இன்று ஒரு வேடிக்கையான இல்லையில்லை ஒரு வெறிபிடித்தவரின் மெயிலைப் பார்க்க நேர்ந்தது. epaper அனேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். நேற்று அதே நிறுவனம் www.pressmart.net mpaaper (to read news in our mobiles) என ஒன்றைத் தொடங்கியிருப்பதாக செய்திகள் பார்த்து மேலும் தகவல் அறிய அவர்கள் வலைக்குள் சென்று தேடினேன். தகவல் கிடைக்கவில்லை. ஆனால் வலையில் tamil community என ஒரு லிங்க் இருந்தது. திறந்து பார்த்தால், முதலில் ஒரு பதிவு. இந்தியர்களின் சாதனைகள் பற்றி. எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களைத் தான் எழுதியிருந்தார். அதில் ஒன்றும் விசேஷமில்லை. ஆனால் அவருக்கு ஒருவர் விமர்சனம் அனுப்பியுள்ளார். அது தான் ஸ்வாரஸ்யமாயுள்ளது.இந்தியாவுக்கு ஒரு பெருமையுமில்லை எல்லாம் பாகிஸ்தானுக்குத்தான் என்றெல்லாம் த்வேஷத்தைக் கக்கி எழுதியதை நீங்களும் போய்ப் பாருங்களேன்.
www.pressmart.net
சனி, 3 பிப்ரவரி, 2007
தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்
திவ்யஸ்தாநாத் த்வமிவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாதந்யாஸம் ப்ரதமமநகா பாரதீ யத்ர சக்ரே I
யோகக்ஷேமம் ஸகலஜகதாம் த்வய்யதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸுதாச்ரோத்ரஜந்மா முநிர் மேII
ஸ்ரீமத் நம்மாண்டவன் : ஓ பாதுகையே! பிரம்மலோகத்திலிருந்து ஸ்ரீரங்கநாதனை நீ திருவயோத்திக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்தாய். உன்னைப் போலவே ஸரஸ்வதிதேவியும் வரும்பொழுது முதலில் ஸ்ரீவால்மீகியினிடத்தில் காலை வைத்தாள். அதாவது -- முதலிலே வால்மீகிதான் உன்னைப் பற்றி கவனம் பண்ணினார் ஸ்ரீமத் ராமாயணத்துக்கு ஆதிகாவ்யமென்று பெயர். எல்லா லோகங்களுடைய ஸகல க்ஷேமமும் உன் அதீநமென்று அறிந்த வால்மீகி மஹரிஷியானவர், எனக்கு நல்வார்த்தையைக் கொடுக்க வேண்டும்.
A. லக்ஷ்மிநரஸிம்ஹன்: பாதுகே! ஸரஸ்வதியின் அருள் பெற்று, ஆதிகாவ்யமான ராமாயணம் இயற்றிய வால்மீகி மகரிஷி, உன் பெருமை பற்றிச் சுலோகங்கள் இயற்ற , அடியேனுக்கு உயர்ந்த சொற்களை வழங்க வேண்டும்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2007
தினமும் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்
வர்ணஸ்தோமைர்வகுளஸுமநோவாஸமுத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்டவந்தம்
பாதே நித்யப்ரணிஹிததியம் பாதுகே ரங்கபர்த்து
த்வந்நாமாநம் முநிமிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம:
நம்மாண்டவன் திருவாய்மொழி என்பது தமிழ் வேதம். எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக்கொண்டிருந்த நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டுபிடித்தார். ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையென்று சொல்லப்படுகிற அவரை இந்த ஸ்தோத்ரம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் தியானிக்கின்றேன்.
A.லக்ஷ்மிநரசிம்மன் பாதுகையே!உன்னை ஸ்தோத்ரம் பண்ண ஆசையுடைய நான் திருவாய்மொழி ஸாரத்தைக் கண்டவரும், அரங்கனுடைய திருவடிகளிலே எப்போதும் இருப்பவருமான "சடாரி"யை (நம்மாழ்வாருக்கு சடாரி, சடகோபன் என்றும் பெயர்கள்) முதலில் ஸேவிக்கின்றேன்

தினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்
பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் I
யதுபஞ்சமசேஷத: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபாவ: II
ராகவனுடைய பாதுகைகளின் ப்ரபாவம் ப்ரஸித்தமானதற்குக் காரணம் பரதனேயன்றோ! அந்த பரதனை நான் வணங்குகின்றேன்.
நம்மாண்டவன் ஸாதித்தது: ஸ்ரீபரதாழ்வானால்தான் ஸ்ரீராமனுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதென்பது எல்லாவுலகுக்கும் தெரிந்தது. ஆகையால் ஸ்ரீபாதுகைகளிடத்தில் மஹாபக்தரான ஸ்ரீபரதாழ்வாரைத்தான் ஸேவிக்கின்றேன். ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் 25வது ச்லோகத்தில் அருளிச் செய்தபடி "பரத" என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது. அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்குத் தெரிந்தது. "பரத" என்பதால் தெரியப்படுத்தப்பட்டதில், பாவ, ராக, தாள என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும் மஹாபண்டிதரான நாதமுனிகளை ஸேவிக்கின்றேன்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)