வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

வியாழன், 14 பிப்ரவரி, 2013

ஸ்ரீ விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம் பகுதி 2

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய “ஸ்ரீ விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ர”த்தின் 3 முதல் 6 வது ச்லோகங்களுக்கு ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் வியாக்யானம் தரவிறக்கிக் கொள்ள
http://www.mediafire.com/view/?wklt15u71ouw2g1
நேரடியாக இங்கேயே படிக்க/தரவிறக்க

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பகவத் த்யான ஸோபாநம் இறுதிப் பகுதி.

நாட்டேரி ஸ்ரீராஜகோபாலாசாரியார் ஸ்வாமி நிகழ்த்தி வரும் “ஸ்ரீ பகவத் த்யான ஸோபாந”த்தின் நிறைவுப் பகுதி இங்கு இருக்கிறது.  அடியேன் அகத்தில் ஏற்பட்ட சில அசாதாரண சூழ்நிலைகளால் சென்ற வாரங்களில் இங்கு பகிர்ந்து கொள்ளப் பட்ட உபந்யாஸங்களில் ஒலிப்பதிவு தரத்தை சரிபார்க்காமலேயே பகிர்ந்து கொள்ளவேண்டி நேர்ந்தது. அதனால் பலருக்கு இந்த உபந்யாஸங்களின் ஒலிப்பதிவு திருப்தியாக இல்லை என்று அறிகிறேன். இந்த நிறைவுப் பகுதி அந்தக் குறையைப் போக்கும்.

ஒரு சில தினங்களில் எல்லா உபந்யாஸங்களையும் முழுமையாக ஒரே பதிவாக (ஒலிப்பதிவுக் குறைகளை முடிந்தமட்டிலும் சீர்செய்து) பகிர்ந்து கொள்கிறேன்.

வாராவாரம் தான் பெற்ற இன்பம் வையம் முழுவதும் அனுபவிக்கவேண்டும் என்று இந்த உபந்யாஸங்களை அடியேனுக்கு அனுப்பிக் கொடுத்த ஸ்ரீஆர். தேவநாதன் ஸ்வாமிக்கும், தனது அசோக் நகர் க்ருஹத்தில் இந்த அருமையான உபந்யாஸங்கள் நடக்கக் காரணமாயிருந்து பேருபகாரம் செய்திருக்கும் ஸ்ரீ ஜெகந்நாதன் ஸ்வாமிக்கும் அடியேனது க்ருதஜ்ஞையைத் தெரிவிக்கிறேன்.

 

இனி உபந்யாஸத்தின் நிறைவுப் பகுதியை நேரடியாகக் கேட்டு மகிழ

To download from Mediafire

http://www.mediafire.com/?39xj6x97hlcvcf4

திருவரங்கர் தத்தை விடு தூது

மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

சில தினங்களுக்கு முன் இங்கு மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்காரின் “திருவரங்கர் தத்தைவிடு தூது” நூலை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.  ஆனால் வீட்டில் ஏற்பட்ட சில அசாதாரணமான சூழ்நிலையால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.  எனவே அந்நூலைத் தட்டச்சிட்டு இங்கு பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக நூலை முழுவதுமாக வருடி இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  நூலை இங்கு படிக்கவும் செய்யலாம். அல்லது தரவிறக்கி பின்பும் நிதானமாகப் படிக்கலாம்.

thiruvarangar thatthaividu thoothu திருவரங்கர் தத்தைவிடு தூது by api_11797_rajamragu