வியாழன், 22 நவம்பர், 2007

கொஞ்சம் மாறுதலுக்காக

www.காக்கை.com

www.காக்கை.com என வெப்சைட் முகவரியை அதற்குரிய இடத்தில் டைப் செய்தான் ராகுல். மின்னல் வேகத்தில் சில காகங்களின் போட்டோக்களுடன் வெப் சைட் திறந்தது. மவுஸில் ரோலிங் செய்து ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொண்டு வந்தவன், பிடித்த காகத்தின் மீது கர்ஸரை வைத்து க்ளிக் செய்தான். உடனே தகவல்களைப் பதிவு செய்யும் பகுதிக்குச் சென்றான்; பதிவு செய்தான். பணம் செலுத்தும் பகுதி வந்தது. கிரெடிட் கார்டு தகவல்களைப் பதிவு செய்தான். சற்று நேரம் பிராசஸிங் ஆனது. பிறகு "மிஸ்டர் ராகுல் உங்களின் விருப்பப்படி உங்கள் தாத்தாவின் இந்த வருஷ திதிக்கு, நீங்கள் விரும்பிய காகத்துக்கு, நீங்கள் குறிப்பிட்ட மெனுவின்படி உணவு வைத்துவிட்டோம்" என நேரடிக் காட்சிகளுடன் தகவல் வந்தது. உடனே அவனது அம்மாவிடம் , " அம்மா, காக்கா சாப்பிட்டுடுச்சு... நாம சாப்பிடலாமா?" என்று கேட்டான் ராகுல்..

      "கல்கி" 25.11.07ல் வந்த மின்னல் கதை.

    [ இன்று கற்பனை யார் கண்டது நாளை இப்படியேகூட நடக்கலாம்.   நாம்தான் எதற்கும், எல்லாவற்றுக்கும்  ஒரு
சமாதானம் சொல்லிவிடுவோமே!]

1 கருத்து:

  1. இதையே மாற்றி விர்சுவலாக ஒரு நாள் வடபத்ரசாயி, ஒரு நாள் அரவிந்தலோசனன், ஒரு நாள் திருவரங்கன், ஒரு நாள் காளமேகன் என்று போய் வருமாறு எழுதக்கூடாது. விர்சுவலாகப் போகும் போதும் நம் பண்பாட்டைக் கலைக்க முன்வருகிறார்களே தவிர வளர்க்க வருவதில்லை!

    "ஆசைக்கொரு கோயில் ஆஸ்திக்கொரு ஆலயம்" என்றொரு திட்டமுள்ளது. அதன்படி விர்சுவலாக நாம் நமக்குப் பிடித்த கோயிலை 'தத்து' எடுத்துக் கொண்டு அப்பெருமாளை தினம் சேவிக்கலாம்!

    பதிலளிநீக்கு