வியாழன், 25 மார்ச், 2010

P1010416 

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவத்தின் 4ம் நாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப் படி. காலையில் ஆச்ரமத்திற்கு பெருமாள் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. அடுத்த பதிவில் விரிவாக வீடியோவுடன் அதைப் பற்றி எழுதுவேன். அன்று இரவு,
ஸ்ரீஇராமன் பழையவை என்றும் இனியவை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கம்பீரமாய் காட்சி அளிக்கும் கருட வாகனத்தில் ஆச்ரம முகப்புக்கு வந்து தோழனாகச் சேர்ந்துகொள்ள,

P1010410

 

ஆச்ரம வாசலில் தோழர் வருகைக்காக, தேவாதிதேவனை

“உம்பருட னம்புயனு முமையம்மை
                               யொருபாகனு
          மொளிர் வச்சிர தரனுமே
லுபாதிசெயரரக் கரால்நொந்து முறையிடும்
                                                    போதி
          லுறுதுகிலை நீங்கு முன்னாட்
கம்ப மதயானைமுன் பம்புதிரை வாவியற்
         கருடா சலப்பிடரின் மேல்
கருணை குடிகொண்டதொரு நீலமேகங் கமலக்
         காடுபூத் தொளிர்வ தென்னத்P1010412
தும்புருவு நாரதரு மின்ப ராகங்களைச்
         சுருதிமுறைப் பாடி வரவே
தொண்டருட னண்ட பகிரண்டமூ தண்டமுந்
         தோத்திரஞ் செய்து தொழவே
செம்பொன் மகமேரு கிரிபோற் சிவந்
       தொளிர் பெரியதிருவடி புயாசலத்திற்
செந்தமிழ்ப் புல்லாணி வீதிவருசெக நாத
       தெய்வச் சிலைக் கடவு”
ளைத் தாங்கி நிற்கும் பெருமிதத்தோடு பூரித்து நிற்கும் புதிய கருட வாகனத்தில்  தயாராய்க் காத்து நின்ற ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் திருவீதிப் புறப்பாடு கண்டருளி ஆஸ்தானம் அடைந்தார்.

'”திருப்புல்லாணி இரட்டை கருட ஸேவை என்பது நேரில் அனுபவிக்க வேண்டிய ஒன்று. உலகின் எங்காவது ஒரு மூலையில் வீட்டில் ஹாயாகச் சாய்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் பார்ப்பது கூடவே கூடாது” என்பது எங்கள் ஊர் கோவில் எலக்ட்ரீஷியன் கொள்கை. அதனால் இந்த இரட்டை கருட வாகனத்தைப் புகைப் படம் எடுப்பவர் எவ்வளவு விருது பெற்ற காமராமேன் ஆக இருந்தாலும் அவர்களுக்கு சவால் விட்டு தானே ஜெயிக்கும் வண்ணம் “விளக்குகளை அமைப்பதில் நிபுணர்.” எந்த ஆங்கிளில் நின்றாலும் காமரா லென்ஸில் Focus lightன் ஒளி பாயும். தேவஸ்தானமோ, ஊரில் மற்றவர்களோ கூலி கொடுக்க மட்டுமே கடமைப் பட்டவர்கள். மற்றப் படி அவர்கள் சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டும். இந்த அமெச்சூர் எடுத்த படம் எப்படி நன்றாக வரும்? பாருங்களேன்.

P1010414

P1010415

P1010416

P1010417

ஆச்ரமத்தின் முன்பாக திருவீதிப் புறப்பாடு துவக்கம்

P1010419

P1010420

13 கருத்துகள்:

  1. கண்டேன், கண்டேன், கண்டேன்!
    கண்ணுக்கு இனியனைக் கண்டேன்!

    உபய கருட சேவை அருமை!
    பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே! பல்லாண்டு கூறுவனே!

    கருட வாகனமாசீனம்
    ததாசாயே ஜகத்பதிம்
    இந்த சுலோகம் ஜகத்பதிம்-புல்லாணி ஜகன்னாதனுக்கு இன்னும் பொருந்தும்! :)

    பதிலளிநீக்கு
  2. பழைய கருடன் கம்பீரமா இருக்கார்!
    புது கருடன் கொஞ்சம் Soft போல! :))

    அது என்ன பழைய கருடன் மேல், பெருமாள் ரெண்டு கையைத் தூக்கிப் பிடிச்சிக்கிட்டு, வித்தியாசமான போஸில் உலா வராரு? :)

    ஆதி மூலமே-ன்னு ஆனை தானே சரணாகதி செய்தது, கைகளைத் தூக்கி?
    அப்போது கருட சேவையில் வந்தவனும், கைகளைத் தூக்கிக்கிட்டே வந்தா என்ன அர்த்தம்-ங்குறேன்? :))

    கோஷ்டிக்கு அடியேன் வணக்கம்!

    புல்லாணிக்கே உரிய ஸ்பெஷல், உபய கருட சேவை பற்றி வரலாற்றுக் குறிப்பெல்லாம் சொன்னீங்க-ன்னா...கூலி கொடுக்காம கரும்பைத் தின்போம்! :))

    பதிலளிநீக்கு
  3. எம்பெருமான் கருட வாகனத்தின் மேலேறி...
    தொம் தொம் என்று வரும் போது,
    அவன் நடையழகு மட்டுமன்றி,
    திருவடியின் நடையழகும் சேர்ந்தே சேவையாகும்!

    கருட வாகன ராகம் = கருடத்வனி
    இதை மல்லாரியோடு நாதசுரத்தில் வாசிப்பார்கள்!
    அப்போது பெருமான் ஆரோகணிக்கும் அழகே அழகு!
    தீபம் காட்ட மட்டுமே நின்றிருந்த நான் என்னையும் மறந்து கூடவே ஆடியிருக்கேன்! :))

    இதோ கருட வாகன இசை:
    http://www.youtube.com/watch?v=Sf9cljDVyDc
    http://www.youtube.com/watch?v=EPeJY5ai9aM

    பதிலளிநீக்கு
  4. மணி 10:00 pm
    இங்கிட்டு மதியம் 12:30

    இன்னும் தூங்கலையா-ண்ணா நீங்க? :)
    என் பின்னூட்டம் பதிப்பிச்சிக்கிட்டு இருக்கீக? :)

    பதிலளிநீக்கு
  5. இராமன் சரணாகதி மேன்மையை உலகறியச் செய்திட்ட இடம் திருப்புல்லாணி ஸேதுக்கரைதானே! இன்னும் அதனை அறியாதவர்களுக்காக இரு கைகளாலும் வாருங்கள் சீக்கிரம் வந்து சரணடையுங்கள் என்று சேதனர்களையெல்லாம் அழைக்கிறாராக்கும்!
    நடையழகா? தோள்மீது ஏளப் பண்ணால்தானே அதெல்லாம் அனுபவிக்க முடியும்? இங்குதான் சகடையாய் மாறிப் பல வருடங்களாகி விட்டனவே!
    பரமக்குடியிலிருந்து எங்கள் செலவில் சீர்பாதக் காரர்களை அழைத்து வரவும் ஏகப்பட்ட ஆக்ஷேபணைகள்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7:15 AM

    புகைப்படங்கள் நன்றாகவே வந்திருக்கின்றன. கருட சேவை மிக அருமை

    ராஜன்

    பதிலளிநீக்கு
  7. பழைய கருடன் படத்தைக் க்ளிக்கி, பெரிதாக்கிப் பாருங்கள்!
    கருடன் எப்படி இரு கைகளையும் தூக்கி, பெருமாளைத் தாங்கிகிறானோ...
    அதே Pose-இல் தான் பெருமாளும் இருக்கார்!

    ஏன்? கருடனைக் கிண்டல் அடிக்கவா? :)
    ஒருத்தர் நடப்பது போல், நாம் நடந்து காட்டிக் கிண்டல் அடிப்போமே? - அது போல பெருமாள் கிண்டல் செய்கிறாரா பெரிய திருவடியை? :))

    சேச்சே! அதெல்லாம் தீராத விளையாட்டுப் பிள்ளை நான் தான் செய்வேன்! பெருமாள் ரொம்ப நல்லவர்! அதுவும் புல்லாணிப் பெருமாள் very matured! சொல்லவே வேணாம்! பின் ஏன் இப்படி ஒரு Pose?

