जगत्सत्यत्व निरूपणम्
ஜகத் ஸத்யத்வ நிரூபணம்
ப்ருதிவீ, ஜலம், தேஜஸ் ,வாயு, ஆகாசம் என்கிற ஐந்து பூதங்களும்,அவைகளின் கலப்பினால் உண்டான சராசரரூபமான இந்த ப்ரபஞ்சமும் ஸத்யமாயுள்ளது. 1கானல் நீர்போல் அஸத்யமன்று. கானல்நீரில் ஸ்நாநம் பானம் முதலியவை செய்யமுடியாது. அவ்வாறில்லாமல் நதியிலுள்ள ஜலம் ஸ்நாநம் முதலியவைகளுக்கு உபயோகப்படுகிறபடியால், கானல் நீரைப்போல இதுவும் பொய்யாயிருக்க முடியாது. பொய்யாயிருந்தால் அதைக்கொண்டு கார்யம் நடவாது. ஆகையால் ஆற்றின் ஜலம் ஸத்யமானது. அது ஸத்யமானால், 2ப்ரவாஹத்திற்கு முன்னும் பின்னும் ஜலம் காணவேண்டுமே, அவ்விதம் இல்லாததை எப்படி உண்மையானது என்று சொல்லலாம் என்னில், முன்னும் பின்னும் காணாததால் ப்ரவாஹம் அநித்யமென்று கிடைக்குமேயொழிய அஸத்யமென்று கிடைக்காது. அஸத்யமாவது- ஒரு கார்யத்திற்கும் உதவாதது. அநித்யமாவது- கார்யத்திற்கு உபயோகப்பட யோக்யதையோடு சிலகாலமிருந்து அழிந்துபோவது. இதற்கு த்ருஷ்டாந்தம்-மண்ணை ஜலத்தைச் சேர்த்துப் பிசைந்தால் அது உருண்டையாகிறது. பிறகு குயவனால் பானையாகச் செய்யப்படுகிறது. அப்போது ஜலம் கொண்டுவருவது முதலிய கார்யங்களுக்கு உபயோகப் படுகிறது.. கல், தடி முதலானவைகளால் அந்தப் பானையை அடித்தால், அது பானை என்னும் 3ஆகாரத்தை விட்டு ஓடாகிறது. அந்த ஓட்டை உடைத்தால் பொடியாய் மண்ணாகிறது. ஆகையால் மண் என்னும் வஸ்து நித்யமாயுள்ளது. இடையிடையே வரும் ஆகாரங்கள் அநித்யம். முதலிலுள்ள வஸ்து எப்பொழுதும் உள்ளதுதான். ஆனால் நதிஜலமும் முன்னும் பின்னும் இருக்கவேண்டாவோவென்றால் - அதில் சிறிதுபாகம் மணலில் மறைந்தும், சிறிது ஸூர்ய கிரணங்களில் கலந்தும் போகிறபடியால் காணப்படுவதில்லை. வஸ்து உள்ளதுதான். ஆனால் ப்ரவாஹ மாயுள்ள ஆகாரம் அப்போது இல்லாதபடியால் 4கார்யகாரியாவதில்லை. இதனால் அது அஸத்யமாக மாட்டாது, அநித்யமாகும். நித்யமாவது எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. ப்ரவாஹாகாரம் எப்போதும் அநுவர்த்தித்து வராமையால் அநித்யமாய் முடிகிறது. இப்படியே, மண்பொன் முதலியவைகளுக்கு அப்போதைக்கப்போது வரும் பானை, காப்பு முதலிய ஆகாரங்களிலும் கண்டு கொள்வது. அநித்யமாயிருப்பது தான் அஸத்யமாகை என்றால், இப்படிப்பட்ட அஸத்யமாகை விருத்தமன்று. இந்த அஸத்யமாகையும் ப்ரவாஹாகாரத்திற்கே தவிர எப்போதும் அநுவர்த்திக்கும் ஜலத்திற்கு இல்லை.
ஸத்யமாவது-
எப்போதும்
அநுவர்த்திக்கும் வஸ்து.
இது இரண்டு
விதம்-ஒன்று
ஸ்வரூபத்தில் மாறுபாடில்லாமல்
அநுவர்த்திக்கும்;
மற்றொன்று
ஸ்வரூபத்தின் மாறுபாட்டோடு
அனுவர்த்திக்கும்.
முதலில்சொல்லியது
அபரிணாமி, நித்யம்.
பரப்ரஹ்மமும் ஜீவாத்மாக்களும்
இவ்வகைப்பட்டன.
இரண்டாவது
5பரிணாமி,
நித்யம் ;
ப்ரக்ருதி,
காலம்
முதலியவைகள் இதைச் சேர்ந்தன.
_________________________________________________
1கானல் -- பாலைவனத்தில் மத்யானத்தில் ஸூர்யகிரணங்கள் பரவுவதால் காணப்படும் ஜலம் போன்ற பொய்த்தோற்றம்; 2 ப்ரவாஹம் -- வெள்ளம். 3 ஆகாரம் -- आकारः உருவம் 4.कार्यकारि –– குளிப்பது , குடிப்பது முதலிய கார்யங்களுக்கு உபயோகமாயிருப்பது. 5. परिणामि -- மாறுதல் அல்லது விஹாரத்தை உடையது. அது இல்லாதது அபரிணாமி.