வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

Thirumalaiyil

திருமலையில் நடக்கும் சுப்ரபாத ஸேவை பற்றி youtube videoக்கள் சிலவ்ற்றை வலையில் கண்டேன். ஐந்தும் மறுபடி மறுபடி வந்த காட்சிகளே வருகிற மாதிரி இருந்தது. அடியேனுக்கு முடிந்த மட்டில் ஒரே வீடியோவாக, எடிட் செய்து கொடுத்துள்ளேன். நன்றாகவே தெரிகிறது, இது உண்மையல்ல வென்று. நிச்சயம் ஏதோ ஒரு பழைய தெலுங்குப் படத்தில் உள்ள சில காட்சிகள்தான் இவையென்று மனம் சொல்கிறது. ஆனாலும் திருவேங்கடமுடையானைப் பார்க்கும் தோறும் பரவசம் தானே.

புதன், 27 பிப்ரவரி, 2008

ENDLESS 2

நேற்று இங்கு வந்த ENDLESS க்கு எனது கணிணி ஆசான் மகுடதீபன் ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கோட்டோவியமே “புனரபி ஜனனம் புனரபி மரணம்” வரிகளுக்கு அருமையாக அமைந்த ஒரு உதாரணம். இந்தக் கவிதை மற்றொரு விளக்கம். பாருங்கள்

http://tinyurl.com/2bub6b
[Open in new window]

திங்கள், 25 பிப்ரவரி, 2008

Endless

நாள்தோறும் நான் சென்று படித்துப் பயனடையும் பல வலைகளில் சில தொழில் நுட்பம் கற்றுத் தரும் technical blogsம் உள்ளன. அவற்றுள் www.pkp.in என்பதும் ஒன்று. ஒரேயடியாய் தொழில் நுட்பம் பற்றி மட்டும் எழுதினால் போர் அடிக்கும் என அதில் சில நேரங்களில் சில வேடிக்கைகளும் காணலாம். அதில் ஒன்று நேற்று நான் கண்டு ரசித்தது இந்த ENDLESS. பாருங்களேன். PKPக்கு நன்றிகளுடன்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2008

தில ஹோமம்

திருப்புல்லாணி திவ்ய தேசம் என்பதால் வரும் ஸேவார்த்திகள் பாதி என்றால் மீதி வருவோரில் பலர் இங்கு வருவது தில ஹோம பரிகாரங்களுக்காக. அது என்ன எல்லா ஜோஸ்யர்களும் பெரும்பாலோருக்கு இந்தப்பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும் என்று இங்கு அனுப்புகிறார்களே இது எதற்காக என்று இங்குள்ள தில ஹோம ஸ்பெஷலிஸ்ட் லக்ஷ்மண சாஸ்திரியிடம் விசாரித்து அவர் சொன்ன விளக்கம் இங்கு இரண்டு வீடியோ காட்சிகளாக ! TH1 TH2 என்ற வரிசையில் பாருங்கள். மொபைல் வீடியோ சற்று சுமாராக இருக்கும். பொறுத்துக்கொள்ள வேண்டும்.