வெள்ளி, 21 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்

சர்வஞ்ஞசிங்கப்பநாயகன் ஆசிரயித்து
விருத்தம்
திர்கொண்டுவீசுநிலவெண்ணுங்கீர்த்திக்
கவிவாதிசிங்கரருள்பிரபந்தங்கண்டே
எதிர்கொண்டுவிளங்கியமாதவன்றன்செல்வன்
சர்வஞ்ஞசிங்கநாயகனுந்தானே
எதிர்கொண்டுபணிந்துவந்தசாதனத்தை
யேற்றுமிகஞானியாயிருந்தானய்யா
முதிர்கொண்டுமதமிலாரவர்முமுக்ஷு
முத்தர்தாம்மணிவண்ணர்பத்தர்தாமே.
தரு இராகம் உசேனி தாளம் ஆதி
பல்லவி
சாந்தகுருவே -- உபயவே -- தாந்தகுருவே
அனுபல்லவி
பாந்தமுள்ள ரங்க தாந்தரடியையே
காந்தமுடன்றுதி சேர்ந்தவாதிசிங்கர் (சாந்த)
சரணங்கள்
அகந்தேநாகந்தே யென்றெடுத்தகவி
யதிலேநீலமேகமனைய வுருக்கொண்டு
சகந்தனினாதாரமாகியதிபதி
சயனபகவனை யனுதினமுங்கண்டு
உகந்ததேசிகவாக்குகளேயென்மனத்தி
லுறுதியாகவேயிருப் பதுவுமுண்டு
அகந்தையேயுனதுவிளையாடலுக்கிடம்
யானல்லபோவென்றே யாணவத்தைவிண்டு (சாந்த)
இவளவுமகிமையுள்ளார் வாசற்றிண்ணையினில்
வியாக்கியானம்புரிந்திருந்தா ரகலாது
அவளவிற்கந்தாடைத் தோழப்பர் தம்முடைய
குமாரலட்சுமணாசாரியார் வீதிமீது
தவளசங்கமுதலானவாத்தியவோசை
தரவேயெழுந்தருளிவரவு மப்போது
இவரெழுந்திருக்கவிலையாற்சாத்தாதவைஷ்ணவர்
காலைப்பிடித்திழுத்தா ரவர்தீது (சாந்த)
அடிக்குமவனேனுஞ்சபிக்குமவனேனு
மதிகடோரவார்த்தைசொல்லு மவனேனும்
படிக்குள்வேதியரேயாகிலவரெயே
பணியாதிருப்பவர்யா ரோருவரானுங்
கொடியபாவியர் பிருமரேதசாலே
கொளுத்தக்கொல்லவெகு தண்டனைகளேனும்
படுவாரென்சம்பந்தரல்லவெனுஞ்சுலோகப்
படிசிந்தித்தெழுந்துபணிந்தா ரிவர்தானுஞ் (சாந்த)
நிறைகுடந்தளும்பாதென்னும்படிக்கே
நிலையினின்றசர்வதந்திரச் சுதந்திரர்
குறைகுடங்களானாற் கூத்தாடியேநிற்குங்
கொள்கையுலகுக்காஞ் சகலமந்திரத்
துறைகளறிதவரொன்றுமறியார்போற்
சொல்வார்சரிதானேபூவி லெங்குந்தீர
மறையவர்கடுதி வைஷ்ணவசிகா
மணிவிச்வாமித்திரகோத்திர சந்திரர் (சாந்த)

சத்தியாகாலத்துக் கெழுந்தருளியது
கட்டளைக்கலித்துறை
பகரத்தினைப்பொழுதாகிலுமச்சுதன்பாதமலர்ந்
தகரத்தினாற்கொண்டுகூப்பவேகாந்தஸ்தலத்தையெண்ணிக்
ககரத்தயல்முன்விரிசூழ்ந்தசத்தியகாலமென்னும்
அகரத்திலேதேசிகர்வாசமுஞ்செய்வதாகினரே

வியாழன், 20 நவம்பர், 2008

தரு - இராகம் - மத்தியமாவதி - தாளம் - சாப்பு
பல்லவி
சொல்லக்கேளுமே -- தேசிகர்வைபவம்
சொல்லக்கேளுமே.
அனுபல்லவி
மல்லருடன்பொருங்கச்சி வரதரருளை
யேத்திச்சொல்லுவீரேதோதாரம்மன் சுகுமாரரிவர்கீர்த்திச் (சொல்)
சரணங்கள்
நாதமிகுந்தவடக்கே யேகசீல
ராங்கரிராஜமஹேந்திர பட்டணபால
மாதவநாயகன்றன்மன தனுகூல
மைந்தன்சர்வஞ்ஞசிங்கர்க்கருளி யதுசால (சொல்)
உறுதிபரமைகாந்தி தருமத்திலேபுத்தி
யுண்டானவனாகிக் கொண்டிருப்பதைநத்தித்
திறராமானுஜதரிசனத்தை நிலைநிறுத்திச்
சிறந்திருப்பாரிவரென் றறிந்ததுவேவெற்றி (சொல்)
ஸ்ரீரங்கநகரத்தின் ஞானாதிகுணத்தேட்டுப்
பாரெங்கும் புகழிவர் ஸன்னிதிக்கன்புபூட்டும்
படிதானிரண்டுவைஷ்ணவர்களை வரக்காட்டும் (சொல்)
தத்துவ விஷயமுடன் ரகசியவிஷயமாகத்
தனக்குஞானமுண்டாக ஹிதவுபதேசமாக
வைத்தருள்செய்யவேண்டி விண்ணப்பம்பரிவாக
வரவிட்டதுங்கண்டு வகையும்விவரமாக (சொல்)அந்தவகையுள்ளவன்மனத்தைச் சோதித்துக்கொண்டு
அறிந்துசுபாஷிதநீவி யென்பதுகண்டு
சந்ததத்துவரகசிய சந்தேகமென்றிரண்டு
தாமிந்தமூன்றுகிரந்தஞ்செய்தாரின்னமு முண்டு (சொல்)
சத்துக்களாம்பெரி யோர்களைநீநாடு
சமயாசாரமதை நிலைநிறுத்தவுங்கூடு
உற்றபிரஹ்மஞான விரோதரைத்தள்ளிப்போடு
உண்மையிதென்றுமின்ன மெழுதியதின்சூடு (சொல்)
எந்தநாளுமுனது பாரமெல்லாமுற்று
லக்ஷ்மிநாயகரிடமது தனிலேவைத்து
கந்தபயோதரத்தை நாடுஞ்சாதகமுற்றுக்
கார்மேனியனைநாடென் றெழுதியதையுற்று (சொல்)

புதன், 19 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்

படம் நன்றி: ஸ்ரீ ஸ்ரீதர் (சித்ர தேசிகீயம்)
“மின்னுமின்னுபூச்சி போலேயிருக்கிற
வேடிக்கையென்னென்று பேசுவார்......
.....................புழுவென்று வீசுவார்)


நிகம பரிமளம் அருளிச் செய்தது.

