புதன், 9 ஜூன், 2010

வைணவ ஆசாரியர்கள்

ஒரு வேண்டுகோள் அல்லது எச்சரிக்கை என்றுகூட வைத்துக் கொள்ளலாம். அடியேனது தமிழைப் பார்த்தே நகைப்பவர்கள் பலருண்டு. ஆங்கிலமோ கேட்கவே வேண்டாம். கல்லூரிப் படிப்பை முடித்ததும் கிடைத்த வேலையோ கொஞ்சநஞ்சம் இருந்த ஆங்கில அறிவையும் போக்குவதாகவே அமைந்தது. ஹலோ! நம்பர் ப்ளீஸ்! என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய தொலைபேசி இயக்குனராகப் “பணி புரிந்த” சில வருடங்களில் கிடைத்த பதவி உயர்வோ அந்த இரண்டு வார்த்தைகளுக்கு பதிலாக earth, PG என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக அமைந்து இன்றளவும் அதுவே தொடர்வதால் ஏதோ புண்ணியத்தால் அடியேன் பெயரை மட்டும் தவறில்லாமல் எழுதுகின்ற அளவில் ஆங்கில அறிவு உள்ளது. என்ன இவ்வளவு பீடிகை?

இந்த வைணவ ஆசாரியர்களை வழக்கம்போல் இங்கு புத்தகத்தில் உள்ளது உள்ளபடியே எழுத ஆரம்பித்தவுடன் ஒரு பெரியவரிடமிருந்து இதற்கு ஆங்கில விளக்கம் கண்டிப்பாய் வர வேண்டும் என்று செய்தி வந்தது. வைணவ உலகமெல்லாம் போற்றும் அவரது வார்த்தைகளைத் தட்ட மனமுமில்லை. அதை அலட்சியப்படுத்தி அபசாரப்படவும் தைரியமுமில்லை. எனவே இன்று முதல் “வைணவ ஆசாரியர்கள்” அடியேனின் கிட்டத்தட்ட தமிங்கிலம் போன்ற ஆங்கிலத்தில் சிறு விளக்கத்துடன் வரும் என்பது எச்சரிக்கை. தமிழ் தெரிந்தவர்கள் அந்த ஆங்கிலப் பகுதியை தவிர்த்து விட்டு தங்கள் ஆங்கிலத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும், ஆர்வத்தால் அதைப் படிக்க ஆரம்பித்து சீத்தலைச் சாத்தனார் ஆக வேண்டாம் என்பதும் வேண்டுகோள்.

A warning

From today onwards, adiyen will add a small note in English explaining the meaning of the Tamil verses. Please bear with me. many of you may be aware of my “great command” overEnglish. That is why adiyen always prefer to write in Tamil. But a word has come from one on whom all the members of Srivaishnava Yahoo groups have the highest regard to write some explanations in English. As everybody else adiyen can not and must not ignore that. Hence this venture to write in English (rather thaminglish) also. It is better those who can read Tamil simply skip the English portions.

Now to the “Vaishnava AchariyarkaL”

3. தீர்த்த யாத்திரை

 

வடதிசை மாண மாலோன் மன்னுசீர்ப் பதிக டம்முள்
கடல்வண னடியை நாடுங் கருத்தெழ மன்ன னார்முன்
திடமுடைச் சிந்தை வாயு மீச்சுர பட்டன் நிற்ப
விடைதனை நல்கி மேலோன், "விரைவினி மீள்வை" என்றான்.

 

            வடதேசத்தில் யாத்திரை செய்ய விரும்பி ஈச்வர பட்டர் மன்னனாரிடம் விடை பெற்றமை. மாண – பெருமையுற; இறைவன் அவதரித்த தலங்களாகையால். விரைவில் நீ மீள்வை – வாயும் – பொருந்திய

            Desiring to visit the Divya desams in the north and worship the Lord, whose complexion is like that of a deep ocean, Easwara bhattar, prayed to the Lord Mannanar for taking leave of Him. Mannanar also Blessed him to return to Veeranarayanapuram at the earliest after Kshetradanams.

 

ஒப்பிலாப் புத்தி நாத முனிவனு மவன்றன் மைந்தன்
செப்பரு நெறியி னின்றான் ஈச்சுர முனிவன் றானும்
எய்ப்பிலா மனத்து முந்தை யீச்சுர பட்ட னோடு
மைப்படி வண்ண மாலோன் வண்புகழ் பாடிச் சென்றார்.

 

            யாத்திரை சென்றவர் ஈச்சுர பட்டர், இவர் குமாரர் நாதமுனி, இவர் குமாரர் ஈச்சுர முனி. எய்ப்பு இலா – இளைப்பு இல்லாத, திடமான. முந்தை – முன்னோன், குடும்பத் தலைவன். மை படி வண்ணன் – கருத்த மேனியுடைய.

 

            The uncomparable intellect Sri Natha Muni, accompanied by his son Easwara Muni, who most dedicatedly followed the veda Margam, followed his father, the undettered and dedicated Easwara bhattar on the sojourn singing in praise of the dark complexioned Narayana

 

வரைமிசை வதரி சாளக் கிராமமும் பிரிதி வாரித்
திரைவளை துவரை திண்மா மதிள்வளை யயோத்தி யன்ன
உரைமலி புனித முற்ற ஊர்தமைப் பரவி யின்னார் 
வருபுனல் யமுனை சூழும் வளம்பதி தன்னிற் பன்னாள்.

            சென்ற தலங்கள். வரை –இமயமலை. வதரி – பதரிகாச்ரமம். பிரிதி—ஒரு திவ்ய தேசம். வாரித் திரை வளை துவரை – கடல் அலைகள் வளைக்கும் துவாரகை. திண் மா மதிள் வளை அயோத்தி – திண்ணிய மதிள்களால் காக்கப் பெற்ற அயோத்தி; அயோத்தி என்பதன் பொருள் உள்ளே எதிரிகள் புக இயலாத நகரம் என்பது; பரமபதமும் இப்பெயர் வாய்ந்தது. பல நாள் = பன்னாள்.

 

            After visiting Batharikashramam on the foot of Himalayas, Thirupirithi, Dwarakai surrounded by ocean, Ayotthi fortified by tall and strong walls on all sides, they spent several days in the Vadamadurai region that was cherished by the unfailing Yamuna river. Ayotthi means that within which enemies can not enter. It is applicabe to Parama patham also.

 

மாலவன் யமுனைத் துறைவன் மலரடி வணங்கி யாங்கே
மேலதாந் தொண்டில் மேவ மன்னனார் கனவில் தோன்றிச்
சீலனைச் செல்வ நாத முனிதனை மீள வென்று
மாலமர் மனத்த னாகிப் பன்முறை பகரலானான்.

            இவர்கள் வடமதுரையில் இறைவனுக்குத் தொண்டு புரியுங்கால் நாதமுனி கண்ட கனவு. யமுனைத் துறைவன் – கண்ணன்.; யமுனையின் துறையில் லீலைகள் புரிந்து மகிழ்ந்தவன். மால் அமர் – அன்பு நிறைந்த

            While they were serving  Kannan, the Lord of Vadamadurai,  who enacted so many leelas on the banks of Yamuna river and hence known as Yamunai thuraivan, Mannanar appeared on the dreams of Sri Natha muni and ordered him to return to Veeranarayanapuram immediately. The last line of this verse is most enjoyable. Note the attributes to mannanar. "மாலமர் மனத்தனாகி" (maalamar manatthanaahi) i.e. with affection brimming His heart; like a mother's passion for her child. Not being able to tolerate the seperation of Natha muni for a long time, mannanar appeared in his dream to order for return. And not once "panmurai pakaralaanaan" (பன்முறை பகரலானான்) Mannanaar repeatedly told Natha Muni to come back immediately.

 

கோவலன் முன்னர் நாத முனிவனிக் கனவு கூறி
ஆவதோர் விடையை வேண்ட ஆயனு மாசி நல்க
மீவரும் பத்தி யோடு படர்ந்தவிம் மூவர் தாமே
நாவல  ரேத்து வீர நாரண புரத்தை நாடி.

            இம்மூவர் கண்ணபிரானிடம் விடைபெற்று வீரநாராயணபுரத்தை நோக்கி மீண்டனர். கோவலன், ஆயன் – கண்ணன். மீவரும் பத்தி – மிகுந்த பக்தி.

            Sri Natha muni informed Kannan about his dream and prayed for His permission to leave Vada madurai. Kannan also Blessed them and sent off. With great devotion ,all the three started towards (naavalarEtthu = praised by scholars) Veeranarayanapuram. 

புவனியின் திலத மாகும் புரிபுரு டோத்த மத்துள்
கவளமால் யானை கொன்ற கண்ணனைத் தொழுது கானில்
துவளுறா மனத்தி னர்வாழ் சிங்கவேள் குன்றமேகிக்
குவடுகொள் கோல சிங்கன் குரைகழற் குனிந்து தென்பால்.

            புருடோத்தமனையும், சிங்கப்பிரானையும் மங்களாசாசனம் செய்தமை. புவனி—பூமி. புரி புருடோத்தமம் – புருஷோத்தமபுரி. பூரி என்பது. கவள மால் யானை – மதம் பெருக்கும் உணவு உண்டு பெருத்த குவலயாபீடம். கானில் – அஹோபிலம் என்ற தலத்தில். துவளுறா – வாடாத, சிங்கவேள் குன்றம் – அஹோபிலம். குவடு கொள் – குன்றில் எழுந்தருளியுள்ள. குரை கழல் குனிந்து – ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியில் பணிந்து.

            En route to Veeranarayanapuram, they visited Puri and worshipped Kannan there. Then they proceeded to Ahobilam (Singavel kundram) and prostrated at the feet of Singa Piran.

        Thilatham is thilakam on the forehead. Here the poet describes Puri as the thilakam of the universe because the Purushotthaman, Kannan, who killed the Kuvalayapeetam elephant on the courts of Kamsan,  dwells there. (puvani – bhoomi, the globe) கானில் –in the forest (துவளுறா மனத்தினர் வாழ்) thuvaluRA manatthinar vAzh—where the courageous people live: Singavel kundram is a hill with very dense forest where several wild animals live. But people living there are not at all worried or afraid of them. They have their Singa Piran with them . He who protects the whole world is with them and hence they are துவளுறா மனத்தினர். Sri Nathamuni and others prostrated at the lotus feet of Sri Nrusimha at Ahobilam on the top of the hill, and proceeded towards south.

அம்பரோ டிம்பர் துன்னி யடியிணை யேத்த மன்னும்
உம்பரார் கோனை யோங்கு வேங்கட வெற்பி லேத்தி
வம்பவிழ் பொழில்கள் வாயுங் கடிகைநற் சிலம்பு தன்னில்
தம்பமுன் னீன்ற சீயத் தனுவனைத் தொழுது  சீரார்.

            திருவேங்கடத்தானையும் அக்காரக் கனியையும் மங்களாசாஸநம் செய்தமை. அம்பர் – வானவர்; இம்பர் – மண்ணவர்; வம்பு – மணம். முன் தம்பம் ஈன்ற – முன்பு தம்பத்திலிருந்து வெளிவந்த. சீயத் தனுவனை – நரசிங்கனை. இவனை "அக்காரக்கனி" என்று மங்களாசாஸநம் செய்தருளினார் திருமங்கையாழ்வார். சிலம்பு – மலை.

            They then visited Thirumalai and worshipped Venkatesan and proceeded to Thirukkadikai (Sholingar) ,prayed to Nrusimhan there. Sri Venkatesan is Devaathi Devan at whose Lotus feet all the devas and human beings prostrate. Thirukkadikai is Sholingar where lakes spreading flagrance are abundant. தம்ப முன்னீன்ற சீயத் தனுவன் – thamba munneendra seeya thanuvan . The poet here describes the emergence of Lord Nrusimha from a wooden pillar. (தம்பம்) as if the pillar delivered (ஈன்ற) the Lord.

புட்குழி யத்தி சைலம் பொருவிலாக் கச்சி வெஃகா
அட்டநற் புயங்கந் தண்கா அனையநற் றலங்க ளேத்திக்
கட்செவி யணையி லார்ந்த காரினை யரங்கத் தானைக்
கட்கரு மமுத மென்னத் தேக்கின ரிவர்கண் மூவர்.

