சனி, 19 செப்டம்பர், 2009

Downloading Youtube videos is very easy now

Daily we are receiving so many youtube videos and many of them, like the ones Mumbai Sri Veeraraghavan uploads, are worthy of saving to our hard disk for repeated playback and enjoying them with family and friends. But for dwnloading and saving we need some other applications either shareware or freeware. Many of them have their own limitations. Now for our convenience here comes another facility. This is not an application which requires no installation.You need to "kick" the youtube for this. Please go to www.kickyoutube.com  (Just add "kick" before youtube) and hit enter. In the opening window you can find a search option as shown here.


 Just enter the url of the youtube video, if you know it. Most often we can not remember. Just add the name. For example  ramaswamy43 and search Immediately beneath the search window you can find all the videos Our Veeraraghavan mama has uploaded. Select a video of your choice and hit "Kick" button on the right of the selected window. You will observe a row appearing above the window with various options for saving.




 Select a format of your choice to save and hit the "Go" button (Green) on the right extreme of the bar and within seconds this"Go" button will turn into a blue "Down" button.
 
Hit it  and that's all. The download will immediately begin. If you have a download manager like Download Accelerator Plus  downloading will be very fast.

வியாழன், 17 செப்டம்பர், 2009

இது நெருப்பு நரி உபயோகிப்போருக்காக

அடியேன் மீது உள்ள பிரியத்தால் என்றாவது ஒரு நாள் இவன் உருப்படியாக ஏதாவது எழுதுவானா என்று பார்ப்பதற்காக இந்த வலையில் எட்டிப் பார்க்கும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரில் பெரும்பாலானோர் உபயோகிப்பது நெருப்புநரி (அப்படித்தான் FireFox Browser தமிழ் "ஆர்வலர்களால்" அழைக்கப் படுகிறது) என்று என் 'கவுண்டர்' சொல்கிறார். அவர்களும் அடியேனைப் போலவே இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அள்ளிக்கொண்டு வரும் வைரஸ்களைக்கண்டு போதுமடா சாமி என்று விட்டு விலகியோ அல்லது வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு, அளவற்ற ஆட்ஆன்கள் வசதி உலவும் வேகம் ஆகியவற்றால் கவரப் பட்டோ  இந்த நெருப்புநரி உபயோகித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை. அது FireFox load ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் தாமதம். மிக எளிதில் வெறுப்பு அடைய வைக்கும். யாரோ ஒரு புண்ணியவான் அதற்கும் ஒரு தீர்வு கண்டிருக்கிறார். வீட்டை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் vacuum cleaner இங்கும் வந்துள்ளது. இதுவும் ஒரு ஆட்ஆன்தான். இதன் பெயரும் vacuum places improved.  FireFox -- tools --addons சென்று get addons linkல் இதைப் பெற்று நிறுவிக் கொண்டால் system trayல் வாக்குவம் க்ளீனர் வடிவிலேயே வந்து அமர்ந்து கொள்ளும். 
ஒருமுறை அதை க்ளிக் பண்ணிவிட்டு Browserஐ restart செய்து பார்த்தால் வித்தியாசம் தானாகவே தெரியும். இதை உபயோகிக்கும் முன்னால் அடியேன் ப்ரவ்ஸர் திறக்க ஒரு நிமிடத்துக்கு மேல் ஆகும். இப்போது 5 முதல் 10 நொடிக்குள் திறக்கிறது. 
      அப்புறம்  ஓபரா மினி பயன்படுத்துபவர்களுக்கு ஓபரா மினி 5.0 பீட்டா வெளியாகி உள்ளது. வழக்கம்போல் அட்டகாசமாக உள்ளது. http://mini.opera.com தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து பாருங்கள்.

        பாதியில் நிறுத்திவைத்த  கேசவ அய்யங்காரின் "திருவருட்சதகமாலை" (தயாசதகத்தின் தமிழாக்கம்) மற்றும் பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் "திருவரங்கத்தந்தாதி" க்கு வை.மு. கிருஷ்ணமாச்சார்யாரின் வியாக்யானம் இவை இங்கே தொடர உள்ளன.

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

control pad

ScreenShot003இது ஏற்கனவே Run commandபயன்படுத்தும் விஷயம் தெரிந்தவர்களுக்கான பதிவு அல்ல.என்னைப் போன்ற “சோம்பேறிகளுக்கு” உதவும் ஒரு  அப்ளிகேஷன். ஆனால் நாங்கள் எங்கள் சோம்பேறித்தனத்தை “ஒவ்வொரு வினாடியையும் சேமிக்கிறோமாக்கும்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்.

