சனி, 14 ஆகஸ்ட், 2010

வைணவ ஆசாரியர்கள்

Adiyen may kindly be excused for continuing after a very long time. Some may remember that when the third chapter was posted, adiyen expressed about my very poor command over English. A reader of this blog offered his help in translating into English and suggested a few modification in the previous chapter posted already. Since they seemed to be really good, adiyen sent the subseequent chapters to him so that readers may enjoy good English. But unfortunately, despite several reminders, he prefers to be silent. And hence the delay. Result -- all of you have to tolerate my Engamil. Please continue reading .

4.தமிழ் மறைகளை மீட்டமை

Restoring the Tamil vedams

மின்னனை மேனி வைணவர் மிக்கோர்
            மேற்கினின் றுற்றவ ரொருநாள்
மன்னனா ரடியிற் படிபவ ராரா
            வமுதெனத் தொடங்கிடு பதிகம்
சொன்னய மொளிர விசைத்திட நாத
            முனிவனுஞ் சுவைத்தன னதனை
என்னிது முடிவோ ராயிர மியலில்
            ஈதொரு கூறென வோர்ந்தனன்.                                32.

            மேற்கினின்று வந்தவர் சிலர் மன்னனார் முன்னே "ஆராவமுதே" என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றினை இசைக்க, அதன் இறுதியில் "ஓராயிரத்துள் இப்பத்தும்" என்பதைக் கேட்டு, இப்பாக்கள் ஓர் ஆயிரம் என்று நாதமுனி அறிந்தமை. படிபவர் – வணங்குபவர். சொல் நயம் ஒளிர – சொல்லின் சுவை விளங்குமாறு. என் இது முடிவு – என்னே இந்த முடிவு! ஓர் ஆயிரம் இயலில் இது ஒரு கூறு – ஆயிரம் பாக்களில் இப்பதிகம் ஒரு பகுதியாய்.

            One day some Srivaishnava Brahmins from western parts of the village    came to Veeranarayanapuram. (The poet uses an adjective to describe them – minnanaiya meni – that their complexion is so bright like a lightning. We may construe that meni here means face so bright , shining with thejas because of their scholarship.)  They worshipped Mannanar and were singing a verse starting “Araavamuthe”  ( a song in praise of Thirukkudanathai Araavamuthan) excellantly so as to make the listener understand and enjoy the rich meaning of the verse. Sri Natha Muni was listening to it. The verse was concluded with a phrase (OrayiratthuL ippatthum). Sri Nathamuni inferred from that it must be a portion of one thousand verses.

அந்தணர் தம்பா லருந்தவன் நாத
            முனியிது  பகர்ந்தன னணுகி
"கொந்தலர் தாரான் குடந்தையன் றன்னைக்
            கோதறு மமுதெனும் பாவால்
சிந்தனை யுருகப் பாடினிர் விஞ்சும்
            பாவினைச் செப்புதி ராகில்
சந்ததம் நும்பா லன்பினி லார்ப்பன்
            நும்புகழ் தரணியி" லென்றான்.                         .33.

            மற்றைப் பாக்களை அருளுமாறு நாதமுனி இவர்களை வேண்டியமை. கொந்து அலர் தாரான் – மிக்க மலர்கள் வேய்ந்த மாலையையுடையவன். கோது அறு அமுதம் – கோதில்லாத அமுதம். பாடினிர் – பாடியருளினீர். சந்ததம் – எப்போதும்.

            Sri Nathamuni requested the Brahmins” you sang so enchantingly nectar-like songs on Thirukkudanthai Araavamuthan, who adorns rich flower garlands. If you sing the remaiing songs from the thousand, I will spread your fame  all over the world”

"மேதைய! எளியேம் அறிந்துள மிதுவே
            விஞ்சுவ வல்லவ ரிலரால்
மாதவன் பனுவல் மறைந்தது காலக்
            காரிரு ளாழியு" ளென்றார்
வேதியர் நாதன் நாதனு மிவர்தாள்
            பணிந்தனன் நாரணன் பாதப்
போதினிற் படிந்து படர்ந்தன னின்பத்
            தமிழினைப் பயந்தவன் புரியே.                               .34.

            விஞ்சிய பாக்களைப் பெற நாதமுனி திருக்குருகூர் சென்றமை. எளியேம் இதுவே அறிந்துளம் – நாங்கள் இப்பதிகம் ஒன்றுதான் அறிவோம். விஞ்சுவ வல்லவர் இலர் ஆல்  ---- மாதவன் பனுவல் அருந்தவத்தினனாகிய சடகோபனது பிரபந்தம் . கார் இருள் கால ஆழியுள் மறைந்தது – கறுத்து இருண்ட காலமாகிய கடலில் ஆழ்ந்தது. நாதமுனி இவர்களது தாளிற் படிந்து, நாரணனது திருவடியை வணங்கித் திருக்குருகூர் சென்றார். இன்பத் தமிழினைப் பயந்தவன் – சடகோபன்.

            The Brahmins replied “ We know only these ten and do not know anything else except that these were sung by the great saint Thirukkurukur Sadagopan. All the other verses have went into oblivian “. Sri natha muni prostrated before the Brahmins and proceeded to Thirukkurkur in search of the songs.

வருபுனற் பொருநல் வளனது பரவும்
            வண்குரு கூர்தனில் மாறன்
திருவடி பணிந்து சீதர னாதி
            நாதனை வணங்கினன் செம்மல்
வரகவி மதுர கவிதனின் சீடன்
            மரபினன் பெரியவன் சீலன்
திருவினன் பாராங் குசனடி யென்பான்
            ஒருவனைக் கண்டிது செப்பும்.                                .35.

            ஆங்கு மதுரகவிகளின் சீடர் ஒருவரின் மரபினராகிய பராங்குசதாஸர் என்பவரைக் கண்டமை. வரு புனல் பொருநல் – தாமிரவருணியாகிய ஆறு. சீதரன் ஆதிநாதன் – சீதரனாகிய ஆதிநாதன்: அத்தலத்து எம்பிரானது திருநாமம். பாராங்குசன் – ஆதி நீண்டது.

            He reached Thirukkurukur, which is very fertile due to the ever flowing Porunai (Thamiravaruni) river, worshipped Nammalwar and Sri Adhinathan and met one Parankusa dasan, a descendant of Sri Madhura Kavi sishya paramparai.

"மேலவ! மதுர கவிதனின் மேதைச்
            சீடனின் வழிவரு மொளியோய்!
மாலவன் றன்பாற் குழலினு மினிப்பப்
            பாடிய மன்சட கோபன்
கோலநன் னூலோ ராயிர மடியேற்
            கருளு தி கோவித!" என்ன
மேலவன் நாத முனிவனைத் தழுவி
            விளம்பினன்  விரிவினி லிதுவே.                         .36.

            அவரிடம் நாதமுனி வேண்டியது. ஒளியோய் – ஒளியுடையவரே. மன்—மன்னவன். முதல்வன். கோல நல் நூல் ஓர் ஆயிரம் --- கோவித – அறிந்தவனே. விளம்பினன் – கூறினன்.

            Sri Natha muni requested Parankusa dasan “ Respectful learned and descendant of madhura kavi sishya ! Please bless me with  the thousand verses of swami nammalvar on Lord Narayanan,”. Parankusadasan embraced Sri Natha Muni and replied.

"தேசொளிர் நுதலோய்! தேனினி மினிய
            செழுந்தமி ழாயிர மின்றிக்
கேசவ னடியார் ஏனையர் பனுவல்
            கேட்புதி மறைந்துள வெல்லாம்
பூசிதன் மதுர கவிதனின் கண்ணி
            நுண்சிறுத் தாம்பெனுங் கவிதை
மாசற உரைப்பல் மனந்தனு ளார்த்து
            மாறனி னருடனைப் பெறுதி.                       .37.

            பராங்குசதாஸர் மொழிந்தது. தேசு ஒளிர் நுதலோய் – ஒளி வீசுகின்ற நெற்றியை உடையவரே. கேசவன் அடியார் ஏனையர் – மற்ற ஆழ்வார்கள். கேட்புதி – கேட்பாய். பூசிதன் – பூசனைக்குரியோன். கண்ணிநுண் சிறுத்தாம்பு – நம்மாழ்வார் விஷயமாக மதுரகவியாழ்வார் அருளிய பதினொரு பாக்கள். கண்ணிநுண் சிறுத்தாம்பென முதற்பா தொடங்கும். உரைப்பல் – கூறுகின்றேன். அருள்+தனை =அருடனை. பெறுதி – பெறுவாய்.

