திருப்புல்லாணி என்றதுமே செவிக்குணவு வேண்டாது வாய்க்குணவு தேடும் அடியேனைப் போன்றவர்களுக்கு ஞாபகம் வருவது திருப்புல்லாணி பால் பாயாஸம். அதற்காக ஒரு கட்டளை ஏற்படுத்தி இன்று வரை வெகு சிறப்பாக நடத்தி வருபவர்கள் திருவனந்தபுரம் ராஜாக்களும், ராஜாக்கள் இல்லாத நிலையில் திருவாங்கூர் சமஸ்தானமும்.
நேற்றைய 5ம் திருநாள் மண்டகப்படி உபயதாரர்களும் அவர்களே.
முன்னாட்களில் (சுமார் 15 வருடம் முன்வரைகூட) காலையிலே மிக அழகான புன்னை வாகனத்திலே பெருமாள் திருவீதிப் புறப்பாடு கண்டருள்வார். அந்த வாகனம் பின்னப் பட்டதாலே இப்போதெல்லாம் பல்லாக்குதான். (யாரேனும் இதைப் படிப்பவர்கள் மனமுவந்து ஒரு வாகனம் செய்து கொடுத்தால் நன்றாயிருக்கும்). இரவிலே இங்குள்ள வாகனங்களிலேயே மிக அழகானதும், சித்தடக்கமாயுமுள்ள ஆதிசேஷ வாகனத்திலே புறப்பாடு.
பார்பூத்த தண்ணிழல் பரப்பு வெண்குடையு
மாய்ப்பாத பாதுகையு மாகிப்
பெரியதொரு திருவரைக் கிசைந்த பட்டாடை
யாய்ப் பாற்கடற் றெப்பமாகி
யேர்பூத்த மணிவிளக்கணை யிலகு சிங்கா
தனம் இலக்குமண னுமாகி
யதிபதி யிராமானுஜ முனிவனாகி யெங்களுக் கினிய
நல்ல மாறர் மேவுங்
கார்பூத்த வானகமுடி தொடு நெடியதொரு
கவின் றிருப்புளி வடிவமாய்க்
கணபணப் பஃறலைப் பிணருடற்கட் செவிக்
கனல்விழிச்சுடர் மணிப்பொற்
சீர்பூத்த திருவனந்தன்மடியின் மீதிலெழில்
சிறந்த புல்லாணி மறுகில்
தேரோடும் வீதியிற்பவனி வருசெக நாத
தெய்வச் சிலைக் கடவுளே
என வாகன மாலை போற்றும் திருவீதிப் புறப்பாட்டுக் காட்சிகள் சில இங்கே.
புறப்பாட்டுக்காக ஆஸ்தானத்திலிருந்து வெளிவரல். குடவரை வாசலில்.
ஆந்திராவிலிருந்து வந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிற ஸேவார்த்திகளில் சிலர்.
இன்று ஆறாம் திருநாள்.
“துடித்தானைக் கருள்கருணைத் துடியானை
அரக்கர் கிளைசோரச் சோர
அடித்தானைக் கமல மலரடியானை
பாரதப்போர் அனைத்துந் தானே
முடித்தானை மணிமகுட முடியானை
இடையர்நெய் பார்முழுதும் வாரிக்
குடித்தானைப் புல்லானிக் குடியானைக்
கருமுகிலை”
இரவிலே யானை வாகனத்தில் ஸேவிக்கப் போகிறோம். அதன்பின் தாயாருடன் அவன் காணப்போகும் திருக்கல்யாண வைபவங்களைக் கண்டு ஆனந்திக்கப் போகிறோம்.
Every week we visited this temple, for almost 4 years continuously, when we were studied there. very calm and beautiful place. A must visit place. Thanks indeed for sharing.
பதிலளிநீக்கு- Siva
Sri Siva,
பதிலளிநீக்குStudied here? Will you kindly brief something more on you?
ஆதிசேஷ பர்யங்கத்திலே, பரவாசுதேவனாக, அபய ஹஸ்தமும், கால்மேல் கால் போட்டு அமர்ந்த திருக்கோலமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது..விரைவில் நேரில் காண அவனே துணை புரியவேண்டும்.
பதிலளிநீக்கு//அதன்பின் தாயாருடன் அவன் காணப்போகும் திருக்கல்யாண வைபவங்களைக் கண்டு ஆனந்திக்கப் போகிறோம்//
பதிலளிநீக்குJuz cant waitttt for that!
சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!
பங்குனி உத்திரத்துக்கு முன்னாடியே திருக்கல்யாணம் போல, புல்லாணியில்!
//முடித்தானை மணிமகுட முடியானை
இடையர்நெய் பார்முழுதும் வாரிக்
குடித்தானை//
அது என்ன நெய்யை, "பார் முழுதும்" வாரிக் குடித்தல்? கொஞ்சம் விளக்கம் வேணுமே! :)
பாதுகையும் ஆகிப்
பதிலளிநீக்குபாற்கடல் தெப்பமாகி
இலக்குமணனும் ஆகி
இராமானுஜ முனிவனாகி
சீர் பூத்த திரு அனந்தன் மடியின் மீது
கால் மேல் கால் போட்டு...
தான் தான் பரப்பிரம்மம் (அகமேவ பரதத்வம்)-ன்னு காட்ட இத்தனை முயற்சியா? ஹா ஹா ஹா! :)
பொதுவா, கல்யாண சமயங்களில், மாப்பிள்ளைக்கு கையில் மல்லிப்பூ சுத்தி விடுவாங்க...மைனர் போல இருக்கும்!
இங்கே இவருக்கு காலில் சுத்தி விட்டு இருக்கீக போல! என்ன இருந்தாலும் இவரை விட, திருநாமமும் திருவடியும், ஒருபடி ஏற்றம் தானே? :)
//திருப்புல்லாணி பால் பாயாஸம்//
பதிலளிநீக்குஅதெல்லாம் ஃபோட்டோவில் காட்டினா, நாங்களும் குடிச்சிக்குவோம்-ல்ல? :)
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு!
குடித்துக் கொடுத்த நின் பால் பாயசமும் குடித்துக் கலந்ததுண்டு!
:))
மன்னிக்க வேண்டும். அது தட்டச்சுப் பிழை! பால் என்பதற்கு பதிலாக பார் என்று அடித்து விட்டேன். தமிழ் 99ல் ல்லும் ர்ரும் N,M என்பதாலே ஏற்பட்ட பிழை! இப்போது "இடையர் நெய், பால் முழுதும் குடித்தானை" என்றால் சரிதானே!
பதிலளிநீக்கு//தட்டச்சுப் பிழை! பால் என்பதற்கு பதிலாக பார் என்று அடித்து விட்டேன்//
பதிலளிநீக்குதட்டாவது, அச்சாவது, பிழையாவது...?
எல்லாம் கரெக்ட்டாத் தான் தட்டச்சி இருக்கீக! :)
உலகம் உண்ட பெருவாயா = பார் முழுதும் வாரிக்
குடித்தானை!
ஹா ஹா ஹா...
என் தொல்லை...நம்ம திருதிரு ஐயாவுக்குப் பெருந்தொல்லையாப் போச்சோ? இப்படி விளையாடிக்கிட்டே இருக்கேன்! :))
ரொம்ப நல்ல இருக்குங்க!
பதிலளிநீக்கு