    பதிலளிநீக்கு
  8. சுவாமி ரகுவீரதயாள் அழகாகச் சொன்னது போல்,
    திருப்புல்லாணி-சேதுக்கரை விபீஷண சரணாகதி நடந்த இடம்!
    ஆனால் எதற்கு கருடனைப் போலவே கையைத் தூக்கிக்கிட்டு இருக்கான்? வாங்க வாங்க, சீக்கிரம் என்னைச் சரணம் அடையுங்க-என்று சொல்வதற்கா?

    இல்லை! அதற்கு காலைச் சுட்டிக்காட்டி இருக்கலாமே, திருவேங்கடமுடையானைப் போல? ஏன் இரண்டு கைகளையும் உயரத் தூக்க வேணும்? அதுவும் கருடனைப் போலவே?

    சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே!
    அபயம் சர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம!!
    - இப்படிக்கு இராகவன்

    பதிலளிநீக்கு
  9. சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே!
    - ஒரே ஒரு முறை, சரணம் என்று வந்தக்கால், அன்பைத் ஆத்ம பூர்வமாய் தந்தக்கால்...

    அபயம் சர்வ பூதேப்ய:
    - எது யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்...
    மனிதனோ, அசுரனோ, தேவனோ, பறவையோ, விலங்கோ,
    - மனிதனுக்குள்ளேயே அந்தச் சாதியோ, இந்தச் சாதியோ, எந்த மொழியோ, நல்லவனோ, கெட்டவனோ, போகியோ, யோகியோ...
    - ஞான யோகியோ, கர்ம யோகியோ, பக்தி நெறியாளனோ...யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும்...

    ஒரே ஒரு முறை,
    "சரணம்" என்று வந்தக்கால்...

    அபயம் "சர்வ" பூதேப்ய
    யாருக்கானாலும் "அபயம்" அளிப்பேன்!

    ததாம் யேதத் வ்ரதம் மம!!
    - இது விரதம்! சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

    என்று ஊர் அறிய, உலகு அறிய
    நடுத் தெருவில் சத்தியம் செய்து காட்டுகின்றான்!

    அதான் இரு கைகளையும் உரக்கத் தூக்கி,
    This Jagannathan of PullaaNi is taking Oath!

    என்னை எப்படிக் கருடன் தாங்குகிறானோ...
    அதே போல்...
    என் ப்ரியமான சரணாகதனே...
    உன்னை நான் தாங்குவேன்!
    உன்னை நான் தாங்குவேன்!
    உன்னை நான் தாங்குவேன்!

    பதிலளிநீக்கு
  10. சக்ருதேவ ப்ரபந்நாய = ஏகம் சரணம்!
    அபயம் (அ+பயம்) = மா சுச: = பயப்படாதே/கவலைப்படாதே!

    This Jagannathan of PullaaNi is taking Oath!

    பதிலளிநீக்கு
  11. உன் பாரம் கருடன் தாங்குவது போல்
    என் பாரம் நீ தாங்குகிறாயா இராகவா

    இன்னருளால் இனி எனக்கு ஒரு பாரம் ஏற்றாமல்
    எம்பெருமான் அடைக்கலங் கொள்
    என்னை நீயே!
    என்னை நீயே!
    என்னை நீயே!

    பதிலளிநீக்கு
  12. மிக அழகாகக் கேள்வி கேட்டு அதற்கான அற்புதமான பதிலையும் தந்த மும்மூர்த்திகளே!என்ன சொல்லிப் பாராட்டுவது?

    பதிலளிநீக்கு
  13. திருப்புல்லாணி உற்சவம் பற்றிய நகை+சுவையான பதிவு...மாதவிப் பந்தலில் இங்கே!

    பதிலளிநீக்கு