|| श्री:||
अभीतिस्तव:
श्रीमान् वेङ्कटनाथार्य: कवितार्किक केसरि |
वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि ||
अभीतिरिह यज्जुषां यदवधीरितानां भयं
भयाभय विधायिनो जगति यन्निदेशे स्थिता: |
तदेतदतिलङ्घित द्रुहिणशम्भु शक्रादिकं
रमासखमधीमहे किमपि रङ्गधुर्यं मह: ||
|| ஸ்ரீ: ||
அபீதிஸ்தவம்
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேசரி |
வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி ||
சுலோகம் 1.
அபீ₄திரிஹ யஜ்ஜுஷாம் யத₃வதீ₄ரிதாநாம் ப₄யம்
ப₄யாப₄ய விதா₄யிநோ ஜக₃தி யந்நிதே₃ஶே ஸ்தி₂தா: |
ததே₃தத்₃ அதிலங்கி₄த த்₃ருஹிண ஶம்பு₄ ஶக்ராதி₃கம்
ரமாஸக₂ம் அதீ₄மஹே கிமபி ரங்க₃து₄ர்யம் மஹ: || (1)
யஜ்ஜுஷாம் -- எவருடைய ப்ரீத்யநுக்ரஹருடையவர்க்கு, இஹ -- இங்கேயே, அபீதி -- பயமில்லாமையும், யதவதீரிதாநாம் -- எவரால் உபேக்ஷிக்கப் பட்டவர்களுக்கு, பயம் -- பயமும் (உண்டோ), ஜகதி -- உலகத்தில், பயாபய விதாயிந: -- பயத்தையும் அபயத்தையும் கொடுப்பவர்கள், யந்நிதேஶே -- எவருடைய ஆக்ஞையில், ஸ்திதா -- இருக்கின்றார்களோ, அதிலங்கித த்ருஹிண ஶம்பு ஶக்ராதிகம் --- ப்ரஹ்மா, ஈச்வரன், இந்திரன் முதலியவர்களைத் தாண்டியதும், ரமாஸகம் -- பெரியபிராட்டியாருடைய தோழமை கொண்டதும், தத் -- அந்த, ஏதத் -- இந்த, கிமபி -- சொல்லுக்கு அடங்காததையும், ரங்கதுர்யம் -- ரங்கதுரத்தை நிர்வஹிக்கும், மஹ: -- தேஜஸ்ஸை, அதீமஹே -- அத்யயநம் செய்கிறோம் (அநுஸந்திக்கிறோம்)
ஸ்ரீ அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமியின் தமிழாக்கம்
" அச்சம் அகற்றும் துதி"
தஞ்சமென வருவார்க்குத் தந்திடுவான் அஞ்சாமை !
தனைச்சேரா தகல்வோர்க்குத் தந்திடுவான் அச்சத்தை!
அஞ்சுதலைத் தந்துநமை அலைக்கழிப்போர் எல்லோரும்
அஞ்சாமை நமக்களிக்கும் அன்பர்களும் அவனடிமை!
செஞ்சடையோன் நான்முகத்தான் தேவர்கோன் முதல்வோரும்
நினைப்பரிய மேலிடத்தோன் திருமகளார் உடன்சேர
விஞ்சுகிற ஒளியாக விரிபுகழ்சேர் அரங்கத்தில்
விளங்குகிற அத்தேவை விரித்துரைத்து வாழ்த்துவமே! (1)
அன்பில் ஸ்ரீ ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
பெரியதோர் பயத்திலிருந்து விமோசநமாகும்படி அபய ப்ரார்த்தனை செய்வதால் பெருமாளுடைய ரக்ஷணத்தை "ஸ்வாஶ்ரிதாபயப்ரதம்" என்று துவக்குகிறார். அந்வயவ்ய திரேகங்களாக முதலடியில் லக்ஷணங்கள் ஸாதிக்கிறார். எங்களுக்கு அபயமே தான் நியாய்யம். பயத்திற்கு ப்ரஶக்தியே இல்லை. பெருமாள் க்ருபைக்குப் பாத்திரமான எங்களுக்கு அபீதி நியதமாயிருக்க வேண்டுமே. பெருமாளுடைய உபேக்ஷைக்கு (அவதீரணத்திற்கு, திரஸ்காரத்திற்கு) விஷயமானோருக்கல்லவா பயம் வரலாம். நாம் அவரால் அவதீரிதரல்லவே. பயம் வந்த காரணம் அறிகிலோம். வந்திருக்கும் பயத்தை உடனே போக்கவேணும். यदनुग्रहतस्सन्ति न सन्ति यदुपेक्षया (யதநுக்ரஹத: ஸந்தி ந ஸந்தி யதுபேக்ஷயா) என்று நித்மான பொருள்கள்கூட எவர் அனுக்ரஹத்தால் இருக்கின்றனவோ, எவர் உபேக்ஷித்தால் இல்லாமற்போமோ என்று சுகர் ஸாதித்ததை அநுஸரித்தது இந்த முதலடி லக்ஷணம். இந்த லக்ஷணத்தை மனதிற் கொண்டே இவரை நாம் ப்ரீதியோடு ஸேவித்தால், நம்மிடம் இவருக்கு அநுக்ரஹம் உண்டாகி நம் பயம் தீரும் என்று தீர்மானித்து, இவரை ஸேவித்து மல்லுக்கட்டி அபயம் பெறுவோம் என்று முதலிலேயே தேற்றிக் கொள்ளுகிறார்.