“Oh! Dear Nathamuni , tejas shining on your forehead! You recite Madhura Kavi Azhwar’s “kanninun siruthambu” most dedicatedly and without mistakes before Nammazhwar. You pray him to bless with not only his thousand but for all the works of other Azhwars also. {“Kesavan adiyaar enaiyar – all other azhwars who also devoted their life in praise of Narayanan .} Thus you can be blessed by Nammazhwar

  "மறையவர் முன்னோய்! இதுதனை மாறன்
            முன்னரு யோகினி லுற்றுக்
குறையறப் பன்னீ ராயிர முறைநீ
            ஒலித்திடக் குருகையர் கோமான்
நறையுகு வகுளத் தாரினன் தோன்றி
            நவின்றிடும் மறைந்துள வெல்லாம்
நிறைவுறும்  நந்தம் நெறி"யென மதுர
            கவிதனின் பனுவலை நவின்றான்.                                     .38.

            "இப்பனுவலை நம்மாழ்வாரது முன்னர் பன்னீராயிரம் முறை ஓதினால் ஆழ்வார் தோன்றுவார்" எனப் பராங்குசதாஸர் உரைத்தார். குருகையர் கோமான் – நம்மாழ்வார். நறை உகு வகுள தாரினன் – தேனைச் சொரியும் வகுளமலர் மாலையை அணிந்தவன். (நம்மாழ்வார்)

Parangusadasar continued “You, the leader of Vedic scholars! if you recite this kanninun siruthambu 12000 times without any mistakes and  engrossed on Nammazhwar and do penance praying to Nammazhwar , he who wears garlands of honey filled Vakula pushpam ,will appear before you and bless you with all the works of all the Azhwars” and teached “kanninun siruthambu” to Nathamuni

மாறனின் முன்னர்த் திரைதனை விரித்து
            மறையவர் புங்கவ னமர்ந்தான்
வேறது தனிலும் வேய்ந்தில தெண்ணம்
            மிக்கது நுதல்தனிற் கனலே
ஊறலை யன்ன வாயினி லூறும்
            நறையனை நற்றமிழ் வாரி
தேறுநன் வரைந்த வரைதனைக் கண்டான்
            திரையதும் நீங்கிட மகிழ்ந்தான்                                        .39.

            நாதமுனி இப்பனுவலைப் பன்னீராயிரம் முறை ஓத, நம்மாழ்வார்க்கு முன் இட்ட திரை நீங்கியது. மறையவர் புங்கவன் – அந்தணருள் சிறந்தவன். நாதமுனி. (இவனது) எண்ணம் வேறு எதனிலும் வேய்ந்திலது – இவரது நினைவு  பிறிது யாதொன்றிலும் செல்லவில்லை. நுதல்தனில் கனல் (தவக்கனல்) மிக்கது ----, நறை அனை நல் தமிழ் வாரி ஊறலை அன்ன வாயினில் ஊறும் – தேன் போலும் இனிய தமிழ்ப் பாவாகிய வெள்ளம் ஊற்று நீர் போல் இவனது வாயில் பெருகி வந்தது. அலை – நீர்க்கு இலக்கணை; (இவன்) தேறுநன் – கற்றவன் (பராங்குசதாஸர்).  வரை – எல்லை. பன்னீராயிரம் முறை ஓதுவது.

And Nathamuni pulled a screen before Nammazhwar(’s archai) i.e., a screen between natha muni and nammazhwar and sat in dhyanam towards Maran with utmost dedication and without any other thoughts in his mind . his face shining with the tapas, the honey-like worded kanni nun siruthambu flowing out of his mouth like spring water flooding out. Thus he completed the recitation 12000 times (

தேறுநன் வரைந்த வரைதனைக் கண்டான் – completed the limit of 12000 times of reciting, as instructed by Parangusa dasan) and the screen between nathamuni and nammazhwar opened.           

