अवतारिका
अर्थपञ्चकज्ञाने सत्यपि चिदचिदीश्वर-लक्षणज्ञानं विना प्रकृत्यात्मभ्रमादेश-
निवृत्तेः तदर्थं आह ।
அவதாரிகை
இப்படி அர்த்தபஞ்சக ஞானமுண்டானாலும், இவற்றுள் ப்ரதாநமான தத்வத்ரயத்தை விசேஷித்து அறியவேணும். அறியாவிட்டால் தேஹமே ஆத்மாவென்றும், தானே கடவுள் என்றும் உண்டாகும் ப்ரமம் போகாது. இதைப்பற்றியே தனித்து தத்வத்ரயசிந்தநம் பண்ண வேணுமென்று வேதம் சொன்னதற்குக் கருத்தென்று உணர்ந்து, அதின் ஸ்வரூபத்தை அறிந்தவரென்கிறார்.
54. तत्त्वत्रयविशेषवित्
(i) तत्त्वत्रयाणां = चिदचिदीश्वराणां, विशेषं = लक्षणं, वेत्तीति तत्त्वत्रय- विशेषवित्। प्रमाविषयस्तत्वम् । तञ्च त्रिविधं - चिदचिदीश्वर-भेदात । अचेतनतत्वं नाम ज्ञान-अनाधारत्वम् । धर्मभूतज्ञान-शुद्धसत्वयोः अपि अचेतनत्वात् न तत्र अतिव्याप्तिः । जीवत्वं नाम अणुत्वे सति चेतनत्वं । ईश्वरे अतिव्यप्ति -वारणाय अणुत्वे सति इत्युक्तम् । इन्द्रिय-प्राणादौ अतिव्याप्ति वारणाय चेतनत्वं इति । स्वतः शेषत्वे सति चेतनत्वं, परतन्त्र-चेतनत्वं इत्याद्यपि जीवलक्षणं बोध्यम् । ईश्वरत्वं विभुत्वे सति चेतनत्वम् । जीव-कालयो. अतिव्याप्ति-वारणाय पद-द्वयं इति । (ii) यद्वा, तत्त्वत्रयाणां जडत्व-अजडत्व-प्रत्यक्त्व-पराक्त्वादि विशेषं वेत्तीति तथोक्तः। यथा तत्त्वटीकायाम्,
'परेणैव घटाद्यर्थः परस्मा एव भासते ।
स्वान्याभ्यां पुरुषस्स्वस्मै परस्मै परधर्मतः ।।
धीस्स्वान्याभ्यां स्वाश्रयाय तदन्यस्मै तु तद्धिया ।
परस्मा एव भातत्वात् पराची सा घटादिवत् ।।' इति ।
इदं अत्र अनुसन्धेयम् ,
परेणैव प्रकाश्यत्वं जडत्वं तच्च दृश्यते ।
प्राकृतेषु च काले च भान्ति ते स्वान्यया धिया ।
परेण भासमानत्वं तदित्येव कृते सति ।
अजडेष्वात्मधी शुद्धसत्त्वेषु हि तदा भवेत् ।
अतिव्याप्तिः परेणैव इत्येवकारस्ततः कृतः ।
परस्मा एव भातत्वं पराक्त्वं तद्यथा मतिः ।
शुद्धसत्वञ्च कालश्च प्रकृतिः प्राकृता अपि ।।
जीवेशयोरतिव्याप्तिः एवकारान्निराकृता ।
तत्र प्रकृति-कालौ तु स्वगोचर-धियात्मनः ।।
भासते शुद्धसत्वं तु स्वान्याभ्यां तस्य सर्वदा ।
ज्ञानन्तु स्वेन च स्वस्मिन् नित्यत्वाद्यवगाहिना ।।
परिणामेन च स्वस्य स्वाश्रयायैव भासते ।।
भासते स्वाश्रयान्यस्मै स्वाश्रयान्यस्य सर्वदा ।
परस्मा एव भातत्वात् पराचीधी घटादिवत् ।।
स्वेन प्रकाशमानत्वं अजडत्वं तु तद्यथा ।।
आत्मा धीश्शुद्धसत्वञ्च नैवकारोप्यसंभवात् ।
स्वस्मै प्रकाशमानत्वं प्रत्यक्त्वं पुरुषेशयोः ।
फलित्वं स्वप्रकाशस्य इत्येवं निष्कर्ष ईष्यते ।
एवकारोस्ति नात्रापि लक्षणासंभवो यतः ।
एवमाखण्डलार्थो अत्र वर्णित श्लोकयोर्मया ।।' इति
54. தத்வத்ரயவிசேஷவித் - அறியவேண்டிய உண்மைப் பொருளுக்குத் தத்வம் என்று பெயர். அதின் த்ரயமாவது - போக்தாவென்றும், போக்கியமென்றும், ப்ரேரிதாவென்றும் சொல்லுமது.
போக்தாவாவது ஜீவதத்வம். இஜ்ஜீவாத்மா, பத்தர், முக்தர்,
நித்யரென்று மூன்றுவிதம். பத்தராவார் - ஸ்தம்பமென்கிற பூச்சி
முதல் ப்ரம்மாவரையிலுள்ள ஸம்ஸாரி சேதனர்கள். முக்தராவார்
- ஸம்ஸாரிகளாய் வைத்து, தக்க உபாயம் பண்ணி, அதனால்
நற்பதவி பெற்றவர். நித்யராவார் - பகவானைப்போலே ஒருக்காலும் பிறப்பிறப்பு ஞானக்குறைவு முதலிய துர்குணமின்றி எப்பொழுதும் பகவானை அநுபவியா நின்றுள்ள அநந்தன், கருடன்,சேனைத்தலைவன் முதலியவர்கள். போக்யமாவது - அறிவில்லாதது. அது த்ரிகுணமென்றும், காலமென்றும், சுத்தஸத்வத்ரவ்யமென்றும், தர்மபூதஞானமென்றும் பிறிவுளது.
ப்ரேரிதாவாவது -அவ்விரண்டு தத்வங்களுக்கும் கடவனான ஸ்ரீமந்நாராயணன். இவ்வர்த்தத்தை 'ஸ்வாதீந' என்பதால் சுருங்க அருளிச்செய்தார்கள்ஆளவந்தாரும், பாஷ்யகாரரும். இப்படி இதினர்த்த விசேஷங்களை தெளிய அறிந்து, தத்வத்ரய சிந்தநாதிகாரம், தத்வமுக்தாகலாபம் முதலியவைகளை அருளிச்செய்தாரென்றபடி.