            கைதொழுத திருப்பதிகள் பிற. அத்தி சைலம் – அத்திகிரி. அட்டநற்புயங்கம் – அஷ்டபுஜம். தண்கா – ஒரு திவ்ய தேசம்; விளக்கொளி. கட்செவி – பாம்பு. காரினை – கார்போல் அருள்பெய்யுமவனை. கட்கு அரும் அமுதம் என்ன – கண்களுக்கோர் அரியதோர் அமுதம் என்று.             

   From Thirukkadikai, they worshipped at Thirupputkuzhi, Atthigiri, Ashtabujam, Vehkha (Thanka) and reached Srirangam . கட்கு அரும் அமுதம் – a delight nectar like feast to the eyes.

மீண்டுதம் பதியாம் வீர நாரண புரத்தி வர்தாம்
ஆண்டகை யாயன் றாளிற் படிந்தன ரவன்ற னக்கே
பூண்டபத் துடைய ராகிப் பொருந்தினர் பூசு ரர்கள்
ஈண்டன ரிவரை யேத்தி யெய்தலா வுவகை யோங்க.

            வீரநாராயணபுரம் மீண்டு தொண்டிற் படிந்தமை. ஆண்டகை –வலிமை வாய்ந்தவன். பூசுரர்கள் – அந்தணர்கள்.

            Easwara bhattar, his son Natha muni, and grandson Easwara muni, all the three returned to Veeranarayanpuram , prostrated before that mighty Mannanar and resumed their services to mannanar. The Brahmins there who met all the three after a very long time were immensely happy to be with them again.

 

பதினாறா மாயிரமாம் பாவையர்தம்
            பணைமுலைக்கோர் மாலை யாகும்
அதிராச னண்டரினத் தருந்தோன்றல்
            கனவதனி லன்று தன்பால்
பதியேகப் பணித் தருளுங் கருத்ததனைப்
            பலவாகச் சிந்தை செய்து
கதிராரும் வதனத்தான் கலைக்கடலாம்
            நாதமுனி வாழ்ந்து வந்தான்.

            இறைவன் மீளுமாறு அழைத்ததை நினைந்து நாதமுனி அங்கு வாழ்ந்து வந்தார். பதினாறாமாயிரவர் ………யாகும் --- பதினாறாயிரம் பாவையரைப் புணர்ந்த. அதிராசன் – அரசர்க்கரசன். அண்டர் – இடையர் கதிர் – ஒளி வதனம் – முகம்.

                           Wondering what may be the reason for Mannanar appearing in the dream and ordered for immediate return to Veeranarayanpuram, Nathamuni was serving the Lord at veeranarayanpuram. Note the attributes to Mannanar. He is athiraasan , a king of kings, chakravarthi . He is "andarinatharunthonral" andar == aayar – yadhavar, andarinam  -- yadhava kulam . A pride of Yadhav kulam. pathinaraamaayiram paavaiyartham paNaimulaikkor maalai – That Lord maaried sixteen thousand girls gopiyar.  Kannan.  Kannan is mathi mukatthan. but our Nathamuni is kathiraarum vathanatthaan i.e. his face is as bright and shining like that of a Sun. And he is "kalaikkadal"  a repository of all vidhyas, sakala saasthravan.

10 கருத்துகள்:

  1. பெயரில்லா12:16 PM

    Before posting, you may send me your English contents to me, by email. I will correct them and return to you. You may then post them.

    My English is nearly flawless and will be readable to all.

    vmkarmal@gmail.com.

    As an attempt, I will be correcting all that you have written in English here. You may make the changes now.

    Please wait.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:30 PM

    Your English:

    From today onwards, adiyen will add a small note in English explaining the meaning of the Tamil verses. Please bear with me. many of you may be aware of my “great command” overEnglish. That is why adiyen always prefer to write in Tamil. But a word has come from one on whom all the members of Srivaishnava Yahoo groups have the highest regard to write some explanations in English. As everybody else adiyen can not and must not ignore that. Hence this venture to write in English (rather thaminglish) also. It is better those who can read Tamil simply skip the English portions.
    Now to the “Vaishnava AchariyarkaL”

    Rewritten as follows:

    Please note before you enter:

    From today onwards, adiyen will add a short note in English explaining the meaning of the Tamil verses. Many of you may be aware of my ‘great command’ over English! That is why, adiyen always prefer to write in Tamil only. Please bear with me.

    The reason why this attempt to add English explanations also is because a word of advice has come from one on whom all the members of Srivaishanvite Yahoo groups have the highest regard, urging me to add explanations in English to the Tamil verses. Coming as it does from a revered person, I ought not to ignore the advice. Hence, this feeble attempt to add explanations in English (rather, Thanglish !). Those who can read Tamil are requested to kindly skip the explanations in English.
    Over now to the main post ‘Vaishnava Achaariyarkal’

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:48 PM

    //Desiring to visit the Divya desams in the north and worship the Lord, whose complexion is like that of a deep ocean, Easwara bhattar, prayed to the Lord Mannanar for taking leave of Him. Mannanar also Blessed him to return to Veeranarayanapuram at the earliest after Kshetradanams//

    This is ok. Yet, it can be rewritten like this:

    Eswara Bhattar desired to go on pilgrimage to the Divya Desams located in the northern parts of India, the abords of the Lord whose complexion is that of deep bluish ocean. He prayed to the Lord Mannar before setting off on his long yatra. The Lord blessed him and wished him to return safe and sound to Veernanaaryanapuram at the earliest after the yatra.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:54 PM

    //ஒப்பிலாப் புத்தி நாத முனிவனு மவன்றன் மைந்தன்
    செப்பரு நெறியி னின்றான் ஈச்சுர முனிவன் றானும்
    எய்ப்பிலா மனத்து முந்தை யீச்சுர பட்ட னோடு
    மைப்படி வண்ண மாலோன் வண்புகழ் பாடிச் சென்றார்.




    யாத்திரை சென்றவர் ஈச்சுர பட்டர், இவர் குமாரர் நாதமுனி, இவர் குமாரர் ஈச்சுர முனி. எய்ப்பு இலா – இளைப்பு இல்லாத, திடமான. முந்தை – முன்னோன், குடும்பத் தலைவன். மை படி வண்ணன் – கருத்த மேனியுடைய.




    The uncomparable intellect Sri Natha Muni, accompanied by his son Easwara Muni, who most dedicatedly followed the veda Margam, followed his father, the undettered and dedicated Easwara bhattar on the sojourn singing in praise of the dark complexioned Narayana
    //

    தமிழும் குழம்புது; இங்கிலிசும் குழம்புது.

    குழப்பங்கள்:

    ஈசுவர பட்டர்தானே கிளம்புகிறார்? அவர்தானே ரங்க மன்னாரிடம் விடைபெறுகிறார்?

    அப்புறம், இப்பாடலில்படி இருவர் செல்வதாக வருகிறதே>

    Therefore, I am not able to help you here. I skik this song and move on to the next.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1:09 PM

    // After visiting Batharikashramam on the foot of Himalayas, Thirupirithi, Dwarakai surrounded by ocean, Ayotthi fortified by tall and strong walls on all sides, they spent several days in the Vadamadurai region that was cherished by the unfailing Yamuna river. Ayotthi means that within which enemies can not enter. It is applicabe to Parama patham also.

    //After their yatra to the Divya Desams namely, Batharikaashramam on the foot of the Himalayas, Thiruprithi, Ayothi which is fortified by tall and strong walls, and Dwarakai which is surrounded by the waves of ocean, the two saints spent several days in Vadamadurai region which is irrigated by the perennial River Yamuna. Ayothi means a city impenetrable to the enemies like Pramapatham.


    (I have put Ayothi first and then Dwarakai, because, a pilgrim to the north visits Bhadrinath, Thiruprithi (maybe Joshimath near Bhadrinath) and Ayothi, in that order. All three fall under the single travel route in UP. After the UP-based temples only, one can go to Gujarat where the Dwarakai is located).

