செவ்வாய், 1 ஜனவரி, 2008

ஸ்ரீவேதாந்ததேசிகவைபவபிரகாசிகைகீர்த்தனைகள்

ஸ்ரீவேதாந்ததேசிகவைபவபிரகாசிகைகீர்த்தனைகள்
[Note: you will notice a few mistakes. But they are not typing errors. I am just reproducing what is in the original. For example line 3 and 4 in "Venba". I did not attempt to correct it as my knowledge on sampradhaya is limited and as I am not a scholor in Tamil also]

திருமேனி வர்ணணை

வெண்பா

வேண்டுவீரன்புபெறுவீரேபவக்கடலைத்
தாண்டுவீர்ஞானத்தனிவிளக்கைத் -- தூண்டுவீர்
தானிவர்னனையுரைக்குஞ்சாந்தவேதாந்தகுரு
மேனிவர்னனையுரைக்கவே.

தரு - இராகம் -- முகாரி -- தாளம் -- சாப்பு.

கண்ணிகள்
கதிர்வீசுமிரவிபோற்கரந்திசேருந்திவ்ய
மங்களவிக்கிரகவேதாந்த தேசிகரே
புதுமலர்ச்சியாகியசெந்தாமரைமலரைப்
போன்றபொன்னடியுள்ள தேசிகரே

களங்கமில்லாமல்மனோகரங்களாகிய
திருக்கனைக்கால்களுமிலங்குந் தேசிகரே
விளங்கிநிற்கிறநல்லமுழந்தாளுடைய
திருவேங்கடநாதார்ய தேசிகரே

திருவரையுமதிற்சாத்தினதிருப்பரி
வட்டச்சேர்த்தியாலும்விளங்கும் தேசிகரே
திருநாபிக்கமலமுந்திருவுத்தரியச்
சேர்வும்சிறந்துவிளங்குமெங்கள் தேசிகரே

மருவுமுந்நூலுந்திருமணிவடத்துடன்
கூடும்மார்பினணிதுலங்குந் தேசிகரே
திருவாழிதிருச்சங்குந்திகழ்புஜங்க
ளுடனேசெழிப்பான நிகமாந்த தேசிகரே

பவித்ரங்களையணிந்தபங்கஜகர
தீர்க்கபாணியுகம்பொருந்தும் தேசிகரே
குவித்தேதிருமந்திரமுங்கொண்டதுவய
முச்சரிக்குந்திருப்பவளவாய்த் தேசிகரே

கிருபைக்குள்ளாய்க்கடாக்ஷிக்கிற
திருக்கண்களென்றேகீர்த்திக்கவேவளருந் தேசிகரே
உருகித்தற்காலங்கண்டுசார்த்தினபனிரண்டு
ஊர்த்துவபுண்டரங்களேற்குந் தேசிகரே

மண்டலந்தனிற்புகழ் கொண்டகண்டாவதாரர்
மவுலிமூடத்துலங்குந் தேசிகரே
தொண்டர்கள்மனத்தன்பு கொண்டிடுஞ்சர்வ
தந்திரசுவதந்தராரியரெங்கள் தேசிகரே

கட்டளைக்கலித்துறை

வடத்தேறுகண்டுயில்கொண்டான்மடுவின்மணியாவின்
படத்தேறுதாண்மிதித்தாடியுங்கோவியர்பாரமுலைக்
குடத்தேறுமார்பர்தங்கண்டாவதாரரைக்கூப்புகையர்
கடத்தேறுவார்கள்கவிவாதிசிங்கரைக்கண்டவரே

தரு - இராகம் -- பரசு -- தாளம் -- ஏகம்

பல்லவி
வெகுவிதமகிமைகள் கொண்டார் -- கவிவாதிசிங்கரே
விருதாங்கித ராவரே.

அனுபல்லவி

இகபரந்தருஞ் சேஷகிரிவேங்க
டேசன்ஸ்ரீநிவாஸனேதந்த (வெகு)

சரணங்கள்

காஞ்சிதமான காஞ்சிமாநக
ராஞ்சனனமுமிவர்க்கே -- விசு
வாமித்திரகுல மாமத்திக்கொரு
சோமசற்குணநாமத்தற்புதர் (வெகு)

ஆக்ஷிபுண்டரீகாட்சராகிய
தீக்ஷிதர்திருப்பேரர் -- எங்கள்
அநந்தாசாரியர்மனந்தனில்மகிழ்
தினந்தோறுஞ்சுனந்தனரிவர் (வெகு)

நன்னலயதி மன்னர்தமையே
யுன்னுவதுசீவனராம் -- நம்ப
ராங்குசர்பதந் தாங்குமனதி
லோங்குபர காலாங்கிரிகொண்டார் (வெகு)

உற்றொருநாவில் வித்தையாவுங்கொள்
புத்திமானிவர்தாமே -- வெகு
உறுதியுள்ளாரென்றறி வீர்கலைக
ணெறிகளறிந்துபொறுமையுள்ளவர் (வெகு)

ஓங்குலகினி லீங்குசொன்னமோட்
டாங்கிளிஞ்சிலாயெண்ணினார் -- வெகு
யோக்கியர்வை ராக்கியத்திற்சி
லாக்கியசுகராக்குமிவரே. (வெகு)

வெண்பா

தரமாங்கண்டாவுருவந்தாங்குவேதாந்தகுரு
வரமாங்கவரடிமையாமெனவே -- மீமாஞ்சை
நல்லவரும்பொருளைநாடினவராகியபே
ரெல்லவருங்கைதொழுவாரே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக