சனி, 11 டிசம்பர், 2010

தேசிகப்ரபந்தம்–ஆர். கேசவய்யங்கார் பதிப்புரை

தத்துவம்: உபாயம்: புருஷார்த்தம்:


    இம்மஹாதேசிகர் அருளிச்செய்த முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு நூலாகிய ரஹஸ்யத்ரயஸாரம் என்னும் உத்தமப்ரபந்தம் சாரீரக சித்தாந்தப் பொருளை விளக்கிக் காட்டும் உபயவேதாந்தரஹஸ்ய நூல் என்றது மேலே கூறப்பட்டது.  இம்மாலைப்ரபந்தங்கள் பிறவும் அப்பொருளைப் பின்னும் நன்கு விளக்கி இனிது உணர்விக்கும் பண்புடையன1.  அவைகள் விளக்கிக்காட்டும் தத்துவம், உபாயம், புருஷார்த்தம் என்னும் சிறப்புத்துணி பொருள்களை இங்குச் சுருக்கி உரைப்பாம், வேறிடத்து விரிப்பாம்.  தத்துவம் என்றதால்  சிறப்புற்ற பரதத்துவம் (இறைத்தத்துவம்) சொல்லப்படும். உபாயம் என்றதால், பரதத்துவத்தை அவரதத்துவமாகிய உயிர்ப்பொருள் அடையும் சரணாகதி என்னும் சிறப்பாறு கூறப்படும்.  புருஷார்த்தம் என்றதால், அவ்வாற்றால் உயிர்ப்பொருள் பெறும் வீடு என்னும் சிறப்புப்பேறு கூறப்படும். சடப்பற்றினின்று விடுபடுதல் வீடு. சடம் ‘ஹேயம்’ ஆதலால் அது உயிர்ப்பொருளுக்குக் கழிக்கப்படவேண்டியதாயிற்று.  வ்யாஸர் ‘ஹேயம்’  என்று கூறியதை சடகோபர் ‘காயம்’ என்றார். “காயம் கழித்து அவன்தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்”2 என்றது அவர் திருவாக்கு.  ஹேயத்தினின்று விடுபடுதலே வீடு. வல்வினையினின்று விடுபடுதலே வீடு.  ஹேயப்பற்றே வல்வினைப்பற்று.  அஃதே ‘தான்’ ‘தனது’ என்றபற்று.  தான் என்றது அகப்பற்று, தனது என்றது புறப்பற்று.  “நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறைசேர்மின்”3 என்று இருவகைப்பற்றையும் அறுத்து இறை சேர்தலைச் சடகோபர் உபதேசம் செய்தார்.  உணர்வுடைய உயிர்ப்பொருள் அவ்விருவகைப் பற்றையும் மாய்க்கும் கடமைப்பாடுடையது.  அவற்றின் மாய்ப்பும் இறைசேர்தலும் உணர்வுடைய உயிர்ப்பொருளின் இயல்புக்கு வாய்ப்பும் ஏற்புமாம்.  இறைப்பொருளின் தாளைப்பற்றியே காயம் கழிக்கப்பட வேண்டும்.  தாள்பற்றார் வீடுபெறார்.  தாளின் பற்றே ஆறு. அது பயக்கும் பேறே வீடு.  ஸர்வசரண்யதத்துவமே பரதத்துவம். சரண்ய தம்பதியார்களாகிய திருமாமகளாரும் திருமாலாரும் பரதத்துவம்.  அவர்கள் திருத்தாள்களைப் பற்றலே சரணாகதி என்னும் உபாயம்.  அஃதே ஆறு.  அப்பற்றில் அவர்களால் அருளப்பெறுதலே வீடு.  அஃதே பேறு.  சடத்தைப் பற்றிய உணர்வு அதன்பற்றை ஒழித்தலையே பயனாக உடையது.  இறைப்பொருளைப் பற்றிய உணர்வு அதைத் தாள் பற்றி அடைதலையே பயனாக உடையது. உணரும் உயிர்ப்பொருள் ‘ஞன்’ (உணர்பவன்).  உயிர்ப்பொருளின் உணர்வுக்கும் இறைப்பொருள் ஒன்றே நோக்கு.  ஆதலால் இறைப்பொருள் ‘ஞேயன்’. இறைப்பொருளின் ஒப்பற்ற தனித்தலைமையை உணர்த்த “மஹாஞேயன்”4 என்று உபநிடதம் ஓதிற்று. “ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு”5 என்று சரண்ய தம்பதிகளே ‘மஹாஞேய’ தத்துவம் என்று பொய்கைப்புனிதர் அருளிச் செய்தார்.  ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவன் என்றே உணரும் உயிர்ப்பொருளின் பேருணர்வே இறைநிலையுணர்வாகும்.  அஃதே மெய்யுணர்வு.  ஒண்தாமரையாளும் அவள்கேள்வனும், தனித்ததென்னில் நிலை அற்றும், என்றுமே சித்தமாய் ஒன்றியதோர் ஒப்பற்ற பதிபத்தினியராய்த் திகழும் சரணிய திரீபுருட (சரண்ய தாம்பத்ய) ஒருமையில் நிலை நின்று விளங்கும் உலகமங்கல நிலையே இறைநிலை என்ற உணர்வு ஒன்றே மெய்யுணர்வு என்றபடி.  அவ்வாறே பரதத்துவமாகிய இறைப்பொருளை அடைதற்கு அவரதத்துவமாகிய உயிர்ப்பொருள் புரியும் தவமே உபாயம் என்னப்படும்.  அது பெருந்தவம். அடையப்பெரும்பொருள் “மஹாஞேயன்” ஆதலால் அவனை அடையும் உபாயம் மஹாஞானம்.  அதை மஹாதபஸ்6 என்று உபநிடதம் ஓதிற்று.  “மாதவம்”7 என்றார் இம்மஹாதேசிகர்.   உயிர்ப்பொருள் புரியும் இம்மாதவவேள்விக்கு இறைப்பொருளே உத்தேச்யம் ஆகும்.  அதாவது இறைப்பொருளின் பொருட்டே ஆகும் என்றபடி.  இறைப்பொருளுக்கே உயிர்ப்பொருளை அவியாக இடும் ஞானப்பெருவேள்வியே உபாயம் என்னும் மாதவமாகும்.  அம்மாதவமே சரணாகதி என்னப்படும். அஃதே செய்தவம் என்னும் தனிப்பெருந்தவம்.  “இத்தவந்தம்மில் ந்யாஸம் சிறந்தது”8 என்று உபநிடதம் உரைத்தது.  இந்த ‘ந்யாஸமே’ ப்ரபத்தி, சரணாகதி, அடைக்கலம் பரம்துடைத்தல், பரந்யாஸம், மறைபுகல், வையடை.  இல்லடை, தஞ்சம், அஞ்சலி, என்று கூறப்படும்.  மாயையைக் கடத்தற்கு, காயத்தைக் கழித்தற்கு, இறைவன் பால் ப்ரபத்தி ஒன்றே ஆகும் என்ற உண்மையை “என்னையே சரணம் யாவர் பற்றுவார் அவர்களிந்த, மன்னிய மாயை தன்னை மாதவர் கடப்பார் மன்னோ”9 என்றும் “கெடுதொழிலாள ராயே எனைச் சரணடையார் மூடர், கடையர்மா யையிலி ழந்த மதியர்வல் லசுர ரொல்லார்”10 என்றும் பேரருளாளனாகிய இறைவன் தானே உபதேசித்தருளினான்.  ஆதலால் உயிர்கள் உய்தற்கு இறைவன்தானே வகுத்தருளிய பெருந்தவமே சரணாகதி.  அஃதே அஞ்சலிப் பெருந்தவம்.  ஆதலால் இதை சடகோபர் “வணக்குடைத்தவநெறி11 என்றார்.  அருள்மிகுந்த இறைவன் கருத்தால் தனது இன்னுயிர்ப் பொருள்களுக்கு ஈதொன்றே உய்யுமாறு என்று வகுக்கப்பட்டுள்ள தவநெறியாதலால், சிற்றுயிர்ப்பொருளானது தன் கருத்து என்னும் பிணக்கு அற இறைவன் பாற்புரியும் கற்பின் துணிபில் நிலை நின்று தான் தனது என்ற ஒன்றையுங் காணாதே இறைவன் தானே தந்தருளிய சரண உணர்வு கொண்டே அவன் பொருட்டே அவனுடைய உயிர்ப் பொருளை அவன் அமுது செய்வதற்கு அவன் திருவடிகளில் அவன் தானே அவியாக இட்டு உகக்குமாறே பேறாகப் “புறநெறிகளைகட்டு பசையற உணக்குமின்”12 என்ற சடகோபரருளிய இவ்வருந்திருவாய்மொழிக் கருத்தை ஆழ்ந்துணர்க.  இத்திருவாய்மொழிக் கருத்தை “எனதென் பதுமியா னென்பது மின்றித், தனதென்று தன்னையுங் காணாது – உனதென்று, மாதவத்தான் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதனில், கைதவத்தான் கைவளரான் காண்”13 என்று இம்மஹாதேசிகர் விளக்கியிருத்தல் காண்க. “நீர்நும தென்றிவை வேர் முதல் மாய்த்து”14 “எனதாவியுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு, என தாவி தந்தொழிந்தேன்”15 என்ற திருவாய்மொழியின் ரஹஸ்யப்பொருளை இவ்வெண்பா இனிது உணர்த்தும் சீர்மையை நன்கு நோக்குக.



1 அமிர்தரஞ்சனி 10; பரமதபங்கம் 4; அத்திகிரி மான்மியம் 19; ( முதலியன) . 2 திருவாய் 3.9.8;
3 1.2.3; 4 தைத்திரீயம்; 5 முதல் திருவந்தாதி 67; 6 தைத்திரீயம் இது ‘ந்யாஸம்’ என்னப் பட்டது;
7 அமிர்தரஞ்சனி 25; 8 தைத்திரீயம் 1; 9 கீதை 7.14; 10 கீதை 7.15; 11 திருவாய் 1.3.5; இது பக்திக்குமாம்;
12  திருவாய் 1.3.5; 13 அமிர்தரஞ்சனி 25; 14  திருவாய் 2.3.4; 15 திருவாய் 5.10.8

இன்று பிறந்தவன்

 இந்த நாளில் அன்று  பிறந்த இவனுக்கு இதைக் காட்டிலும் எப்படி ஒரு அஞ்சலி செலுத்திட முடியும்? மின்தமிழில் எல்லோரையும் கிறங்க வைக்கும் எங்கள் மோகனரங்கனார் கவிஞர் தலைவனுக்குச் செய்கிற பாராட்டு  இது.

கவிதையின் கடைசியில் குறிப்பிடப் படுகிற திருலோக சீதாராம் பாரதியின் துணைவியாரைக் கடைசி வரையில் தன் தாயாகவே ஆதரித்து வந்தவர். நிருச்சியிலிருந்து வெளியான "சிவாஜி" பத்திரிகை ஆசிரியர். முன்பின் தெரியாத நிலையில் 1971ல் அவரை அடியேன் சந்தித்தபோது அவருடைய பிள்ளைகளில் ஒருவராகவே கருதி அன்பு மழை பொழிந்தவர்.
இனிக் கவிதையை ரசியுங்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவத்தில்
போயின பின்பு புதுத்தமிழ் பூத்தது
தோய்ந்த வானிருளில் துலங்கிய சோதி
வேய்ந்தது கவிதை விரிகதிர் உலகில்
பாய்ந்திட எழுந்தது பாரதிப் பரிதி
காலக் கருவின் சுமையில் அயர்ந்த
தமிழின் களிறு ஈன்றதோர் கன்று நன்று
கன்னித்தமிழ் காக்க காலம் கரு உயிர்க்க
கர்பத் திருவாகிக் கவியின் உருவாகி
சொர்க்கக் கதவாகித் திறந்ததும்
சுப்பையா வருகை 
தெய்வத்தின் கொல்லையிலே
கவிதையைக் கட்டிவைத்து
ஒட்டப் பால் கறந்து
உருவார அபிஷேகம்
திட்டக் கணக்காய் நடந்துவந்த திருநாளில்
கவிதையின் முற்றத்தில்
கடவுளரின் கண்பொத்தி விளையாட்டில்
ஞானரதமேறித் தான்
கடவுளர் உலகையெல்லாம்
வேடிக்கை பார்த்த விறல்மிடுக்கும்
தமிழ்க்கவியின் மாயங்கொல்?
தண்டமிழின் மந்திரங்கொல்? 
செய்யுளில் செங்கல் ஜல்லி
கொத்தனார் வித்தை யெல்லாம்
கச்சினில் கொங்கை மாதர்
கலாப காமப் பித்தையெல்லாம்
வீரமே சோரம் போக
வாகையோ சோகையாகி
வித்தையும் வெளிறிப் போக
விரசமே சரசமாக
கவுண்டதிருச் சபைக் கணக்கின்
சங்கடங்கள் சமிக்ஞை காட்டும்
சங்கரன் கதையும் என்ன? 
கூறுகெட்டு குடிகெட்டுக்
குமைச்சலில் கொள்ளையிட்டு
வேறுபட்ட விதிகளுக்குள்
வேர்விடவே சூழ்ச்சிகளை
வித்தகமாய் விதைத்து வைத்து
கொல்லையில் திருடிவந்து
வாசலில் விற்கின்ற விற்பன்னத்தை,
தொலைந்துவிட்டாய் எனக்கூறி
நம்மையே நமக்குத் தேடிக்
கொண்டுவந்து தந்திடுமோர்
பம்மாத்தைப் பொன்வால் ஒட்டவைத்து
பரியை நரியாக்கிப் பரிகாசச் சுவையாக்கி
பார்வைக்கு விட்ட பக்குவத்தை
பாரத ஞானத்தின் துணிவெனவோ?
பாரதி வேகத்தின் பண்பெனவோ? 
வேதத்தில் வேள்வியுண்டு
வேள்வியில் பலனுமுண்டு
பலனில் சொர்க்கமுண்டு
சொர்க்கத்தில் மீட்சியுண்டு
மீண்டிடில் பிறவியுண்டு
பிறந்திடில் மரணமுண்டு
அதுவரை வேள்வியுண்டு
வேள்விக்குயர் வேதமுண்டு
இதைத்தான் நாம் கேட்டதுண்டு 
ஆனால் 
வேதத்தில் கவிதையுண்டு
அதை விளக்கவோர் வழியுமுண்டு
என்றுரைத்த கவியுண்டென்றால்
வேறுயார் இங்கே உண்டு? 
காலப்பொன் சொல் பெய்து
குலையாத கற்பனையை
நிலையான நனவுலகை
நாட்டவல்ல நெடுங்கனவை
தமிழ் என்னும் காயகல்பத்
தாய்நிதியாய் நமக்களித்து
அமிழ்துண்ணச் சென்றிருக்கும்
அமரகவி பாரதியில்
ஐக்கியமாய் நின்றவன்தன்
அருமை பெருமை எல்லாம்
அறிந்துரைத்தான்
அகலிடம் எங்கெங்கும்
ஆன்றதமிழ் பாரதியின்
இசைபாடி நின்ற செம்மல்
தோன்றாத் துணையாகத்
தொல்லுலகக் கவிதைத் தொடுவானில்
நின்ற இளம்பரிதி நிலவும் குமிணகையில்
நிலைத்த திருலோக சீதாராம் திறம்பாடி
மலைத்த மனமடக்கி
மாகவிஞன் பிறந்த காலை
என்பங்காய் ஒரு கவிதை
இந்நாளில் மாகவிக்கு
நேர்ந்துவைத்தேன் நேருரைப்பேன்
நயமறியப் பெற்றிடுவீர்
நயக்குமுள முற்றிடுவீர்
நன்மைக்கும் உண்டே ஓர் அச்சு. 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

வெள்ளி, 10 டிசம்பர், 2010

குரு பரம்பரை

Get this widget | Track details | eSnips Social DNA
நாட்டேரி ஸ்வாமி 5-12-2010 அன்று நிகழ்த்திய குரு பரம்பரை உபந்யாஸம் இங்கு .mp3 வடிவில்.

வைணவ ஆசாரியர்கள்

2. யமுனைத்துறைவர்

1.அவதாரம்.

நாத யாமுன ராய நாயிறு
போத மாஞ்சுடர் பொங்க நல்கிய
மாத வன்வரன் மன்ன னாரடி
ஆத ரத்துட னண்டி வாழ்குவம்.
                         1.

வீரநாராயணபுரத்து மன்னனாரை வாழ்த்துவது. இப்பெருமான் உலகினுக்கு நாதமுனி, யாமுனமுனி என்ற இரண்டு ஞாயிறுகளை உலகிற்கு அளித்தவர். இவர்கள் போதமாகிய சுடரினைப் பரப்பினர்.

செய்ய னீச்சுர முனிவன் செல்வனாய்த்
துய்ய தாதுவி லாடி தோன்றினன்
பெய்யு முத்திரா டத்தொ டுற்றநாள்
வெய்ய மேனிவாய் குட்டன் மேலவனே.             .2.

ஈச்வர முனிவருக்கு ஆளவந்தார் அவதரித்தமை. தாது வருடம், ஆடி மாத உத்திராடத்தில் அவதாரம். செய்யன் – நேர்மையுள்ளவன். பெய்யும் – (நலம்) பொழியும். பெய்யும் – அணியும். ஆடி பெய்யும் உத்திராடத்தொடு உற்ற நாள் என்று இயைக்க. ஈச்வர முனிவன் (முனிவனுக்கு) செல்வனாய் வெய்ய மேனி வாய் குட்டன் மேலவன் தோன்றினன் --- வெய்ய – சுடர் பொருந்திய.

தந்தை யாணையி னகைதல் தானுறாச்
சிந்தை வாயுமிவ் வையன் செல்வமாய்
வந்த வன்யமு னைத்து றைவனென்
றுந்து வாரமொ டோது முத்தமன்.                           .3.    

தந்தையின் ஆணைப்படி இம்மகவிற்கு யமுனைத்துறைவன் என நாமம் சூட்டியமை. அகைத்தல் – முறித்தல், மாறு செய்தல். ஐயன் – பெரியோன், ஈச்வரமுனிவன். உந்து வாரம் – பெருகும் அன்பு. ஓதும் – ஓதினான்.

மன்ன னாருளம் மகிழ வந்தவன்
தன்ன தருளினால் தளிர்த்த தர்சனம்
தன்னை யுய்க்குமுய் யக்கொண் டான்கழல்
மன்னு மாணுடை மணக்கால் நம்பிகள்.                 .4.

குரவ னேவலை நினைந்து குட்டனின்
பரவு சோதியும் பார்பு ரக்கவாம்
விரவி லக்கணம் யாவுங் கண்”டிவன்
உரவ னாகுவன்” என்று ரைத்தனன்.                       .5.

நாதமுனியின் சீடராகிய உய்யக்கொண்டாருக்கு சீடராகிய மணக்கால் நம்போ இக்குழந்தையை வாழ்த்தியமை. தளிர்த்த – பரவிவரும். தர்சனம் – அறநெறி (மேலோர் காட்டியது). மணக்கால் நம்பி குழந்தையிடம் கண்டவை : சோதி, உலகத்தை ஆளக்கூடிய முக இலக்கணம். உரவன் – அறிவுடையோன்.

வாயு மன்பினில் மெய்யர் முன்னவன்
சேயின் சென்னியிற் தன்கை சேர்த்தரோ
தூய துவாதசாட் சரத்தை யோதினன்
மாய வன்திரு வெட்டெ ழுத்துடன்.                          .6.

மணக்கால் நம்பி இக்குழந்தைக்கு காப்பாக த்வாதசாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ ஆகிய மந்திரங்களை ஓதினர். மெய்யர் முன்னவன் – அந்தணர் தலைவன். சேயின் சென்னியில் தன் கை சேர்த்து …. ஓதினன் -----. அரோ – அசை.

மனுவி ரத்தின மாகும் வண்டுயம்
தனைய வன்செவி தன்னி லோதி,”இத்
தனிவ னப்பினன் தரணி யுய்த்திடும்
முனிவ னாகுவன்” எனமொ ழிந்தனன்.                    .7.

குழந்தையின் செவியில் மந்திர ரத்னம் என்னும் த்வயத்தை மணக்கால் நம்பி ஓதினர். குழந்தை தாம் நினைக்குமாறு மேன்மையுற. மனு – மந்திரம். வண் துயம் – பெருமை வாய்ந்த த்வயம் (சொற்றொடர்கள் இரண்டு கொண்ட மந்திரம்). இ தனி வனப்பினன் – ஒப்பற்ற அழகு வாய்ந்தவன் இவன்.

பிராய மைந்திலிப் பிள்ளை விஞ்சையும்
பராப ரந்தனைப் பரவு வேதமும்
உராவு நற்கலை பலவு மோதினன்
முராரி தன்கழற் பத்தி முன்னிட.                         .8.

ஐந்து பிராயத்துள் கற்றவை. விஞ்சை – வித்தை. கல்வி. பராபரம் – இறைவன். உராவு நல்கலை – பரந்த கலைகள். முராரி – முரனைக் கொன்ற இறைவன். முராரி ……..பத்தி முன்னிட ஓதினன்.

ஒருமு றைகுரு ஓது விப்பதை
மறுமு றைகடிந் தகத்து வைக்குமிச்
சிறுவ னாற்றலைச் சிறுவ ரேனையர்
பெருவி யப்பினிற் பேசி னாரரோ.                       .9.

சிறுவனது ஆற்றல். ஒருமுறை குரு ஓதுவிப்பதை --- மறுமுறை கடிந்து --- இரண்டாவது முறை வேண்டாம் என அகற்றி. அகத்து – நினைவினில்

சாத்தி ரங்களிற் சதுரன் மேதையர்
ஏத்து பாடிய பட்ட னேற்றிட
ஆத்த னிளையவன் சீட னாயினன்
மாத்து மட்டிலாக் கல்வி மாந்திட.                       .10.

பாடிய பட்டனின் சிஷ்யனானமை. குருவின் பெயர் பாஷ்ய பட்டர். சதுரன் – கற்றவன். மேதையர் ஏத்து பாடியபட்டன்---- மேதையரால் பாராட்டப்பெறும் பாடியபட்டன். ஆத்தன் – ஆப்தன், அன்பிற்குரியவன். மாத்து—பெருமை. மா—பெருமை. ஏற்றிட – சீடனாக ஏற்க.

விண்ணுளா ராசிரியன் வியாழன்றா னிவனென்று
மண்ணுளார் வியந்திடவே வந்ததனிப் பிள்ளைதனை
அண்ணலா சிரியன்றன் னருகிருத்திப் பரிவாற்றன்
கண்ணிகர்க் கலையெல்லாங் கதிருறவே கற்பித்தான்.   .11.

இச்சிறுவனுக்குக் குரவர் கலைகளை ஊக்கமுடன் கற்பித்தமை. விண் உளார் ஆசிரியன் வியாழன்தான் இவன் என்று – வானவர்க்குக் குருவாகிய பிருஹஸ்பதி இவன் என்று. அண்ணல் – சிறந்தவன். (குரு) தன் அருகு இருத்தி . பரிவால் …. கற்பித்தான் -----------. கண் நிகர் – தனக்குக் கண்போல் வளர்த்து வந்த . கதிர் உற – இந்த இளைஞன் ஓதிய கலைகள் நிறம்பெறுமாறு.    

புதன், 8 டிசம்பர், 2010

கணக்கு தெரியுமோ கணக்கு

"காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே"

பக்கத்து வீட்டில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் பையன், அழுதுகொண்டிருக்கிறான். அவன் தந்தை அடி பின்னிக் கொண்டிருக்கிறார். விலக்கிவிட்டுவிட்டு, விஷயம் என்ன என்று விசாரித்தேன். கணக்குப் போட கால்குலேட்டர் வேண்டுமாம், 4*4=16 என்று சொல்லத் தெரியவில்லை, படித்தால் என்ன என்று கேட்டால், இதெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமா, கால்குலேட்டர் வாங்கிக் கொடு, பார்த்துச் சொல்கிறேன் என்கிறான். அடித்தேன் என்றார். ஐந்தாவது வகுப்பு வரை தினமும், ஓரோண் ஒண்ணு என ஆரம்பித்து இருபதாம் வாய்ப்பாடு வரை தினமும் பள்ளியில் ஒப்புவிப்பதும் ஒரு தப்புக்கு முட்டியில் ஒரு பிரம்படி என வாங்கியதும் நினைவுக்கு வந்தது. ஆனால் தப்பு முழுவதும் சிறுவனைச் சேருமா?
அடியேன் வயதுக்கு மூத்தவர்களுக்கு மாகாணி முந்திரி வாய்ப்பாடுகள் வாசித்தது ஞாபகமிருக்கலாம். ஆங்கில முறைக் கல்வியால் அன்றே நாம் இழந்தது நம்மிடம் இருந்த துல்லியமான கணக்கிடும் அலகுகள் பற்றிய அறிதல். முன்பே ஓரு முறை நம் இந்திய கணிதத்தில் எண்களுக்கு வழங்கி வந்த பெயர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.அதையெல்லாம் மறந்து விட்டோம்.ஆனாலும் சிலர் அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல அரும்பாடு படுகிறார்கள்.

   இன்று வழக்கம்போல் எதையோ தேட கிடைத்தவர் திரு ஜெயபாரதி. மலேஷியா நாட்டுத் தமிழறிஞர். அகத்தியர் என்னும் யாஹூ குழுமத்தில் எழுதுகிறார். அவருடைய சொந்த வலையுமுண்டு.அதிலே பழந்தமிழ்க் கணக்குகள் பற்றி எழுதுகிறார். அவருடைய வலையில் நுழைந்து மேலே உள்ள பாடலுக்கு விளக்கம் காணலாம். வெளிநாட்டில் வாழ்வோர் தமிழுக்காக உழைக்கிறார்கள். நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே வாழ்பவர்கள். தமிழ் வாழ்க என நியான் விளக்குகளை அரசு அலுவலகங்களில் (நல்ல கமிஷனாம்) எரிய வைப்போம். தமிழ் வாழ்க என மேடையில் முழங்குவோம். தமிழும், அதில் உள்ள பொக்கிஷங்களும் தானே வளராதா என்ன? கால், அரை என்றால் இப்போது அர்த்தமே வேறுதானே!  

Dr. Subramanya swami


New Delhi: Dr Subramanian Swamy is President of Janata Party. Well-educated and honest, he is not only courageous, but extremely blunt and forthright in his views.
Widely known for publicly challenging and fighting against prime ministers and chief ministers, it would do well for his political opponents to remain on the right side of Swamy. For, his wrath can undo governments, leave alone individuals!
Though his histrionics have earned him the reputation of being a rabble-rouser, no one can claim to find anything incriminating against him to charge or drag him to court.
Speaking to Gulf News in an exclusive interview, Swamy has openly spelt out names on the telecom spectrum scam accusing both political and media persons for being corrupt.
GULF NEWS: You seem to be treading into familiar territory with 2G spectrum scam what with earlier taking the cudgels with Janata Dal leader Ramakrishna Hegde and All India Anna Dravida Munnetra Kazhagam leader Jayalalitha and several others?
SUBRAMANIAN SWAMY: This is a very serious matter. The others were for a very different reason. Hegde was a member of my party and crafted the impression that he was a very honest and upright man. But he was most crooked and did all kinds of rackets. And, of course, he was tapping telephones of his own people, including his girlfriends! A man who pretends morality had to be exposed. Strangely, in 1988, our own party decided to investigate the incident of telephone tapping and he supported it thinking I wouldn't get to the bottom of it. When trapped, he filed a defamation case against me and later withdrew, which ended his career.
In the case of Jayalalitha, I helped her win the elections and become the Chief Minister. I was also instrumental in providing her adequate security after the DMK (Dravida Munnetra Kazhagam) government, which was close to the LTTE (Liberation Tigers of Tamil Eelam) was dismissed. But after winning, she began doing all the rotten things that the DMK was doing. Whether she or her associates did, I can't say. I questioned her and she got angry with me. In the process she started letting loose violence against me. That's when I said to her, ‘I'll teach you a lesson'. I dropped everything, sat in Tamil Nadu, and brought her down.
Is it because of bringing down governments that you are known as a troublemaker?
That's not true. There are also governments where I've helped. Like, the Narasimha Rao government couldn't have survived but for me. I created the Chandra Shekhar government, which actually initiated the reforms even though it didn't get the credit because it did not last very long. I helped Rajiv Gandhi survive in his worst days when everybody abandoned him.
Just because they [the politicians] can't say I'm corrupt or illiterate, they spread this usual propaganda that I'm a troublemaker. The public doesn't think so. Else I wouldn't have been elected to Parliament five times.
But haven't you kind of dragged Prime Minister Manmohan Singh to court — something that was till now unheard of?
Yes, but I also saved him because I thought the press was getting out of control and over-drawing the picture. I said that he sat on my petition to permit me to prosecute telecommunications minister Andimuthu Raja. Now, for the first time in the history of India the Supreme Court has directed the PM to file an affidavit. This affidavit shows that every letter of mine was marked by him for action, but his officials told him he didn't have to. He didn't know the law and I don't expect him to. But since Raja was forced to resign by him, I didn't want any more sanctions and said the PM didn't need to resign. Now they [Congress persons] were wild, because they wanted to shoot him with their guns on my shoulder.
Who do you mean by ‘they'?
Congress President Sonia Gandhi. She wants someone more pliable than Singh. He's pliable enough, but obviously, she is not satisfied.
And who do you think could be considered more pliable?
Defence Minister A.K. Antony, if she can't bring in her son Rahul Gandhi.
Are you getting to all this because your party is nowhere in the picture and you wish to remain in limelight?
First of all, whether I'm doing it for this or that reason, the question is am I speaking the truth. Is there corruption or not? It doesn't matter what my motivation is. These are cheap diversionary tactics, which I don't take seriously.
Why has it taken two years for the 2G spectrum scam to come to light?
That's because it took me more than one-and-a-half years to get hold of the documents, which was not easy. I had written to the PM in 2008 and he took two years.
On what basis do you say that it could possibly be the case of the most monumental corruption in world history?
Look at the sheer size of the amount of Rs1.76 trillion (Dh142 billion) the nation has lost. And I'm not talking about the bribe, which itself is pretty big. The total loss, had there been an auction, and what actually it was sold for (Rs100 billion), is huge. The bribe is a thing that out of the gain these people have potentially made and will make over the years. My estimate is Rs600 billion of bribe involved.
Do you suspect the roles of some journalists and editors including Hindustan Times columnist Vir Sanghvi and NDTV's Barkha Dutt in this scam?
Most people are relying on corporate lobbyist Nira Radia tapes. But I know from personal experience that journalists do a lot of hack jobs. If wanted, they character assassinate you at the behest of the ruling party. In my case, the media cannot say anything except that I'm a troublemaker, which doesn't sell very well. They don't publish anything I say unless it becomes impossible like now, because the telecom scam has become a big issue. They've been doing it systematically. When elections take place, many journalists come and ask for money, saying they'll give favourable coverage in return.
In the case of Vir Sanghvi, I know he used to visit Phuket [in Thailand] almost every weekend and the Tamil Tigers used to finance his trips. Because of his lifestyle, I knew he was amenable and a real fixer. He's been writing articles depending on who's in power. As for Barkha Dutt, she's been indiscreet and doing foolish things.
You're quoted as saying that though the PM is honest, others are not. Who are these persons?
Yes, he is honest, but officials around him like his Principal Secretary T.K.A. Nair and Cabinet Secretary Pulok Chatterjee are not with him. They are all Sonia's appointees. Even if you ask for the PM's appointment, her people decide who can and cannot see him.
You've also said that if the PM resigns, it will strengthen those who made money. Could you name them?
Sonia and DMK party chief M Karunanidhi.
You mean Raja is just a face and the real culprits are the biggies of the DMK?
Raja got 10 per cent, Karunanidhi 30 per cent and Sonia's two sisters have got 60 per cent of the loot.
Have you done in-depth research and investigation to make such claims?
Yes, I've enormous access because whatever my enemies may say, one thing is there that I've never betrayed anybody. Today, people in the government are so fed up seeing everything happening in close range and all this material is available with the PM.
Why is the UPA - 2 seeing so many scams?
Earlier, the scams were related to the defence deals, where things were difficult. Now, they have got into things within the country. And since there are lots of players, some of them spill the beans.
You think the recent Mumbai's Adarsh housing and 2 G spectrum scams could be inter-related?
Yes, looks like it. Lots of loans have been given, which obviously have been used.
How soon do you think all this will come out?
Raja getting an arrest warrant will happen soon and cancellation of the licences given so far could happen within the next 2-3 months. As far as the recovery of the money is concerned, of which there is a big demand in the country, that will take time.
However, if the Americans, who know it all, co-operate, we can get it because there is the UN agreement on money laundering.
Do you think the Congress will ask the Americans?
No, they won't. But I can force them to. It's only a matter of time. They know what I can do in court. They can't buy my lawyers, because I don't keep any! I argue cases myself.
Why is the Congress so adamant about not having a Joint Parliamentary Committee (JPC) probe into the 2 G scam?
That's because the JPC will be free for all. And they know that I will start advising the MPs what questions to ask.
One of the questions is about her [Sonia's] sisters having got the money. And if the JPC calls for the intelligence people, they will have to question her because the data is now with them

செவ்வாய், 7 டிசம்பர், 2010

From "Tehelka"

One of my friends commented" will you not present some thing to non-Srivaishnavites and for those who want some light reading on the blogs?" He does not know that I do not write anything myself. But still, I realised there is a point in his argument. So far a change, I share this article I read on the net.

"This week, continuing its campaign against out-of-turn allotments of land and property, TEHELKA has an exposé on Tamil Nadu Chief Minister M Karunanidhi. The Tamil Nadu Housing Board (TNHB) which commands a large land bank, has a government discretionary quota (GDQ) under which 15 percent of all allotments can be recommended by the CM. Eligibility for allotment under GDQ is as follows: single/deserted women; widows; social workers; physically handicapped persons; defence personnel; ex-servicemen; eminent persons in the field of science, arts, literature, economics, public administration and sports; freedom fighters; government servants with unblemished service records; employees of PSUs, central government undertakings and nationalised banks; PF institutions; journalists; university staff; and employees of local bodies and municipalities.


