திங்கள், 31 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

பராசரமுகாந் வந்தே பகீரதநயே ஸ்திதாந்
கமலாகாந்த காருண்யக ங்காப்லாவித மத்விதாந்

உயர்த்தரு ளரிப்பத துனிப்புன னனைந்தே
அயர்த்திடு மெமைப்பர னடித்திரு வுணர்த்தும்
சயத்திரு பகீரத நயத்துறு தவத்தோர்
முயற்றிரு பராசரர் முதல்வர்வ ழிபட்டேன்.

[பகீரதன் கடுந்தவம் புரிந்து கங்கையை அவனிக்குக் கொண்டு வந்ததுபோல் கமலாகாந்தனுடைய கருணை என்கிற குளிர்ந்த பரிசுத்தமான கங்கா ப்ரவாஹத்தைக் கொணர்ந்து நம் போன்றவரை அதில் அவகாஹிக்கும்படி செய்வித்த மாசில் மனத்தெளி முனிவரான பராசரர் முதலிய மஹர்ஷிகளை வழிபடுகிறேன்.]

சனி, 29 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

க்ருதிந: கமலாவாச காருண்யை காந்திநோபஜே
தத்தேயத் ஸூக்தி ருபேணத் ரிவேதீ ஸர்வயோக்யதாம்.  3.

திருப்பர னடிக்கவி யெனத்தமை விடுத்தாங்
கொருப்படு திடத்தொரு கடைப்பிடி நடைக்கண்
உருப்பெறு மறைத்தலை தலைத்தலை யுயக்கொள்
உரித்தருள் தமிழ்க்கட வுளர்க்கெனை யளித்தேன்.

வெள்ளி, 28 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

 விகாஹே தீர்த்த பகுளாம் சீதலாம் குருஸந்ததிம்
ஸ்ரீநிவாஸ தயாம் போதே : பரீவாஹ பரம்பராம்  2.

வளத்திரு மலர்மகள் வலத்துறை யுமார்வன்
உளத்திரு வருட்கட லுகத்தலி லுகுக்கும்
வளத்தெழு பெருக்கென வரப்பெறு முறைத்தண்
ணளித்திரு குருப்பர வணித்துறை குளித்தேன்.

[திருமாமகள் வலத்துறையு மார்வனான அண்ணலின் அருளாகிய ஒரு பெரிய ஏரியிலிருந்து ஓடி வரும் பெருக்குகளான குளிர்ந்த குருபரம்பரையில் உள்ள அநேக துறைகளில் இறங்கி நீராட்டம் செய்கிறேன்.]

வியாழன், 27 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

 

ஸ்ரீ கேசவ ஐயங்கார் தேசிக தர்சநத்திற்குச் செய்துள்ள பேருபகாரங்கள் எண்ணிறந்தவை. தேசிகன் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பக்தியாலும், காதலாலும் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்தவைகளில் சமஸ்கிருதத்தில் இருந்தவையெல்லாவற்றையும், ஸ்வாமி தேசிகனே சொன்னதுபோல, எல்லாரும் அறிந்து இன்புறுவதற்காக தமிழிலே மூலத்தின் சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நடையழகு எல்லாம் அதேபோல் அமையுமாறு தமிழிலே தனக்கு இருந்த புலமையாலே மொழிமாற்றம் செய்து தந்த வள்ளல் அவர். திருப் பாதுக மாலை அவற்றுள் ஒரு ரத்தினம். அதே போல் ஸ்வாமியின் "தயா சதகம்" அவரால் "திருவருட்சதகமாலை"  என மாற்றப்பட்டு,எளிமையான விளக்கத்துடன் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது  தமிழையும் வடமொழியையும் இரு கண்ணே போல் போற்றும் தேசிகனடியாரெல்லாம் படித்து இன்புற வேண்டிய அது இன்று முதல் தினம் ஒரு பாடலாக இங்கு மலரும். ஏற்கனவே ஸ்ரீ ஸ்ரீதரன் ஸ்வாமி மூலமாக தமிழிலே படித்து இன்புற்று வருபவர்களுக்கு இது மேலும் ஆனந்தமாயிருக்கும் என்ற நம்பிக்கையோடு  தொடர்வது

         திருவருட்சதக மாலை
  

  ப்ரபத்யே தம் கிரிம்ப்ராய : ஸ்ரீநிவாஸா நுகம்பயா
  இக்ஷூ ஸாரஸ்வந்த்யேவ யந்மூர்த்யா சர்க்கராயிதம்             1.

திருக்களி யுரப்பர னிறைக்களி யுருக்கப்
பெருக்கென வரப்பெறு கருப்பிர தவெள்ளம்
சருக்கரை யிறுக்கென சிறப்பினி லுருக்கொள்
திருக்கிரி யெனத் தெரி கிரிப்புக லடைந்தேன்.
                              1.

       [அலர்மேல் மங்கை உறைமார்பனுடைய தயையே கருப்பஞ் சாறாகப் பெருகி ஆறாக வோடிச் சருக்கரைக் கட்டியாய் கனமாய் உறைந்து உருக்கொண்டு நிற்பது போலுள்ள திருவேங்கடம் என்னும் மாமலையை அடியேன் பலகால் சரணம் அடைகிறேன்]

 

ஞாயிறு, 23 டிசம்பர், 2007

திருப்பாதுகமாலை

5.பதிற்பயணப்பத்ததி (தொடர்ச்சி)

131.   புவிமுன்கவி யிறைவன்னவ னுரைகொண்மன முனிமன்
          சவிபின்னவ னசைநல்லா சிபமீதுறு சதிரிற்
          கவனந்தரு பலபச்சைகள் கரமேந்திய படிமா
          தவனங்கிரி நிலை! நின்வர வெதிர்கொண்டன னனகன்.

132.    வருநீபொழி யெழில்கண்டக மகிழ்மாநகர் மகளிர்
          விரிமாவிழி லரிமாவரி விழைமாதிரு முகமே
          குருமாமலர் பலபூத்தன வெனசாலக வலயந்
          தருமாபரி நிறைதாங்கினை தலையங்கிரி நிலையே !

133.    தெரிநின்னொளி நகரெல்லையி னடைகொள்ளடி நிலைநீ
          வரமன்புர ரிடுவெண்பொரி வரியாயது பரியிற்
          புரிதன்பதி பரதன்கர வரணந்திகழ் புகழ்மா
          திருமங்கல மணவங்கியி னகையத்தகு சிகையாய்.

134.   புரிநீசர வுருதின்னல வுதயந்தர வகலத்
         தொருவெண்குடை மதிமண்டல முயரச்சர வுருசா
         மரைவீசிட மணிபாதணி மணிமாதர்கள் விழியாங்
         கருநெய்தல்கள் மலருங்களி யொளிதந்தனை யருளில்

135    நிகரச்சீலை விசயப்புகர் முகமூர்ந்தடி நிலைநீ
         மகிமன்னல நகையில்லா மகிழ்கோசல ருனையே
         மிகுமன்னரு ணிசராகவ னெனவுன்முக வுயர்விற்
         புகுநின்னெழி லவர்நின்றிரு வரிநோக்கினர் பரிவில்.

136.    உறைகோசலர் குறைதீர்த்தரு ளொருசானகி யெனவே
          நிறைமாதவ னடிமாநிலை! யிணைநீவரு மணிகண்
         ணுறுதங்குது கலமேலெழு புரமங்கல மடவார்
         நறுநீளொளி தெளிநேத்திர நலமேவினர் விழைவில்.

137.   வெடிநாதமொ டியைபிந்தொடு மிடவாகிடு வடிவத்
         திடமாவிடைநடையோங்ஒரு திருவோங்கா மதமா
         முடிமேல்வர மறைவேர்ப்பிர ணவநாடிய முதலென்
         றடிமாநிலை! தெரியப்புர நடுநாடினை யனைநீ.

138.   அடிமாணிலை! தசகந்தர மதசிந்துர மிடியிற்
         பொடியாயொரு நொடியிற்பட முடுகாரிய வரிமா
         கடமேகிட நுழைகோசல முழைகாத்தனை வழுவா
         தடிகாத்திடு பரதச்சிசு வரிகாத்திட வமைநீ.

139.   மோகுறுகை கேயியிரு வரமை வைகற்
                 கோளதுமூ ளவனியிருள் செகுக்கு முள்ளக்
          கோகனத மலர்பரதன் யோக மேறு
                  முடிசுடரு மதியொளியா யயோத்தி மீளும்
          வேகமதி லரியகலல் பொறுப்பார்க் குந்தா
                    ணிலைப்பிரிதல் பொறுப்பரிதா மிறையு மென்ற
           வாகுதெளி யுபநிடத மகுடந் தானே
                      யாகுதிருப் பாதுபுகழ்ப் பாடு வாமே.

140.     தோடணி தாணிலை! தோடமு றத்தான்
           காடடர் சித்திர கூடம கன்றே
           கூடளி பத்திரை யூட்டிடு கன்றை
           நாடிடு நாரினி னாடினை நாடே.  .  

தமிழில் தயா சதகம்

ஸ்ரீவேதாந்ததேசிகவைபவப்ரகாசிகை கீர்த்தனைகள்

தரு-இராகம்- ஆனந்தபைரவி-தாளம்-ரூபகம்

பல்லவி

கண்டீரவர்வாதிகள்கண்டீரவர்சேஷகிரி
கண்டாமணிரூபகர்கண்டரேபிரசண்டரே

அனுபல்லவி

மண்டலமீதில்வரதராஜர்பாதம்
வந்தனைசெய்யுமனந்தகுருமைந்தர்
அண்டியபேர்க்கருளேசெய்யும்வேதாந்தா
சாரியபரசூரியரேகாணும் (கண்டீ)

சரணங்கள்

தத்துவத்திரயசுளகமிரகஸ்யத் திரயசுளகமென்றிரண்டு
தத்துவமாதிரிகைரகஸ்யமாதிரிகை தத்துவபதவிரகஸ்யபதவி
தத்துவநவநீதம்ரகஸ்ய நவநீதமென்னுமின்னந்
தத்துவரத்தினாவலி சரளரகஸ்யரத்தினாவலி
பத்தரெல்லாஞ்சொல்லும் ப்ரதிபாத்தியஸங்கிரகமிசை
மற்றினனம்ரகசியரத்தினாவலியிருதயமுஞ்சொலிமகிமைசேர் (கண்டீ)

பரமபதசோபானமும் பகரும்பிரதானசதகம்
தருமபயப்ரதானசாரம் சம்பிரதாயபரிசுத்தியும்
உரமிகுந்த உபகாரசங்கிரகமுமுசிதமாகிய
திரசாரசம்க்ஷேபந் திருமடியடைவுடனிவையெல்லாங்
கரதலாமலகமாய்க்கண்டமணிப்பிரவாளப் பிரபந்தங்கள்
தரணிமேல்ரகஸ்யார்த்த்ங்களின்சம்பிரதாயங்களும் பிரபலமே (கண்டீ)

வெற்றிவிரத்திகூரத்தாழ்வான்வித்தைதனிற்பட்டரென்பார்
நத்திமிக்கானஞானத்தினில் ஞானத்தொருமூர்த்திநிகராய்ப்
பத்திதான்ஒருவடிவுகொண்டாரென்றேபன்னிப்பன்னிச்
சத்துக்களதிசயிக்கவே க்ஷமையிற்பூமியென்றே தரிசன
னத்தர்கள்கொண்டாடு மிராமானுஜன்னிவர்தாமென்றேபிர
சித்தராய்வைபவப்ரகா சிகைவிளங்குந்தேசிகசிகாமணி (கண்டீ)

சத்காரகாளகூடந் தருணிகுணபஞ்சபாபுசங்கி
தக்கராஜதானியுங்கும்பீபாகஞ் சமனாகயெண்ணிப்பரிகரி
சற்குருவாஞ்சருவதந்திரசுவதந்திராரியர்தாமிவரே
மிக்கானசீர்வைஷ்ணவர்விளங்கவேயெம்மைவிற்கவும்பெறுவர்
எக்காலுமென்றேதானினை யுஞ்சாந்தாதிகுணபரிபூரண
கற்கடகவிந்துமேகம்போற் கவிமாரிபொழிதிவ்யவாக்குள்ளார் (கண்டீ)

வைதிககர்மானுஷ்டிப்பு

வெண்பா

வாக்குமிகவுண்டாம்வரதரரருள்பெறுவ
தாக்குமவர்கருணையாநந்தந் --தேக்கும்
வனசரிகையைச் சொல்லிவாழ்த்துந்தூப்புல்லார்
தினசரிகையைச்சொல்வதே.

