घण्टावतारः
व्याख्या
निखिलजगद्रक्षादीक्षितस्य श्रीनिवासस्यस्वस्वनेन सर्वानिष्ट
निवर्त नक्षमायास्सकल कल्याणप्रदायास्सकलदेवतास्वरूपायाः वाग्देवतास्थानभूतजिह्वाकायाः भगवदत्यन्ताभिमतायाः घण्टायाः अवताररूपत्वात् घण्टावतारः युज्यतेहिः—रहस्यत्रयसार सर्वार्थसिद्धिप्रभृतिभिः स्वनादैः त्रय्यन्तविरोधिकुदृष्टि परिकल्पित तर्कनिरासहस्यतत्वहितपुरुषार्थ याथात्म्याव बोधप्रदस्य हयग्रीवस्थानभूतजिह्वाग्र सिह्मासनस्य् स्वाश्रित संरक्षणैक दीक्षतस्य कवितार्किक सिह्मस्य घण्टावतार्त्वं। मातुस्तोतारंबायाः भगवता श्रीनिवासेनघण्टाप्रदानादि स्वप्नवृत्तान्तेनच इदं सिद्धं। आचार्यैरप्येवमुक्तं, _उत्प्रेक्ष्यते बुधजनैरुपपत्ति भूम्ना घण्टाहरेस्समजनिष्टयदात्मने_ति। द्क्तंच वैभवप्रकाशिकायां _वेदेसंजातखेदेमुनिजन वचने प्राप्तनित्याव(सा) मानेसङ्कीर्णे सर्ववर्णे सति तदनुगुणे निष्प्रमाणे पुराणे| मायावादे समोदेकलिबलवशतश्सून्यवादे विवादेधर्मत्राणाय योऽभूत् सजयति भगवान्विष्णुघण्टावतारः इति ||
घण्टावतारः घण्टा: -- திருமணியாழ்வாருடைய:
अवतारः அவதாரமாயிருக் கிறார். எல்லாவற்றையும் காத்தலென்னும் யாகத்தில் தீக்ஷிதனான
ஸ்ரீநிவாஸனுக்கு பூஜோபகரணபூதையாயும், தனது த்வநியினால் ஸர்வா நிஷ்டங்களையும்
போக்குமதும், ஸர்வமங்களங்களைக் கொடுக்குமதும், ஸகலதேவதா ஸ்வரூபையும்,
வாக்தேவியை நாவாக உடையதும், பகவானுக்கு மிகவுமிஷ்டையாக இருப்பதுமான திருமணியாழ்வாருடைய அவதாரராகை
யாலே “घण्टावतारः” என்று சொல்லிற்று.
இவ்விடத்தில் வைபவப்ரகாசிகை
முதலான க்ரந்தங்களை அனுஸந்திப்பது. தாம் கண்டாவதாரரென்பதை ஸங்கல்ப ஸூர்யோதயம்
நாடகத்தில் “பிரமனால் எம்பெருமானது திருவாராதன நிமித்தம் படைக்கப் பட்ட
கண்டை பல காரணங்களால் எவருடைய திருவுருவைக்கொண்டு அவதரித்திருப்பதாக பண்டிதர்களால்
ஊகிக்கப்படுகின்றதோ” என்று (தேசிகனே) தாமே அருளிச்செய்தார்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக