ஞாயிறு, 21 மார்ச், 2010

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்ஸவம்

இன்று திருப்புல்லாணி ஸ்ரீஆதிஜெகன்னாதப் பெருமாளுக்கு ப்ரும்மோத்ஸவம் காலையில் த்வஜாரோஹணத்துடன் துவங்கியது. இரவு ஸூரியப்ரபை வாஹனத்தில் பெருமாள் புறப்பாடு ஆனது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம், ஸ்ரீ அஹோபில மடம் இரண்டு இடங்களிலும் ஸேவார்த்திகளுக்கு ததீயாராதனம் நடந்தது. பத்து நாட்களுக்கும் தொடர்கிறது. ஆந்திராவின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருக்கும் 50 பாகவதர்கள் திருப்பதியில் நடப்பது போல் பெருமாள் புறப்பாட்டின்போது கோலாட்டம், கும்மி ஆடியது குறிப்பிடத் தக்கது. எங்களுக்கு அது புதிதும் கூட. ஆனாலும் அதை ரசிப்பதற்கோ, ஊக்குவிப்பதற்கோ இங்கு யாருமில்லை என்பதும் வருத்தமான உண்மை. அதேபோல, இந்த ஆண்டு பிரபந்த, வேத ஸேவைகளுக்கும் யாரும் இல்லை என்பதும் வேதனை.
P1010219
திருப்புல்லாணி வாகன மாலை என்னும் பழைய நூல் ஒன்று இந்த முதல் நாள் புறப்பாட்டைப் பற்றிச் சொல்வதை ஏக்கத்துடன் படிக்க வேண்டி உள்ளது. எப்படியெல்லாம் பெருமாள் அனுபவத்திருக்கிறார்!
வாகன மாலை 
அம்புயப்பூந் தடஞ்சூழ் குருகை வாழுநம்
          மாழ்வார் மறைப் பிரபந்த
  மரும்பாகவதர் முன்னாக வனு சந்திப்ப
          அந்தணர் பின் வேதமோத
  வும்பர்பொன் மலர்மாரி சொரிய வுலகம்
           பரவ, வுலவு, கருடக்கொடிமுத
  லுக்கிரவனுமக் கொடிகள் விருதுடன் சுற்றவே
          உபய சாமரம் வீசவே
  தம்பட்ட, டம்மாரம், நாதசுரம் பூரிகை
         தவில், துந்துபி முழங்கத்
  தத்தை, மென்மொழி, சிறியமுத்த நகை
        யார்கூடி சதிமுறை நடித்துவரவே
  செம்பொன வரத்தின சிங்காதனப் பவனி
        திருப்புல்லாணியில் மணி வீதித்
  தெய்வேந்திரன் முதலான தேவரடி பரவவரு
       தெய்வச் சிலைக் கடவுளே!
இந்தப் பாடலை எழுதியவர் யாரோ தெரியவில்லை. எப்போது எழுதினார் என்பதும் தெரியாது. அன்று நடந்தவைகளில் ஒன்றும் இப்போது நடக்க வில்லை என்றாலும், இந்த ஆண்டு ஆந்திர பாகவதர்கள் கைங்கர்யத்தால், “தத்தை, மென்மொழி, சிறிய முத்த நகையாராகிய அவர்கள் சதிமுறை நடித்து வருவதாகிய கோலாட்டம் போன்றவை நடந்தது ஒரு சந்தோஷம்.
சில கோலாட்டக் காட்சிகள்
P1010220
P1010221

8 கருத்துகள்:

  1. ஆச்சர்யமாக இருக்கிறது.. திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் பற்றீய விஷயங்கள்..நானும் திருப்புல்லாணியைச் சேர்ந்தவன் தான்..தாங்கள் யார் என்று அறிந்து கொள்ளலாமா..?

    தகவலுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. திரு வெற்றிவேல்,
    தேரடியை ஒட்டிய வீடு. BSNLல் வேலை. ரகுவீரதயாள் என்பது பெயர். பார்த்திருப்பீர்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  3. nice and interesting writings. Amazed at your 'ANMIGA' postings.
    admirer
    Dr.Gopalan aka Mayakunar( one time neighbour of yours at Ramnad)

    பதிலளிநீக்கு
  4. //ஆந்திராவின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருக்கும் 50 பாகவதர்கள் திருப்பதியில் நடப்பது போல் பெருமாள் புறப்பாட்டின்போது கோலாட்டம், கும்மி ஆடியது குறிப்பிடத் தக்கது. எங்களுக்கு அது புதிதும் கூட//

    அருமை! அவர்கள் பிரம்மோற்சவம் முழுதும் இருப்பார்களா?
    அந்த அடியார்கள்/அவர்கள் மையம் பற்றிய குறிப்புகள்/தகவல்கள் தரலாமே! ஆக்கத்துக்கு ஊக்கமாக அமையும்!

    //அதேபோல, இந்த ஆண்டு பிரபந்த, வேத ஸேவைகளுக்கும் யாரும் இல்லை என்பதும் வேதனை//

    வாகனங்கள் சிலவற்றை அருகில் உள்ள ஆலயங்களில் "கடனாக" கேட்டுப் பெறுவதுண்டு!அது போல் பிரபந்த கோஷ்டிகளைப் பெற முடியுமா என்று திரு மடங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. //தத்தை, மென்மொழி, சிறியமுத்த நகை யார்கூடி சதிமுறை நடித்துவரவே//

    கோவிந்தா, கோவிந்தா! தானாகவே அமைந்து விட்டது பாருங்கள்!

    அண்ணா,
    இந்த ஆண்டு பெருமாள் + இராமர் உபய கருட சேவை என்னிக்கு?
    திருமங்கை பட்டையம் வாசித்தல் என்னிக்கு?
    தேர் என்னிக்கு?

    ஏன் ஒரு அறிவிப்பும் இல்லை? ராமதூதன் வலைப்பூவில் கூட பார்த்தேன்! செந்திலுக்குத் தகவல் அனுப்பலையா?

    பதிலளிநீக்கு
  6. மாதவிப் பந்தலில் திருப்புல்லாணி விழா பற்றிச் சிறப்பு இடுகை இடுகின்றேன்!
    Either on ubaya garuda sevai or on thiru mangai, kuthirai vahanam! lemme know the dates!
    Can you send me the pattaiyam vaasithal details, anna?

    பதிலளிநீக்கு
  7. திரு கண்ணபிரான், திரு கேஆர்எஸ், அனேகமாக சென்ற மாதம் பூராவும் ஏகப்பட்ட மன உளைச்சல்கள். பல பிரச்சினைகள்.அதனால் என்ன செய்கிறோம் என்ற உணர்வில்லாமலே இருந்து வருகிறேன். இதுவரை ராமதூதனில் பங்குனி உத்ஸவம் பற்றி எழுதியதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
    21-3ல் உற்சவம் ஆரம்பித்து இன்று இரண்டாம் நாள்.24-3ல் இரட்டை கருட ஸேவை. அன்று காலையில் பெருமாள் ஆண்டவன் ஆச்ரமத்திற்கு எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம்.மாலையில் இன்னொரு கருட வாகனத்தில் இராமன் வந்து இணைந்து கொள்ள, ஆச்ரமத்திலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. இந்த வருடம் ஆச்ரம உபயமாக கொடுத்திருக்கும் நூதன கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு காண இருக்கிறார். 26 திருக்கல்யாணம். 28-3ல் திருமங்கை மன்னன் கட்டுப் பட்டயம், குதிரை வாகனம்.29 தேர், மறுநாள் தீர்த்தவாரி.
    இனிக்கப் போகும் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். நாளை பட்டயத்தின் நகலை அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. திரு மாயகுமார்!
    சந்தோஷமாயுள்ளது.ஆனாலும், சட்டென்று புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் சற்று கோடி காண்பித்தால் நன்றாயிருக்கும். Please!

    பதிலளிநீக்கு