தரு-இராகம்-கல்யாணி-தாளம்-சாப்பு

பல்லவி

தினசரிகைகளைச் சொல்லுவோஞ் -- சொல்லியேயெங்கள்
வினைகள்யாவையும் வெல்லுவோம்

அனுபல்லவி

வனமாலிகாலங்கிருத மஞ்சுளகந்தரரென்னும்
பனகசயனரடி பணிகவிவாதிசிங்கர் (தின)

சரணங்கள்

பெருமைசிறந்த கலைக்கு -- முதலானவர்
பிரமமுகூர்த்தந் துவக்கு -- எழுந்திருந்து
திருவடிகளை விளக்கிச் -- சுத்தாசமனஞ்
செய்தருளவரன் முறைக்கு -- இசைந்துநல்லா
தரவுடனென்னுயிர் தந்தளித்தவரெனும்படி
குருபரம்பரையாய்க்கொண் டடிபணிந்திடும்பிள்ளை (தின)

உதயகாலத்திற் சிந்தித்துத் -- தோத்திராதிகளை
யுறுதியாயனு சந்தித்து -- யோகசமாப்தியதை
பூர்வகமாய் வந்தித்துச் -- சங்கற்பஞ்செய்து
அபிகமனத்தை சிந்தித்துத் -- திருக்காவேரி
நதிக்கேகவெழுந்தருளிநாடிச்சுருதிசொன்ன
ததிசவுசாசமனதந்ததாவனாதிசெய்குரு (தின)

தீர்த்தமுறையைப் போற்றி -- நீராட்டஞ்செய்து
திருப்பரிவட்ட நேர்த்தி -- யாய்த்தரித்தேபின்
ஊர்த்துவபுண்டரங்கள் சார்த்திப் -- பவித்திரபாணி
யுடனனுஷ்டான மேத்தித் -- தொண்டர்வினையை
மாற்றுமெம்பெருமானைமங்களாசாஸனஞ்செய்து
கீர்த்திமிகுங்கோயிலுக்கெழுந்தருளுந்தேசிகன் (தின)

தரணிசொல்முப்பத்தி ரண்டு -- என்றபசாரத்
தையும்பரிகரித்துக் கொண்டு -- சேவாக்கிரமத்தில்
திருவடிதொழுவ துண்டு -- அங்கங்கேதானே
சிறந்ததற்காலங் கண்டு -- பிரபந்தங்களாந்
திருப்பள்ளியெழுச்சிநந்திருப்பாவைகத்தியமுதல்
வரப்பெறுந்தோத்திரங்களைவழுத்தும்வேதாந்தகுரு. (தின)

அருளையுள்ளத்திற் றரித்து -- ஆபாதகேச
மாகக்கொண்டு முச்சரித்துக் -- கண்டுபெரிய
பெருமானைநமஸ் கரித்து -- உடனேதீர்த்தப்
பிரசாதமுஞ்சுவீ கரித்துத் -- தம்முடையன்பு
பெருகியாராதனமாம்பேரருளாளரையும்
வருமயக்கிரீவரையும்வந்திக்குங்கண்டாவதாரர். (தின)

அபிகமனத்தை யெடுத்து -- வியாக்கியானகூட
மதனில்வந்தே யடுத்து -- அவரவர்க
ளபேக்ஷாகுணங்கள் கொடுத்துச் -- சீபாஷியமுத
லானகிரந்தங்கள் தொடுத்து -- மணிப்பிரவாள
விபவரகசியார்த்தங்கள்விளங்கப்பிரஸாதித்தங்கே
சுபமேவுஞ்சருவதந்த்ரசுவதந்தராரியர் செய்யுந் (தின)
தக்கசிஷ்யர்மனத்தியா னத்தைப் -- பொருந்திக்கொண்டு
சமர்ப்பித்தஉபதா னத்தைப் -- பாத்திரமேயத்
தஸ்கரகிராகிய மானத்தைக் -- கொண்டுமேயாரா
தனஞ்செய்தருளி ஞானத்தை -- விளக்கவந்தார்
முக்கியமாமகத்தியசாகம்முதலாந்திரவியமுடனே
மிக்கதளிகையைச் சமர்ப்பிக்குநிகமாந்தகுரு. (தின)

உச்சிதவைசுவ தேவாதி -- களைச்செய்து
உண்மையாகமந்த்ர மோதி -- யாகாந்தரத்தில்
இச்சையைச்சமர்ப்பித்து மேதி - னியிற்புகழும்
இராமாநுஜானுபவ ரீதி -- ஆழ்வார்கள்சொல்லும்
மெய்ச்சுருதிப்பொருள்களுமேன்மையாம்புராணவகை
அச்சுதகுணவர்ணனையாவுந்தொண்டர்க்கருள்குரு. (தின)

காலாழுநெஞ்சழியு மென்னும் -- சொல்லின்படியே
கண்டனுபவித்தவர் முன்னுஞ் -- சாயங்காலத்தில்
மாலாயனுஷ்டானத்தின்பின்னும் -- அருளாளரை
மங்களாசாஸனஞ்செய்துன்னும் -- அந்தரங்கத்தில்
மேலானதொண்டருக்குமிகுந்துசூக்ஷுமார்த்தங்கள்
லாலாமுதமுண்டவர்சல்லாபமாயருளிச்செய்யும் (தின)

கண்வளர்தலென்பது முண்டு -- சுபத்தினீகனாங்
கண்ணனைமனதினுட் கொண்டு -- யோகநித்திரை
பண்வளர்வந்தவர் கண்டு -- எழுந்திருந்தே
பண்டுபோலேநாள்தோறுங்கொண்டு -- மாலுக்கேசெய்வார்
எண்வளரும்பிரபந்தங்களெங்கணும்பிரசித்தமாக
விண்வளரும்நிலவென்னவிளங்கும்வேங்கடநாதர் (தின)

ஞாயிறு, 2 டிசம்பர், 2007

இன்று முதல்....



இன்றுமுதல் பக்கத்திலே இருக்கிற labels போய் உங்களுக்கு விருப்ப மானதைப் படிக்க வேண்டுகின்றேன்.அனேகமாக ஒரு நாளில் ஓரிரு மணி அளவிலேயே கரண்ட் இருப்பதால், தினமும் update செய்ய முடியவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

திருப்பாதுகமாலை

5.பதிற்பயணப்பத்ததி

121.   அரியி ரண்டடி தம்மிலு மண்டினோர்க்
           கருணி றைந்திறை யாற்றல லர்ந்தசீர்த்
           திருவி ரண்டுதி ரண்டதெ னத்திகழ்
           பரிவு மன்னிரு பாதுக மெண்ணுவாம்.

122.    சரணம்புகு மனுசன்னிர வவனத்தொரு வனமே
            பெரிதென்றக லலகில்லிறை நிறைதாளிணை யணவா
            தொருதாயென வுருகிப்புர வுயிர்நோக்கிட வருமத்
            திரிவையக லருளினிறை யரிபாதுகை தெரிவன்.

123.    பிழையய்யிரு தலையன்னிலை குலையுந்திரு விதயத்
            தெழுமய்யன துரைமெய்யுற விரைதண்டக நடையே
            பழியஞ்சிய பரதன்புரி விரதத்திறை பிறழா
            தொழுகும்பரி தரநீபுரி வரவோங்கினை நடையில்.

124.     இணையில்லரி யிறையங்கிரி விரியும்பரி நிறைவிற்
             பணையன்னவ னிடுமேவலி னிலையேபணி யதுவென்
             றிணையத்திற பரதந்திர விரதந்தெரி நிலையில்
            திணியப்பணி துணிசீதையை மணிபாதுகை !மிகுவாய்.

125.    திருமன்னுர னிருவர்கணை விழையுந்நில மகளா
            ருரமன்னவ னுரையில்விழ வுறுமன்னடி நிலையே !
            வருநின்னிறை மனனில்லது தருநின்னரு ணிகழச்
            சரணத்திரு வணவப்பெறு சதிரன்றவன் பெறுவன்.

126.    தெளிமந்திர கலசப்பனி யலசாநல வமலத்
            தொளிசெய்திட லறுமத்திற வொளிமின்னெடு முடிகொண்
            டளிவிஞ்சிட மணிபாதுனை யரியேவலி னடைகொள்
            ளொளிநல்லா சகிலங்கொள நடைகொண்டன னனுசன்.

127.    மறையாதிய னிலையங்கிரி மலரங்குறு பிரிவிற்
           பொறைமாநல நிலைநோக்கிய பொறைநின் றுயர் தவமே
           நிறைநீபத நிலை ! சீதையு மரசும்நெடு சிறையும்
           முறையேகொள வெதுதானும துறவிற்செய லரிதே?

128.  உடனாடிய பரதன்பணி முடியேறிய பதமாண்
          பொடுதாவிய கடகுஞ்சர முயர்மஞ்சணி யணைமீ
          திடுமாசன மணிபாதுன திருபாரிச மணிமின்
          னிடுகூந்தலி னெடுசாமரை யென வீசினை யொளியே.

129.  விளையத்துணை முதுநல்வினை யிணைமத்தக மிசையே
          றொளிகொள்ளணி மணிபாதுகை ! யுனையேந்திய வளவில்
          வளநன்மண ரகுநாயக வயமாமத வமுதின்
          வெனநின்மல மலிசாந்தென வெழில்பூசின ணிலையே.

130.   தெரிதற்செய றருநற்சர விருதில்வர வொருநீ
           யரியங்கிரி நிலை!யாசைக ணிறைகோசல வமலப்
           புரமங்கையர் நயனாம்புத முமிழும்மழை யொழியும்
           பரியொன்றளி யொளியோங்கிய படிபூத்தனை நொடியில்.
      
                

சனி, 1 டிசம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

பாம்பாட்டியின் கருவமழித்தல்

                  விருத்தம்

தாம்பாண்டிநாடுமலைநாடுஞ்சோழ
         தரணியிலுளமுளதிவியதேசமேயெல்
லாம்பாண்டித்தியஞ்சிறந்தபிள்ளைதாமுல்
         லாசமதாய்த்தொழுதுகொண்டுகாஞ்சிசேர்ந்தார்
வீம்பாண்டிறமைசொல்லும்வாதிமாரை
         வென்றடக்கிவேதாந்தம்விளக்குநாளில்
பாம்பாண்டியொருவன்வந்துவாதுசொல்லப்
         பார்க்கின்றார்ஜயவிருதையேற்கின்றாரே.

தரு- இராகம்- புன்னாகவராளி- தாளம்-ஆதி
                       பல்லவி

வேண்டிமந்திரம்கற்றாரே - வாதியானபாம்
பாண்டிதனைச்            செயித்தாரே.

                  அனுபல்லவி

பாண்டவர்க்குத்தூதாகத் தாண்டிநடந்த பாத
நீண்டவரதரருள் பூண்டவேதாந்த குரு.              (வே)

                   சரணங்கள்

          சோளிகை  நரேந்திரனே - இவர்தந்திரு
           மாளிகைவாசன்முனே

நாளொன்றுபவாசத்தால் மீளுங்கோபத்தாற்சொல்வான்
கேளுமென்னைச்செயித்தானீளுங்கீர்த்தியென்றானே.(வே)

            சர்வதந்த்ர   சுவதந்த்ரம் -- விருதுபெற்ற
            நிர்வாகர்பாம்பு   மந்திரம்
அறிவிராகிற்பிடாரன்நெறிகண்டுநாகங்களைக்
குறிகண்டுதடைகட்டிமறியும் பார்ப்போமென்றானே.  (வே)

        இவனோடென்ன    விவாத -- மென்றிருந்தாலும்
        அவனோபுசியான்           சாதம்.
எவர்தாமாகிலும்வந்தொ ருவர்வாசல்காத்திருந்தாற்
கவலையைவிசாரிப்பார் குவலயத்தில்வழக்கம்.            (வே)

         பார்த்துவாவென்று  கூறிக் -- கோயின்முன்னெழு
         கீற்றையிவர்தாங்        கீறி
ஏற்றவுன்னிடத்திலே வாய்த்தபாம்புகளெல்லாஞ்
சேர்த்துவிடுவாயென்றே சாற்றினாரெங்கள்குரு.          (வே)

          மிடுக்குடன்பாம்    பாட்டி -- மாநாகங்கள்
          விடுக்குந்திறமை           காட்டித்
தொடுக்குந்தருணங்கீற்றைக் கடக்கமாட்டாததுகள்
முடக்கங்கொடுத்ததுகண் டெடுக்குங்கோபமிஞ்சவே.

           வாசுகிதட்சக        சமான - நாகங்களை
           வீசியேவவு        மங்கான
பேசியொன்றிரண்டான ராசிரேகையிற்சென்று
கூசிநின்றதுகண்டு    மேசிவப்பானான்கண்கள்.        (வே)

         அங்குரேகையைத் தாவச் -- சர்வபூத
         சங்குபாவனை      யேவப்
புங்கமாயேழுகீற்றை  யுங்கடந்ததுமிவ
ரங்கந்தொடவரக்கண்டுங்  கருடனையெண்ண           (வே)

            இவ்விதங்கருடன்      வந்தே -- சங்கபாலனைக்
            கவ்விக்கொண்டு     பறந்தே
செவ்வையெழுந்தருள  அவ்விஷவயித்ய
னெவ்வயணமறிவான் றிவ்யபாதந்தொண்டென்றான்.(வே)

           உந்தமதடிமை    காணுன்ஞ் -- சங்கபாலனைத்
           தந்துரக்ஷிக்க       வேணும்
எந்தங்குருவேயென்று  வந்தான்கருடதண்ட
கந்தன்னாற்சங்கபால னும்திரும்பிடத்தந்தார்.          (வே)

                      விருத்தம்

புண்ணியகோடிகட்கெல்லாமிடமாங்காஞ்சி
        புரந்தனிலே சிலகாலமிருந்துபின்னு
மெண்ணியதெல்லாங்கொடுக்கும்வேங்கடத்தி
        லேகியேமங்களாசாசனந்தான்
நண்ணியபின்றிருவரங்கப்பதியைநெஞ்சி
          னாடியேயெழுந்தருளிவந்தாரெங்கள்
பண்ணியமிக்கானதபோபலன்கைவந்த
          பலத்தினார் தூப்புலென்னுந்தலத்தினாரே.

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

தரு-இராகம்-சவுராஷ்ட்ரம்-தாளம்-- ஆதி

பல்லவி

பிள்ளையென்றாலிவரே       பிள்ளை
ப்ரபலங்கொண்டதூப்புற்     பிள்ளை                 (பிள்)

அநுபல்லவி

வெள்ளைப்பரிமுகங்    கொண்டார்
  மிகுந்துலாலாமுத      முண்டார்                         (பிள்)

சரணங்கள்

ஏற்குங்கோயிலுக்கே      நண்ண
   எழுந்தருளியோர்நா     ளுண்ண
மார்க்கத்திற்றளிகை       பண்ண
    வாய்க்காமலரியை     யெண்ண

வழியிலங்கடியிலுள்ள   அவரைது
   வரைகோதுமைகொள்ளுமுதலாகியவற்றைப்
பழுதில்லாதவேதம்பரவுமெங்கள்வெள்ளைப்
   பரிமுகரமுதுசெய்திடவைத்தாரே.                       (பிள்)

கோமுட்டிகள்கண்டு       வெள்ளைக்
    குதிரையாரதிந்தக்      கொள்ளை
தாமிட்டுத்தின்பதும்         சள்ளை
   தானென்றோட்டிவிடப்  பிள்ளை
திரைவர்ணிகராகும்வைஷ்ணவர்க்ருஹத்தில்
   தங்கவங்கணுமப்படிக்கேசெய்தருள
இவ்வண்ணஞ்செய்ததிதாரதெனவேவேங்க
  டேசதேசிகரதென்றறியவைத்த                              (பிள்)

இம்மஹிமையுள்ள               வரிங்
   கிவரைவந்தேயெல்லாந்    தெரி
யும்முடையவெள்ளைப்        பரி
   யோங்கியெங்கடலைப்    பொரி
உள்ளவையெல்லாந்தின்றதிருகால்முக்கால்நாற்கா
    லோட்டிவிடப்போகவில்லைநீர்கட்டுமென்றார்
பிள்ளைவெள்ளைப்பரிமுகரேபட்டினி
   பொறாதமுதுசெய்தகிருபையறிந்தனரே                  (பிள்)

பரமாத்துமசமாரா          தனம்
  பண்ணாதிருந்தவ        யனம்
தெரிவார்பாலமுத          சனஞ்
  செய்யும்விதிகண்ட       தினந்
திருக்கண்வளரப்பிள்ளையக்ரீவருஞ்
     சிறந்துபூரணராயெழுந்தருளினாரே
பெருக்கமிகுமிதைத்திரைவர்ணிகர்கண்டு
     பிரபலவதிசயந்தனைக்கொண்டாடினாரே              (பிள்)

விருத்தம்

வித்தியாவைபவரானவிவர்தாமுஞ்சீர்
      வெள்ளறைப்பங்கயச்செல்விபுருஷகார
சத்தியானுசரிதமாய்க்கொண்டுமேசெந்
      தாமரைக்கண்ணரைத்தொழுதுதிருக்காவேரி
மத்தியராமரங்கரடிபணிவாரங்கே
      வந்துதொண்டுசெய்தவைஷ்ணவர்க்காக
நித்தியானுஸந்தேயரகஸ்யார்த்தங்கள்
     நிலையிட்டார்மகிமையுள்ளகலையிட்டாரே.
 

வியாழன், 22 நவம்பர், 2007

திருப்பாதுகமாலை

4. பணயப்பத்ததி

101. எவையு முய்யவெ னய்யன யோத்திமீண்
       டவனி யாண்டருள் செய்பய ணத்துமுன்
       னவணி நன்றத னுப்பலெ னத்தரும்
       சுவண மன்னிரு பாதுகை யுன்னுவாம்.

102. நீடுகுல மேறுதிரு நீதியர சோடும்
        நாடுகுடி யன்புநெடு நாடுடனு யிர்த்தோர்
        காடுதனி யேகியிறை  யாடிரகு வீரன்
        ஈடெனநி னைத்துனைநி லைத்துணைவ லித்தான்.

103.  நாடலற நாதனெடு காடுபுகு காலில்
         நாடிமன மீளவவ னைவளமொ லித்து
         வாடுமிள மெல்லிதய வஞ்சியென விஞ்சிக்
         கூடியடி கெஞ்சியருள் கொஞ்சினைம ராடீ !

104.  அச்சுதன கன்றரகு மன்னகரை நம்பி
         துச்சமென வெண்ணியவ னுச்சியிலு னைக்கொண்
         டுச்சினிய வந்திதுரை மோதயம யோத்தி
          யுச்சமவை பாது !நின தென்றுமதி பூத்தான்.
105.   தஞ்சமென வோங்குலகு தாங்கிரகு வீரக்
         கஞ்சவிழி யஞ்சனவ ணப்பானை யாங்கும்
         மஞ்சுமுடி தாங்குவலி கண்டிளையன் பாதூ !
         கொஞ்சுல ளித்தரசு கொள்ளுனையி ரந்தான்.

106.    அய்யனடி நின்றிளவ லன்பிலுனை வேண்டல்
          துய்யமணி பாது !தனி நிற்கவுனை வைய
          முய்யவரு மாதியென மூதறிஞர் காண
           மெய்யறையு மாமுனிவ சிட்டனுள மென்னோ?

107.  மூதரசு துஞ்சவிறை முன்னடவி யேகச்
        சாதுவொரு தம்பிபரி வாதமொழி யஞ்சச்
        சீதையென சாகசநீ செய்தனையெ னிற்பொற்
         பாதநிலை! கோசலரை யாற்றுநல ராரோ?

108. ஆமுயிரெ வைக்குமிறை யென்றறைம றைச்சீ
        ராமனதி னின்னிருமை மாணுமணி பாதூ!
        ஆமவனை யேபெறவ ரும்பரத னுக்கே
        மாமுதனி திப்பணய மாயினைம தித்தே.

109. முன்னமளி மன்னபய முன்னொளிதெ ளிக்கப்
        பின்னிளவ லண்ணநகர் பின்னடிபி டிக்க
       நின்னடையி லக்கடல்க டந்தடிநி லாயவ்
       வன்னிருதர் மன்னகரி றுத்தொளிப லித்தான்

110. அத்திறநெ டுஞ்செடிக ளத்தனையு மேநீ
       யொத்திபொறை மேனிகமை கொள்ளுமணி பாதுன்
       தொத்தறலி லத்தனொரு வீரனென மூரி
       யுத்தநிலை யெற்றுமுடி பத்துடனு திர்த்தான்.

111. செப்பமுற வப்பனுரை செய்துமிகு மன்னைச்
        செப்பலுநி ரப்புதன தின்னுளந லத்தோ
        வொப்பருதி ருப்பொலிய மோலிமணி யெம்பிக்
        கப்பனணி பாது!நினை யம்முடிக வித்தான்.

112. அய்யனரு ளங்கிரிசு ரத்தலிலு னைத்தான்
       செய்யதுற வொண்சடையி னம்பிநனி யேந்தி
        மெய்யனணி பாதநதி பாது!முடி மேவுந்
       துய்யபவ னத்தனிம மித்தவனு மொத்தான்.