மரைமக ளருளால் மறையவன் கண்ணுள்
            நின்றனன் மகிழ்மலர் மார்பன்
புரையிலன் நாதன் முனிவனும் வணங்கிப்
            புகன்றனன் தனதரு முள்ளம்
திரையினை யிட்டுத் தேசது பெருகச்
            சிறப்புறுந் தமிழினை மாறன்
உரைசெய மெய்யன் ஓலையி லிதனை
            வரைந்தன னூக்கம தோங்க.                                         .40.

            நாதமுனி தமது விருப்பத்தை விண்ணப்பஞ் செய்ய, நம்மாழ்வார் தமிழ் மறையை ஓத. இதனைப் பட்டோலை கொண்டார், நாதமுனி. மாறன் உரை செய –மாறன் சொல்லுங்கால். மெய்யன் – அந்தணன், நாதமுனி. ஊக்கம் அது ஓங்க வரைந்தனன்.

With the Blessings of Sri lakshmi (மரைமகள் அருளால் – that Goddess on Lotus Lakshmi) Nammazhwar appeared before Natha Muni who prostrated before the azhwar and prayed him his intention of getting all the Azhwars’s works. Pleased with Natha muni, nammazhwar dictated all the aruli cheyal of Azhwars and Natha muni wrote them in palm leaves. 

தான்முன்ன ரோது தமிழ்நாலி னோடு
            முன்வந்த நால்வர் தமிழும்
கோன்மன்ன ரேறு குலசேக ரன்றன்
            கவியோடு மைய ரிருவர்
தேன்மன்னு செய்யு ளதனோடு பாண
            னருள்செய்த தொன்றுங் குறையற்
கோன்சொன்ன வாறுங் குருகூர னோதும்
            கோதைசெய் மாலை யுடனே.                                        .41.

            நம்மாழ்வார் ஓதிய பிரபந்தங்கள். தான் முன்னர் ஓது தமிழ் நாலு – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. முன்வந்த நால்வர் தமிழ் – முதலில் அவதரித்த பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார், திருமழிசைப்பிரான் அருளியவை. குலசேகரன் தன் கவி – பெருமாள் திருமொழி. ஐயர் இருவர் – பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார். பாணன் அருள் செய்தது ஒன்று – அமலனாதிபிரான் என்னும் பிரபந்தம். குறையற்கோன் – திருமங்கையாழ்வார். ஆறு –பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம். கோதை செய் மாலை – ஆண்டாள் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி. இவற்றைக் குருகூரன் ஓதும் – ஓதினான்.

Nammazhwar dictated the four works by him, – thiruviruththam, thiruvasiriyam, periya thiruvanthathi, thiruvaymozhi--- , the works of Azhwars before his period --- those of Poykaiyar, Bhoothathazhwar, Peyazhwar and Thirumazhisai piran and Kulasekara Azhwar’s Perumal thirumozhi continued with that of the two Brahmin Azhwars – Periyazhwar and Thondaradipodi Azhwar and then that of the Thirupanazhwar’s “amalanathipiran” , Thirumangai Azhwar’s six works – periya thirumozhi, thiruvezhkootrirukkai, siriya thirumadal, periya thirumadal, thirukurunthandakam and thirunedunthandakam and those of Andal thiruppavai and nachiyar thirumozhi .Nathamuni most carefully took down them and preserved.

மனம் கவர்ந்ததொரு திருமண அழைப்பிதழ்

திருமணங்களுக்கு அழைப்பது ஒரு தனிக் கலை. அதிலும் இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் தங்கள் இல்லத்துத் திருமண அழைப்பிதழ்கள் மற்றவைகளிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று பல வகையிலும் சிந்தித்து வடிவமைப்பது பெருகி வருகிறது. சிந்திக்கத் தெரியாத அடியேனைப் போன்ற சிலர் "இதுதான் வழக்கம்" என்ற போர்வையிலே 30 வருடங்களுக்கு முன் இருந்த மாதிரியே அடிப்பதும் உண்டு. வித்தியாசமாகவும் இருக்க வேண்டும், வைணவ சம்ப்ரதாயங்களையொட்டி நடக்கின்ற திருமண நிகழ்வுகளை அவை பற்றி அறியாதாரும் தெரிந்து கொள்ள வேண்டும், அழைப்பிதழைப் படிக்கும்போதே மனம் மகிழ வேண்டும் என்ற நோக்கிலே அமைந்த ஒரு அழைப்பிதழ் இன்று அடியேனை அடைந்தது. அழைப்பிதழ் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ள அந்த அழைப்பிதழை இங்கே காணலாம். திரு இராமன் அடியேன் குடும்பத்தார் எல்லார் மீதும் பரிவு கொண்ட ஒரு சீமாட்டியின் சம்பந்தி என்பதும், தமிழின்மீது அளப்பரிய காதல் கொண்டு ஏராளமான கவிதைகள் புனைந்து வரும் திரு நாராயண ஐயங்காரின் சம்பந்தி என்பதும் அடியேனுக்குக் கூடுதல் சந்தோஷம். வில்லிபுத்தூர்காரர்களிடம் தமிழ் கொஞ்சி வருவதில் வியப்பொன்றுமில்லைதான்.
Please click on the image below to zoom it and read conveniently

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

திருப்புல்லாணியில் ஆடி வெள்ளியில் தாயார்

எங்கள் தாயார் --- ஆடி வெள்ளியில் நாதனுடன் ஊஞ்சல் கண்டு அடியவர்களைக் குளிரக் கடாக்ஷிக்கும் அழகு இது! (ஒவ்வொரு வெள்ளியிலும் ஊஞ்சல் உண்டு என்பதும் தெரிந்தது தானே)

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

Senior citizens, It is for you!

many would have noticed a news item in "The Hindu Bussiness Line" .For those who missed it , adiyen reproduce the same.

Munoth dials up phones for senior citizens



Chennai, Aug. 11

A senior citizen is out in the park for a walk and feels giddy and collapses. He presses a red SOS button on the back of his mobile phone which activates a loud siren, alerting passers-by to his plight. Simultaneously, the phone sends out ten pre-set SMSes to relatives, friends, an ambulance service and even one to his insurance company. The mobile phone screen then freezes and displays the name of the person, a password and a link to a Web site where the medical records of the user are stored. Through a GPS system the person's location is also known.

Chennai-based Munoth Communication launched its own brand of mobile phones in the southern market touting the S5, or the senior citizen phone as one of its unique selling propositions. Priced at Rs 2,500 to begin with, the phone has large key pads and large screen for easy reading, a torch and a sturdy body that can take falls. Mr Jaswant Munoth, Managing Director, said the phone will have an additional feature of a sensor which can be carried on one's person. If one moves say 10 to 15 feet away from the phone, a beep will alert them that they've left the phone behind. “A person can even leave the mobile in a suitcase and it will alert you if someone moves it without your knowledge,” said Mr Munoth. Munoth will soon tie up with a few insurance companies for them to take cognisance of such SMS alerts from insured patients. Details of a patient's condition need to be updated on a Munoth Web site.

Mr Munoth said the phones, three of which are application-based, will be targeted at the Rs 1,400 to Rs 4,000 price bracket, from which 70 per cent of mobile phones sales come. “We will be positioned in the upper end of each segment,” he said. For now, Munoth does not intend going up the price band. The company has unveiled nine models all of which have a provision for dual SIM and memory cards. Mr Munoth said the company is sourcing its phones from China and Hong Kong. The phones, he claimed, emit lower radiation and have a longer standby battery. The company targets selling one lakh mobiles a month from the third month onwards to earn revenues of Rs 30 crore a month. The phones will be launched initially in the South; the company was earlier a distributor for Siemens and Panasonic phones.

Munoth has also launched a ‘community phone' targeting the Jain community.

Get ready to have new experience with Fiirefox

Touch screens are nothing new for us. Daily we use it at ATMs, Railway stations etc. How will it be if you have it on your home/office PC? Firefox imagined it and introduce this new feature in its Firefox 4 Beta 3 version.
 And here is a video on this .Please enjoy. Those yet to change from IE, at least decide now and throw away that Internet Explorer and switch over to Firefox.