கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் ஸ்ரீ ஆதி சேதுவில் ஸ்நாநம் செய்த காட்சியினை திருப்புல்லாணி ஸ்ரீ அஹோபில மடம் மானேஜர் முத்துகிருஷ்ணன் மிக அருமையான விடியோவாகப் பதிவு செய்து பகிர்ந்து கொள்கிறார். அன்று அங்கே போயிருந்தவர்கள் வீடியோவில் இருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளலாம். போகமுடியாதவர்கள் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கலாம்.
அன்று இங்கு வந்திருந்த ஸ்ரீ அய்யம்பேட்டை தேவநாத அய்யங்கார் ஸ்வாமியும் சில வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றை
http://www.youtube.com/user/rdevanathan1?feature=mhsn சென்று பார்க்கலாம்.
இன்று 4-9-2011 திருப்புல்லாணியில் ஒரு முக்கியமான நாளாக அமைந்தது. திருப்புல்லாணி பத்மாசனித் தாயாருக்கு ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் வெள்ளி ஷோடசோபசாரங்களை சமர்ப்பித்தார்கள். திருமேனி களைப்பினால் தான் வரமுடியாததால், பெரிய அழகியசிங்கர் அனுக்ரஹித்துக் கொடுத்ததை, சின்ன அழகியசிங்கர் கோவிலுக்கு நேரில் வந்து சமர்ப்பித்தார். இன்று வந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சிஷ்யர்களுக்கு அது ஒரு ஆனந்த அனுபவமாக அமைந்தது. பெருமாளிடம் முதலில் சமர்ப்பித்து அவர் அனுமதியுடன்,
தாயாரிடம் அழகியசிங்கர் சமர்ப்பித்தது அனைவரையும் பரவசப் படுத்தியது. 2008ல், ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்தபோது பெருமாளுக்கு யக்ஞோபவீதம் சமர்ப்பித்தார். இப்போது தாயார் முறை. அதனால் ஒன்றுக்கு ஐந்தாகத் தாயார் பெற்றுக் கொண்டிருக்கிறாள்.
இங்கு இருக்கும் படங்கள் திரு முத்துகிருஷ்ணன் எடுத்தவை. அடியேன் ஏதோ அந்தக் கால மார்க்கஸ் பார்ட்லே என்ற நினைப்பில் ஒரு கையில் காமிராவும் ஒரு கையில் வீடியோ காமிராவுமாக எடுத்ததன் விளைவு விட்டலாசார்யா படங்களில் வரும் மாயா ஜாலக் காட்சிகள் போல் தெரிந்தும் தெரியாமலும் அமைந்துவிட, பாவம் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் எதையாவது எப்படியாவது சரி பண்ணி அந்த வீடியோவை மட்டுமாவது உலகுக்குக் காண்பித்து விடுகிறேன் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.
எல்லா சந்நிதிகளிலும் மங்களாசாஸனம் செய்த ஸ்ரீமத் அழகியசிங்கர் ஒவ்வொரு சந்நிதியிலும் அந்தந்த சந்நிதியின் சிறப்புகள், அங்கு எழுந்தருளியிருக்கும் அர்ச்சா மூர்த்திகளின் விசேஷங்களை சிஷ்யர்களுக்கு அருளி பெரு மகிழ்வடைய வைத்ததும் இன்றைய தினத்தில் அடியோங்கள் பெற்ற பாக்யங்கள்.
மூன்றாவது விசேஷம் அழகியசிங்கரின் வழக்கமான அற்புதமான அருளுரை.
ஆன்லைனில் கேட்பவர்களுக்காக இங்கே!
இல்லை இல்லை குடும்பத்தோடு எல்லாரும் கேட்கவேண்டும் கேட்டு அழகியசிங்கர் சொல்வதைப் போல நடக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக
http://www.mediafire.com/?3u095o6ucvh5ubb