ஸ்ரீ கேசவ அய்யங்கார் தமிழில் ஆக்கிய திருப்பாதுகமாலையின் மூன்றாம் பத்ததி “பெருமைப் பத்ததி” தமிழை நேசிக்கும் பெரியோருக்காக இங்கே உள்ளது.
சனி, 29 நவம்பர், 2008
ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்
தரு இராகம் தன்னியாசி தாளம் ஏகம்
பல்லவி
சிந்தைசெய்தாரே -- வேதாந்த - தேசிகர்தாமேபல்லவி
அனுபல்லவி
அந்தச்சீரங்கநாயகரைநாந் தினமுமறவேனே -- என்று (சிந்தை)சரணங்கள்
தற்பரமாகியதேவசம்பந்த சாந்திநாமாவைக் கொண்டேஅற்புதமாகவுதயஞ்செய்த வரங்கநாமாவைச் (சிந்தை)
மிஞ்சுபுகழ்க்கதிர்வீசுமரங்கவி மானமதின்பாலே - நல்ல
மஞ்சுழைக்குண்மரகதமென்னுமணிதனைப்போலே
ஆதிசேடனைசயனமெத்தையாயங்கைதலைக்காணி -- கடல்
மாதுயிராகநீண்டகண்வளர் வனைமனதூணி (சிந்தை)
திருவரங்கப்பெருநகருள் தெண்ணீரென்றெடுத்து -- நல்ல
கருமணியைக்கோமளத்தைக்கண்டேனெனத்தொடுத்து (சிந்தை)
மாயோனேயென்றுமடியவரென்றும்வாழ்த்திடுபாசுரமே -- இவை
வாயாற்சொல்லிமனத்தாற்சிந்தித்துவந்ததுமீகரமே
தேசிகன் கோயிலுக் கெழுந்தருளியது
விருத்தம்
சிந்தைசெய்துசத்தியாகாலந்தன்னிற்விருத்தம்
றேவியுடன்குமாரனையும்வைத்தரங்கம்
வந்துசேர்ந்தடியவரோடிருந்துபிள்ளை
மங்களாசாசனஞ்செய்திருக்கும்நாளி
சைந்துகாவிரிக்கரைமண்டபத்தரங்கர்
தாந்திருவோலக்கமாயிருந்ததோர்நா
ளந்தநாட்டுருக்கர்வந்தசெய்தி
யார்கடாஞ்சொல்வரந்தப்போர்கடாமே.
இராகம் ஆரபி தாளம் ஆதி
கண்ணிகள்
மோகாந்தகாரர்க்கொள்ளைக் காரத்துருக்கர்படைகண்ணிகள்
முடுகிவந்தெனவேயொருவர்பார்த்தவுடன்
ஏகாந்தகாரமாகச்சொல்ல அதிகாரிதானுடனே
யெம்பெருமான்முன்னேசாந்துகாப்புச்சாத்த
அங்கிருந்துபிள்ளைமுதலானோர்கள்திருவுள்ள
மறிவதாகப்பார்க்கச்சீட்டுப்போட்டு
அங்கதுபுறப்பட வேண்டாமென்றிருக்கவே
அறிந்துகொண்டனைவருமிருந்தாட்டு
எதுவந்தாலும்வரட்டு மென்றுநிர்ப்பயராகி
யிருந்தார்தூப்புற்பிள்ளையாமிவர்வாசித்து
அதிகாரியதைவிசுவசியாமற்பிள்ளைலோகா
சார்யருடனேதானாலோசித்து
கொண்டுமுன்னோர்விக்கிரகமேறியருளப்பண்ணிக்
கொண்டோலக்கமீதிலுமாராதனங்
கண்டருள்கிறாரென்று திரைவளைத்துப்பாவாடை
கட்டிக்கொண்டிருப்பார்போல் பேதனம்
நாடியழகியமணவாளப்பெருமாளையும்
நாச்சியாரையுந் திருப்பெட்டகத்தில்
மூடியெழுந்தருளப்பண்ணிக்கொண்டவர்தாமே
முனைந்துசெல்கிறாரையா காட்டகத்தில்
பிள்ளைலோகாசாரியருமவர்களும் வில்லுக்கொண்டு
பின்செல்வாரில்லாமையால்தாமுஞ்சென்றார்
கொள்ளைக்காரத்துருக்கர்கள்பரிமேலேவரக்கண்டு
கொண்டுதிருவோலக்கங்கலைந்துநின்றார்
பெருகுங்கலகத்தையானென்னசொல்வேன்சந்நிதியிற்
பெருமாளையுங்காணாமையதினாலே
பரபரப்புடனோடமாட்டாதிருக்கும்வேளை
பாருமவ்வளவிலேயிங்குமேலே
சுருதப்பிரகாசிகசாசார்யர்தாமெழுதியருளிய
சுருதப்பிரகாசிப்பட்டோலையையந்தச்சிட்டர்
அதுதன்குமாரறியாப்பிள்ளைகள்வேதாந்தா
சார்யபட்டர்பராங்குசபட்டர்
தாமவரிருவரையும்வேதாந்ததேசிகர்
சந்நிதிதன்னிலே காட்டிக்கொடுத்துப்
பூமியினீரெப்படியேனும்பிழைத்திருந்து
புகழ்சுருதப்பிரகாசிகையைத்தொடுத்து
பார்த்துப்பிரபலஞ்செய்தென்குமாரரிருவரையும்
பரிபாலனஞ்செய்குவீரென்றுநாட்டி
ஏத்தினர்துருக்கர்கள்கூடிவந்தங்குள்ளாரை
யிமிசைசெய்தாரய்யாதீமைசூட்டி
அழகிய மணவாளர் காடேற எழுந்தருளியதும்,
சுருதப்பிரகாசிக பிரவசனமும்
பத்தியென்பதொன்றுமில்லாப்பவதுருக்கப்சுருதப்பிரகாசிக பிரவசனமும்
படைவருவதறிந்தெழுந்திட்டிவரேநல்ல
புத்திமான்காவேரிமணலிலங்கே
புதைத்தசுருதப்பிரகாசிகையையேந்திக்
கற்றறிந்தார்சுருதப்பிரகாசிகார்யர்மைந்தர்
காணுமரங்கந் துருக்கர்காடாய்கண்டிச்
சத்தியாகாலந்தனிலேகண்டாவ
தாரர்தாமிருந்தனர்கம்பீரர்தாமே.
இராகம் பூரிகல்யாணி தாளம் ஆதி
கண்ணிகள்
ராமானுஜர்க்கபி மதமாம்- திருகண்ணிகள்
நாராயணபுர மிதமாம் - என்று
காமிதம்கொண்டாங்கே நாடித் -- திருக்
கல்யாணியிலே நீராடி
பிரபத்திமார்க்கங்களாஞ் சாஸ்த்ரம் -- நெறி
பிரபலமிகுந்திடு ஸ்தோத்ரம்
கபர்த்திமதமென்று சந்தித்துப் -- பாஷ்ய
காரர்திருவடி வந்தித்து
நாற்றிசையும்புகழ் வெள்ளையே -- செல்ல
நாரணனைச்செல்வப் பிள்ளையே
போற்றியதுகிரி நாச்சியார் -- தாமே
புருஷகாரமாக வாய்ச்சியர்
இந்தவிருவரைப் பணிந்தே -- நெஞ்சி
லெம்பெருமானென வணிந்தே
அந்தத்தேசந்தன்னைத் தேறியே-- மங்க
ளாசாசனஞ்செய்து கூறியே
சத்யகாலமென்ற வூருக்கே -- வந்து
தானேரங்கநாதன் பேருக்கே
நித்தியானுசந்தானம் பண்ணுவா -- ரிடர்
நீங்கும்படியாக எண்ணுவார்
துலுக்கர்நாடாகவே மண்டிற்றே -- இதைத்
தொலைப்பதெப்போதிங்கே கண்டித்தே
சிலுக்குக்கொத்தாகவேகொத்தியே -- வினை
தீர்ந்துநமக்கென்றும் வெற்றியே
கண்டழகிய மணவாள -- ரரங்
கத்தில்வரவோண நாளர்
விண்டுவபீதித் தவத்தையும்
விண்ணப்பஞ்செய்தா ரனைத்தையும்
என்னசொல்வோமின்னஞ்சொல்லுவோம் -- வினை
யேதேதுவந்தாலும் வெல்லுவோம்
பொன்னிரிசூழரங்கந் தனையே -- விட்டுப்
போந்தருளிமுனை வனையே
கூடிவெங்கானலி நூடே -- வழி
கொண்டுசிலவும்பி நோடே
கூரடியறிந்திட்டார் கள்ளர்கள் -- வந்து
கொள்ளையிட்டார்கபட் டுள்ளார்கள்
அப்படியேலோகார்யர் தடுக்க -- வந்து
அவர்பொருளுங்கொள்ளை கொடுக்க
இப்படிப்பட்டுப் படாமலே - யந்த
எம்பெருமானை விடாமலே
சோதிடபுரத்திற் சேர்த்தன --- ரங்கே
சுரத்தாற்றிருநாட்டைப் பார்த்தனர்
சோதனையைநிரு வகிப்பா-- ரென்றுந்
தொண்டர்துன்பத்தைச் சகிப்பார்
பெருமாள்விளையாட்டை யாடுவார் --அதைப்
பிரமருத்திராதிகள் தேடுவார்
திருமாலிருஞ்சோலை வாசந்தான் -- குல
சேகராழ்வார்திவ்ய தேசந்தான்
கொல்லங்கொச்சிகூட நாட்டிலே -- வாசங்
கொண்டிருந்துங்கோழிக் கூட்டிலே
செல்லவதின்பின்னுநம் மாழ்வார் -- திவ்ய
தேசந்தனைச்சேர்ந்தங்கும் வாழ்வார்
அருகுள்ளவெம் பெருமான்களை -- யவ
ராதரித்தோங்கிநல் லாங்களைத்
திருமுத்தின் சிங்காதனத்திலே -- கூடச்
சேர்த்துநம்மாழ்வார் மனத்திலே
நேராய்வரிசை சமர்ப்பித்தார்--- அங்கே
நின்றும்புங்கனூர் தனையுற்றார்
நாராயணபுரத் துள்ளேயே -- வாழநி
னைத்தழகின்செல்வப் பிள்ளையே
கூடவுங்கொண்டிருந் தலத்திலே-- வட
குன்றுதிருவேங்க டத்திலே
நாடினதம்மலை யோகந்தான் -- வெகு
நாளிருந்ததும்வை போகந்தான்
விருத்தம்
மிஞ்சுபுகழ்வேங்கடமாமலையின்மீதேவீற்றிருந்தாரழகுமணவாளரங்கே
செஞ்சியதிபதிகோபணார்யனென்பான்
சேஷகிரிவாசனையேபணியவந்து
கொஞ்சுபரியானைமேலுங்காணிக்கை
கொண்டுவந்துதுருக்கர்செய்ததறிந்துபின்னும்
வஞ்சனையாய்ப்படையெழுப்பித்துருக்கர்பொல்லா
மண்டைதானுருட்டியதோர்சண்டைதானே.