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1:24 PM

    // While they were serving Kannan, the Lord of Vadamadurai, who enacted so many leelas on the banks of Yamuna river and hence known as Yamunai thuraivan, Mannanar appeared on the dreams of Sri Natha muni and ordered him to return to Veeranarayanapuram immediately. The last line of this verse is most enjoyable. Note the attributes to mannanar. "மாலமர் மனத்தனாகி" (maalamar manatthanaahi) i.e. with affection brimming His heart; like a mother's passion for her child. Not being able to tolerate the seperation of Natha muni for a long time, mannanar appeared in his dream to order for return. And not once "panmurai pakaralaanaan" (பன்முறை பகரலானான்) Mannanaar repeatedly told Natha Muni to come back immediately. //

    Thus, they were in Vadamadurai serving Lord Kannan who enacted so many leelas on the banks of the River Yanmuna and hence known as Yamunaithuraivan. One day, Lord Mannanar appeared in the dreams of Sri Nathamuni and exhorted him to return to Veernanaarayanapuram at once.

    Please note the last line of this verse. It is highly enjoyable as it describes the attributes of Lord Mannnaar beautifully.

    ‘மாலமர் மனத்தனாகி’ i.e His heart brimming with all love and affection like that of a mother towards her child. The Lord is unable to bear the long separation of Sri Nathamuni and therefore, not once, but many times, (பன்முறை பகரலானான்) He exhorts his devotee who is like a favourite child to him, to return to Veeranaarayapuram at once.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா1:34 PM

    // Sri Natha muni informed Kannan about his dream and prayed for His permission to leave Vada madurai. Kannan also Blessed them and sent off. With great devotion ,all the three started towards (naavalarEtthu = praised by scholars) Veeranarayanapuram. //
    Sri Nathmuni prayed to the Lord Kannan of Vadamadurai and told Him about the dream beseeching permission to leave Vadamadurai. The Lord blessed them bidding farewell. With great devotion, the three saints set off to Veeranaarayanapuram, the abode which was spoken of highly by scholars. (நாவலரேத்து)

    (If you write simply ‘Kannan’, the readers will be confused.

    I would like to know from you how three persons are getting mentioned here. Who is the third saint?

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா1:37 PM

    balance tomorrow

    பதிலளிநீக்கு
  9. anonymous swami,
    adiyen dasasya vignaapanam and extremely thankful for your very kind and voluntary help. Definitely adiyen will get the English portions modified from you before posting them.
    Regarding your doubt: Please go through the verse once again. It is of course Easwara Bhattar who got the permission from Sri Mannaar. Natha Muni is his son. Easwara Muni is the son of Natha Muni. So the son and grandson of Easwara bhattar accompanied him. I do hope this will clear your doubt.
    And adiyen will be more thankful if you give more details about yourself by separate mail which will help me more for this work.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10:06 AM

    So, grandfather, son and grandson went on pilgrimage to North-based Divyadesams and the West-based Divyadesam (Dwarkai).

    I understand.

    Thank you for the clarification.

    எந்த நூலில் இருந்து இந்த பாசுரங்கள் எடுக்கப்பட்டு இங்கே விளக்கப்படுகின்றன ?

    ஏற்கனவே எழுதியிருந்தால், kindly give the link to me.

    For the benefit of your readers, you may kindly write the modern names of the kshetrangkaL.

    You have given the modern name of Singavel kunram as Ahobilam near Anantapur, havent you?

    Similarly, please trace the modern names. Of course, every body knows Ayothya, bathri (modern name Bhadrinath), Dwarakai, Puri etc.
    What about பிரிதி? இன்றைய பெயரென்ன?

    Such details will benefit your readers. You may add it below the explanations.

    Do you know many people dont know why certain Maha Vishnu temples are called Divyadesams, and why certain other temples of Mahavishnu, for e.g Guruvayoor, are not called so?

    எனவே திவ்ய தேசங்கள் என்றால் என்ன? என்பதையும் முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது.

    ஒரு சுவாமி ஆங்கிலத்திலும் கொஞம் விளக்கம் கொடுப்பது நல்லது என்ற சொன்னதன் நோக்கம், எனக்குத் தோன்றியவரை இதுதான்:

    வலைபதிவுகள் தமிழகம் தாண்டி, பிறமானிலங்கள், பிறநாடுகளில் வாழ்வோர்களாலும் படிக்கப்படுகின்றன. அவர்களும் தெரிந்து கொள்வார்கள் என்றுதான்.

    பதிலளிநீக்கு