வியாழன், 25 மார்ச், 2010

4ம் திருநாள் ஆண்டவன் ஆச்ரமத்தில் திருமஞ்சனக் காட்சிகள்

பெருமாளைப் பார்த்து சந்தோஷப் படப் போகிற நேரத்தில் எழுத்து அனாவஸ்யம். இன்றைய ஶேஷ வாகனம் பற்றி நாளை தொடர்வேன்.















6 கருத்துகள்:

  1. நாரணா நீநீநீராஆஆஆஆட வாராய்!

    அப்படியே ஆண்டவன் ஆசிரமத்துக்கு வந்தாப் போலவே இருக்கு! ஒரு நாள் அந்தப் பக்கம் வராமலயா போயிருவேன்? வரேன், வரேன்! :))

    பதிலளிநீக்கு
  2. பெருமாளைச் சேவிச்சிக்கோங்கோ! :))

    திருமஞ்சனக் கர்ப்பூர தீப ஹாரத்தி சுழல்கின்றதே!

    திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்,
    வைத்தஞ்சல் என்ற கையும்,
    கவித்த முடியும்,
    முகமும் முறுவலும்,
    ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய்
    நிற்கிற நிலையே
    நமக்குத் தஞ்சம்! நமக்குத் தஞ்சம்! நமக்குத் தஞ்சம்!

    திருமஞ்சனக் கர்ப்பூர தீப ஹாரத்தி சுழல்கின்றதே!

    ஏகி க்ருத த்யுமணி பிம்ப சகஸ்ர தீப்தி க்ரீடமும்
    குடில குந்தள காந்தி ரூபமான திரு குழற் கற்றையும்

    விகச பங்கஜ லோசனம் உடைய திருமுக மண்டலமும்
    அஷ்டமி சந்திரனுக்கு சமானமான உன் திரு நெற்றியும்

    லாவண்ய வர்ஷிணி லலாட தடே பிப்ரத் ஊர்த்துவ புண்ட்ரமும்
    ஆகர்ணிதே ஆசா: ப்ரசாத இதும் திருச்செவியும்

    கந்தர்ப்ப லாஞ்ச தனு சமானமான மகர குண்டலங்களும்
    காம சரா சமான மாத்ருகா ரூபமான புருவங்களும்

    ஆலக்ஷ்ய சத்வம் அதிவேல தயோத் தரங்கமான கண்களும்
    அவைகளில் உள்ள அனாமய வாக்ய கர்ப்பங்கள் கொண்ட கடாட்சங்களும்

    நிகம நிஸ்வசிதமான திரு மூக்கும்
    கோவைப் பழத்தைப் பழிக்கும் திருவதரங்களும்

    சங்க நிபகமான திருக் கழுத்தும்
    ஆஜானு லும்பிதமான திருக் கைகளும்

    பாதார விந்தம் காண்பிக்கும் தக்ஷிண கரமும்
    சம்சார சாகரம் இவ்வளவு தான் எனக் காண்பிக்கும் வாம கடி ஹஸ்தமும்

    ஸ்ரீவத்ச கெளஸ்துப ரமா வனமாலிக அங்கமாயுத்ய திரு மார்பும்
    ஆர்த்ரம் ஆச்ரீத தாரகமான திருவுள்ளமும் கொண்ட

    தேவரீருக்கு அடியேன் செய்யும் ஒரு விண்ணப்பமும் இதுவே!
    சங்கு சக்ராதி ஆயுதங்கள் ஜாஜ்ஜவல்யமாய் விளங்கும்
    சரணாகத வாத்சல்யனுக்கு அடியேன் செய்யும் ஒரு விண்ணப்பமும் இதுவே!

    பதிலளிநீக்கு
  3. திருமஞ்சனக் கர்ப்பூர தீப ஹாரத்தி சுழல்கின்றதே!

    தேவரீர் திருமஞ்சனம் கண்டருளி,
    கோலம் செய்து, இங்கே நின்று,
    அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு,

    உன் பெரு வானகம் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய,
    உன் தன் லீலா விபூதியில் மனிசர் உய்ய,

    என்னப்பனே, என் மணியே, முத்தே,
    அமுதமே, பல் வகையும் பரந்த பெருமாளே
    தேவரீர் மஞ்சனமாடி அருள்வதே!
    தேவரீர் மஞ்சனமாடி அருள்வதே!

    சங்க தார, பத்ம தார, சகஸ்ர தார முகேன தீர்த்த த்ரயம்
    நண்ணல் அரிய பிரானே நாரணா நீநீநீ-ராட வாராய்!
    என் கன்னலே, கட்டிக் கரும்பே, ராகவா நீநீநீ-ராட வாராய்!

    ஸ்ரீ ஆதி ஜகந்நாத சுவாமினே கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!

    பதிலளிநீக்கு
  4. பின்னூட்டங்களைப் படித்த பிறகு இனி ப்ளாகில் இடுவதற்கு முன் உங்களுக்கு அன்றாட நிகழ்வுகளை அனுப்பி உங்கள் விளக்கங்களுடனேயே பிறகு ப்ளாகில் பிரசுரிக்கலாமா என எண்ண வைக்கின்ற அருமையான கைங்கர்யம். பெருமாளை அனுபவிக்கவும் அவன் அருள் வேண்டும். அந்த பாக்யத்தை பெருமாள் உங்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார். பெருமாளுடனே நீங்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து மாதவிப் பந்தலை தினமும் மணம் வீசச்செய்து, கண்ணன் பாட்டுக்களையும் பார் முழுதும் கேட்டிடப் பணி செய்திட பரமன் அடி தொழுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //மாதவிப் பந்தலை தினமும் மணம் வீசச்செய்து, கண்ணன் பாட்டுக்களையும் பார் முழுதும் கேட்டிடப் பணி செய்திட பரமன் அடி தொழுகிறேன்//

    தங்கள் ஆசி, ரகுவீரதயாள் சுவாமி!
    மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!

    பதிலளிநீக்கு
  6. //பெருமாளுடனே நீங்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து//

    அடியேன்!
    அடியேன்!
    எந்நாள் உன் தனக்கு என்று எழுதப்பட்டேன் அந்நாள்!
    என்னுடைய இன்னமுதே...
    பல்லாண்டு பல்லாண்டு!

    பதிலளிநீக்கு