ஞாயிறு, 21 ஜனவரி, 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் வைபவப் ப்ரகாசிகைக் கீர்த்தனை

தரு – இராகம் – பைரவி – தாளம் --ஆதி.
பல்லவி
எம்பெருமானார் சம்பிரதாயந்தனை
இன்னதென்றுரை செய்வாய்மனனே .
அனுபல்லவி
அம்புவிமீதினி லணிபெரும்பூதுரி
லவதரித்தருளிமா தவனடியிணை கண்ட (எம்)
சரணங்கள்
யாதவப்ரகாசரிடஞ் சாஸ்திரங்கள்படித்தாரே
அறிந்துபெரியநம்பி திருவடியைப்பிடித்தாரே
மேதினிமேலாளவந்தார் சம்பிரதாயந்தடித்தாரே
விதங்களெல்லாமறிந்து மாயிகளையடித்தாரே.
சாதகமாகவே திருக்கோட்டியூர்நம்பி
சந்நிதிதனிற்சென்று காத்துமிகவுநம்பி
நீதிசரமசுலோகந் திருமந்திரம்விளம்பி
நிலைகள்சொல்ல அறிந்து நின்றாரின்னந்திரும்பி (எம்)
திருவரங்கப்பெருமாளரையர் சந்நிதியடுத்தாரே
திருவாய்மொழியையோதித்தோத்ராதிகளையெடுத்தாரே
திருமலையாண்டான் சந்நிதிதன்னிலன்புதொடுத்தாரே
திருவாய்மொழிக்குப்பொருள் விண்டுகவலைவிடுத்தாரே
திருமலைநம்பிசந் நிதியில் இராமாயணம்
தெளிந்துவரவரவே சாந்தமீறவுங்குணம்
திருமலைகோயில்பெரு மாள்கோயினாராயணம்
திவ்யதெசங்களெல்லாந் திருத்தினாரேபூஷணம் (எம்)
திக்குவிசயஞ்செலுத்திச் செயவிருதுமீறினாரே
சிறந்துதான்சரஸ்வதி பீடமதிலேயேறினாரே
மிக்கவேபோதாயநவி ருத்தியைக்கண்டுகூறினாரே
விளங்கும் ஸ்ரீபாஷ்யமதை விரிவுசெய்து தேறினாரே
தக்கசரஸ்வதியுஞ் சிரசில்வகித்துநல்ல
தகுமான கிரந்தமென்ற பாஷியமதுவேசெல்ல
இக்குவலயங்களிற் சகலகலையும்வல்ல
ரிவரேமீண்டுங்கோயி லேறவெழுந்தார்சொல்ல.
இதுவுமது விருத்தம்
கோயிலதிலெழுந்தருளித்தமதுசீடர்
கூரத்தாழ்வான்முதலியாண்டான்கல்வி
ஆயுமறிவேமிகுந்த நடாதூராழ்வா
னருளாளப்பெருமா ளெம்பெருமானாராம்
சே யெனவேஞானபுத்ரராகிவந்த
திருக்குருகைப்பிரான்புள்ளான்கிடாம்பியாச்சான்
ஆயவர்க்குப்பாஷியமுமாழ்வாராய்ந்த
அருங்கலைஇன்ரகசியமுமளித்திட்டாரே.
இதுவுமது விருத்தம்
அதிகபத்தியாயெதிகளேழுநூற்றா
ராலேசஞ் சேவிதராயவனியெல்லாம்
துதிசெய்யவெழுபத்துநாலுபீடந்
துலங்கவதிற்சம்மதராயிருந்துஞான
நிதியென்றேபரமவைதிக ரநேகர்
நிலைகொண்டுதுதித்திடவேயரங்கமீதி
லெதிசார்வபூமரெனவனுசந்திக்க
இருந்திட்டார்தரிசனமும்புரிந்திட்டாரே.


அடுத்த கீர்த்தனை “தரிசனபரம்பரைகளின்னந்
தெரியச்சொல்கிறேன்”