சனி, 3 மே, 2014

ராமாநுஜ தயாபாத்ரம் 3

(சேட்லூர் ஸ்வாமியின் வியாக்யானம் --- ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஸாமம் பார்த்தசாரதி அய்யங்காரின் ஷஷ்டியப்தபூர்த்தியின்போது வெளியிடப்பட்டதிலிருந்து)

5. ராமா என்பது பெரிய பிராட்டியைக் குறிக்கிறது. “இன்னமுதத் திருமகள்” (குருபரம்பராஸாரம்). அபராதிகளான நம்போன்றவர்களிடத்தில் பகவானுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தைத் தணித்து நம்மை அங்கீகரிக்கும்படி செய்பவள். இப்படி புருஷகாரபூதையான இவளை ईश्वरीं सर्वभूतानां “ஈஶ்வரீம் ஸர்வபூதாநாம்” என்று அழைத்தால் அது பாதகமாகாது. காரணம் இவளை அணு என்றும், ஜீவகோடிகளில் ஒருத்தியென்றும், எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினால் மற்றவர்களுக்கு ஶேஷியாக இருப்பவள் என்றும், ஸ்வாபாவிகமான ஶேஷித்வம் இவளுக்குக் கிடையாது என்றும், பகவானைக் காட்டும் அடையாளம் உபலக்ஷணம் மாத்திரமேயன்றி இவளுக்கு பகவானைப் போல் உபாயதசையிலும் அந்வயம் கிடையாது, இவள் எல்லா இடத்திலும் வ்யாபித்திருப்பவள் என்று சொல்லப்பட்டதானது தர்மபூத ஜ்ஞானத்தின் வழியாக நித்யமுக்தர்களைப் போல, இவள் ஜீவகோடியிலும் ஈஶ்வரகோடியிலும் சேராத தனிப்பட்ட தத்வம், ஈஶ்வர கோடியில் சேர்ந்தவளாயினும் பகவானையும் தன்னையும் ஒழிந்த மற்ற எல்லா வஸ்துக்களுக்கும் சேஷியாயிருந்தபோதிலும், ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களில் இவளுக்கு அந்வயம் கிடையாது, பகவத் ஸங்கல்பத்தினால் பெற்ற ப்ரபாவ விஶேஷத்தையுடையவள் என்று பிராட்டியின் பெருமையை மற்றவர்கள் வரையறுத்தார்கள். இப்படி மற்றவர்களால் கூறப்பட்ட கருத்துக்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து பரிசீலித்து உண்மைக்கு முரண்பாடாக இருக்கக்கூடிய கருத்துக்களையெல்லாம் நிராகரித்தருளினார் ஸ்வாமி.

பகவான் ஈஶ்வரன் என்றால் பிராட்டி ஈஶ்வரி, பகவான் “பதி”, இவள் “பத்னீ” என்கிற பேதத்தைத் தவிர மற்ற எல்லாவிதத்திலும் பகவானுக்கு ஸமமான ப்ரபாவத்தை உடையவள் தாயார். இப்படியிருந்த போதிலும் புருஷகாரத்வம் முதலியவைகளை பிராட்டி விஷயமாகவும், தண்டதரத்வாதிகளை எம்பெருமான் விஷயமாகவும் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபாதிகள் எப்படி ஸ்வதஸித்தங்களோ அதைப்போலவே பிராட்டியினுடைய ஸ்வரூபரூபாதிகளும் ஸ்வதஸித்தங்கள், ஸ்வபாவத்தினாலேயே ஏற்பட்டவைகள். அநுபவிக்கும் தசையிலும் உபாயதசையிலும் கூடயிருந்து மோக்ஷயிஷ்யாமி என்று ஸங்கல்பம் செய்யக்கூடியவள் ஜகத்ஸ்ருஷ்ட்யாதி ஸங்கல்பங்களிலும் அந்வயிக்கிறாள். பத்னியும் எஜமானனும் சேர்ந்து இருவர் இருந்தபோதிலும் யஜமானன் ஒருவன் என்ற கணக்கில் பரதத்வ விஷயத்தில் ஒன்று என்கிற வ்யவஹாரம் இருப்பதை ஸ்ரீஸ்துதி, ஸ்ரீரஹஸ்யரக்ஷை போன்றவற்றில் தெளிவாக அநுக்ரஹித்தருளியுள்ளார். மேலும் மோக்ஷம் பெறுவதற்கு ஸாதனமான எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஜஞாநத்தைக் கொடுப்பவள் இவள் என்பதை  चैतन्य स्तन्यदायिनीं சைதந்ய ஸ்தந்யதாயினீம் (தயாஶதகம் 6) 