அபயஸித்தி என்னும் ப்ரயோஜனத்திற்காக அவனை ஸேவித்து, அவனை ஜுஷ்டனாக (ப்ரீதனாக)ச் செய்வோம். பெருமாளுடைய ப்ரீதியுமிருக்கட்டும், அவர்பேக்ஷையும் இல்லாமலிருக்கட்டும். உலகத்தில் பயமுண்டாக்கக்கூடிய அதிகாரிகளான வாயு, ஸூர்யன் முதலியவர் பயமுண்டாக்கினால், என் செய்வோம் என்று கேட்பீரோ? அவர்களிடமிருந்து பயத்திற்கு பிரஸக்தி இல்லை. உலகத்தில் பயாபய காரணர்களான அவர்கள் இவருடைய ஆக்ஞையில் (ப்ரஶாஸநத்தில்) நிற்பவர். இதுவும் ஒரு லக்ஷணமாகப் பணிக்கப்படுகிறது. இரண்டாமடியைத் திருப்பி மாற்றி அந்வயிப்பதில் மிக ரஸமுண்டு. எவருடைய கட்டளைப்படி நடக்கும் பக்தர்கள் உலகத்திற்கு பயத்தையும் அபயத்தையும் கொடுக்கவல்லரோ, பகவதாஶ்ரிதராய், அவர் கட்டளையில் நிற்பவர் இட்டது சட்டம் உலகத்தில் பயாபயங்கள். ப்ரஹ்மநிஷ்டருக்கு தேவர்களும் கெடுதல் செய்யமுடியாது. தேவர்கள் அவர்களுக்கு பலி ஸமர்ப்பித்துப் பூஜை செய்கிறார்கள் என்று உபநிஷத்துக் கூறுகிறது. இதனால் வாயு, ஸூர்யன் முதலிய தேவர்களிடமிருந்து பயம் வராதென்று கைமுத்யத்தால் ஸித்தம்.. "எவனுடைய, எவனுடைய, எவனுடைய" என்று மும்முறை படித்துவிட்டு "அந்த இச்சுடர்" என்கிறார். "அதை இதைப்போல் பார்த்தார் ரிஷிவாமதேவர்" என்று உபநிஷத்து மூன்று லக்ஷணங்களால் குறித்து, "அது ப்ரஹ்மம்" என்றது போல, இங்கு "அது இந்த ரங்க ஜ்யோதிஸ்" என்கிறார். ப்ரஹ்மா, ருத்ரன், இந்திரன் முதலானவர்களால் பயம் வந்தாலென்ன செய்கிறது என்றும் பயப்பட வேண்டாம், அது இதையெல்லாம் மீறிய மஹஸ். இது அப்ரமேயமான தேஜஸ். "கிமபி" என்பதற்கு "மாநாதீதம்", "அப்ரமேயம்" என்று கருத்து. அந்த தேஜஸ் (ராமன்) அப்ரமேயமே, ஏனென்றால் ஜானகி அதனுடையவளல்லவோ" என்ற மாரீசன் வார்த்தையை நினைத்து, ரமாஸகமான ஏதோ ஒரு அப்ரமேயமான தேஜஸ் என்கிறார். சரணாகதியான இந்த ஸ்தவத்தில் ப்ரணவாந்தஸ் ஸ்திதமான ப்ரஹ்ம தேஜஸ்ஸிடம் பரத்தை ஸமர்ப்பிக்கையில், லக்ஷ்மீ ஸஹாயமான தேஜஸ் என்கிறார். சரணாகதியைப் பண்ணினதாகச் சொல்லும் இருபத்தோராவது சுலோகத்திலும் ஸ்ரீகாந்தனிடம் பரத்தை ஸமர்ப்பித்தோம் என்கிறார். मकारस्तु तयोर्दास: (மகாரஸ்து தயோர்தாஸ:) என்ற ப்ரணவ சுருதியை நினைக்கிறார். எந்த மஹஸ் என்றால், ரங்க துரத்தை (ரங்க பாரத்தை) வஹிக்கும் தேஜஸ், ரங்கமென்பது ப்ரணவம். ப்ரணவதுரத்தை நிர்வஹிக்கும் தேஜஸ். ப்ரணவத்திலுள்ள தேஜஸ்ஸைப் பணிக்கையில், "அதீமஹே" என்கிறார். ப்ரணவ தேஜஸ்்ஸான ரங்க தேஜஸ் அத்யயனம் செய்ய யோக்யமானது. வேதம் முழுவதும் ப்ரணவத்திற்குள் உள்ளது. ரங்கதுரத்தை நிர்வஹிக்கும் தேஜஸ் என்பதில் வேறு ரஸமுண்டு. ரங்கத்தை ரக்ஷித்து அதற்கு அபாயமில்லாமல் நிர்வஹிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஸ்தவத்திற்குப் பயன். ரங்கத்தின் பாரத்தை அவரை வஹிக்க ப்ரார்த்திக்கிறோம் என்றும் ஸூசகம். மற்றொன்றும் வேண்டாம். ரங்க துரந்தரன் என்னும் திருநாமம் அந்வர்த்தமாக இருக்க வேணும். "துர்ய" என்பது அச்வத்தையும் சொல்லும். "ஹயமஹஸ்" என்று தமக்குப் பிரியமான ஹயக்ரீவ தேஜஸ்ஸையும் சேர்த்து அபிந்நமாக நினைக்கிறார்.
தேவரீர் மத்த ஸ்லோகங்கள் எங்கே கிடைக்கும் ?
பதிலளிநீக்கு