தரு இராகம் மோகனம் தாளம் ஆதி
பல்லவி
பாரியானசண்டையே -- கோப -- ணார்யராஜின்சண்டையேபல்லவி
அனுபல்லவி
பாரியதாய்ரண பேரிமுழக்கொரு
சாரியதாகவே வீரியர்சூழ்வரு
பாரினிலேமுனை நேரிடுவார்கள்
போரிடுவார்வெகு பேரிடுவாருடன்
பரவுபடைநெருக்க -- வருமெதிரிகள்வெஃகத்
தரணிமன்னர்பிரமிக்க -- வுரசுவிருது மிக்க (பாரி)
சரணங்கள்
திருவேங்கடபதி சந்நிதிமுன்சென்றுபிலுக்கவே காட்டி --அநியாயத்துலுக்கரைவாட்டி -- தருமத்தின்
சேவிக்கவென்றவன் பண்டு
வரவேதிருமலை தன்னிலுமழகிய
மணவாளரிருப்பதைக் கண்டு
ஒருதிருவிளையாட் டிதுவென்றுமனுதாபத்
துடனேகோயிலிற் கொண்டு
பெருமாளையெழுந்தருளப் பண்ணவேணுமென்று
பெரியதாகியபத்தி யுண்டு -- அதைப்
பெருங்கணையெடுப்பேன் -- மனுநெறியொருங்குடன்றொடுப்பேன்
-- என்றுசொல்லிப்
பிசகாமற்பெருமாளைப் பரவிக்கைகுவித்தாபங்கிலுற் றானே திருமணற்றூண் சிங்கப்பி ரானே -- வேதையது
னிசைசிங்கிபுரத்திலே யெழுந்தருளுவித்தான்
பெரிதானகோயிற்குள முண்டாக்கிநண்ணினான்
பரிவாயனைத்தழகுங் கண்டருளப்பண்ணினான்
பின்புதுலுக்கரை வெல்லத்தென்புகொண்டதுவுநல்ல
பேரானதீர னையா வீராதிவீரனையா (பாரி)
ஆரெங்கும்புகழ்கின்ற சிங்கிபுரத்தில்வாச
மாமழகியமண வாளன்
ஸ்ரீரங்கநகரத்தைத் துருக்கனுஞ்சூறையாடிச்
சேர்ந்திருந்தானைய சண்டாளன்
கோரங்களாகக்கண்ண புறத்திலிறங்கிக்கொண்டு
கோட்டையெடுக்கக் குண்டகோளன்
பாரெங்கும்புகழ்கோடி மதிள்கள்கோபுரங்களைப்
பற்றிக்கொண்டொரு காணியாளன் -- அவன்
பண்ணினான் வஞ்சந் --தயிரியந்தா னெண்ணினானெஞ்சம் --இந்தச்சீமை
பணங்கள்காசுகள் மலைமலையாகக்கொட்டிக்பலுக்கிச்சொல்லவுந்தொட்டான் -- துலுக்கனப்படி விட்டான்
கொணர்ந்துகுவித்துக்கோட்டை கொம்மைகளையுங்கட்டிப்
பண்ணிச்சகலகாரிய நான்செய்குவேன்முன்ன
மென்னைப்பிரதானிக்கமாய் வைத்திடிலென்ன
பப்பளிக்கையின்றிமெய்தான்கொப்பணார்யன்வரச்செய்தான் (பாரி)
துலுக்கன்கீழ்துரைகளை உளவாக்கிக்கோட்டைவாசல்பிரபலங் கொண்டு -- கொப்பணார்யன் வருவது கண்டு -- நவசிங்கப்
துறந்துவிட்டதி னாற்பாரி
வலுக்கும்ரேகலாவோடு பீரங்கிதுபாக்கியின்
வரிசைபட்டாகத்தி கடாரி
குலுக்குஞ்சுக்குமாந்தடி யெறியீட்டியெறியம்பு
குறுந்தடிகுண்டார் தடிசூரி
பிலுக்கும்படைகளொடு சதுரங்கபலத்துடன்
பேரிகர்ணாடங் காபூரி - வெகு
பிரானெதிர் சாற்றத் -- துலுக்கனுக்குச் சுராபான மேற்ற -- அந்தவேளை
பிலுக்கியளவுகண்டு கோட்டைலங்கையேறினான்அழகியமணவாளர்கோயிலுக்கெழுந்தருளியதும்
துலுக்கர்களைவளைத்து மாட்டிவெட்டிச்சீறினான்
பிணக்காடிரெத்தவெள்ள மானசண்டைதாக்கினான்
வணக்கமில்லாதவரை மறலிநாட்டிற்போக்கினான்
பிண்டமாகச் சிலபேர்கள் -- முண்டமாகச் சிலபேர்கள்
பிரமத்துவேஷிகளைப்போக்குந் --தரிசனவிரோத நீக்கும் (பாரி)
அபீதிஸ்தவம் அருளியதும்.
விருத்தம்
கெடியேற்றியிப்படிக்கேகோபணார்யன்
கீர்த்தியாய்த்துருக்கர்களைச்செயித்தநல்ல
குடியேற்றிக்கோயிலெல்லாமலங்கரித்துக்
கொண்டழகுமணவாளர்தமையுமங்கே
படியேற்றிநாச்சிமாருடனேசேர்த்த
பரிவுகண்டுசகுடும்பராகப்பிள்ளை
அடியேற்றிமங்களாசாசனந்தா
னளிசெய்தாரரங்கர்திருப்பளிசெய்தாரே.
(நாளை முற்றும்)
லேபிள்கள்:
ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள்
வெள்ளி, 28 நவம்பர், 2008
திருப்பாதுகமாலை
ஸ்ரீ கேசவ அய்யங்காரின் “திருப்பாதுகமாலை”யிலிருந்து முதல் இரு பத்ததிகள் இந்த லிங்கில் உள்ளன.
புதன், 26 நவம்பர், 2008
Sri Padhuka Sahasram in Tamil
ஆத்தூர் வீரவல்லி சந்தானம் ஸ்வாமி தமிழில் மொழிபெயர்த்துள்ள ஸ்ரீபாதுகாசஹஸ்ரத்திலிருந்து முதல் மூன்று பத்ததிகள் இந்த லிங்கில் உள்ளன. Download செய்துகொள்ள சிலர் விரும்புவதால் கேசவ அய்யங்காரது திருப்பாதுகமாலையைத் தனியாகவும் சந்தானம் ஸ்வாமியின் மொழிபெயர்ப்பைத் தனியாகவும் pdf fileஆக அனுப்புகிறேன்.
ஞாயிறு, 23 நவம்பர், 2008
ஸ்ரீவேதாந்த தேசிகவைபவப்ரகாசிகைகீர்த்தனைகள்
இராகம் புன்னாகவராளி தாளம் சாப்பு
கண்ணிகள்
களங்கமில்லாச்சத்தியாகாலமெனுமக்கிரகண்ணிகள்
காரமிவராலேசிறந்தது -புகழ்
விளங்குமக்காலத்தி லட்சுமணாரியர்திரு
மேனியில்வைவர்ணியம்பிறந்தது
குமாரருமின்றி யிருந்திடவுங்கண்டு
கொண்டவர்தேவிகள் ஓலுவரே - எங்கும்
சமானமிலாத பாகவதாப
சாரமிதுவென்றுசொல்லுவரே
வேதாந்தாசாரியர் சன்னிதியினாஞ்சென்று
வேண்டியபசாரக்ஷாபணஞ் - செய்தால்
சாதாரணமாகவெல்லாநன்மையுந்
தாமுண்டாவென்றதேசோபனம்.
இங்கிதைக்கேட்கவந்த லட்சுமணாசாரியரு
மேற்றுக்கொண்டார்கிருபாவருஷரே - தவள
சங்கத்திருப்பல்லக்குமுதலாகிய
சம்பிரமுள் ளமாபுருஷரே.
தமதுவிருதெல்லாங்கோயிலிலேவைத்துத்
தாமுந்தேவிகளுமாகவே -- பாத
கமலநடையாகச்சத்தியகாலத்துக்கே
கண்ணனருள்பாடியேகவே.