       ஸர்வேஶ்வரன் இவர்களுடைய பூர்வாபராதத்தாலே இட்ட நினைப்பு ஈடுமாறுகைக்கு ப்ரதான காரணம் மூன்றுண்டு. அவை எவையென்னில் அஸ்து மே என்றபேக்ஷித்தால்  அஸ்து தே தயைவ ஸர்வம் ஸம்பத்யஸ்யதே என்கிற திருமுகப்பாசுரமும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) तेने मैत्री भवतु ते  தேனே மைத்ரீ பவது தே (ஸ்ரீமத் ராமாயணம்)
என்பது ஸபலமாகவில்லையே என்று ஆக்ஷேபம் செய்பவர்களுக்கு

இப்படி तेने मैत्री भवतु ते தேனே மைத்ரீ பவது தே என்றதுவும் ராவணனுக்கு சிசுபாலனான ஜந்மாந்தரத்திலே அந்திம க்ஷணத்திலேயாகிலும் கார்யகரமாயிற்று (அபய ப்ரதாநஸாரம்) என்று ஸமாதானம் அருளிச் செய்து, இவள் ஸத்ய ஸங்கல்பத்தையுடையவள் என்று இவள் பெருமையை நிரூபித்தருளினார். ஆகையினால் இவர் பெரிய பிராட்டியாருடைய தயைக்கு பாத்திரமானார் என்றபடி.

6. ராமா  என்பது பூமிப் பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை “ஸ்ரீபூஸ்துதி”யிலும், “ஸ்ரீரஹஸ்யஶிகாமணி”யிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி.

      ஸ்ரீபூமிப்பிராட்டியை ஜகத்துக்கு ஈஶாநா என்று ஶ்ருதி சொல்லுகையாலே சேதனாசேதன ரூபமான ஜகத்திற்காட்டில் இவளுடைய உத்கர்ஷம் ப்ரஸித்தம். ஸர்வம் ஸஹையான இவளுக்கு ஸர்வேஶ்வரனைக்காட்டிலும், பெரிய பிராட்டியாரைக் காட்டிலும் க்ஷமாதிகுண பூயஸ்தை உண்டாயிருந்தது. இப்படியானால் இவளுக்குத் தங்களைக் காட்டில் ஏற்றத்தை ஸூரிகளே தாங்களே அறிவார்கள் இத்தை ஸ்ரீபூமிப்பிராட்டி ஸ்வாபாவிக ஸார்வஜ்ஞ்யத்தாலே அறிந்திருக்கச் செய்தேயும் ப்ரஜா ஹிதார்த்தமாக மாதா கேட்க, ஸர்வபூத ஸுஹ்ருத்தான பிதா அருளிச் செய்த வார்த்தை என்று ப்ரஸித்தமாக வேண்டுமென்று திருவுள்ளம் பற்றி (ஸ்ரீரஹஸ்யசிகாமணி.) என்று கூறப்பட்டுள்ளது .

                                                                             தொடரும்….. 

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

Saranagati Deepikai tele-upanyasam (28-04-2014)

ஸ்வாமி தேசிகன் அருளிய “சரணாகதி தீபிகை”யின் 56வது ச்லோகம் நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்தி வரும் டெலி-உபந்யாஸத்தின் இன்றைய விஷயம். 56வது ச்லோகத்தை 56 அக்ஷரங்களால் ஸ்வாமி தேசிகன் அமைத்திருக்கும் அற்புதத்தை விவரித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அடிக்கடி நினைத்து உணர்ந்து ஒழுக வேண்டியது இந்த ச்லோகம் என்று மிக அருமையாக நாட்டேரி ஸ்வாமி விஸ்தரிக்கும் உபந்யாஸத்தை நகலிறக்கிக் கேட்டு மகிழ

https://www.mediafire.com/?2nol8o3kkf6s348