113. மெய்யனிறை தேறுமடி சேருமணி பாதூ!
       உய்யவுல கேழுமர சாளுரிமை கொள்ளப்
       பொய்யலையு மோலியறு பொன்முடியி லுன்னைத்
       துய்யதுற வொன்றுதிரு நின்றவன்சு மந்தான்.

114. நன்றகில நோக்குமளி நாறுமணி பாதூ !
       ஒன்றுனையு ணர்ந்தனுச னுத்தமனை வேண்டத்
       தன்றிரும திச்சரண கச்சவியி லன்னான்
       நின்றருளி னிற்குமுடி யாட்டினனி வந்தே.

115. காதலினி தேறுனது மாலடிக லக்கும்
       நீதியிறை யந்தவிதி நந்தனனி யம்பப்
       பாதுனையி ராமகிரி மாதவர்ப ணிந்தெப்
       போதுநிறை யோதுவர்க ளோம்பனல றைக்கண்.

116. உன்னியன டைத்திடனெ னத்தனிவ னத்துத்
       துன்னொளிய ழைக்குமுறை யுன்னியிறை நின்மேல்
       தன்னடியை யொற்றிநடை யாடுவலி யுற்றே
       மன்னுகடு கற்கணெடு தண்டகா டந்தான்.

117. நாதனடி நின்றுமணி யாசனம மர்த்தி
       நீதியுல காளவொரு காளைமுடி யேறிப்
       பாது !வர வீதுபுர வாசிபெறு பேறென்
       றோதுனல வாசியிசை பாடிமகிழ் கூர்ந்தார்.

118. ஏறுநடை யண்ணனிறை யேவலுரு நின்னை
        நாறுமுடி மீதுமணி பாதுகை! தரித்தே
        வீறணிம திப்பரத னின்னரசு தன்னில்
        வேறரச றத்தரைநி றுத்தினன னைத்தும்.

119. இன்புறவை யகமகில மளித்துக்காக்கும்
               பீடுடைமெய் யோகியர்கண் கண்டுபாட
        நம்பிதிருப் பரதனொரு தம்பியென்றே
               நடையிரகு நாயகனா மரங்க நாதன்
        அன்பிலனு தினமுநெடி தவன்வ ணங்கத்
                தனதுபத விலையெனமெய் யுறுதி சாற்றி
        அம்பலநின் றன்றவனுக் களித்த வந்நல்
                லடிநிலையென் சிறுமையறப் போக்கி நோக்கும்.

120.  கட்டுதி ருப்பர தன்முடி போலென்
         மட்டப வாதம கற்றிம ராம !
         கிட்டியெ னுச்சியி னிச்சலுங் கோயில்
         நட்டலி னீபரி வட்டமெ னக்கொள்.
        
     

கொஞ்சம் மாறுதலுக்காக

www.காக்கை.com

www.காக்கை.com என வெப்சைட் முகவரியை அதற்குரிய இடத்தில் டைப் செய்தான் ராகுல். மின்னல் வேகத்தில் சில காகங்களின் போட்டோக்களுடன் வெப் சைட் திறந்தது. மவுஸில் ரோலிங் செய்து ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொண்டு வந்தவன், பிடித்த காகத்தின் மீது கர்ஸரை வைத்து க்ளிக் செய்தான். உடனே தகவல்களைப் பதிவு செய்யும் பகுதிக்குச் சென்றான்; பதிவு செய்தான். பணம் செலுத்தும் பகுதி வந்தது. கிரெடிட் கார்டு தகவல்களைப் பதிவு செய்தான். சற்று நேரம் பிராசஸிங் ஆனது. பிறகு "மிஸ்டர் ராகுல் உங்களின் விருப்பப்படி உங்கள் தாத்தாவின் இந்த வருஷ திதிக்கு, நீங்கள் விரும்பிய காகத்துக்கு, நீங்கள் குறிப்பிட்ட மெனுவின்படி உணவு வைத்துவிட்டோம்" என நேரடிக் காட்சிகளுடன் தகவல் வந்தது. உடனே அவனது அம்மாவிடம் , " அம்மா, காக்கா சாப்பிட்டுடுச்சு... நாம சாப்பிடலாமா?" என்று கேட்டான் ராகுல்..

      "கல்கி" 25.11.07ல் வந்த மின்னல் கதை.

    [ இன்று கற்பனை யார் கண்டது நாளை இப்படியேகூட நடக்கலாம்.   நாம்தான் எதற்கும், எல்லாவற்றுக்கும்  ஒரு
சமாதானம் சொல்லிவிடுவோமே!]

செவ்வாய், 20 நவம்பர், 2007

திருப்பாதுகமாலை

 

4. பணயப் பத்ததி

(சமர்ப்பண பத்ததி)

101.எவையு முய்யவெ னய்யன யோத்திமீண்
       டவனி யாண்டருள் செய்பய ணத்துமுன்
       னவணி நன்றத னுப்பலெ னத்தரும்
       சுவண மன்னிரு பாதுகை யுன்னுவாம்.

ஸ்ரீமத் நம்மாண்டவன்:

       இந்தப்பத்ததியில் ஸ்ரீராமன் பரதருக்கு  பாதுகைகளை  ஸாதித்த தைப் பற்றி ஸாதிக்கிறார். பரதர் ஸ்ரீ ராமனை அயோத்திக்கு எழுந்தருள வேணும் என்று நிர்ப்பந்தித்தார். அதில் ஸ்ரீராமனுக்கு இஷ்டமில்லை. அப்போது வஸிஷ்டர் இராமனைப் பாதுகையைக் கொடுக்கும்படி ஸாதித் தார். அதன் பேரில் கொடுத்தார் இதைப்பற்றி ஸ்ரீதேசிகன் வேடிக்கையாக ஸாதிக்கிறார் லோகத்தில் ஒருவன் ஒரு ஊருக்குப் போவதற்கு நல்ல நாள் பார்த்திருந்து, அன்றைக்கே புறப்படமுடியாது போனால் அவன் முக்கியமான வஸ்துக்களை வேறொரு இடத்தில் கொண்டு வைக்கிறது வழக்கம். அதற்கு பரஸ்தானம் என்று பெயர். அதுபோல், பரதர் அபேக்ஷித்த காலத்தில் ஸ்ரீராமனுக்குத் திருவயோத்யைக்கு எழுந்தருள முடியாததினால்  ஸ்ரீபாதுகைகளை பரஸ்தானம் பண்ணினார். 

உட்கருத்து  ஒரு ஜீவன், பெருமாளை "நீர் என்னிடத்தில் வரவேண்டும்" என்றாவது, "உம்மிடத்திற்கு என்னைக் கூப்பிட்டுக் கொள்ள வேணு" மென்றாவது மிக வருத்தத்துடன் அபேக்ஷித்தால் ஸ்ரீ பெருமாள் அவனுக்கு எப்பவும் தம் திருவடியை விட்டுப் பிரியாத நல்ல ஆசாரியனைக் கொடுக்கி றார். அவன் அந்த ஆசாரியர்களின் இஷ்டப்படி நடந்து அவர்களுடைய பரிபூர்ணானுக்கிரஹம் பெற்றால், அந்த ஜீவனும் பெருமாளும் ஒருகாலும் பிரியாமல் சேருகிறார்கள். ஸதாசார்யாநுக்கிரஹமில்லாதவன் பெருமாளோடு  சேர்வதில்லை என்று.

ஞாயிறு, 18 நவம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப்ரகாசிகைக் கீர்த்தனைகள்

வெண்பா

ஆழமண்டவும்படரவாமடுவிலோலமிட்ட
வேழமண்டவுக்கராவேசிதைந்து - வீழமண்ட
 சூழமண்டவாழியனைத்தூப்புலார்சேவிப்பர்
சோழமண்ட லந்தனில்வந்து
.

தரு-இராகம்- சங்கராபரணம்- தாளம்- சாப்பு.

பல்லவி

சேவித்தார்  எங்கள்திருவேங்கடநாதாரியர் - சேவித்தார்

அனுபல்லவி

வாவிகூவநிறைந்தகாவிரிவளநாட்டில்

மேவுசோழமண்டலத்தேவர் திருப்பதியை           (சேவி)

சரணங்கள்

திருப்பேர்நகரிலப்பக்     குடத்தானை - அம்பில்
     சேர்ந்தநாகத்தணையாந்  தடத்தானை - மிக

விருப்பமாங்கண்டியூரி   னிடத்தானை -அங்கே
       மிண்டியரசன் சாபந்தீர்   திடத்தானை --யின்ன

மருப்பரவியதஞ்சைமாமணிக்கோயில்வளர்ந்
      திருக்குமெனக்கரசை  யென்றஞ்சையாளியையும் (சேவி)
 

வடகரைப்புள்ளம்பூதங்குடி    கொண்டே வளர்
     வல்வில்லிராமனடி    யிணைகண்டே -- பணிந்

தடைவுடனாதனூர்   தனிற்பண்டே -- படி
  
     யாண்டளக்குமய்யர்க்கு வெகுதொண்டே - செய்து
தடமீதுவந்துகவித்தலத்திற்கண்ணனுக்கே
 யன்பிடுவார்கூடலூர்க்காவிரிப்பெருநீர்வண்ணனைக்கண்டு (சேவி)

மணந்தரும்பொற்றாமரைப் படர்ந்தையே -செழு
    மாமணிசேருந் திருக்    குடந்தையே - மலர்
அணிந்தகோமளவல்லி  மடந்தையே-  வாழு
    மன்பர்க்கேயிவரரு     ளுடந்தையே -- யென்று
தணிந்தேவணங்கியானந்தவெள்ளம்பெருகக்கொண்டு
     பணிந்தாராராவமுதத்தைப்பருகியனுபவித்து      (சேவி)

நந்திபுரவிண்ணகர     நாதனைத் - திரு
     நறையூர்நம்பியாம்வேதப்   பாதனை - யருள்
தந்ததிருச்சேறையின்    மீதனை - யெங்கள்
      தண்சேறைவள்ளலாம்வி   நோதனைப் -- பணிந்
துந்திருவிண்ணகரிலும்பர்கள்தொழவரும்
    அந்தவிண்ணகர்மேயப்பனடியைக்கண்டுஞ்   (சேவி)

கண்ணமங்கையிற்பத்த    ராவியே-- கண்டு
     கண்ணாலாநந்தவாரி    தூவியே - செய்ய
கண்ணன்மகிமையைக்கு     லாவியே - திருக்
     கண்ணங்குடியதனை     மேவியே - நல
மென்னுஞ்சிலையினாலிலங்கைதீயெழச்செற்ற
      அண்ணலுடனேநாகையழகியாரையுங்கண்டு  (சேவி)

திருக்கண்ணபுரத்துறை     கின்றானை -- அங்கே
     சேர்ந்துகருவரைபோல்  நின்றானை - வலம்
பெருக்குந்தொண்டர்வினையை வென்றானை - நல்ல
     பேறாஞ்சிறுபுலியூர  னென்றானை - அந்த
அருண்மாகடலமுதத்தையும்வெள்ளியங்குடியில்
      வருகோலவில்லிராமனையுமனதுட்கொண்டு   (சேவி)

திருவணியழுந்தூரில்     வந்தனை - செய்து
   தெய்வத்துக்கரசை    முகுந்தனை - யின்னந்
திருவிந்தளூரதனைச்    சிந்தனை - கொண்டு
   சேர்ந்து மருவினிய    மைந்தனைப் -- புகழ்
விரவுதலைச்சங்கத்தில்விண்ணோர்நாண்மதியையும்
     பரவியெம்பெருமானைப்படியளந்தோனேயென்று  (சேவி)

நலமேவியதுளவத்   தோளனை --நாளும்
    நான்மறைபரவிய  தாளனை - யென்று
நிலமையாகியகிருபை  யாளனை -- வள
    நேர்வயலாலிமண    வாளனைத் - தமிழ்க்
கலியன்முன்னிலையாகக்காணும்பரிவுகொண்டு
    நலதிருவாலிதிருநகரிதனிலேகண்டு                 (சேவி)

விருத்தம்

புயலாலிணைகளேசொல்லும்பூமேனியவனைவண்டு
செயலாலிகூறுகின்றதிருத்துழாய்மார்பினானை
வயலாலிதனிலேயேத்திவருகவிவாதிசிங்கர்
கயலாலிசையுஞ்செய்நன்னாங்கையில்வந்துபரவினாரே.

தரு - இராகம் -முகாரி - ஆதி.

கண்ணிகள்

நாங்கூர்ப்பதியினில் - மணிமாடக்கோயில்
   நந்தாவிளக்கையுமேத்திப் - புகழ்
வீங்கும்வைகுந்தவிண்ணகரிற்பின்னைசெவ்
     வித்தோள்புணர்ந்தானைப்போற்றி                       (1)

அரிமேயவிண்ணவர்குருமணியென்னா
    ரமுதத்தைவந்தனைநீடித் - தமிழ்
மருவுந்திருத்தேவனார் தொகைமேவிய
    மாதவப்பெருமானைப்பாடி.                                  (2)

சீர்புருஷோத்தமத்தண்ணனைவான்செம்பொன்
    செய்கோயில்வானவர்கோனைத் - தொழு
வார்திருத்தெற்றியம்பலத்திற்செங்கண்
    மாலானவானந்தத்தேனை.                                   (3)

மின்மணிக்கூடத்திற்கடுமழைகாத்த
     வேந்தினைக்காவளம்பாடி - நாகத்
தின்னடுக்கந்தீர்த்தானையெம்மண்ணலைத்
     திருவெள்ளக்குளத்திலேகூடி                                  (4)

பார்த்தன்பள்ளியிற்செங்கண்மாலவனைப்
     பணிந்தருள்பெற்றவிசேஷம் -  மிகுஞ்
சீர்த்தியாங்காழிச்சீராமவிண்ணகர்
     தில்லைத்திருச்சித்ரகூடம்                                      (5)

வந்துவிளங்கியகோவிந்தராஜனை
    மங்களாசாஸனங்கூறி - யங்கே
முந்துபரமாசாரியனாநாத
    முனியென்னும்பிரானருள்வீறி                                (6)

கொண்டுவீரநாராயணபுரத்திற்
     குருகாவலப்பன்பிரானைத் -  தேவ
மண்டலம்போற்றுந்திருமுட்டமேலாதி
    வராகநயினாரென்கோனை                                  (7)

திருப்பதிகளின்மீதிற்சிறந்தவான்சுடரைச்
    சேவைசெய்துமுகந்தாரே - அன்பு
பெருக்கியபேரருளாளரைச்சேவிக்கப்
       பெருமாள்கோயில் வந்தாரே.                            (8)

செவ்வாய், 13 நவம்பர், 2007

ஸ்ரீவேதாந்ததேசிக வைபவப்பிரகாசிகைக் கீர்த்தனைகள்

திவ்யதேச மங்களாசாஸனத்துக்கெழுந்தருளியது
கட்டளைக் கலித்துறை

பதின்மர்தம்பாக்கொண்டருளியங்காவிரிப்பாங்கரங்கப்
பதியருள்கொண்டுநந்தூப்புல்வந்தார்தொண்டர்பாடிமனம்
பதிபதபங்கயவேதாந்ததேசிகர்பாங்குதிருப்

பதிகளின்மேற்சென்றுமங்களாசனம்பண்ணினரே.

தரு-இராகம்-கேதாரகவுளம்-தாளம்-ஆதி
பல்லவி

தெரிசித்தாரையா - திருப்பதிகளையெல்லாம்
திருவேதாந்தகுருவே.

அனுபல்லவி

திருக்கோட்டியூரிலென் னுருவிலரியையும்
திருமெயத்திலின்ன முதவெள்ளத்தையும்
திருமாலிருஞ்சோலை தனிற்சுந்தரமாலையும்
திருமோகூர்க்காளமேகன் றிருவடியையும் (தெரி)

சரணங்கள்

மல்லாண்டதிண்டோளனை மதுரைதனிலேகண்டு
மங்களாசாசனஞ்செய்தேத்தி
புல்லாணிதனிற்றெய்வச் சிலையாரைச்சேவித்துப்
புகழ்திருவணையாடிவாழ்த்தி (தெரி)

மீண்டுந்தண்காவிற்றிறல் வலியைக்கண்டு வணங்கி
வில்லிபுத்தூரில் வந்துசேர்ந்து
வேண்டிப்பெரியாழ்வாரைப் புருஷகாரமாய்க்கொண்டு
வியந்து மனது களிகூர்ந்து (தெரி)

கொண்டேவடபெருங் கோயிலுடையான்சூடிக்
கொடுத்தநாச்சியாரையும்பாடித்
தண்டமிழோர்கள் சொல்லுந் திருநகரியில்வந்து
சடகோபன்றனையே கொண்டாடி (தெரி)

நிரஞ்சனமயஞ்சனவென்னுஞ்சுலோகத்தாலே
நிறையுமன்பொடுநம்மாழ்வாரைப்
பொருந்தியடிபணிந்தேயவரை முன்னிட்டுக்கொண்டு
பொலிந்துநின்றபிரானென்பாரை (தெரி)

அங்குள்ளவிரட்டைத் திருப்பதியிதென்றுசொல்வ
தான தொலைவில்லிமங்கலந்தானே
பொங்கமிருந்துவளரர விந்தலோசனைப்
புகழ்ந்துபணிந்து நலந்தானே (தெரி)

கலந்துதிருப்பேரையில் மகரநெடுங்குழைக்
காதனடிக்கேயன்புசார்த்தி
சொலுந்திருப்புளிங்குடிக் காசினிவேந்தரையும்
தொழுததும் வெகுநேர்த்தி (தெரி)

வரகுணமங்கையிலெம் மிடர்கடிவானையவ்
வைகுந்தத்திற்கள்ளப்பிரானைப்
பரவித்தென்குளந்தையில் மாயக்கூத்தனென்னும்
பாஞ்சசன்னியக்கரத்தானை (தெரி)

மாவளம்பெருகிய திருக்கோளூர்தனில்
வைத்தமாநிதியையுமீண்டு
சீவரமங்கைநகர் வானமாமலையும்
சேரப்பரவியருள்பூண்டு (தெரி)

வருகுறுங்குடியில் ஸ்ரீவைஷ்ணவநம்பியருள்
மருவித்தி ருவண்பரிசாரம்
திருவாழ்மார்பனுடன் வாட்டாற்றிலாழ்வானைச்
சிறந்து தொழுது வேதசாரம் (தெரி)

திருவநந்தபுரத்தில்வளர் பதுமநாபனையுந்
திருவடிதொழுதங்கே நின்றும்
அருமையாகியமலை நாடேறவேயெழுந்
தருளிமனத்துட்கொண்டுசென்றும் (தெரி)

தென்காட்கரையின்மீதிலுறையுமென்னப்பனைநற்
றிருமூழிக்களத்தோன்சுடரென்றே
நின்கருணைதாவென் றேத்தித்திருப்புலியூர்
நின்றமாயப்பிரானையென்றே (தெரி)

திருச்சங்கனூரிலமர்ந்தநாதனையத்
திருநாவாய்மாமணிவண்ணத்தோனைத்
திருவல்லவாழில் நின்றபிரானைத் திருவண்வண்டூர்
சேர்ந்தகனிவாய்ப்பெருமானைத் (தெரி)

கருதும்வித்துவக்கோட்டிற் களிறட்டானைமெய்த்
திருக்கடித்தானத்துமாயப்பிரானை
திருவாறன்விளையினந் தெய்வப்பிரானென்று
சேர்ந்துதலத்திலுறைவானை (தெரி)

நின்றிப்படியேதானே மலைநாடதனிற்சொல்லி
நிறைதிருப்பதியன்புகூர்ந்து
தென்றிருப்பதிகளு மலைநாட்டுப்பதிகளுஞ்
சிறந்துபணிந்த ரங்கஞ்சேர்ந்து (தெரி)

ஞாயிறு, 11 நவம்பர், 2007

திருப்பாதுகமாலை


திருப்பாதுகமாலை
பெருமைப்பத்ததி
நண்ணு விண்ணவர்க் கிட்ட வெண்பரி வட்ட மாங்கொளிர் பாங்கினி
லுண்ணு மன்னவ னுந்து மின்னமு திந்து கிர்க்கதிர்ச் சிந்தலென்
றெண்ண வொண்ணணி யொண்ணி லாவணி யேறு மாதிய ரங்கமா
லண்ண லங்கிரி யந்த ரங்கம ராடி நாடிவ ணங்குவன். 11.
கோல வானதி தோன்று மாகழ லூன்றி வாழ்திரு வென்றுதன்
சீல மோலியிற் சூலி தாங்கெழி லாழி யாங்குமி லங்கலில்
நால தாமறை மூல மாதவன் தாள தாமரைத் தாணிலை
சாலு நானில மேலு மேனல னாளு மேநிறை நல்குமே. 12.
அம்பு ராசியி னீரு யிர்நிலை யாகு மாணவ மீன்களும்
உம்ப ராறென வம்பு தாவிய கோட ரப்படை வீரரும்
பம்பு பாலலை நட்ட மேருவு மட்டு வாகறி யாதுகண்
டெம்பி ரானணி பாது மாமர பம்பு திக்கரை நின்றனம். 13.
ஆராத வருளமுத னடிமலரின் துகள்கமழுஞ்
சீரோரு மறைகளிறை நிலைநாடு மடிநிலைகாள்!
ஆரானு முடியினுமைத் தாங்குபவ ராவர்நெடி
தேராரு மதிசூடி யேத்துமல ரந்தணனோ? 14.
ஒளிதளிரு மரவணையன் மரவடியே!யுனையொருகால்
அளிதளிர முடியணவு மடியவர்கட் கன்றொருநாள்
வளநிறைய வுனதமர ரவரவர்க ளிறைசொரிவார்
நளியவர துணர்த்திநமன் தமர்க்கவர்க ணாடானே. 15.
பேசுமறைப் பைங்கிளிகள் சென்னிகளிற் பாதுகையே!
ஆசறுதா ணிற்கவிறை யாமுனையே தாங்குதலின்
தேசுதிக ழாதியரங் கேசனடிச் சோதிமலர்
மாசறுநின் மாறெனவம் மாமகிமை தான்பெறுமே. 16.
செய்யெனமெய் யாழ்மறையின் சென்னிதெரி வேள்வியெலாம்
பெய்யருணற் பாதுகைநீ! யெல்லையென வொல்லியசீர்
மெய்யுணரற் கேலாதார் நீட்டுபெயர் வேட்டலெலாம்
செய்யுமுயிர்க் கோறலென மறைமேலோ ரிகழ்வாரே. 17.
முந்தைமறைச் சுந்தரமால் பூணுமணித் தாணிலையே!
வந்துசிவன் பணியவுனைப் பணிமுடியின் மணியுரசி
உந்துபுனற் கங்கையுதிர் முத்தெழினீர்த் துளியுனக்குச்
சிந்தியபொன் மந்திரநீர்ச் சிகரமாஞ் சீர்பெறுமே. 18.
வரந்தரவே விரிந்ததிரு வரங்கனடிப் பூவுமதி
சுரந்தருளே புரந்தமறைச் சுடர்முடியுஞ் செய்யதவத்
திருந்தவர்தூ மனமுமுதிர் தீங்கவிஞர் செஞ்சொலுமே
பரந்ததிருப் பல்லுருவப் பாதுகையுன் கோயில்களாம். 19.
மன்னனடி நிலை யுனது பக்கமுடி தாழ்த்துநலர்
முன்னமவர் விதிதலையில் முடித்திட்ட தீவரியே
நன்னிறனிற் சொன்னவரி மின்னமுது நன்னெறியில்
துன்னறநீ யொருதாது வாதமிதெங் கோதினையோ? 20.
மாவலியைத் தான்வளவு மாகளியில் மூவுலகும்
தூவலெனத் தாவியளந் தோங்கமலன் தாள்வலிக்கும்
மேவரிதென் றேறிடுமென் னேதகணம் பாதுகையே!
பாவளியுன் தேசினுழைத் தூசெனவின் றாயினவே. 21.
நீலச் சவியமுனை நீர்க்கரைவாழ் கடம்புலவை
ஞாலத் தெதன்கூட்டி னாட்டுமறைக் கிளைநாறும்
மூலப் பரஞ்சுடரப் பூவடிபா துன்கணிறை
சாலப் பரந்துகிளை மேற்கிளையாஞ் சால்புறுமே. 22.
பிறரெவரும் பெறற்கரிய பேறாகும் வேதமுடித்
திறனெடியோ னடிச்சோதிச் செவ்விதிக ழந்தாமம்
நிறையிலரி தாணிலையே! நினைமுடியிற் சூடுமறை
யறவடிவோர் கைகளிலுன் னருணிகழக் கொள்ளுமதாம். 23.
ஒருகற்பில் விகற்பறவே யுபநிடத மனுகற்பாய்த்
தெரிமுடியி லுனையொருபோ தேந்துவ ரரிபாதூ!
நரகமென நாகமது நணுகாது நாரணந்தாள்
அருளுமறை மூதிறைவ ரவையத்துச் சேர்ந்துறைவார். 24
ஆறுபொறி யகத் தூய்மை யான்றகுணம் நல்லன்பு
கூறுமவை போன்றநலங் கோலாவெம் போலர்க்கென்
றேறரிதா ணிலை!வேதம் நிதியெனவாழ் முடியேந்தும்
வீறுநெடு மாலடிநீ சேமிக்கும் விதிகொண்டாய். 25.
வந்துதொழ மூவுலகும் வண்மைமிகு மணிவண்ணச்
சுந்தரமால் பாதமலர் சூழுமெழிற் பாதுகையே!
வந்தனைதந் தண்டர்முடி தாங்கவுனை வேதமுமிழ்
கந்தமுட னவர்மிலையு மந்தார மாந்திடுமே. 26.
கோலப் புனற்பொன்னிக் கூலமெழுங் கற்பகமால்
மூலத் தளிர்ச்செந்தேன் மூழ்குமண மஞ்சரிநீ
சீலப் புகழ்மறைகள் சீர்மிழற்று களிவண்டாய்ச்
சாலச் சுவைக்கனிகள் தந்தருள்வாய் பாதுகையே! 27.
கமலைமலர்க் காப்பணிசெய் கண்ணனெழிற் கழலிணையில்
தமியனெனைச் சேர்த்திடுபே ரருள்புரிய விளங்குமுன
தமலநலத் தொருசேராச் சேர்த்திசெயு மத்திறலே
விமலமறைப் பொருடேரா வெம்போல்வார்க் கரிபாதூ! 28.
பாங்குகுமா லுந்திதரு மந்தணர்கள் பந்திமுடி
தேங்குமணிக் கல்வரையத் தேசுமிகும் பாதுகைகாள்!
ஓங்குதெருள் வேதசிரந் தாங்குபரஞ் சோதிகணீர்
வீங்குபவக் கடனீத்த வேகமற நீக்கிடுவீர். 29.
திப்பியமாய்ச் சிவமாக்குந் தெய்வநதி செறியுந்தன்
அப்பதமுஞ் சோதித்தென் னப்பனுமே தான்பூணும்
முப்புவியு மாக்கனிலை நோக்கலொடு நீக்குமறைத்
தற்பரனப் புனிதவிரு தாணிலைநான் பேணுவனே. 30.
தொத்தமரர் தாழ்முடியு முத்தமனா ரோங்கடியும்
ஒத்தடிமை யிறைமையெனு மொருநீரின் பிடியொன்ற
அத்திறநன் னன்றிசெயு மவ்விருமாண் பாதநிலை
துத்துறுவல் வினைவலயந் தூர்த்தென்னைத் தலைகாக்கும். 31.
நீடித் தரிபாதுன் சிந்தனையின் செந்நிறுவல்
ஆடிப் பகட்டும்ப ரரம்பையர்க ணிரம்புலகில்
கோடற் பயன்குன்றிக் கோதுமலிந் திறுதியுறும்
கூடக் கார்போக மோகமயற் போக்கிடுமே. 32.
சிற்றாடை யிடையருளைத் திருப்பாதூ! முடிதாங்க
வற்றாத மணவயமா கன்னமத மழைவெள்ள
முற்றாறு பெருகியபண் முரலுமணிக் களிவண்டுண்
ணற்றாரி னலம்பொலிய நன்முற்றம் புகுவாரே. 33.
அருணல் லுருமா ணரிதா ணிலையே!
வருபற் பலகற் புகளின் மலரோர்க்
கொருதே வெனவுன் னிறையே யுறையப்
பரிவா யெமையீன் றபயம் புரிவாய். 34.
கரியென் பொறிகட் டுமிடங் கணியோ
விரியென் னிரயக் கிறியின் தடையோ
பரமப் பதமே றருளே ணியுமோ
அரியங் கிரியா டணிபா துகைநீ. 35.
திருமா லடியார் திரளின் திருவாய்த்
தெரிவாய் மறையின் முடியின் மிளிர்வாய்
தருபொன் னரிதா ணிலை!யுன் தனையா
மிருகா விரியின் னிடையிற் றொழுவாம். 36.
துணைநீ யெனுமெய்த் துணிவில் லுனையே
பணிவோ ரவரம் பகமூன் றதுவோ
பிணையா னனமூன் றவையோ பெருமான்
மணிபா து!மறைந் துளவோ மொழிவாய். 37.
இறைவன் பணிகொள் ளணியின் னிறையிற்
பொறையில் லுறைபா துகையுன் பணிவிற்
செறியவ் விமையோர் சிகரம் பிறிதொன்
றுறலிற் பொறைநீ யுகவா வகையென்? 38.
வலமார் வுறைமா வலவன் பதமா
நிலை!யன் னவனே ரபயக் கரமும்
தலைநீ யணியன் னவனொண் கழலும்
நலராஞ் சிலரே சரணென் றுணர்வார். 39.
தெரிமே தினிவண் செவிமா முனிவன்
பரிபா துனையே பரதன் பரிவில்
அரிதா ளுரையா லருளோ தலிலந்
நிரைதா ளிணையின் னிலைவே றலவே. 40.
திசைகா வலர்சென் னியினின் றிடினு
மிசைமா லடிநண் ணிடினும் பதமே
வசுபா துகை!நோக் குதியான் முதியோ
ரசையா நலனேர் தலையோர் நிலையே. 41.
திணைசா லகிலத் திதியின் விதிகொள்
ளிணையே றணிதா ணிலைகா ளிணைநும்
மணியே யெனநா கணையன் துணையப்
பணையீ ரடியா மடியோ மறிவாம். 42.
இறையென் றறையவ் வரிதா ளிணையின்
னிறையின் னருளின் மிகுபா துகைநீ
உறுமப் பரதன் பிரிவிற் றுறுமவ்
வுறுகண் ணுறுநின் னுறவிற் றணிவன். 43.
கொடைமன் னடையெண் குணபா துகையே!
குடையொன் றிலரா யுனையெண் டிசையோர்
அடிமைத் திடனிற் படியுங் குடியாய்
முடிகொண் டளிநின் னிழலின் புறுவார். 44.
வனமே னையவா நரையுங் கறையும்
நனையா தனையே! யுனையே யனைய
நினதா நலமன் னிலைதா முறவே
நினைவா ருனையே நிலையே! பெரியார். 45.
அமலன் சரணா வனியே! யுனையார்
சமையவ் விதியாற் பணிவார் பணியார்
அமையன் னவருத் தமவங் கமனுத்
தமவங் கமதா யவிசித் திரமென்? 46.
அடியீ தெனவே றுமுனீ ணளியே
கடையீ தெனவீ ழுமெனாழ் கறையே
அடியா மதிலிக் கடைபின் னிடலாம்
படியா மறிவா மரிபா துகையே! 47.
புவனம் படையும் புனையும் மெனவே
யவையும் மணிதா ணிலை!தாங் கருமைச்
சவிமன் னிறையண் ணலையுன் தலையின்
நவநன் மணியென் றணிகின் றனையே. 48.
துணையான் றவிரா மனடித் துணைவீ!
பணிபூண் பரதன் பரதே வதையே!
தணியா வுலகின் னுருமந் தணியுன்
குணமா வரசின் பரிபா துணர்வன். 49.
பிறையோன் றலையின் மிலைவெண் டலையின்
உறவா லுறுசா னவிமா சறவோ
நிறைமா லடிமா நிலை! தன் தலைமீ
திறைநீ யுவளித் திடவேந் திடுவன். 50.
நிறையும் மணிதா ணிலை ! நின் னிறையிற்
செறிவை யகநல் லிறைமா ணிலைகண்
ணுறுமெய் யிதுபெண் ணரசிற் குறைவொன்
றறவுன் பெயர்நா தனொடோ தினரோ? 51.
உலகங் கடரிக் குமிறைப் பொருளைத்
தலைகொண் டரிபா து! தரித் தலினீ
தலைநின் றனையுன் றனையுந் தலைகொண்
ணிலைவல் லவரின் தலையெந் நிலையோ? 52.
பரனற் சரணற் பணைநன் றிணையும்
பரிபா துனதா ரரசே பரசிக்
கருடன் பணிமன் னவர்தஞ் சிரமேற்
புரியப் பரிவட் டமுனைப் புனைவார். 53.
அணிமா மலரா ளளியின் களிகொண்
மணிமா லடிமா ணிலையே! நினையே
பணியா ரிருளிற் றலைநல் லிபியும்
பிணியா யிடுதுல் லிபியா யிடுமே. 54.
செவியின் னிலநீர் தெரிதாத் திரிநீ
குவிநன் மரபின் புரைசொல் விபுலம்
நுவலந் நிலைநோக் குயரக் கமையெம்
மவனப் பொறையா திபதா வனியே! 55.
குலகோக் கணிலைக் குணமாக் கலிலெண்
ணலநா ரணனா ரடிநா றலினீள்
தலைமீ துனைமூ தரவேந் தலிலந்
நிலமா தினலந் திகழ்பா துகைநீ. 56.
தகையா டரியா டகபா துகைமுன்
னுகவா முரடர் முடிமோ லிகளே
தகவா தியரங் கநடைப் படியின்
தொகையா யுனைமீ துபொறுத் துளவே! 57.
கருடன் பணிமன் தவிசன் னொடுநீ
யொருபா திருமைக் குரியோ ரெனினும்
பரியில் லவருன் சமரே லுரியோர்
சிரனில் லுனையே மிலைகின் றனரென்? 58.
பரனார் பரமப் பதமெப் பதமும்
அரிதா ணிலைநீ தனிதாங்குதலின்
வரராம் பிறரெண் பதமுன் னுரிமைப்
பரிதாங் கிடுமென் பதுவிம் மிதமே? 59.
உருமா வுயிர்கட் கொருமா தவனார்
அருளா ளிருதாள் சரணா மவைதம்
சரணீ நினதோர் சரணற் றவனத்
திருவா யரிதா ணிலையே! தெரிவாய். 60.
உறையுந் திருவும் விரியம் புயனும்
பிறருந் தெரியுந் திருமா றனுவில்
நெறிதெள் ளரிபா துக! நீ செறியும்
திறலிற் கழலெம் மிறைதே றியதே. 61
மரைநோக் கரிதா ணிலை! யா துலரும்
பரிவோ டவரோர் கணமுன் பணியே
புரிவோ ரருகிற் புருகிங் கரராய்ப்
புருகூ தர்விரைந் துபொருந் துவரே. 62.
முடிமீ தரிபா துனையேந் திடுவார்
இடையூ றறவான் சரவா னிறமார்
நடையோ திமமோ நரையோ திமயோர்
விடையோ பரியாம் படியா யிடுவார். 63.
உயர்விண் ணவர்கண் ணுதனண் ணுவரவ்
வுயர்கண் ணுதனண் ணுவனம் புயனம்
புயனம் புயநா பனையம் புயநா
வியனின் தனைநீ நினை நின் னிறையென்? 64.
இழியா தெழுமுன் பினதாம் பிழைதா
னிழையா தரியங் கிரியே யருளுன்
வழியா லறிவார் விழியோ ரரிபா
தெழுதா மொழிநன் மதிநீ யெனவே. 65.
தனமா நெடுமா லடிமா நிலையே!
தனமே பெறவுன் தனையே பணிவார்
தனமே நிலராய்த் தனவா னிலமும்
வளையா நிதியின் பதியா குவரே. 66.
கழலும் பிறவே கழலத் திருமால்
கழலுங் கலவா நலர்பா துனையே
தொழுதக் கெடுகா மமொழிப் பரைநீ
பழநற் றிடதா மர்களாக் கலிதென்? 67.
மயலற் றிறைகாண் மனனிற் கருமைப்
பயிலுன் முகநோக் கமலர் மறையாஞ்
சயிலத் தருளன் னையுனா தரநோக்
கியநற் பதமன் னிதியுன் னுவரே. 68.
பாது! நீமுடி சூடிய நாதனை
நாத னேரடி நாடிய பாதுனை
ஆதி கூறிடு வாரடி யோங்களுக்
கோது நேரதி தேவதை யொன்றுநீ. 69.
துன்னவடி தன்னினலர் தூமுடிம ராடீ!
மன்னமுடி மீதுமழை வண்ணனடி யம்மா
நன்னருரு வன்னமறை மன்னுதிரு நின்னைச்
சொன்னநல மல்குகதி யொன்றெனவு ணர்ந்தோம். 70.
தொடர்வது.... "பணயப்பத்ததி"











வெள்ளி, 2 நவம்பர், 2007

Sri Rama Sethu

These photos are taken by Sri Raghunathan of Tambaram during his visit to Thiruppullani and Sethukkarai. He hired a boat and went to the Rama Sethu and took these photos. When developed to our surprise we can spot out the figures of Sri Hanuman (of course sea waves formed like that). Enjoy them below. If you are able to find out and enjoy, please send your comments. Requesting to send a comment is because many of the viewers who regularly visit this blog prefer to be silent spectators. To have a better view, if blog's display is restricted, please visit http://www.flickr.com/photos/thiruthiru/ and select Rama Sethu
ramasethu1

ramasethu3

ramasethu2

Please bear with me

Still my system is in the IC ward of a computer clinic. Please bear with me!

740TN 024

Sri Hayagrivan and Swami Desikan
Thiruppullani Andavan Ashramam

சனி, 27 அக்டோபர், 2007

Please bear with me

All of a sudden my system went out of order and it may require minimum 10 days to get it set right. Until then please bear with me!
Till then please enjoy


Windows Live Spaces

புதன், 24 அக்டோபர், 2007

திருப்பாதுகமாலை

திருப்பாதுகமாலை


ஸ்வாமி தேசிகன் அருளிச்செயல்களிலே ஒரு ரத்னம் எல்லோரும் சிரமேல் கொண்டு போற்றும் உன்னதமான ஸ்தோத்ரம் "ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்" அதை ஸ்ரீ கேசவ ஐயங்கார் மிக அழகாக தமிழ் படுத்தியுள்ளார். 1950ல் திருப்புல்லாணியில் வெளியிட்ட அந்நூலை சிறிது சிறிதாக தொடர்ந்து பதிவு செய்கிறேன். தமிழ் ஆர்வலர்கள் படித்து இன்புறலாம்

http://namperumal.wordpress.com

திருப்பாதுகமாலை

வேதமுடி யேறுதிரு வீறுபெறு மாறன்
றாதியரி யோதுகவி வாதியரி யென்றே
கோதுகல மீதுதலை கோடிமறை பாடச்
சோதியரு ணீதிநெறி வேதியனு தித்தான்.

ஓதியரு மறைதானே யோதுமறை தானாகி
ஓதுமறை முடிப்பொருளாய்த் தனைநல்கு மோரிறைவன்
பாதமலர் தாங்குமதிப் பெருங்காதற் பாதுகமீ
தோதுதிரு வாயிரநூ லோங்குகசீர் பல்லாண்டே.

ஒருதனை யொக்க மிக்க வொருவரிங் கற்ற வுண்மை
தெரியிரு மறையி னுச்சி யிறைமைகூ றொருமை நாமக்
குருவர னொருக னாவிற் குணநிதி யரங்க நாதன்
குரைகழ னிலைகு லாவுங் குணமொழி வழங்கி வாழ்வாம்.

போதநால் வேத நாவொன் றொழிந்தவே றெந்த நாக்கொண்
டாதிமா வரங்க நாதன் பாதுகப் புனித மீக்கூற்
றோதுமா றென்ற தோர வோருமம் மறையி னோங்கற்
சோதிவாய் மலர்ந்து மிழ்ந்த சுடர்மொழிச் சோதி வாழி.

விரி யாயிர முடி யேறிய விழி யாயிர மெனமூ
துரை யாதிய னிறை யாய்மறை முடி யாய்திரு வடியா
யிர மாரரு ளது தானிறை நிலை தேறிய நலனே
தெரி யாயிர மறை நாறிய பெரி யாரருள் பெறுவாம்.

இர வென்றொரு பொரு வில்வரு மிர வில்லுரி மறைவில்
தர வென்றள வறு தண்ணளி தரு தன்னொளி நிறைவில்
இரு வையக வள வென்றொரு கள வன்றரு ளிறைவன்
சர ணன்றறை மறை மாணிறை நிறை தாளிணை பணிவாம்.
திருப்பாதுகையாயிரம்
1. பாயிரப்பத்ததி

1. பொலிக மாணிறை பூக்கும ரங்கமா
வலவ னேரணி யம்மணி பாதுகை
தலைகு லாவணி தாமணி வள்ளலா
ருலகு நோக்கும டித்துக ளுத்தமர்.

2. உத்தமத் திரும ணாள னுயர்பத நிலையி னுச்சி
இத்தலத் திலக வத்தன் னிலைதவச் சென்னி யேந்தி
அத்திறப் பத்தி நல்லார்க் காதியென் றோத நின்ற
வித்தகப் பரத நம்பிக் காமுதல் வணக்க மீதாம்.

3. வருணமா நளியி னாளும் வளநறும் வகுள நாறுஞ்
சுருதிசீர்ப் பகுதி முந்தைச் சந்தியின் பந்தி பூத்தோ
ரரிபதா வனியு னாம மணிந்தரி சரண நோக்கும்
குருகைமா முனிப ணிந்தே னுன்னையான் துதிக்க வேண்டி.

4. பொன்னிரும் பதியி னின்றுன் போனிலை புகுந்த வாணி
தன்னடைக் கிழமை நாடுந் தகைமுத னடையில் வைய
நன்னருள் பால தென்றே நாறுநன் மதிம லர்ந்த
வன்மிகத் தோன்றல் தெய்வ வாக்கெனக் கருள்வன் பாதூ !

5. நீசனா மெனது சென்னி மீதுமோர் வாசி யின்றித்
தோறா வாச வேதச் சிரமிசைப் பரமன் பாதூ !
வாசநீ கொண்டு மன்னக் கண்டுவான் மீகி போன்றார்
பேசுமுன் பெருமை யேபின் பேசினே னாசை யேறி.
6. நிவந்துபா ருவந்த ரங்க னடிநிலாய் ! படிய நின்கண்
உவந்தவான் மீகி பாட லொக்குமென் னாட றானும்
கவர்ந்துபார் பரவு கங்கை வாரியிற் கலந்த பங்க
மிவர்ந்தவார் தனக்குந் துய்ய வெமுனைக்கும் வாசி யென்னோ ?

7. அன்னதோ ரண்ண லோருன் கண்ணதென் றெண்ணு வண்ணக்
கன்னலா ரழுக்க றுக்கா வகப்புக ழுகப்புக் கூர
நின்னையே வழுத்த யானுன் னின்றுமுன் னின்பா லன்பா
யன்னைநீ யரங்கன் பாலா லபயமெற் கருள்கின் றாயே.

8 கடுகுநின் பரிவி லெண்ணா வடியனென் மதிபு குந்துன்
படியினின் துதியு திக்கும் பரியருள் புரியப் பாதூ !
கடைகால் தனத டிப்பூ நடையினீ நடத்து மாறுன்
படியிதொன் றெனவ ரங்க பதியிவ னொருவன் சான்றே.

9 தாங்கியேஎ ழவனி யாளுந் தனியிறைத் தனத டிச்சீ
ரோங்குமா லொருவ னத்தா ளொருத்திநீ பாது கத்தாய் !
யாங்குமே நடத்தித் தாங்கும் பாங்கய வரனுந் தேரா
ரீங்குவீண் புலமை வீங்கும் பிறர்க்கிது பன்ன வற்றோ?

10 செவிப்பெருந் திருவி ளங்கச் செறிதெருள் விரியுஞ் செந்நாச்
சவிப்பெருஞ் சதிரின் வண்ணச் சாடுவர் பாடு முன்கண்
கவிப்பெருங் கதிமி ழற்றிக் கதையிதுன் பிதற்று பேதைக்
குளிப்பினுக் குவந்து பாதுன் குறிப்பென மதிப்ப ரான்றோர்.

11. அறிவிலே னணவ நின்சீ ரணுவுமே தணிவு றாதே
வறியனே னிறையு முன்னீர் கனைமனத் திருவ னாவேன்
உறியநாச் சுனக னக்கிப் புனிதநீர்க் கங்கை பாதூ !
சிறிதுமே மாரு ணாதே யதனெடு விடாயுந் தீரும்.

12. ஒலிமிகுத் துழலுஞ் சூறா வளிகளு மலைக்க வொண்ணா
வலிமிகுந் தருவை வீழ்த்த வலித்துவா யூது வான்போல்
கலைமிகுங் கவிஞர் செஞ்சொற் கடந்தெழில் காட்டு முன்னைச்
சலமிலென் புகலஞ் சாறே பகரநா வலர்ந கைப்பார்.

13. அய்யமறக் கண்டுபொருண் மேன்மை தன்னோ
டதுமொழியுந் தனது மதித் தண்மை யுந்தன்
மெய்யகமே றரங்கநக ரப்பன் செந்தா
ணிலையணவு மார்வமதே சார்வொன் றாக
நய்யவரை யறைகளறக் கலைத்து நாவே
மலருமிதழ் மதலையென மகிழ்ந்து பாடச்
செய்யருளவ் வடிநிலையே சுவைக்குஞ் செவ்வாய்ச்
சீரினிறை வேங்கடவன் பாடு வானே.

14. நித்திலநே ரொத்திலகு நாதன் பொற்றா
ணிலை ! யுனது தலைவையத் தறைய நின்றேற்
கொத்தனளிர் மதிச்சடையன் சிகரஞ் சாய்த்து
நுகரவெழு மபரிமிதப் பெருமி தத்தார்
புத்தெழிலத் திரிபதகை புவியும் வானும்
புகழநடை விரைவினெகிழ் வேகம் வெள்கு
மத்திறநின் னாரமுதத் தளையி னாதம்
வளங்கொளநா வீறொலிநீ வழங்கு வாயே.

15. ஆடிய நோன்பிலே னாயினு மன்னா
னாடிய பாதுனை நான்முடி சூடிச்
சேடிம யந்நள சேதுவி னூடே
பாடிய வள்ளல ருள்கலந் தேனே.

16. போதமெ ழுந்திரு வேதமொ ழிக்கே
யோதரு மாதவன் பாதுகை யுன்னைப்
பீதியி லாதவென் பேதமை பாடப்
போதிது போகென வப்பனு வப்பன்.

17. நல்கரி பாது !நிற் கென்றொரு கற்பிற்
பல்குவி ருத்திவி கற்புப யக்குந்
தொல்கவி வேங்கட வன்கலை வாணி
மல்களி நீகொள ரங்கினி லாடும்.

18. எண்ணவ னப்பரு நின்னரு ளெண்ண
வென்னுட னற்றொடை கோடியி சைக்கும்
பண்ணல மாயினு மாதிரி காட்டப்
பண்னரி பாதுன தாயிர மீதாம்.

19. மாவொட ரங்கன வைக்கண்வி ழிப்பிற்
பாவிது தன்செவி யாரநு கர்ந்தே
தாவிய ணைக்கம ராடியு னாதங்
கூவுமெ னாமனங் கோயினீ கொள்வாய்.

20. நோற்றியான் பாதுனைப் போற்றுபா மாலையீ
தாற்றலே சாலரங் கேசனார் தாளிணைத்
தோற்றலே சாற்றுமன் னாண்சரண் கொண்மலர்

2. திருநாமப்பத்ததி

21. என்னு ளக்களக் காதலை வென் றதாற்

பன்னு மெய்ப்பொரு ணாமர்க ளாம்புகழ்

மன்னு மால்பத மம்முனி யந்நிலை

யென்னு மச்சட சித்துக ளேத்துவன்.



22. தமமறுந் தமர்க டன்மத் தமிழ்மறை தலைமேற் றாங்காத்

தமியர்கள் குரவு தீரத் தண்ணளிப் பெரிய வள்ளல்

தமரெனத் திரும ணாள னவர்திறத் தருமை பூக்க

அமையுமச் சடகோ பன்தா னவனடி நிலையு மானான்.





23. திருமணிப் பாதூ ! நீதாங் கிருமறைக் கிறுதி யென்றே

விரிநிலத் திருவ முங்கி விளங்கரு ளரங்கன் தாணின்

றொருநலத் துடன்பி றந்தா ருயர்திணை வழுத்து மாறல்

விரதிநின் சடகோ பப்பேர் புனைந்திறை யுருவி ரித்தான்.



24. தொண்டர்கோ முனிவன் தானுந் தொடுகழற் பாதூ! நீயுங்

கொண்டதா லோது சீர்த்தி யொண்சட கோபப் பேராற்

பண்டுவாய் மொழிமு னோனாற் பகரதன் பொருளு முன்னால்

அண்டமீ திரண்டு மார்க்கு மாகுமா றாயிற் றன்றே.



25. கவிஞர்கட் கிறைவன் செந்நா வண்சட கோபன் பாடுஞ்

செவிகளுக் கினிய செஞ்சொல் லிசைகளா யிரமு மான்றோர்

செவிமடுத் தடிநி லாயுன் சீரொலி யமுத நாம

மலருளத் தினிக்கு மாறன் னவனதென் றொருமை யோர்வார்.



26. கேசவன் தமர்கள் வாழத் திருவெழும் பருவ மேழாய்

மாசறுத் தோங்கி யன்னா னாதரத் தாத ரேறுந்

தேசுடைச் சடகோ பன்பேர் நீசுமந் தவனின் மாணப்

பேசுருந் தொண்டு தானாம் பெற்றிநற் பாதூ! பெற்றாய்.



27. அரிமணத் தளிம மாகி யவன்பணி யுருத்த ரித்தாய்

குரைகழற் குறடி ரண்டாய்த் தொண்டிரு மடங்குகொண்டாய்

திருவடித் தொழும்பர் பாலுன் விருத்தியே விளங்கப் பின்னும்

நிரைதிருப் பாதூ! பூண்டாய் நீசட கோப னாமம்.



28. கவியுனைச் சடகோ பன்தான் பாடியாட் பட்டான் பாவால்!

அவனதின் னமுத நாம மணிந்தவற் காட்பட் டாய் நீ

உவகையிற் பொறைய யளந்தோ னும்மையா ளுடையனானான்

புவனநன் றுற்ற வெல்லா மூவர்நும் முனிமை யொன்றில்.



29. விந்தம டக்கிய விந்தையொ டுந்தொரு சிந்துவு றிஞ்சி யுடன்

வந்தழி மாயர்கள் மாய்ந்தழி தீயென வாண்மைவ ளர்ந்தெ ழுமா

சிந்தனெ னுங்குட முந்தன்மொ ழித்திரு வென்றுமி தொன்று ளதென

றந்தமு தன்மறை பாதுகை யச்சட கோபவ ணத்து மிழ்வாய்.



30. மன்னருண லந்திகழ ரங்கனணி பாதூ!

என்னிடையு னாயிரந டைக்கவிபி றக்கத்

தன்னடையி னல்குநல மல்குசட கோப
னென்னுமிது நாமமுன தேலுமிக மேலும



பெருமைப் பத்ததி.



31. யாங்கு யர்ந்தவர் யாவருந் தாழ்வரோ

யாங்கு தாழ்ந்தவர் யாருமு யர்வரோ

ஓங்கு மாதவ ரோம்பும ரங்கனப்

பூங்க ழன்மணி பாதுகை போற்றுவன்.



32. பம்பு மம்பர முற்று மித்தல முற்ற பத்திர மாயினு

மிம்ப ரார்கலி யேழு சேர்ந்துதெ ரித்த லாமசி யாயினுங்

கொம்ப னாயிர வாய னேயவ னோது வானென வாயினும்

கம்ப ரன்மணி பாது கப்பணை தான்வ ரைதலு மேலுமே.

33. ஓது மாமறை கோத றத்தெளி வாகு பாவரு மோகையில்

நாத மேதினிக் காதி னந்தன னாதி காவியந் தன்னொடும்

போத வேதவி யாத னோதியவேத மாகிய பாரதம்

பாதூ ! நின்பரி காணுமெம்மனோர் கண்ணிரெண்டென வொண்ணுமே.

34. மாய னங்கள ரங்க னங்கிரி தாங்கு பாதுகை! யோங்குநிற்

காய நன்றுசு ருக்கு வித்தர வாய்வி ருத்திவி ரித்தார்

மாய ணத்தற மேறு தூமன மாம தித்திரு வாளருன்

னேய மல்கிய வாறுகண்களி னாறு மாண்பவர் காண்பரே.

35. மாறி லாமறை யுட்பொருள்தெளி வாகு மாரிட வாற்றலின்

வீறு சாற்றும றிக்கை யீட்டிலு தித்த வாதிரா மாயணம்

கூற லாலரி பாதூ! நின்னிறை வேத முன்னிறை யோதலும்

தேறு வார்குறி கொண்டதேமுது வேத முற்றுமு ணர்ந்திலார்.

36. நிற்க மும்மறை தாம வற்றினு மிக்கதாயரி பாதுகாய்!

கற்கு நின்குண வீட்ட மூட்டிரா மாயணம் மது காண்டுமே

எற்கு முற்சும னில்ல வள்ளணி யஞ்சி லம்பொலி விஞ்சுபூஞ்

சொற்க ளின்னிசை பாத வாதர வொண்மி குங்கவி வன்மிகன்.

37 கேச வன்னிரு தாண்ம லர்ச்சர ணேர்பு கற்குறு பேறெனத்

தேசு றச்சிர மீது பூணணி யேது மூதுவர் தேறுவார்

பூசை யாடா னாடு தாழ்சடை சூடு கொன்றையின் வாடையே

வீசு மப்பன தப்பதா வனி வீறு வாய்நிறை வாழ்த்துவாம்.

38 வந்தி னம்மின மாக நின்பணி வேலை வந்தனை தந்துனை

முந்து தம்முடி யேந்த வும்பர்கண் முன்னு றப்புரி பூசலுக்

கெந்தை மாலநி கேச னாதர வேத்தி ராஞ்சிவி லக்கநீ

டுந்து மவ்வரி பாதூ ! நின்பரி போற்ற வல்லவ ரார்கொலோ?

39 கல்ல தில்லெழில் தைய லுய்யலுஞ் சாடு நூறிடு தையலு

மொல்லை வானதி நாறலும் நிறை நீறதின் மனன் வீறலும்

சொல்ல தூதது செல்ல லும்பிற சொல்ல ரும்பல செய்யுமால்

தொல்ல டிக்கிணை யான்ற பேரளிதோன்று தாணிலை நண்ணுவன்.

40 பூவ னாளினி னாலு மோரிரு மூவி நாடியின் மூவுமத்

தேவ ராமவர் தாம வேமர்க ளேறு மையலி லையுற

மேவு தாழ்முடி மீது போதெதை யேந்து மாந்தரை நோக்குவார்

தாவு மாலிரு தாளி னண்பிணை யப்ப தாவனி நாடுவன