  கணிணியில் ஏதோ செய்துகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று நோட்பாடைத் திறந்து எதையோ நகல் பண்ண வேண்டும். start – notpad என்று வழக்கமாகச் செய்வோம். அதற்கு மவுஸ் பயன்படுத்த வேண்டும். அதற்கு பதில் ஒரு கீயை அமுக்கி வேலை பார்த்தால் என்ன? பாதி வேலையில் உங்கள் my documents fileல் எதையோ தேட வேண்டியுள்ளது. மீண்டும் ஸ்டார்ட் போய் ….. இதையெல்லாம் எளிமையாக்க இந்த controlpad வந்துள்ளது. நம்மில் பெரும்பாலோர் அதிகம் உபயோகிக்காத Number key pad இதற்கு உபயோகப் படுகிறது. நம் விருப்பத்திற்கேற்ப நாம் இதை அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக நான் * 1 அழுத்தினால் என் நோட்பாட் திறக்கும். *2 அழுத்தினால் firefox browser திறக்கும். ஏகப்பட்ட விருப்பத் தேர்வுகள் உண்டு. இதை இங்கிருந்து இறக்கி, பதிந்து கொண்டு பயன்படுத்தலாம்.

For some of us who can easily understand English

ControlPad turns the numeric keypad on your keyboard to a Windows command execution system.

You may configure any numeric code to: Execute any program, open any document, open any web address or send any series of keystrokes to the operating system.

Once ControlPad is running, press and hold the * key on the numeric keypad, for about 1 second. At this point, a small window will pop up, allowing you to enter any keyword or numeric code.

Pressing the code followed by Enter will execute the associated command.

Commands are easily configured through the same interface - activate the input dialog (press and hold *), enter the desired code and press the numpad Divide button to associate a new command.

You may also use words instead of numeric codes.

For laptop users (without a numeric keypad), there is a special Laptop Mode feature which will use F12 (press and hold) instead of * as the launch key.

 

And it is a totally freeware

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

பறக்கும் பந்து பறக்கும்



சும்மா ஒரு டெஸ்ட்டுக்காக இந்த வீடியோ ! என்னத்துக்காக இந்த டெஸ்ட்டுங்கறது அப்புறம் சொல்றேன்










திருப்பாதுகமாலை


  ஒரு வேண்டுகோள்! திருப்பாதுகமாலையைத் தொடர்ந்து ரஸித்து வருபவர்கள், இங்கே இடப்பட்டிருக்கும் இரட்டைப் பத்ததியில் 17வது பாடல் (777) முதல் வரி மட்டும் சீர் பிரிக்காமல் இருப்பது ஏன் என அடியேனுக்குத் தனிமடலோ அல்லது commentsலிலோ எழுத வேண்டுகிறேன். அது சரிதானா அல்லது அச்சேற்றும்போது நிகழ்ந்த பிழையா என அடியேனுக்கு விளங்கவில்லை.

