திருப்புல்லாணிப் பங்குனி உத்ஸவத்தின் மூன்றாம் நாளான இன்று காலையில் பல்லக்கில் திருவீதிப் புறப்பாடு கண்டருளிய பெருமாள், இரவில் சாற்றுமுறைக்குப் பின்
வேணியரனும் வாயுவும் வடிவ மொன்றாகி
மேதினி யிடத் துதித்து
வெய்யோனை யினிய செங்கனியென வெடுத்
துவிளையாடி, ராகவனுக் கடிமையா
யாணவ மலமூத்திர சாமிய மடக்கியே
ஐந்திர வியாகரண நிபுணனான
யஞ்சனா தேவி பாலகனாக வானரர்க்
கமிர்த சஞ்சீவி கொணர்ந்
தூணுறக்க மின்றி யிருந்த சானகிக்கினிய
வுரிய திருவாழி நல்கி
யுத்தம தேவிக்கும் பரதனுக்கும் மன
துவந்து சோபன முரைத்த
சேணுயர்ந் திலகு வெள்ளியங் கிரியைநிக
ரெனச் சிறந்த மாருதி புயத்தில்
திகழுமணி மேடைசூழ் புல்லாணி வீதிவரு
தெய்வச் சிலைக் கடவுளே.
என திருப்புல்லாணி வாகன மாலை போற்றுகின்றபடி வீதிப் புறப்பாடு கண்டருளினார்.
இந்த வருடம் பெருமாள் திருவுள்ளம் தன் சிறிய திருவடிக்குப் பிடித்தமான வடைமாலையுடன் புறப்பாட்டுக்கு எழுந்தருளியது ஒரு புதுமை.
Hurrah!
பதிலளிநீக்குநம் மனத்துக்கினிய ஆஞ்சநேயனா இன்னிக்கி?
பல்லாண்டு பல்லாண்டு!
வாகன வடைமாலை என்பது Nice Novelty! :)
மொதல்ல வடையைத் தான் தரிசிச்சேன்!
அப்பறம் தான் பெருமாள் கண்ணுல பட்டாரு! :)
வடைகண்டேன்! வடைமாலை கண்டேன்! அதன்பின்பே
பதிலளிநீக்குகுடைகண்டேன்! குணத்தானைக் கண்டு - நடைகண்டேன்!
புல்லாணி கண்டேன்! புகழ்-ராக வன்கண்டேன்!
வில்லானின் வீரம் விளை!
அட! தேவரீரும் நம்ம கேஸா! அதிகாலையில் கம்ப்யூட்டரைக் குடைபவரா!
பதிலளிநீக்குஸ்ரீராமநவமி அன்று மனத்துக்கினியான்.. நம் கண்ணுக்கினியானாக காட்சி அளிக்கிறார்.. பிரமாதம்.
பதிலளிநீக்குஅண்ணா, நேற்று என் மன்னியும் எனது சில உறவினர்கள் ஆழ்வார் திருநகரியில் இருந்து பெருமாளை சேவிக்க வந்திருந்தனராம்.. எனது அண்ணா, நேற்று ஒரு கோவில் நிகழ்ச்சியின் போது திருப்புல்லாணிப் பெருமைகளை எடுத்துச் சொல்லி எம்பெருமானை தரிசிக்க சொல்லியிருக்கிறார்.. இன்று நான் அவருடன் தொலைபேசும்போது இதனை தெரிவித்தார்.. பிரஹ்மோத்சவத்தின் ஒருநாளிலாவது நான் கலந்து கொள்ள எம்பெருமானின் அருள் வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு