4. பணயப் பத்ததி
(சமர்ப்பண பத்ததி)
101.எவையு முய்யவெ னய்யன யோத்திமீண்
டவனி யாண்டருள் செய்பய ணத்துமுன்
னவணி நன்றத னுப்பலெ னத்தரும்
சுவண மன்னிரு பாதுகை யுன்னுவாம்.
ஸ்ரீமத் நம்மாண்டவன்:
இந்தப்பத்ததியில் ஸ்ரீராமன் பரதருக்கு பாதுகைகளை ஸாதித்த தைப் பற்றி ஸாதிக்கிறார். பரதர் ஸ்ரீ ராமனை அயோத்திக்கு எழுந்தருள வேணும் என்று நிர்ப்பந்தித்தார். அதில் ஸ்ரீராமனுக்கு இஷ்டமில்லை. அப்போது வஸிஷ்டர் இராமனைப் பாதுகையைக் கொடுக்கும்படி ஸாதித் தார். அதன் பேரில் கொடுத்தார் இதைப்பற்றி ஸ்ரீதேசிகன் வேடிக்கையாக ஸாதிக்கிறார் லோகத்தில் ஒருவன் ஒரு ஊருக்குப் போவதற்கு நல்ல நாள் பார்த்திருந்து, அன்றைக்கே புறப்படமுடியாது போனால் அவன் முக்கியமான வஸ்துக்களை வேறொரு இடத்தில் கொண்டு வைக்கிறது வழக்கம். அதற்கு பரஸ்தானம் என்று பெயர். அதுபோல், பரதர் அபேக்ஷித்த காலத்தில் ஸ்ரீராமனுக்குத் திருவயோத்யைக்கு எழுந்தருள முடியாததினால் ஸ்ரீபாதுகைகளை பரஸ்தானம் பண்ணினார்.
உட்கருத்து ஒரு ஜீவன், பெருமாளை "நீர் என்னிடத்தில் வரவேண்டும்" என்றாவது, "உம்மிடத்திற்கு என்னைக் கூப்பிட்டுக் கொள்ள வேணு" மென்றாவது மிக வருத்தத்துடன் அபேக்ஷித்தால் ஸ்ரீ பெருமாள் அவனுக்கு எப்பவும் தம் திருவடியை விட்டுப் பிரியாத நல்ல ஆசாரியனைக் கொடுக்கி றார். அவன் அந்த ஆசாரியர்களின் இஷ்டப்படி நடந்து அவர்களுடைய பரிபூர்ணானுக்கிரஹம் பெற்றால், அந்த ஜீவனும் பெருமாளும் ஒருகாலும் பிரியாமல் சேருகிறார்கள். ஸதாசார்யாநுக்கிரஹமில்லாதவன் பெருமாளோடு சேர்வதில்லை என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக