வியாழன், 22 நவம்பர், 2012
புதன், 21 நவம்பர், 2012
மதுரகவி திருஅரங்கன் தத்தைவிடு தூது 3
மண்நாட்டிலும் விண்நாட்டிலும் | மண்நாட்டில் யாரும் மதிக்கும்வணம் மேவுதலால் விண்நாட்டில் வாழ்வோர் விரும்புதலால் – எண்ணாட்டும் .9. |
பரீட்சித்து மன்னன் மேன்மை பெற | பாரகலை எல்லாம் பரீட்சித்து மேன்மைபெற ஆரமுதம் நாண அறைதலால் – நீரமையும் .10. |
நாரியரும் நாணாமல் நண்ணுதலால் | நாரியரும் நாணாமல் நண்ணுதலால் நன்மையிலாப் பூரியர்பாற் செல்லாப் புலமையான் – ஆர்வமுடன் .11. |
வனக்காட்டிடை வாழ்ந்து களித்தல் | நாட்டிடையே யன்றிஎந்த நாளும்இனி தாகவளக் காட்டிடையே வாழ்ந்து களித்தலால் --- வேட்டுருகிக் .12. |
கூடுவிடுக் கூடு பாயும் | கூடுவிட்டுக் கூடு குடிபுகும்அக் கொள்கையினால் பாடுபெறும் அஞ்சிறையிற் பற்றுறலால் – நீடுதவ .13. |
மாசுக நல் ஞானம் | மாசுகநல் ஞான வளம்பெருகு நாமமொடு நீசுகனாய் வாழ்தல் நிசமன்றோ – தேசுபெறும் .14. |
வாசம் சிறந்த வனம் | வாசஞ் சிறந்தவனம் மன்னுதலால் மாதவத்தோர் பேசுநய வாணி பிறங்கலால் – காசினியின் .15. |
மன்னும் குரம்பை வளன் | மன்னும் குரம்பை வளனமையத் தான்படைத்துத் துன்னும்ஒரு நான்முகமுந் தோன்றலால் – முன்னியநற் .16. |
அருள் வாய்ந்த வேள்வி | கேள்விமறை யோர்புகலுங் கீதமறை ஓதுதலால் வேள்வியருள் வாய்ந்த விதிஒப்பாய் – நீள்ஒளிசேர் .17. |
வண்ணக் கனி வாய் மருவுதல் | வண்ணக் கனிவாய் மருவுதலால் வான்உலகில் நண்ணிப் பயில்வோரும் நட்புறலால் --- ஒள்நிறஞ்சேர் .18. |
அஞ்சுவண வன்னம் அமைதல் | அஞ்சுவண வன்னம் அமைதலால் ஆங்கெதிர்வோர் நெஞ்சுவந்து கோடல் நிகழ்த்தலால் – நஞ்சவிழி .19. |
விந்தை நிகர் ஆயிழையார் | விந்தைநிக ராயிழையார் மேவிவிளை யாடலினால் ஐந்தருவை நீநிகராம் அன்றோகாண் --- சுந்தரஞ்சேர் .20 |
9. மண் நாட்டில் – நிலவுலகில், யாரும் – எவரும், மதிக்கும் வணம் – புகழும்படி, மேவுதலால் – விளங்கலால், விண் நாட்டில் வாழ்வோர் – வானவர்கள், விரும்புதலால் –நேசிப்பதால், எண்நாட்டும் – உளத்தில் பதித்த
10.பாரகலை எல்லாம் – பெருங் கலைகள் யாவும், பரீட்சித்து மேன்மை பெற – பரீட்சித்து மன்னன் உயர்வு பெற, ஆரமுதம் நாண—அரிய அமுத மும் நாணும்படி சுவை பெற, அறைதலால் – கூறுவதால், நீரமையும் –நீரில் பொருந்திய (நீராடிய)
11. நாரியரும் – பெண்களும், நாணாமல் – வெட்கமுறாமல், நண்ணுத லால் – அடைதலால், நன்மையிலா – நலமில்லாத, பூரியர் பாற் செல்லா – அற்பர்களிடம் சென்றடையாத, புலமையால் – ஞானத்தால், ஆர்வமுடன் – அன்புடன்.
12. நாட்டிடையே யன்றி – மக்கள் வாழும் நாடுகளில் அல்லாமல், எந்த நாளும் – எப்போதும், இனிதாக – இன்பமாக, வளக்காட்டிடையே – செழித்த கானகத்தில், வாழ்ந்து – வசித்து, களித்தலால் – மகிழ்வதால், வேட்டுருகி – விரும்பி உருகி.
13. கூடுவிட்டுக் கூடு குடி புகும் அக்கொள்கையினால் – அட்டசித்துக் களுள் ஒன்றாம் ஒரு உடலை விட்டு வேறுடல் செல்லும் (பரகாயப் பிரவேசம்) அத்தன்மையால், (சுகர்), கூடு விட்டுக் கூடு மாறும் தன்மையது (கிளி), பாடு பெறும் – துன்பமுறும், அஞ்சிறையில் – அழகிய சிறைச் சாலை யில், (சுகர்) அழகிய சிறகில் (கிளி), பற்றுறலால் – பற்றி இருத்தலால், நீடு தவ --- நீண்ட தவத்தால்.
14. மா சுக நல் ஞான வளம் பெருகும் – பேரின்ப ஞான வளம் பெருகிய, நாமமொடு – சுகர் என்ற பெயருடன், நீ சுகனாய் வாழ்தல் – நீ கிளியாக (சுக மகரிஷியாக) வாழ்தல், நிசமன்றோ – உண்மை அன்றோ, தேசு பெறும் – ஒளி பெறும்.
15. வாசம் சிறந்த அனம் மன்னுதலால் – சிறந்த அன்ன வாகனத்தில் விளங் குவதால் (பிரமன்), வாசனை மிக்க சோறு உண்பதால் (கிளி), மாதவத் தோர் – மகரிஷிகள், பேசும் – புகழும், நயவாணி – எழிலார் சரசுவதி, பிறங்கலால் – விளங்குவதால் (பிரமன்), மாது – தலைவி, அவத்து – துயரில், ஓர் – ஒரு, பேசுநய வாணி – நயமாகப் பேசும் பேச்சால், பிறங்கலால் – விளங்கலால்(கிளி), காசினியின் –உலகில்.
16. மன்னும் – பொருந்தும், குரம்பை – சரீரத்தை (பிரமன்), கூடு (கிளி), வளனமைய – சிறப்பாக, தான்படைத்து – தான் சிட்டித்து, துன்னும் – விளங்கும், ஒரு நான்முகமும் – ஒப்பற்ற சதுர் முகங்களும் (பிரமன்), நாற்புறமும் (கிளி), தோன்றலால் – உண்டாவதால், முன்னிய – நினைந்த, நல் –நல்ல
17. கேள்வி மறையோர் – கேள்வி ஞானமுள்ள வேதியர், புகலும் – பிரமன் அருளும் (பிரமன்), கூறும், (கிளி), கீதமறை – இசைசார்வேதம், ஓதுதலால் –கூறுதலால் (பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலை யாமே --சம்பந்தர் தேவாரம்) வேள்வி யருள் வாய்ந்த – யாக அனுக்கிரகம் பொலிந்து, விதி ஒப்பாய் – பிரமன் நிகராவாய், நீள் ஒளி சேர் – பெருஞ் சோதி சேரும்.
18 – 20. (கற்பகத்தரு – கிளி சிலேடை) வண்ணக் கனிவாய் மருவுதலால் – பல நிறப் பழங்கள் பொருந்துவதால் (ஐந்தரு) நல்ல நிறமுள்ள பழம் போன்ற வாய் உள்ளதால் (கிளி), வானுலகில் – தேவலோகத்தில், நண்ணி – அடைந்து, பயில்வோரும் – விளங்குபவர்களும், நட்புறலால் – நேயமுறலால், ஒள்நிறஞ்சேர் – ஒளிவண்ணம் சேரும், அஞ்சுவண வன்னம் – அழகிய பொன்நிறம் (கற்பகத்தரு) பஞ்சவர்ணம் (கிளி), அமைதலால் – பொருந்துவதால், ஆங்குஎதிர்வோர் – அங்கு எதிர்வருபவர், நெஞ்சுவந்து – மனம் பொருந்தி, கோடல் – கொள்ளுதல், நிகழ்த்தலால் – நடத்துவதால், நஞ்சவிழி – விஷத்தன்மை சேர் கண்களுடைய, விந்தை நிகர் – வீரலட்சுமி அனைய, ஆயிழையார் – மகளிர், மேவி – சார்ந்து, விளையாடலினால் – களியாடலால் (பொது) ஐந்தருவை – கற்பகச் சோலைக்கு, நீநிகராம் அன்றோ காண் – பார், நீ ஒப்பாவை அன்றோ, சுந்தரஞ் சேர் – எழில் பொருந்திய
திங்கள், 19 நவம்பர், 2012
Guru Paramparai Vaibhavam (19-11-2012)
http://www.mediafire.com/?ox6pp74mmsi16vl
ஞாயிறு, 18 நவம்பர், 2012
மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது
நூல்
பூமகளும், புவிமகளும், நீளையும் போற்ற அரவணையில் | பூமகளும் செல்வப் புவிமகளும் நீளையெனும் மாமகளும் பைந்தாள் மலர்வருடப் – பாமருவும் .1. வண்ண மணிக்கடிகை வாளரவப் பாயலின்மேல் எண்ணுந் துயில்புரியும் எம்பிரான் – தண்ஒளிசேர் .2. |
சோலைக்கிளியே | பச்சைமணி மேனிப் படிவம்எனப் பாய்ஒளியார் இச்சையுறுஞ் சோலை இளங்கிளியே – உச்சிதஞ்சேர் .3. |
வண்டினங்கள் பாடும் சோலை | கந்தாரம் பாடிக் களிவண் டினங்கஞலும் மந்தாரச் சோலையகம் வைகலாற் – சந்தாரக் .4. |
கோதை நல்லார் கூறும் மொழிகள். | கோங்குமுலை வாங்குமிடைக் கோதைநல்லார் கூறுமொழி யாங்குருகக் கூவிநலம் ஆர்தலால் – ஓங்கெழிலார் .5. |
இந்த்ராணி இடும் முத்தம் | தந்த்ராணி எல்லாம் தளர்ந்தழியத் தான் விளங்கும் இந்த்ராணி முத்தம் இடுதலால் – நந்தாத .6. |
கோட்டுமா ஏறிக் குலவுதலால் | கோட்டுமா வேறிக் குலவுதலால் கோதையர்கை நீட்டுமா நின்று நிலவலால்—வேட்டுருகும் .7. |
ஆயிரம் கண் நாட்டம் அமைதல் | ஆயிரங்கண் நாட்டம் அமைதலால் அம்புவியில் |
(நம் அகத்துக் குழந்தையிடம் ஒரு சிறு வேலையைச் சொல்லும்போது கூட, “என் கண்ணே! நீ கட்டிச் சமர்த்தாச்சே! அப்பாவுக்கு ரொம்ப செல்லமாச்சே” என்று பலபடியாய் குளிரப் பேசினால்தான் வேலை நடக்கிறது. இங்கோ கவிஞர் ஆசைப்படுவதோ பெரிய காரியம்! கிளியை தூது அனுப்புகிறார். அதுவும் அரங்கனிடம்! கிளியே போய்ச் சொல்லு என்றால் கிளி கேட்குமோ கேட்காதோ! அதனால் கிளியைப் புகழ்ந்து பாட ஆரம்பிக்கிறார்.
கிளியின் வண்ணத்தைப் , பச்சைமாமலைபோல் மேனி கொண்டு அறிதுயில் கொள்ளும் திருமாலுடனும், இந்திரனுடனும் ஒப்பிட்டுப் புகழ்வது மேலே உள்ளது. திரு கம்பன் வழங்கும் குறிப்புரை கீழே)
1. பூமகளும் – மலர்மகள் திருவும், செல்வப் புவி மகளும் – திரு மிகு பூமிதேவியும், நீளை எனும் மாமகளும் – அழகிய நீளா தேவியும், பைம்தாள் மலர் வருட –பசுமையான திருவடி மலர்களைத் தடவிக் கொடுக்க , பாமருவும் – பிரபை வீசும்
2. வண்ணமணிக்கடிகை – பலநிற மணிகள் பதித்த தோள் வளையுடன், வாளரவப் பாயலின்மேல் – ஒளிசேர் அரவணையில், எண்ணும் துயில் புரியும் --- நோக நித்திரை புரியும், எம்பிரான் – எம் தலைவன், தண் ஒளி சேர்—குளிர்ந்த பிரகாசம் சேரும்.
3. பச்சை மணி மேனிப் படிவம் என – மரகத உருவம் போல, பாய் ஒளி ஆர்---பரவும் ஒளி சேர், இச்சை உறும் – விருப்பமுடைய, சோலை – பொழிலில் உள்ள, இளங்கிளியே – இளமை சேர் கிளியே, உச்சிதம் சேர் – தகுதி சேரும்
4. கந்தாரம் பாடி – காந்தாரப் பண் இசைத்து, களி வண்டினம் கஞலும் –மதுவுண்ட வண்டினங்கள் மிகுந்திருக்கும், மந்தாரச்சோலை – கற்பகக்கா, அகம் – உள்ளே, வைகலால் – இருத்தலால், சந்த ஆர – சந்தனம் பொருந்திய
5. கோங்கு முலை –கோங்கில வரும்பனைய தனங்கள், வாங்கும் இடை – தாங்கும் இடுப்புடைய, கோதை நல்லார் – பெண்கள், கூறுமொழி – சொல்லும் உரைகள், ஆங்கு – அங்கே, உருக – அவர்கள் உள்ளம் நெகிழ, கூவி – உரைத்து, நலம் ஆர்தலால் – நன்மை உறலால், ஓங்கெழிலார் – மிக அழகுள்ள மகளிர்.
6. தந்த்ராணி எல்லாம் – (தன் த்ராணி) தம் சக்தி யாவும், தளர்ந்து அழிய – சோர்வுற்று நீங்க, தான் விளங்கும் – ஒப்பற்றுப் பொலியும் , இந்த்ராணி – இந்திரன் மனைவி, முத்தம் இடுதலால் – முத்தம் கொடுப்பதால், நந்தாத – குறைவற்ற
7. கோட்டுமா ஏறி – கொம்புகளுடைய மாமரத்திலே ஏறி, குலவுதலால் – விளங்குதலால், கோதையர் கை நீட்டுமா – அரம்பையர்கள் கை நீட்டுமாறு, நின்று நிலவலால் – இருந்து விளங்குதலால், வேட்டுருகும் – அகம் விரும்பி உருகும்.
8. ஆயிரங்கண் நாட்டம் அமைதலால் – ஆயிரங் கண்ணுடையான் பார்வை படுதலால் (இந்திராணி), ஆயிரக்கணக்கானோர் பார்வையில் படுவதால் (கிளி), அம்புவியில் – உலகில், நீயமரர் வேந்தன் – இந்திரன், நிகரன்றோ – எப்பல்லவா, பாய்திரை சூழ் –பாய்ந்துவரும் அலைகடல் சூழும்.