இதுவுமது (விருத்தம்)
பிள்ளையினிடத்திற்பிள்ளைலோகாரியர்
பேரியற்பாஷியம்படித்தார்
பிரபலமதுதானப்படியிருக்கப்
பேசினாரவர்சீஷர்முன்பாய்த்
தெள்ளியமொழிநம்மையருமீட்டைச்
செய்துநம்பிள்ளையாங்குருமுன்
சீர்பெறக்காட்டவீயுண்ணிமாதவர்
செங்கையிற்றந்ததாமென்ன
விள்ளுவார்கோசமேகொண்டுபார்த்தல்
விதியதோவுபதேசமுறையே
வேண்டுமென்றார்சீஷர்தாம்வந்து
பிள்ளையில்லாவுடமையா
கொள்ளையாவிங்குளாரிடம்படிக்கக்
கூறுவீரென்றதையறிந்தே
குருமணிநிகமபரிமளமருள்செய்
குருகிருபாநிதியிவரே.
தரு - இராகம் - அடாணா - தாளம் -- ஆதி
பல்லவி
விள்ளுவாரெங்கள் துன்பத்தைத்தள்ளுவாரே
வேதாந்தப்பொருளையெல்லாம்
அனுபல்லவி
விள்ளுவார்த்திருக்குருகைப்பிரான்
பிள்ளானிட்டவாறாயிரப்படிப்பொருள்
உள்ளதைத்தமக்குபதேசமாக அப்
புள்ளாரவரிதையனுபவமாக (விள்)
சரணங்கள்
அமுதமயநிகமபரிமளமென் றுரைசெய்யுமென்பதி
னாயிரப்படிதிருவாய்மொழி வியாக்கியானமும்
அமலனாதிபிரானுக்குமுனிவாகனபோகமென்
றுண்டாக்கியதொன்றான வியாக்கியானமும்
சமரசமாங் கண்ணினுண் சிறுத்தாம்புக்கொரு வியாக்கியானமும்
சங்கிரஹத்திருவாராதனக்கிரம ஞானமும்
குமுகுமுவென்றேமணந் தருமல்லிகை புஷ்பவாசனை
கொண்டவாக்குத்தனமாகப்பிரசண்டவாரிதிநிதானமும் (விள்)
பிரபத்திசாஸ்திரத்திற் சங்கிரகமாய்வேணுமென்றங்குளபெரியோர்
பிரார்த்திக்கநியாசவிஞ்சதி நாட்டியே
பிரபந்தசாரமென்றுசொல்லியாழ்வார்களுடைநாளூர்திங்கள்
பேசிவந்தமுதமயமாய்ச் சூட்டியே
பிரபன்னருக்கு உண்மையாகவர்ச்சியாவர்ச்சியத்தெளிவுகொண்டு
பேர்பெறுமாகாரநியமப் பாட்டுமே
பிரபலமானசர்வாதிகாரமா நித்தியானுசந்தேயப்
பெருகுமந்திரமாகுநல்லதிருமந்திரச்சுருக்குங்கூட்டமே (விள்)
கேளுமையாதுவயச்சுருக்குசரமசுலோகச்சுருக்குடனே
கீதார்த்தசங்கிரஹப்பாட்டும் பாடினார்
தோளிலெக்கியோபவீதப்பிரதிஷ்டாவ்தாயகமான
சுலோகங்கள்செய்தருளிப்புகழ் தேடினார்
ஆளுமெம்பெருமான்கச்சிப்பேரருளாளர்
ஹயக்ரீவாராதனங் கூடினார்
மீளுமிந்தவைபவஞ்சொன்னபேர்பாடினபேர்கள்
வேண்டுவதெல்லாம்பெறவேயாண்டவர்கிருபை நீடினார் (விள்)
கட்டளைக்கலித்துறை
பாடிப்படித்துமனப்பத்திவேண்டுமிப்பாரிடத்தே
நீடித்தகீர்த்திசெய்வேங்கடநாதனைநெஞ்சில்வைத்தால்
நாடிக்கொள்யாவுங்கைகூடுங்கண்டீர்நன்னிலந்தனிலே
கோடிக்குள்ளே யொருஞானியுண்டாமென்று கூறுவதே.

ஞாயிறு, 16 நவம்பர், 2008


ஸ்வாமி தேசிகன் பாதுகா சஹஸ்ரம் அருளியது.

வெண்பா

படியளந்த செங்கமலப் பாதத்தைச் சொல்ல
அடியேற்குமுண்டோ வறிவு -- நெடிதாம்
திருவடி நன்னிலைமேற் செய்குவேமென்ற
குருவடியைக் கையேநீ கூப்பு.

இராகம் – மணிரங்கு – தாளம் – சாப்பு

பல்லவி

வாதுகாட்டிமுன்னே – பாதுகாசகஸ்ரஞ்சொல்
வாதிசிங்கராமிவரே.

அனுபல்லவி

பேதமைதீர்க்குமரங்கநாதனருளுங்கோயிற்
பெரியவோலக்கத்திலே பெரியோரெல்லாருமெச்ச (வாது)

சரணங்கள்

பதகமலசஹஸ்ரமொருவர் தாமுமேவிண்
ணப்பஞ்செய்வேமென்றே யேற்று
அதுவேவிசாரமாகி யொருராத்திரிப்பொழுது
மடங்கலும்விழித்துப் பார்த்து
இதனுள்ளைஞ்ஞூறுசுலோகங்கவனம் பண்ணினாரவ
ரிவரோராயிரஞ் சேர்த்து
மதுரமயமாய்ச்சித்திர கவிதையலங்காரமாய்
மகத்துவஞ்சேர்பாதுகாசகஸ்ரமென்றருள் செய்தார் (வாது)

கவனஞ்சொல்லுவதென்றாற் சிறுபிள்ளைவிளையாட்டா
கடாக்ஷம்பெற்றிட வேணும்
தவம்பண்ணிப்பிறந்தவர் கவனஞ்சொல்லுவாரென்று
தானேயெவர்க்குந் தோணும்
தவறுசொல்லிதுவென்று தெரியாமற்பிதற்றுவர்
சாற்றுகவிகள் காணும்
புவனமெங்கெங்குமெச்சு முபயகவிப்பிரபந்தம்
பூட்டினார்வாதிசிங்கர் நாட்டினார்கீர்த்தியாக (வாது)

எழுத்துச்சொற்பொருள் யாப்பலங்காரமென
வைந்தாமிலக்கணநெறி காட்டி
அழுத்தமாய் மதுரமாய்ப் பிரபந்தகவிகள்
சொல்லுமவரேகவி கிரீட்டி
முழுத்திறமையில்லாத அரைவாயர்கால்வாயர்
முறுக்குவார்வீம்பு சூட்டிக்
கழுத்திற்கத்திக்கட்டியே சமர்த்திற்பாடும் வல்லமை
கவிராஜரெல்லாம் பணிகவிதார்க்கிககேசரி (வாது)

பன்றிபலகுட்டிகள் சடுதியிற்பெறுவதாற்
பலனென்ன அதினாலே
ஒன்றும்பெண்ணானையது பனிரண்டுவருஷத்துக்
கொருகுட்டி பெறல்போல
நன்றிதுவழகிய மணவாளப்பெருமாள்
நயினார்சொன்னது மேலே
யென்று வணங்கிச்சொல்ல வரங்கர்பிரமாத
மேறுங்கவிவாதிசிங்கேறென்றிடவேகொண்டார் (வாது)

விருத்தம்

தெரிசனத்தாரசூயையில்லாதிருக்கவென்ற
ஸ்ரீரங்கபதிசன்னிதியிலேநாளும்
வரிசையாய்ப்பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்
வடக்குவீதிப்பிள்ளையீட்டுக்கோசம்
பெரிதாகச்செய்ததனைப்பார்க்கவேண்டிப்
பிள்ளைலோகாசாரியரைக்கேட்டுவாங்கி
வரவெனவேசீடரிருவரையனுப்பும்
வழிசொல்வேன் பின்னடந்தமொழி சொல்வேனே

நாளை … நிகமபரிமளம் அருளியது
தரு இராகம் சௌராஷ்ட்ரம் தாளம் சாப்பு
கண்ணிகள்
1. அப்புள்ளார்தந்தவிரகாரம்வேதாந்த சாரியார்போலினி யாரய்யா இப்புவிமேல்வைராக்கியநிதியென்பதிவரென்றேசொலுவா ரய்யா
2.ஆரெங்கும்போற்றியஸ்ரீரங்கமாநகரதிலேசீஷர்க்குப் பாடமே பேரெங்குஞ்சொல்லப்பிரசாதித்திருந்தாரே பெரியவியாக்கியான கூடமே
3.கொண்டவரங்குமேமுஞ்சவிர்த்திசெய்துகோண்டுசொன்னாரடி மீதிலே தொண்டுசெய்யும்சீஷரெல்லாரும்வந்துதொடுத்துவணங்கியப் போதிலே
4.பாடசமயமுந்தாமதமாயதுபண்புடனேயடி யோங்களே தேடியாளுக்கொருநாளுபாதானத்தைச்செய்துசமர்ப்பிப்ப நாங்களே
5.ஆகுமெனச்சொல்லப்பிள்ளை கருத்துடனப்படிப்பாடமுஞ் சாற்றினார்
சேகரமாகிய சீஷருபாதானஞ்செய்து சமர்ப்பித்து மேற்றினார்
6.காசுபணங்களை யங்கீகரியாதுகண்டுசிலபேர்கள் கூடவே தேசுபெறவே யமுதுபடியுடன்சேர்த்துப்பணங்களைப் போடவே
7. இட்டவுபாதானக் கூடையோடேயுள்ளேஇங்கிந்தத்தேசிகர் மேவியே கொட்டவுங்கண்முன்னே கண்டவுடன்பார்த்துக்கூறுவரேயவர் தேவியே
8. மின்னுமின்னுபூச்சி போலேயிருக்கிறவேடிக்கையென்னென்று பேசுவார் தன்னையறிந்துகடாக்ஷித்துக்குச்சியாற்றள்ளிப்புழுவென்று வீசுவார்
9.சாதித்துச்சோதித்துக்காசுபணங்களைத்தள்ளியிருந்து வைராக்கியர்
போதித்துசீஷர்க் கருள்செய்யவேவந்தபுண்ணியஸ்வரூப சிலாக்யர்
10.நேர்ந்தவக்காலத்தி லாசாரியபதநிருவகிக்கவும் வருவரே
வாய்ந்தவழகிய மணவாளப்பெருமாள்நயினாரு மொருவரே
11. சகலசாஸ்திர வல்லவராகவுஞ் சாஹித்யத்திலே சதுரராய்
சுகமுனெழுந்தருளி யிருந்தார் சுகுணச்சொல்லிலு மதுரராய்
12. மேதாவியாகிய வங்கவர்சீஷர்விரைந்துதிருவோலக்க மதிலே
வேதாந்தாசாரியர்தங்கவி வாதிசிங்கவிருதைக்கண்டு ரோஷம் மதிலே
13. திருவோலக்கத்தி லிரண்டுபேரையுஞ்சேர்த்தழைத்தருள் பாடென்று
இருவர்களேகேளு மின்றிராத்திரியெம்பெருமாள் விஷய மொன்று
14. ஆயிரமென்னுஞ் சுலோகப்பிரபந்தத்தை யார் விண்ணப்பஞ்செய்வார் சமர்த்தரே
மாயிருஞாலத்தில் வேதாந்தாசாரியர் வளமைமிக்க நியமத்தரே
15. இப்படியேயின்றிராத்திரிக்குள்ளே இயம்புவீரென்றா ராயிரம்
அப்படியே திருவடிவிஷயமதாகச் சொல்வேனென்றா ராயிரம்
16. வாதுநாட்டியங்கே அழகியமணவாளருரைத்ததும் கண்டிட்டார்
பாதுகாசகஸ்ரம் வேதாந்ததேசிகர் பண்ணுவேனென்றுரை கொண்டிட்டார்.
கட்டளைக்கலித்துறை

மோகாடவிதன்னைநீகின்றதீரமுமுக்ஷுவிவர்
யோகாதிசயமதென் சொல்லாமிவ்வுலகத்திலே
தேகாபிமானங்களின்றிநின்றாரெங்கள்தேசிகரே
ஏகாதசிவிரதந்தவறாமலிருந்தவரே.

தரு-இராகம்-கவுளிபந்து-தாளம்-ஆதி

பல்லவி

வேதநியமனமே - வேங்கட
நாதர்நியமனமே.

அனுபல்லவி

மாதிரமேல்விசுவா மித்திரர்கோத்திரர்
சாதகராமா நுஜதயாபாத்திரர் (வேத)

சரணங்கள்

இச்சையில்லமற்சில ரசூயையைத்தொடுத்தாரே
யேகாதசிவிரத மதனில்வந்தடுத்தாரே
அர்ச்சகருக்குப்பரி தானமுங்கொடுத்தாரே
அருட்பாடென்றுதயிர்த் திரளையையெடுத்தாரே (வேத)
வாங்குமெனப்பெருமாள் சன்னிதிமுன்சென்றாரே
மஹாப்ரசாதம்சிர சாவகிக்கின்றாரே
தாங்குமோலைப் புறத்து நியமத்துநின்றாரே
சாட்சாத்நியமனமோ வடியேனுக்கென்றாரே (வேத)
அறிவுமிகுந்தசோதை திருமுலைப்பாலுண்டாரே
அர்ச்சகரிடத்தினி லாவேசமுங்கொண்டாரே
முறையிதுநாநியமிக்க வில்லையெனவிண்டாரே
முன்புநியமனமே நியமமெனக்கண்டாரே. (வேத)

விருத்தம்

குண்டலத்தினாலென்னகடுக்கனென்ன
கொண்டவிரலாழியென்னசாலுவென்ன
கொண்டலர்த்தித்திரிவதினாலாவதென்ன
குவலயத்தில்விபுதர்களேசொல்லக்கேண்மோ
விண்டலத்தினார்பரவுமரங்கர்மீது
வேதாந்ததேசிகன்றந்றேவியார்க்கு
மண்டலத்தின்மின்னுமின்னுப்பூச்சியாம்பொன்
வராகந்தானிவர்க்குமனவிராகந்தானே

கீர்த்தனைகள் தொடரும்