ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஸ்ரீ தேசிக‌ அஷ்டோத்ர‌ ச‌த‌ நாமாவ‌ளி

श्रीः
श्रीवराह महा देशिकाय नमः


श्री निगमान्त देशिक नामाष्टोत्र शत नामावळिः

श्रीमदपर्याप्तामृत परब्रह्मणे नमः

निगमान्त देशिक नामाष्टोत्तर शतव्याख्यान प्रारंभः
----------------------------------------------------------


नमस्तस्मै समस्तानां कलानामेकभूमये|
चोळेशमहुटीरत्तरश्मि नीराजितांघ्रये||


निगमान्त गुरौर्नाम्नां प्रभावोयेनवर्णितः|
तं वेङ्कटार्यमनिशं तातार्य तनयंभजे||


सुदर्शन कृपालब्ध वेदतत्वार्थ सागरं|
अनुष्ठितक्रतुशतं वन्देऽस्मत् पितरं गुरुं||


श्रीमुनित्रय सिड्धान्त स्थापनाचार्यतल्लजं|
श्रिनिवासमुनीशा नमस्मद्देशिकमाश्रये||


दासोऽहं देशिकेंद्रस्य श्रीनिवास महामिनेः|
गोपालतातयार्याख्यश्श्रिकुरुच्चियाग्रहारिकः ||


शतक्रतु चतुर्वेदिवेंकटार्य बुधोत्तमः|
निगमान्त्गुरोर्नाममहिम प्रतिपादकं ||


ग्रन्धंविरच्यतस्यापि व्याख्यानमतनोत् स्वयं |
तमाचार्यगुणादर्शं द्राड्याविवृणोम्यहं ||


த்ராவிட‌ வ்யாக்யாந‌ம்

(निगमान्तेति) நிகமாந்த மஹாதேசிக‌னுடைய‌ திருநாம‌ங்க‌ளின் மஹிமை எவ‌ரால் வ‌ர்ணிக்க‌ப்ப‌ட்ட‌தோ, தாதாசார்ய‌ருடைய‌ குமாரரான‌ அந்த‌ வேங்க‌டாசார்ய‌ரை ஸேவிக்கிறேன்.

அவ‌தாரிகை

இந்நூலாசிரிய‌ர், இக்கிர‌ந்த‌ம் யாதொரு இடையூறுமில்லாம‌ல் முடிவ‌த‌ற்காக‌ குருப‌ர‌ம்ப‌ரையை வ‌ண‌ங்குகிறார் நான்கு சுலோக‌ங்க‌ளாலே. அதில் முந்த‌ற‌ த‌ன்னுடைய‌ குருவை வ‌ண‌ங்குகிறார், सुदर्शन என்ப‌தால்.

திருவாழியாழ்வானை உபாஸித்து அவ‌ருடைய‌ க்ருபையினால் நான்கு வேத‌வேதாந்த‌ங்க‌ளின் உண்மைப் பொருளை அடைந்த‌வ‌ரும், நூறு யாக‌ங்க‌ளைச் செய்து அத‌னால் ச‌த‌க்ர‌து என்று திருநாமம் பெற்ற‌வ‌ரும், அடியோமுக்குப் பிதாவுமான‌ குருவை ந‌ம‌ஸ்க‌ரிக்கின்றேன்.

श्रीमद्यतीश्वर वचस्सुधास्वादन तत्परं|
स्वतंत्रं सर्वतंत्रेषु भौमंसुमनसंभजे||

நிக‌மாந்த‌ ம‌ஹாதேசிக‌னை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறார் ஸ்ரீம‌த் என்ப‌தால்.

ஸ்ரீபாஷ்ய‌காரர் அருளிச்செய்த‌ ஸ்ரீபாஷ்ய‌ம் முத‌லான‌ அருளிச்செய‌ல்க‌ளாகிற‌ அமிருத‌பான‌ம் ப‌ண்ணும‌வ‌ராய், ஸ‌ர்வ‌த‌ந்த்ர‌ங்க‌ளிலும் ஸ்வ‌த‌ந்த்ரராய்(ஆகையால்) பூதேவ‌ரென்கிற‌ பெய‌ரைப் பெற்ற‌வ‌ரான‌ தேசிக‌னை ஸேவிக்கிறேன்.

नाथयामुन पूर्णार्य दयापात्रन्दयानिधिं|
रामानुजमुनिं वन्दे श्रीभाष्यामृत वर्षिणं ||

ஸ்ரீபாஷ்ய‌காரரை வ‌ண‌ங்குகிறார் “நாத‌யாமுன‌” என்ப‌தால்.

நாத‌ முனி ஆள‌வ‌ந்தார் பெரிய‌ந‌ம்பி திரும‌லைந‌ம்பி முத‌லான‌வ‌ர்க‌ளுடைய‌ த‌யைக்குக் கொள்க‌ல‌மாய் மிகுந்த‌ த‌யையுள்ள‌வ‌ருமாய் ஸ்ரீபாஷ்ய‌மாகிற‌ அமிருதத்தை வ‌ர்ஷியாநின்றுள்ள‌ எம்பெருமானாரை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன்.

पूर्णार्यं यामुनं रामं पद्माक्षं यमिनांपतिं|
शठकोपंचसेनेशं श्रियं नारायणं भजे||

பெரிய‌ந‌ம்பி துட‌ங்கி எம்பெருமானள‌வுமுள்ள‌ குருக்க‌ளை வ‌ண‌ங்குகிறார் “பூர்ணார்ய‌ம்” என்ப‌தால்.
பெரிய‌ந‌ம்பி, ஆள‌வ‌ந்தார், ம‌ண‌க்கால்ந‌ம்பி, நாத‌முனி, ச‌ட‌கோப‌ன், சேனைநாத‌ன் இவ‌ர்க‌ளையும், ஸ்ரீமானான‌ நாராய‌ண‌னையும் ப‌ஜிக்கிறேன்.

यत्कल्याणगुणावक्तुमशक्या विबुधैरपि|
तदीयन्नामशतकं स्वयंव्याक्रियते मया||

यत्कल्याण என்ப‌தால் க்ர‌ந்தத்தின் விஷ‌ய‌த்தை அருளிச் செய்கிறார்.

யாதொருவ‌ருடைய‌ திவ்ய‌ ம‌ங்க‌ள‌ குண‌ங்க‌ள், வித்வான்க‌ளானாலும் (அன்றிக்கே) தேவ‌ர்க‌ளாலும் சொல்ல‌முடியாததுக‌ளோ அப்ப‌டிக்குள்ள‌ தேசிக‌னுடைய‌ திருநாம‌ங்க‌ளில் நூறு திருநாம‌ங்க‌ளை சுலோக‌ங்க‌ளால் ஸ‌ங்க்ர‌ஹித்துக்காட்டி அத‌ற்கு வ்யாக்யான‌மும் தாமே செய்கிறோமென்கிறார்.

(தொட‌ரும்)






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக