http://www.mediafire.com/?1dbg009ddvu1vf7
புதன், 12 அக்டோபர், 2011
Guru paramparai Vaibhvam dated 10-10-2011
http://www.mediafire.com/?1dbg009ddvu1vf7
செவ்வாய், 11 அக்டோபர், 2011
A Demo in our village
திங்கள், 10 அக்டோபர், 2011
முகுந்த மாலை
முகுந்த மாலை இது குலசேகர ஆழ்வார் இயற்றியது என்ற அளவிலே மட்டுமே அடியேன் அறிந்திருந்தேன். அடியேனுக்குக் கிடைத்தவைகளோ பெரும்பாலும் சம்ஸ்க்ருத மூலம் அல்லது தமிழ் லிபியில் மூலம் மட்டுமே. அடியேனது சம்ஸ்ருத அறிவோ 0 to the power of infinity என்பது அனேகமாக இந்த வலையைத் தொடர்பவர்கள் எல்லாருமே அறிந்ததுதான். அதனால் கிடைத்த அந்த நூல்களெல்லாம் அடியேனது “இம்சை” இல்லாமல் நிம்மதியாக இருந்தன. இதற்கிடையில், பங்களூரு ஸுஹ்ருதயர் ஒருவருக்காக '”ஸப்ததி ரத்ன மாலிகா” வியாக்யானங்கள் வந்த பழைய இதழ்களைத் தேட வேண்டி வந்தது. அப்போது சில வருடங்களுக்கு முன் ஸ்ரீ அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி டெல்லியிலிருந்து அனுப்பி வைத்திருந்த சில நூறு புத்தகங்களில் அடியேன் பார்வையில் இது வரை படாமல் ஒளிந்திருந்த “முகுந்த மாலை” தமிழ் அர்த்தங்களுடன் இருக்கக் கண்டேன். மிக மிக மோசமான நிலையில் இருந்த அந்தப் புத்தகம் 1937ல் ஸ்ரீ பார்த்தசாரதி அய்யங்கார் (காஞ்சிபுரம்) என்பவரால் எழுதப் பட்டிருக்கிறது. தமிழ் “அறிந்த” அனைவரும் மிகவும் மதிக்கும் ஸ்ரீ கோபாலய்யரின் மாணாக்கர் என்று பெருமையுடன் தன்னை இவர் சொல்லிக் கொள்கிறார். (அனேகமாக அந்தக் காலத்து அறிஞர்களெல்லாரும் தங்களை இன்னார் மாணவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்திருக்கிறார்கள். சிறந்த மாணவர்களைத் தேடிச் சேர்த்த ஆசான்களும், பேரறிஞர்களான ஆசிரியர்களிடம் பல முறை அலைந்து மாணவர்களாகச் சேர்ந்து உயர்ந்ததும் அந்தக் காலம். இன்றைய நிலை --- சொல்ல வேண்டாம்). 100 பக்கங்களுக்குள் இருக்கும் அந்தச் சிறு நூல் அடியேனுக்கு முகுந்த மாலையில் ஆழ்வார் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வைத்த முதல் புத்தகம். நூல் இருந்த நிலையில் ஸ்கான் பண்ணுவதா வேண்டாமா என்று ஆரம்பக் குழப்பங்களுக்குப் பின், ஸ்கான் பண்ண முடிவெடுத்து ஆரம்பித்தால், முதல் அட்டையே ஒரே கருப்பாக ஆக, resolution மாற்றி மீண்டும் முயற்சிப்போம் என்று ஸ்கானர் மூடியைத் திறந்தால், தூள்களுக்கு நடுவில் கொஞ்சம் அட்டை இருந்தது. அதன்பின் மிக மிக…………………..மிக எச்சரிக்கையாக, ஒவ்வொரு பக்கமாக ஸ்கான் செய்து, சுமார் 10 மணி நேரம் செலவழித்து, இந்த 91 பக்க நூலை ஒரு வழியாக சேமித்தாயிற்று. 600 dpi resolutionக்குக் குறைந்தால் சரியாக வரவில்லை. அதன்பின் சைஸைக் குறைத்தால் தெளிவில்லை. எனவே 100 mbக்கும் மேல் ஆகிவிட்டதால் மூன்று பகுதிகளாகப் பிரித்து சேமித்திருக்கிறேன்.
நங்கநல்லூராரே! சுயபுராணம் ஓவர்.
அடியேன் போன்றே சம்ஸ்க்ருதம் அறியாதவர்களுக்கும் உபயோகப் படலாம் என்பதற்காக MediaFire ல்
http://www.mediafire.com/?og1xwgj23qre8
என்ற போல்டரில் மூன்று கோப்புகளாக இந்நூல் உள்ளது. விரும்புகிறவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.
திருப்புல்லாணியில் ஸ்ரீதேசிகன் திருநக்ஷத்ரோத்ஸவ திருமஞ்சன வீடியோக்களைப் பார்க்க வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். விரும்புகிறவர்கள் பார்க்க
திருமஞ்சனம் பகுதி 1
http://youtu.be/QlJrmEzxzWY
திருமஞ்சனம் பகுதி 2
http://youtu.be/JPTlPlHgGYg