While some of these categories sound kosher, most of them raise a fundamental question: why should the government have the power to give coveted land to select employees and journalists over others? The only rationale could be proximity — which is an untenable reason for being the beneficiary of political favours, often worth several crores.


Setting this aside, even within the legal ambit of the GDQ, TEHELKA’s investigation shows that many of the allotments in Karunanidhi’s tenure have violated the rule book. Many bureaucrats and their relatives have been given plots or flats under the category of “social worker”. Some of these last did social work when they were in college; many of them claim to be volunteers in such routine activity as helping in blood donation or eye camps. Many have issued certificates to themselves; some have acquired letters from the Lions and Rotary Clubs with vague endorsements. In other violations, the rules say that no one who has any other land or property in Tamil Nadu or any other capital city, in either their own or spouse or minor children’s name, can apply for GDQ allotments. TEHELKA found this is routinely violated.


Many of the allottees issued certificates to themselves, while some got letters from Lions and Rotary Clubs
The other brazen violation lies in the claim of “unblemished” service records as a qualification for allotment. When RTI activist V Gopalakrishnan sought a list of such bureaucrats, Additional Secretary S Solomon Raj said, “As no unblemished government servant certificates are issued, the question of furnishing a list of names does not arise.” The additional secretary also clarified that the home department didn’t have such a list. This is the phantom category under which many public servants like Jaffar Sait, 1986 batch IPS officer, now Inspector General of Police–Intelligence, got large allotments of land in prime locations. Why them more than hundreds of others? That’s a democratic question the chief minister will have to answer.

For more detailed news and to know whom Tehelka points out as beneficiaries please visit
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne111210Coverstory.asp

பாச மலர்

ஜப்பானியர் ஒருவர், அவருக்குப் பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து 10 வயது ஆகும் வரை தினமும் அந்தக் குழந்தையை விதம் விதமாக போட்டோ எடுத்து அதை ஒரு வீடியோவாக மாற்றி அந்தக் குழந்தைக்கு பரிசாக அளித்திருக்கிறார். நம்மைப் பெற்றவர்கள் பல நேரங்களில் நீ சிறு வயதில் அப்படி விஷமம் பண்ணினாய் என்று வர்ணிக்கும்போது கற்பனை செய்து பார்ப்பதே கஷ்டமாயிருக்கிறது. எங்களூரில் ஒரு பெரியவர் அடியேனைப் பாரத்து அடிக்கடி நீ குழந்தையாய் இருக்கும்போது எவ்வளவு அழகாயிருப்பாய் தெரியுமோ என்பார். இப்போதுள்ள அடியேனின் சொரூபத்தை கிண்டல் பண்ணுகிறாரா அல்லது நிஜமாகவே அழகாய் இருந்தேனா? இப்படி ஒரு போட்டோ என்னையும் எடுத்திருக்கலாம்!தெரிந்திருக்குமே! என்று எண்ண வைக்கும் அந்த வீடியோ

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தேசிகப்ரபந்தம்– ஆர். கேசவய்யங்கார் பதிப்புரை

முத்தமிழ்: மாறனலங்காரம்: விருத்தியுரை:

    இச்சிறப்புப் பொருளைத் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறனலங்காரநூலிலும், காரிரத்நகவிராயர் அதன் விருத்தியுரையிலும் கூறியிருத்தலை இங்கு எடுத்துக்காட்டுவாம். “முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைக்கை கண்டு தொழும், உத்தமராய் வாழ்வாருளம்”1 என்றும் “புத்திக்கு வித்தென்பர் முத்தமிழ் வாய்மைப் புலவர் மண்மேல் எத்திக்கும் போற்றும் திருமகிழ்மாலை யிறைவனையே”2 என்றும், ஓதாதோதும் திருஞான முத்திரைக்கராம்புயனாகிய திருமகிழ்மாலையிறைவன் பாடியருளிய திருவாய்மொழி “முத்தமிழ்” என்று அலங்காரநூலார் கூறியுள்ளதும், “முத்தமிழ்: சித்த சித்தீச்சுரமூன்றுங் கூறுந்தமிழ்: அது திருவாய்மொழி” 3என்றும், “முத்தமிழ் வாய்மை” என்ற இடத்து “முத்தமிழ்: சித்த சித்தீச்சுரமூன்றுங் கூறுந்தமிழ்: அது திருவாய்மொழி, எழுத்தும் சொல்லும் பொருளுந் தேரும் வாய்மையுமாம்”4 என்றும் விருத்தியுரைகாரர் கூறியுள்ளதும் கண்டு, முத்தமிழ் என்பது சடகோபர் திருவாய்மொழி ஆயிரம் என்றது நன்கு காணலாம்.

    ரஹஸ்யத்ரயஸாரநூல் ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயம் நல்கிய “முத்தமிழ்சேர்ந்த மொழித்திரு” என்ற பொருண்மெய்ம்மை இவ்வாறு விளக்கப்பட்டது.  இனி இச்சமயத்துக்கு அச்சுருவாணியாய் நிலைத்துள்ள தத்துவமும்மையைச் சிறது விளக்குவாம்.

தத்துவமும்மை: இறைநிலை: ஸர்வசரீரித்தன்மை.

    சித்து, அசித்து. இறை எனத் தத்துவங்கள் மூன்று என்று மேலே கூறப்பட்டது.  அசித்தை “ஒழித்தாற்பாலது” (ஹேயம்),5 என்றும் சித்தை “உணர்பவன்” (ஞன்)6 என்றும், இறையை “உணரற்பாலன்” (ஞேயன்)7 என்றும், “முக்தர்களால் அடையற்பாலன்” “முக்தர்களால் தொழற்பாலன்” (முக்தோபஸ்ருப்யன்)8 என்றும் தத்துவமும்மையை அவற்றின் தன்மையைக் கொண்டு வ்யாஸர் சாரீரக நூலில் (ப்ரஹ்மசூத்திரத்தில்) காட்டி அருளினார்.  வ்யாஸர் பணித்த சாரீரக நூலே சடகோபரது சமயநூல். “சமயநீதி நூலென்கோ”9 என்ற திருவாய்மொழிக்கு, “ஸர்வவேதார்த்தநிர்ணாயகமாய், ஹேதுமத்தாயிருந்த ப்ரஹ்மஸூத்ரபதங்களாலும் பரமபுருஷார்த்ததயா, ப்ரதிபாத்யமாநனென்று சொல்லுவேனோ”9 என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவாறாயிரப்படியில் பாஷ்யம் அருளியிருத்தல் கண்டு, வ்யாஸர் பணித்த சாரீரகநூல் சடகோபருடைய “சமயநீதிநூல்” என்ற உண்மை தெளிக.  இறைப்பொருளாகிய பார்த்தன் தேர்முன் நின்ற பரஞ்சோதி தானுமே தான் அருளிய “அருண்மொழியாகிய கீதைதனக்கும் வ்யாஸபகவான் அருளிய “ப்ரஹ்மஸூத்ரத்தை” சான்றாகக் காட்டியுள்ள10 அருமை கண்ட சடகோபர்க்கு அந்த ப்ரஹ்மசூத்திரம் சமயநீதிநூலாய்த் திகழ்ந்த பண்பைப் பிள்ளான் விளக்கியுள்ள நயம் காண்க.  கீதைச்லோகத்தையும், உடையவர் ஸ்ரீபாஷ்யஸமந்வயாதிகரண ரஸத்தையும் இங்குப் பிள்ளான் சேரத்திரட்டி விளக்கியுள்ள நலம் ஓர்க.  ப்ரஹ்மஸூத்ரம் சடகோபருடைய சமயநீதி நூல் என்ற இப்பொருளை “வேதாந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்த யுகாரம்பத்திலே ப்ரஹ்மநந்தியாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகரானார்11 என்று வேதாந்ததேசிகர் காட்டினார்.  “திருமால்பெருமை பார்த்தற்கருளிய பாரதத்தைப் பணித்தானும், நின்றவார்த்தைக் குருகைப்பிரானுங் கண்டானம்மறைப் பொருளே”12 என்ற கம்பர் பாடலையும் காண்க.  இதனால் சித்த சித்திறைத்தத்துவமும்மையை அடியாகக் கொண்டுள்ள வ்யாஸருடைய சாரீரகநூல் சடகோபருடைய சமயநீதி நூல் என்றும், அதன் விளக்கமே சடகோபர் திருவாய்மொழி என்றும்  கண்டுணர்க.  மேலே கூறியபடி இத்தத்துவமும்மையை வ்யாஸர் காட்டியதற்குத்தக “ஆக்கைநிலையாமை” “உயிர்நிலை” “இறைநிலை” என்று ஆன்றோர்கள் பகுத்துள்ளார்கள்.  அசித்து என்பது உணர்வற்ற சடப்பொருள்.  சித்து என்பது உணர்வுற்ற உயிர்ப்பொருள்.  இறை என்பது அசித்தையும் சித்தையும் தன்கருத்தால், தன் பொருட்டு, தன்வயத்தவாய், தானே உள்ளுயிராய் நின்று நடத்திப்போரும் தனிக்கோலுடைய காரணப்பரம்பொருள்.  அசித்து சித்துக்கு உடம்பு.  உடம்பாகிய அசித்து உயிராகிய சித்துக்கு அடை.  அடைகொண்ட சித்து இறையாகிய பரம்பொருளுக்கு அடை. சித்துக்கு அசித்து அடை.  அசித்துக்கு சித்து அரு.  சித்துப்பொருளை அத்திகிரிமான் மியத்தில் “அருக்குலம்”13 என்றது காண்க.  இறைக்கு சித்து அடை.  சித்துக்கு இறை அரு.  சித்துக்கு அசித்தாகிய அடை உரு.  இறைக்கு சித்தாகிய அடை உரு.  அடக்கப்படுதலால் அடை.  அடக்குதலால் அரு.  அருவால் அடக்கப்படுதலாலும் அருவில் அடங்குதலாலும் அருவுக்கு உரு அடையாகும்.  உயிர்ப்பொருளாகிய அருவின் வினைவயத்தால் அது உருத்தரிக்கின்றது. அவ்வயம் ஒழிய அவ்வுரு ஒழிகின்றது.  மற்றோர் வினைவயத்தால் மற்றோர் உருத்தரிக்கின்றது. அவ்வயம் ஒழிய அவ்வுரு ஒழிகின்றது.  அஃதே அருவின் உருக்கலைவு.  அதுவரை அந்த அரு அந்த உருவைப் பற்றியே நிற்கின்றது. அருவின் பற்றில் உருவாயும் அதன்பற்று ஒழியச் சவமாயும் சடம் ஒழிகின்றது. அருவின் பற்று உள்ளவரையில். அருவின் உயிர்த்தன்மையால் அதன் உருவாயும், பற்று ஒழிய அடைமை நீங்கி அழனமாயும் சடம் ஒழிதலால் உரு என்பது அருவின் பிரியா அடை ஆயிற்று.  உயிர்ப்பொருளாகிய அருவின் வினைவயமாய் அடைத்துள்ளதால் உரு என்பது அதனோடு ஒன்றிப் பிரிக்கவொண்ணாது அதன் தற்கிழமைப் பொருளாய் நின்றுள்ளது.  கோல், குண்டலம், முதலிய பிறிதின் கிழமைப் பொருள் போலன்றி உரு என்பது அருவின் பற்றில் அருவோடு ஒன்றி அருவால் காக்கப்பட்டு அருவின் கண் அடங்கி அருவோடு ஒருமை பெற்றுள்ளது. அவ்வொருமை விசிட்ட ஒருமை ஆகும். அது போல் இறையாகிய பரம்பொருள் தன் கருத்தினடியாக உயிர்ப்பொருளாகிய அருவை அதன் வினைக்கு ஏற்றதோர் உருவோடு உளவாக்கி, உளவாக்கிய அவ்வருவைத் தனக்கு உருவாக்கித் தானே அதற்க அருவாய் நின்று அதைத் தற்கிழமைப் பொருளாய்க் கொண்டுள்ளது.  வினைவயமாய் உயிர்க்கடைத்த உருப்பற்றுப் போலன்றி இறைவன் தன்கருத்தாலேயே தன்பொருட்டே தனது அருளின் திருவிளையாடலாக உயிர்ப் பொருள்களைத் தனக்கு உருவாகப் பற்றி நிலை கொள்ளாநின்றான்.  ஆக்கையாகிய உருவை உயிராகிய அரு. வினைவயத்திற் பற்றியுள்ளது போலன்றி, அருவாகிய உயிரைத் தனக்கு உருவாக இறைவன் தரித்துள்ளபற்று, தனது பேரருளிற் கொண்டுள்ள விடாப்பற்றாகும்.  அருளின் பற்றாதலின் அது விடாப்பற்று.  உயிர்களெல்லாம் தனக்கு ஒத்த நாயகிகளாதற்கு, உலகநாயகனான தான், தனது இன்னருளில் செய்துள்ள கைப்பற்றாதலின், அப்பற்றிற் கொண்ட உயிர்களாகிய இறைவனது உரு என்றுமே கலையாததொன்றாயிற்று.  தன்னருளிற் கைப்பற்றிய தனது தற்கிழமைக் காதற்பொருள்களாகிய உயிர்களைப் பரம்பொருள் என்றுமே கைவிடான்.  அஃதே இறைவனது “மெய்க்கருத்து” “மெய்க்காதல்”.  உயிர்ப்பொருள்கள் தன்னைத்தாள் பற்றித் தன்னடிக் கீழமர்ந்து புகுந்து புக்ககமாகிய தன்னடிக்கீழ் என்றுமே சடம்பற்றாப் பெருவாழ்வில் நிலைபெற்று உய்தற்கே இறைவன் உயிர்களை உருவாகப்பற்றி அவற்றுக்குத் தான் அருவாக நிலைத்துள்ளான்.  உயிர்களுக்கு அருவாக நிற்றலோடு, கருவாகவும் நிற்கின்றான்.  அதாவது உலகுக்கெல்லாம் காரணப் பொருளாய் விளங்குகின்றான் என்றபடி.  அருவாகிய உயிர்களுக்கு அவற்றின் வினைப்பயனாய் அசித்தை உருவாகப்பூட்டி அப்பூட்டுக்கு ஏற்கப் பெயரிட்டு, செய்தொழில் வகுத்து, அவை அனைத்துள்ளும் தன் கருத்தினடியாகத் தானே அருவாயும் கருவாயும் நின்று படைப்பனைத்தையும் தன்கோலில் தடையற நடாத்தும் காரணப்பரம்பொருளே இறைவன் என்றது திரண்டபொருள்.  ஈதே உபநிடதம் உணர்த்தும் தத்துவமும்மையுண்மை, இறைமையிலக்கணம். இறைவன் அருளிச் செய்யும் பேருரு இலக்கணம் (நாமரூபவ்யாகரணம்). சடப்பொருள் உருவாயும், உயிர்ப்பொருள் சடத்தை நோக்க அருவாயும், இறைப்பொருள் எப்பொருளுக்கும் தானே ஓர் அருவாயும் கருவாயும் ஒன்றிய ஒருமையில் நிற்கும் தனிநிலையே இறை நிலை என்றவாறு.  அஃதே இறைப்பொருளின் ஸர்வசரீரித்தன்மை. சாரீரனே இறைவன்.  ஆதலால் சாரீரன் விஷயமாய்ப் பணிக்கப்பட்ட வ்யாஸரது ப்ரஹ்மஸூத்ரத்தை ஆன்றோர்.  ‘சாரீரகம்’ என்பர் என்று உடையவர் ஸ்ரீபாஷ்யத்தில் (ஆநந்தமயாதிகரணத்தில்) அருளிச் செய்தார்.  சாரீரகசித்தாந்த விளக்கமே சடகோபர் திருவாய்மொழி என்று மேலே கூறப்பட்டது. “திரவிசும் பெரிவளி நீர்நில மிவை மிசைப் படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும், உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியு ளிவையுண்ட சுரனே”14 “தெளிதரு நிலைமைய தொழிவிலன் முழுவதுமிறையோன். அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே”15 “அமைவுடை  அறநெறி முழுவதும் உயர்வற உயர்ந்து அமைவுடை அமரரும் யாவையும் யாவரும்தானாம், அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?”16 “யாவையும் யவருந்தானா யவரவர் சமயந்தோறும், தோய்விலன் புலனைந்துக்கும் சொலப்படா னுணர்வின் மூர்த்தி, ஆவிசே ருயிரினுள்ளால் ஆதுமோர் பற்றிலாத, பாவனையதனைக்கூடில் அவனையுங்கூடலாமே”17 “எல்லாப்பொருட்கும், அருவாகிய ஆதியைத் தேவர்கட்கெல்லாம். கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே”18 என்று சடகோபர் சாரீராகப் பொருளை விளக்கியருளியபடிகள் கண்டுணர்க.  அரு என்றதால் உள்ளுயிராய் அடக்கி ஆளும் இறைமையையும் கரு என்றதால் காரணமாய் நிற்கும் இறைமையையும் ஓதியருளினார். காரணப்பொருளாகிய இறைப் பொருள் தானே முதலாயும், தனியாயும், வித்தாயும் விளங்குகின்றது என்று அதன் காரண இறைமையை “முனிமாப்பிரமமுதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனிமாத் தெய்வம்”19 என்றும் “என் முதல் தனிவித்தேயோ?”20 என்றும் தேற விளக்கி அருளினார்.  முதல் ஆதலால் கருதும் காரணமாயும், தனி ஆதலால் கருவிக்காரணமாயும், வித்து ஆதலால் கருக்காரணமாயும், இறைவன் விளங்குகின்றான் என்ற சாரீரக உண்மை காட்டப்பட்டது.  இதனை சாரீரக நூலார் முறையே நிமித்தகாரணம். ஸஹகாரிகாரணம், உபாதாநகாரணம் என்பர்.  கருத்தாவாயும் கருவாயும் விளங்கும் காரணப்பரம்பொருளின் கண்ணே கருத்து கிரிசை கருமம் முதலிய காரகத்தொழில்களும் கருமபலன்கள் யாவுமே ஒன்றியுள்ளன என்றும், ஆதலால் இறைவனை ஆக்குமுதல்வன் என்றும் ஆமுதல்வனென்றும் சாரீரகப்ரதாநப்ரதிதந்த்ர உண்மையை சடகோபர் ஐயமறத் தெளிவித்தார். “நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் வேதமயன், காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்21 என்றும் “கருமமும் கருமபலனமாகிய காரணன்”22 என்றும் “எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும், அவையுள் தனி முதல் எம்மான் கண்ணன்”23 என்றும், “ஆமுதல்வன் இவனென்று தற்றேற்றி என், நாமுதல்வந்து புகுந்து நல்லின்கவி, தூமுதல்பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்வாய்முதலப்பனை என்று மறப்பனோ?”24 என்றும், இறைவன்தானே தனது ஆமுதன்மையையும் (உபாதாநகாரணத்தையும்) ஆக்கும் முதன்மையையும் (நிமித்தகாரணத்தையும்) சடகோபர்க்குத் தற்றேற்றுமாற்றானே அவரது நாமுதல்வந்துபுகுந்து தனது இறைநிலை உண்மையை (சாரீரகசித்தாந்தத்தை)ச் சொன்னவாய் முதலப்பன் (திருவாய்மொழி பாடிய அப்பன்) என்னும் உண்மையைச் சடகோபர் காட்டும் அருமை காண்க. இதன்விளக்கமும் ஸாரமும் “தேற இயம்பினார்..... மறைநூல்தந்த ஆதியரே” “நான்மறையுள்ளக் கருத்திலுரைத்துரைத்த முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்த மொழித்திருவே” என்ற இம்மஹாதேசிகரது பாடல்கள் என்றதை உற்று நோக்கிக் காண்க.



1&3மாறனலங்காரம்; பொருளணியியல் 128; 2 293; 4. 293; 5. ப்ரஹ்மசூத்ரம் 1.1.8; 6. 2.3.19;
7. 1.4.4.; 8 1.3.2; 9. திருவாய்மொழி 3.4.6.10 கீதை 13.4; 11 ஸம்ப்ரதாய பரிசுத்தி; 12 சடகோப 41;
13 அத்திகிரிமான்மியம் 19; திருவாய் 1-5-10; 14 ௸ 1.1.7. 15 ௸ 1.3.2; 16 ௸ 1.3.3; 17 ௸ 3.4.10;
18  ௸ 9.4.8; 19 ௸ 9.1.7; 20 ௸ 10.10.8; 21 ௸ 2.7.2; 22 ௸ 3.5.10; 23 ௸  1.9.1; 24
௸  7.9.3