சதிராகலட்சுமணசாரியரும்வேதாந்த
சாரியர்தமைத்தேடிநண்ணினா -- ரங்கே
எதிர்கொண்டுசாஷ்டாங்கமாகப்பிரணாமந்தா
னெங்கள்வேதாந்தாசாரியர்பண்ணினார்.
அங்கவர்தந்திருமாளிகையிலெழுந்
தருளச்செய்துபசரித்தனர் -- வேத
புங்கவர்லட்சுமணாசாரியார்வந்தவகை
பொருந்தவெல்லாமும்விரித்தனர்
தினந்தோறும்பாஷியவியாக்கியானமேகால
க்ஷேபமாகவேசாதித்து -- அதி
னனந்தரம்பிள்ளைஸ்ரீபாததீர்த்தத்தை
யங்கீகாரஞ்செய்துபோதித்து
தேவிகளுக்கும்பிரசாதித்திருக்வத்
திர்த்தத்தின்வைபவத்தாலே -- அவ
ராவியுடலுக்குமானந்தமாயொரு
ஆண்டுக்குள்ளாயுடன்மேலே
சேர்ந்துஇருந்திட்டரோகமுந்தீர்த்துடன்
தேவிகளுங்கர்ப்பந்தரிக்க -- மனங்
கூர்ந்தலட்சுமணாசாரியரும்மகிழ்ச்சி
கொண்டுமிகவுபசரிக்க
அத்புதவேதாந்தாசாரியார்தம்முடை
அநுமதிபெற்றுநீடி - நாளுங்
கற்புமிகுந்திடுந்தேவிகளுடனே
கலந்திருந்துகொண்டாடி
நாற்றிசைசொல்லுமரங்கந்தனைச்சேர
நல்லகுமாரரும்பிறக்க -- அந்தத்
தீர்த்தமகிமையால்வந்தபிள்ளைநாமந்
தீர்த்தப்பிள்ளானென்றுசிறக்க
பிரபலமாகுந்திருத்தந்தைபேருடன்
பிள்ளைக்கிசைந்திடும்பேர்கள் -- நலந்
தரவேயாயியாழ்வார்பிள்ளையென்றுகூட்டிச்
சாற்றினாரென்றுஞ்சொல்வார்கள்
ஏற்குந்தீர்த்தப்பிள்ளானாயியாழ்வார்பிள்ளான்
என்றேயிரண்டுபேர்தாங்கி -- இந்தப்
பார்க்குள்ளேலட்சுமணாசார்யர்குலந்தான்
கனைத்ததையாபுகழோங்கி
மண்டலமீதிலேயெங்கெங்கேதான்கவி
வாதிசிங்கர்க்கிணைதேசிகர் -- ஆருங்
கண்டதுண்டோசொல்லும்வெகுப்ரபந்தத்தைக்
காட்டியருள்செய்தார்பூசிகர்
பிள்ளையென்றால்தூப்புற்பிள்ளைமற்றப்
பிள்ளையெல்லாமணிற்பிள்ளையே - யென்று
தெள்ளுமொழியாகவெங்குஞ்சொல்லப்பைய
தீட்சிதரேவெள்ளையே
சாண்கட்டைமீதிலேயாயிரத்துவாரத்தைத்
தானிட்டவேதாந்தமூர்த்தியே -- இவரை
காண்கநினைக்கவேயெண்ணியதெல்லாந்தாம்
கைகூடுமென்பதுங்கீர்த்தியே.
கொச்சகக்கலிப்பா
பாயுநீர்பொன்னிசூழ்ந்த பதிசத்தியாகாலமென்னும்மேயினவக்கிரகாரத் தேகாந்தமிசைந்தபிள்ளை
மாயிருஞாலத்தேயாழ் வார்கடாம்பதின்மர்பாடுங்
கோயிலினைப்பைநெஞ்சிற்கொண்டிட்டார்கண்டிட்டாரே.
லேபிள்கள்:
ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)