ஞாயிறு, 22 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம்


साकारधीनिराकर्ता
ஞாநமானது குடம் முதலானவுருக்களாகவேயிருக்குமென்று யோகாசாரனால் சொல்லப்பபட்ட மதத்தைக்கண்டித்தவர். அஃதெப்படிபென்னில், குடத்தை யானறிகிறேனென்று எல்லாருமொப்புக்கொள்வதால் அது கர்த்தாவையும் வஸ்துவையுங் குறிப்பிடுவதால் புத்தியானது நிர்விஷயமாகில் அப்படியறி வது கூடாதாகையால் என்று யோகாசாரமதத்தைக் கண்டித்தவரென்ற தாயிற்று.

शून्यवदतमोनुदः  शून्य = சூந்யமென்று, वाद =வாதம் பண்ணுகிற மாத்யமிகனுடைய மதமாகிற, तमः:= இருளைப்போக்குமவர். அதெப்படியென்னில். எல்லாம் சூந்யமென்னில் சூந்யமென்று ஸ்தாபிக்கிற ப்ரமாணமும் சூந்யமாகையால் ஸ்தாபிக்கமுடியாது. ப்ரமாணந்தவிர மற்றது சூந்யமென்னில் எல்லாம் சூந்யமென்பது கூடாது, ஆகையாலந்தமதம் ஒருபடிக்கும் ஸரியன்று. என்று மாத்யமிக மதத்தைக் கண்டித்தவரென்றதாயிற்று.. இப்படி பளத்தமதத்தை கண்டித்து ப்ரச்சந்ந பளத்த மதத்தை நிராகரிக்கிறது.

कुदृष्ट्युरगपक्षीशः कुदृष्टि = விருத்தமாக நோக்கமுடையவர்கள், இவர்கள் ப்ரச்நாபளத்தர்கள். பளத்தர் இருவகையர், ப்ரகடரென்னும் ப்ரச்சங்கரென்னும், ப்ரகடசராவார். வெளிப்படையாக ஸர்வம் சூன்யமென்பவர், அதாவது ஸத்யம் போலே சொல்லி முடிவில் சூந்யமாகச்சொல்லுமவர். இவர்களை பொய்ய ரென்றும் சொல்லுவார்கள் அவர்களாகிற (उरग) பாம்புகளுக்கு, இங்கு "कुदृट्युरग என்பதால் த்ருஷ்டிவிஷமான பாம்பு களென்றபடி. அவர்கள் தங்கள் முகங்கள் நின்றுமுண்டான குதர்க்கங்களாகிற விஷங்களாலே ஜகத்தை நாசம் பண்ணுகையாலே பாம்புகளாகச் சொல்லிற்றாகவுமாம். அவர்களுக்கு (पक्षीशः) கருடன் போன்றவர். கருடனைக்கண்ட பாம்பு நிலைநில்லாதுகளிறே, அவர்கள் மதமும் அதுக்குக் கண்டனமும் व्यावृत्त तत्त्वाच्च என்று முதலான காரிகை களால் சொல்லப்பட்டது. அதின் தாத்பரியமெழுதப்படுகிறது. அவர்கள் மதமாவது நிர்குணமான ப்ரம்மமொன்றுமே ஸத்யம், அதற்கு வேறானவை கள் ஸர்வமும் மித்யை, இப்படி மித்யையான மாயையானது ஞானஸ்வரூப மான ப்ரம்மத்தை மறைக்கிறது, அதனால் ப்ரம்மம் தன்னை (नानाभेद) வேறுவேறாக ப்ரமிக்கிறது. வேறாக நினைப்பதே ஸம்ஸாரம், ஒன்றாக நினைத்தலே மோட்சம். அந்த பேதவாஸனை  போவதற்காக பேச்சுமட்டில் ஸத்யங்களான வேதங்களைக்கொண்டு உபாஸநம் முதலானதுகள் சொல்லப் பட்டதுகள் . அதுகளாலிடைவிடாமல் अभेदज्ञानम् ஒன்றே என்கிற ஞானமுண் டாகும், அதுவே மோட்சம். இப்படிச் சொல்லும். அது கண்டிக்கப்பட்ட தெங்ஙனேயெனில் ஞானஸ்வரூபமான ப்ரம்மத்தை அஜ்ஞானமான மாயை மறைக்கமாட்டாது. அப்படி மறைக்கில் அதுக்கு விலக்குமதொன்றுமில்லை.  தேஜஸ்ஸை இருள் மறைக்காதிறே மேலும் பொய்யான வேதம் முதலானதுகளாலுண்டாஞாமும் பொய்யானதால் பொய்ஞானம் மெய்ஞாநத்தைக் காட்டமாட்டாது. ஆகையால் அந்தமதம் பொய்யானதே இப்படிக் கண்டித்தவரென்றதாயிற்று, இங்கு வேண்டுவன விஷயங்களை ஸ்ரீ பாஷ்யம் முதலா விடங்களிற் காண்க,