேண்டுகின்றேன்.அனேகமாக ஒரு நாளில் ஓரிரு மணி அளவிலேயே கரண்ட் இருப்பதால், தினமும் update செய்ய முடியவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

திருப்பாதுகமாலை

5.பதிற்பயணப்பத்ததி

121.   அரியி ரண்டடி தம்மிலு மண்டினோர்க்
           கருணி றைந்திறை யாற்றல லர்ந்தசீர்த்
           திருவி ரண்டுதி ரண்டதெ னத்திகழ்
           பரிவு மன்னிரு பாதுக மெண்ணுவாம்.

122.    சரணம்புகு மனுசன்னிர வவனத்தொரு வனமே
            பெரிதென்றக லலகில்லிறை நிறைதாளிணை யணவா
            தொருதாயென வுருகிப்புர வுயிர்நோக்கிட வருமத்
            திரிவையக லருளினிறை யரிபாதுகை தெரிவன்.

123.    பிழையய்யிரு தலையன்னிலை குலையுந்திரு விதயத்
            தெழுமய்யன துரைமெய்யுற விரைதண்டக நடையே
            பழியஞ்சிய பரதன்புரி விரதத்திறை பிறழா
            தொழுகும்பரி தரநீபுரி வரவோங்கினை நடையில்.

124.     இணையில்லரி யிறையங்கிரி விரியும்பரி நிறைவிற்
             பணையன்னவ னிடுமேவலி னிலையேபணி யதுவென்
             றிணையத்திற பரதந்திர விரதந்தெரி நிலையில்
            திணியப்பணி துணிசீதையை மணிபாதுகை !மிகுவாய்.

125.    திருமன்னுர னிருவர்கணை விழையுந்நில மகளா
            ருரமன்னவ னுரையில்விழ வுறுமன்னடி நிலையே !
            வருநின்னிறை மனனில்லது தருநின்னரு ணிகழச்
            சரணத்திரு வணவப்பெறு சதிரன்றவன் பெறுவன்.

126.    தெளிமந்திர கலசப்பனி யலசாநல வமலத்
            தொளிசெய்திட லறுமத்திற வொளிமின்னெடு முடிகொண்
            டளிவிஞ்சிட மணிபாதுனை யரியேவலி னடைகொள்
            ளொளிநல்லா சகிலங்கொள நடைகொண்டன னனுசன்.

127.    மறையாதிய னிலையங்கிரி மலரங்குறு பிரிவிற்
           பொறைமாநல நிலைநோக்கிய பொறைநின் றுயர் தவமே
           நிறைநீபத நிலை ! சீதையு மரசும்நெடு சிறையும்
           முறையேகொள வெதுதானும துறவிற்செய லரிதே?

128.  உடனாடிய பரதன்பணி முடியேறிய பதமாண்
          பொடுதாவிய கடகுஞ்சர முயர்மஞ்சணி யணைமீ
          திடுமாசன மணிபாதுன திருபாரிச மணிமின்
          னிடுகூந்தலி னெடுசாமரை யென வீசினை யொளியே.

129.  விளையத்துணை முதுநல்வினை யிணைமத்தக மிசையே
          றொளிகொள்ளணி மணிபாதுகை ! யுனையேந்திய வளவில்
          வளநன்மண ரகுநாயக வயமாமத வமுதின்
          வெனநின்மல மலிசாந்தென வெழில்பூசின ணிலையே.

130.   தெரிதற்செய றருநற்சர விருதில்வர வொருநீ
           யரியங்கிரி நிலை!யாசைக ணிறைகோசல வமலப்
           புரமங்கையர் நயனாம்புத முமிழும்மழை யொழியும்
           பரியொன்றளி யொளியோங்கிய படிபூத்தனை நொடியில்.