வகையெல்லாம் முற்றிலும் அறியாத கிராமத்து ஜனங்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் தங்கள் உள்ளத்திலிருந்து மனத்திலிருந்து உள்ளன்போடு கோவிந்தா என்று அழைத்தால் போதும் என்பதுதான். அறிவால் அவர்கள் என்றும் பெருமாளை அணுகியதில்லை. புத்தியால் ஆராய்ச்சிகள் செய்ததில்லை. கைங்கர்யங்கள் செய்கிறோமென்று அவர்கள் எந்தப் பட்டத்துக்கோ பலனுக்கோ ஆசையும் பட்டவர்களில்லை. இன்னும் சொல்லப் போனால் வந்திருந்த கிராமத்து ஜனங்கள் பலருக்கு அன்றாடம் உழைத்தால்தான் அதன் மூலம் கூலி கிடைத்தால்தான் ஜீவனம். அதையும் துறந்து இதயபூர்வமாகத் தன்னை நேசிக்கும் அவர்களுக்காகவே பெருமாள் மிகவும் இறங்கி வந்து அருள் புரிவான் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே இன்றைய தேரோட்டம் அமைந்தது. “உணர்வா ரின்பமாவானை” என்று கேசவ அய்யங்கார் வர்ணிப்பாரே அப்படி அவர்கள் தங்கள் உணர்வால் உளம் உருகி எழ்ப்பிய கோவிந்தா
கோஷங்களாலே மனம் மகிழ்ந்த மெருமாளையும், தேரோட்டத்தில் இறுதிப் பகுதியையும் (அடியேனும் தேரிழுத்ததாலே முதலிலிருந்தே முடியவில்லை), தேரிலிருந்து பெருமாள் ஆஸ்தானத்திற்கு காலையில் எழுந்தருளியமையும் இங்கு வீடியோக்களாகக் காணலாம்.
அறியாத கிராமத்து ஜனங்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் தங்கள் உள்ளத்திலிருந்து மனத்திலிருந்து உள்ளன்போடு கோவிந்தா என்று அழைத்தால் போதும் என்பதுதான். அறிவால் அவர்கள் என்றும் பெருமாளை அணுகியதில்லை. புத்தியால் ஆராய்ச்சிகள் செய்ததில்லை. கைங்கர்யங்கள் செய்கிறோமென்று அவர்கள் எந்தப் பட்டத்துக்கோ பலனுக்கோ ஆசையும் பட்டவர்களில்லை. இன்னும் சொல்லப் போனால் வந்திருந்த கிராமத்து ஜனங்கள் பலருக்கு அன்றாடம் உழைத்தால்தான் அதன் மூலம் கூலி கிடைத்தால்தான் ஜீவனம். அதையும் துறந்து இதயபூர்வமாகத் தன்னை நேசிக்கும் அவர்களுக்காகவே பெருமாள் மிகவும் இறங்கி வந்து அருள் புரிவான்:)
பதிலளிநீக்குதேரை பற்றி தாங்கள் கூறுவதை படிக்கும் பொது கண்கள் பனிக்கிறது .
நாங்களும் அந்த கூட்டம்தானே அதனாலோ! கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
இதே சமயத்தில் திருநின்றவூர் பக்தவத்சல பெருமாளுக்கும் தேரோட்டம் நடந்தது. அங்கேயும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி ஊரே ஆனந்தத்தில் மிதந்தது .