23, சேடப்பத்ததி
751, சேட னேயிவ னென்றிடு யிர்நிலை
நாட நன்கொர நன்தன்ப டைப்பினிற்
கூட வன்பத மூன்றுயிர்ப் பாதுகாய்!
சேட னென்றடி யேனுனை யோர்வனே, 1
752, சும்மா போக மதியாதே சுடரடி நிலையே! தொழுசேடன்
அம்மா தானே பெறுமோர்பே றாமரி பாத மலரணவும்
செம்மா போகம் பெறவென்றே சேவடி நிலைதா னானானென்
றெம்மா சிரியர் பெருமானா ரெமுனைத் துறைவரறைவாரால், 2
753, திருவளர் சேடத் திருவதுதான் திகழ வளங்கொள் சேடனென
விரியடி நிலை! யுன் னிறையுருவம் விரியவ னதனில் விரிவனெனில்
தெரியிரு விரிபத் திமையிலுனைச் சிரநல மலியத தரிநிலையோர்
பரியது விரியு முயர்வறுமப் பணிவிடை நலனுக் கவதியென, 3
754, படரிரு புவனம் பரித்தருளும் பழமறைப் பரனைப் பரித்துவளர்
சுடரிறை யவனைத் தாங்கவனிச் சுமையது சமையும் பரிவதிலே
உடனரு ணெடியோ னடிநிலை! நீ யொழுகொரு சேடப் படிவமதில்
தடவலி பொலியவ் வடிமைவளத் தலைமிசை யகிலந் தரித்தனையே, 4
755, திடவலி யடிமைப் படிவநலத் திறனெடு சேடத் திருவடிவம்
அடிநிலை! யுனதா மெனவுணரவ் வமலவுரைத்திரு வனனவனே
நெடுவன நடையிற் புகவகிலம் நிலைபெறு மிறைமைப் பரமதனை
இடிதன தருளின வலிமலிய விதுபரி யெனநின் னிறுவினனே, 5
756, தெரியுன தரிபா துருபிறவென் றணையொளி மிளிருஞ் சேடநலத்
திருவள நளிகொஞ் சளிமஞ்சத திறையவ னிறையுங் காலருகில்
ஒருகுல வதுவரு மையிலுரியோ னுயுமடி பேணும பாதுனையே,
அருமறை யவைநின் மதலையெனு மருமையி லருகின் னிலைகொளுமே, 6
757, நல்லார் பரதன் முடியுறையுந் தன்னோ ருருவப் பாதுனையே
சொல்லார் சேடத் திருவிளவல் லுனைநெடு சேணிற் கைதொழுதான்
வல்லார் மறைகொள் சீராம வடிவத் தரங்க னொருதனையே
எல்லார் பதியிற் பணிந்தவதி லென்னோ விந்தை விளம்புமினே, 7
758, மாறி மாறி விரிந்தொடுங்கு மகிலம் வனையும் முகிலுருவன்
மாறி லுன்ன லெனுமுந்நீர் தனிலெழு மொக்குள் மாபாகும்
ஈறி லும்பர் பம்பிமறைந் திலகவன் யோகுத் துயில்புரியு
மாறிலை யெனுமா பாரியுமாய்ப் பாதுக! நீதான் பாரிப்பாய், 8
759, பணியிறை மணிமா லடிநிலை! நீ பரவடி நலரோம் பொருநோன்பில்
பணையொளி மிளிரத் திருநோக்கும் பரியது புரியோர் பகனிலையிற்
றிணிமரு ளிருளுக் கிரவியேனுந் திடமிக நிகழுன் திருவெழிலிற்
பணியவை தமக்கோ ரிலக்கெனவப் பணியுந் தானே யாவாயே, 9
760, திரமேறு வெகுமுகமாய்த் திணிபோக வளங்கிளர
உரிதோலில் தெரியுமொளி விரியுமொரு தூய்மைதனில்
வருசேடத் தொன்மரபோ ரொருசேட னீயெனவே
திருநெடியோன் பாதுகையே! தொழுங்கிழமை திகழ்வாயே, 10
24, இரட்டைப்பத்ததி
761, தருமுறை யோதொரோ தம்மி தம்மெனும்
பிரண்வ மண்டுமக் கலையி ரண்டெனத்
திருநிறை யப்பனீ ரப்ப தம்நிறை
தெரியரி பாதுகந் தேறி நண்ணுவன், 1
762, நீண்டசரா சரத்துயரம் நீக்குமுன துரிமையினில்
ஆண்டவனங் கிரிநிலையே! யான்றவுன தருந்தோற்றத்
தீண்டருளு மிரும்பொறையுந் தேறியசீ ரீருருவில்
ஆண்டுநிறை மங்கலநீ யடியேற்குப் புரிவாயே, 2
763, வானவரால் மானவரால் வருமல்ல லவ்விரண்டும்
தானிலதாய் மாதவனார் தாளடைந்தார்க் கருள்புரியும்
மேனிலைமல் கத்திறநல் வீறுமலி சாந்தியெனத்
தானடியோ மீருருவத் தாணிலைகாள்! தேறுவமே, 3
764, வருசுரரு மசுரருமாங் கணங்காடு மீர்மையினிற்
றெரியிதுவெந் தெய்வமிதெந் தெய்வமென வெதிராடுஞ்
செருவெதுவுஞ் சேராது செவ்வியமால் பாதுகைகாள்!
இருமைகொளும் பகிர்தனல விருமையினீ ரிசைவீரே, 4
765, ஒளியாலு மொலியாலு மடியார்க்குப் பொல்லாரை
அளியேறக் தாங்களையு கதிராழி வெண்சங்கம்
தெளியண்ணல் கரமேந்து மவையன்னான் திண்கழலில்
ஒளியொலிமல் கொருநலவீ ரடிநிலையாய்த் தோன்றியவே, 5
766, சீரியர்செந்நெறிநண்ணாப் பெருஞ்சோம்ப ரெம்போல்வார்க்
காரமுதத் தென்னரங்க மணவாளன் தாணிலைகாள்!
தேரியதோர் நல்வினையுஞ் சீரியதோ ராள்வினையுஞ்
சேரவரு நேரிருவர் நீவிரெனச் செறிவீரே, 6
767, நாதனிரு பாரிசமன் மாமகளு மண்மகளும்
பாதயுக மன்னுதிப் பாங்கிருநீ ரில்லீரேல்
ஓதுமணி பாதுகைகாள்! ஓங்குபிழை யேழையெமக்
கேதுகதி யீ துலகி லென்றிதுநன் றெண்ணுவமே, 7
768, அரவணைய னடியிணையி லமருமணி யடிநிலைகாள்!
விரிகொடிய பவபீதி விலக்குமிரு மேனியினீர்
அரிதுணர்பான் மையதெனமூ தருமறையின் முடியோதும்
பரமவர மென்னுமிரு பழங்கல்வி யாவீரே, 8
769, சென்னிமிசை யண்ணல்பதஞ் செவ்வியசீர்ச் செல்வர்களே!
முன்னமுறு சாபவழு முற்றவுமே யற்றொழிய
மின்னினிய நேமியனார் திண்சரனே பற்றிமகிழ்
தொன்னல்மல் கந்நேமிப் புள்ளிரட்டை நீரோதான், 9
770, மாவுறையு மார்வனடி மாநிலைகா ளூழ்வினையில்
மூவுலகு முற்றவுமே மூளுமடற் பேரிருடான்
மூவவறத் தென்வடநற் றொல்லயனஞ் செல்கதிரோன்
மேவியொளி யார்கதியா மீர்கதிநீ ராவீரே, 10
771, காரன்ன மேனியனார் காரவணப் பாதுகைகாள்!
ஒருங்கள் திருவுள்ளத் துற்றசமப் பண்புதனிற்
சீருந்து மச்சமநல் லச்சுதனா ரீருலகே
நீரிருவர் தாமன்ன நீதிநிலை நிகழ்வீரே, 11
772, மன்னுபத மானவனி மல்குநடை மாணிலக
மின்னுபதி யடிச்செல்வ மதிபொதியு மிதியடிகாள்!
சொன்னலவன் கேள்வியுட னுன்னுநல நினைவெனநீர்
துன்னுவணத் திவ்வணரா யோரிருவர் பொலிவீரே, 12
773, அப்பனணி யடிநிலைகா ளருணிகழும் விளையாட்டில்
எப்பொழுதும் பாரிதுசீர் வாழநடை யாடிவரும்
நற்பதனி னான்முனென நாடிவரு முமக்காதி
திப்பியவத் தம்பதியா ரேலுவமை சாலுவரே, 13
774, திருநெடியோ னினிதருளி லிருதாளிற் றோற்றுங்கால்
இருமையினீ தானவனுக் கிணையுருவ மேற்பாயே
அரியவனே தோன்றத்தா ளாயிரத்து நீயுமுடன்
விரிவுறுமா யிரவுருவத் தரிபாது! திகழ்வாயே, 14
775, முன்னிதுவாம் பின்னிதுவாம் படியெண்ண வொண்ணாது
மன்னிருமால் பதமதனில் மாறிவரு மொழுக்கத்து
முன்னரிதா ணிலை! யுலகந் தொழுதேத்து மிருசந்தி
யென்னவுனை யெண்ணுமறை மேலவர்க ளெண்ணுவரே, 15
776, தன்னருளிற் புவனங்க டானோக்கத் தாணிலைகாள்!
மன்னனரங் கேசனெடு பாதநடை தானாடப்
பொன்னலர்பூந் தாளவன தனுங்காது நோக்கிருநீர்
சொன்னபலை யபலையெனச் சொல்லத்தா னாவீரே, 16
777, இருளுலுயிரொளியுணராதிழுக்கினிலாழ்ந்துழதெளியோர்க்
கரியடியி லமர்நிலைகா ளம்முழுநன் மெய்யுணர்வில்
அரியதொரு பத்தியெழ வாங்குதவும் பாங்குதெரி
கருமமறி வென்னுமிரு நன்னிலைநீ ராவீரே, 17
778, பரியரியின் பதமதனைப் பாதுகைகள்! தாங்கிமறை
விரியுமும தேவனெறி வீறுலகிற் செந்நிறுவி
அருமைதனில் வருதமர்கட் கொருதமையே யறநல்கித்
தெரியுமும தோரரசி லீரரசின் சீர்புரிவீர், 18
779, நாரணனார் நற்கழல்க ணல்குதலி னான்மறைதேர்
சீரியர்தாம் வேண்டுவன சீர்மிகவே சேர்த்துமவை
பூரணமா வெந்நான்றும் பூங்கழல்காள்! புரந்தளியிற்
சேரலினீர் யோகமுநற் கேமமுநே ரெமக்காவீர், 19
780, கட்டிவி ளங்கரி தாளினி ரட்டை
நட்டவ சுச்சுடர் பாதினி ரட்டை
நட்டலி னண்ணுவர் புண்ணிய பாபக்
கட்டினி ரட்டைக ழற்றிடு மன்றே, 20