5.பதிற்பயணப்பத்ததி (தொடர்ச்சி)
131. புவிமுன்கவி யிறைவன்னவ னுரைகொண்மன முனிமன்
சவிபின்னவ னசைநல்லா சிபமீதுறு சதிரிற்
கவனந்தரு பலபச்சைகள் கரமேந்திய படிமா
தவனங்கிரி நிலை! நின்வர வெதிர்கொண்டன னனகன்.
132. வருநீபொழி யெழில்கண்டக மகிழ்மாநகர் மகளிர்
விரிமாவிழி லரிமாவரி விழைமாதிரு முகமே
குருமாமலர் பலபூத்தன வெனசாலக வலயந்
தருமாபரி நிறைதாங்கினை தலையங்கிரி நிலையே !
133. தெரிநின்னொளி நகரெல்லையி னடைகொள்ளடி நிலைநீ
வரமன்புர ரிடுவெண்பொரி வரியாயது பரியிற்
புரிதன்பதி பரதன்கர வரணந்திகழ் புகழ்மா
திருமங்கல மணவங்கியி னகையத்தகு சிகையாய்.
134. புரிநீசர வுருதின்னல வுதயந்தர வகலத்
தொருவெண்குடை மதிமண்டல முயரச்சர வுருசா
மரைவீசிட மணிபாதணி மணிமாதர்கள் விழியாங்
கருநெய்தல்கள் மலருங்களி யொளிதந்தனை யருளில்
135 நிகரச்சீலை விசயப்புகர் முகமூர்ந்தடி நிலைநீ
மகிமன்னல நகையில்லா மகிழ்கோசல ருனையே
மிகுமன்னரு ணிசராகவ னெனவுன்முக வுயர்விற்
புகுநின்னெழி லவர்நின்றிரு வரிநோக்கினர் பரிவில்.
136. உறைகோசலர் குறைதீர்த்தரு ளொருசானகி யெனவே
நிறைமாதவ னடிமாநிலை! யிணைநீவரு மணிகண்
ணுறுதங்குது கலமேலெழு புரமங்கல மடவார்
நறுநீளொளி தெளிநேத்திர நலமேவினர் விழைவில்.
137. வெடிநாதமொ டியைபிந்தொடு மிடவாகிடு வடிவத்
திடமாவிடைநடையோங்ஒரு திருவோங்கா மதமா
முடிமேல்வர மறைவேர்ப்பிர ணவநாடிய முதலென்
றடிமாநிலை! தெரியப்புர நடுநாடினை யனைநீ.
138. அடிமாணிலை! தசகந்தர மதசிந்துர மிடியிற்
பொடியாயொரு நொடியிற்பட முடுகாரிய வரிமா
கடமேகிட நுழைகோசல முழைகாத்தனை வழுவா
தடிகாத்திடு பரதச்சிசு வரிகாத்திட வமைநீ.
139. மோகுறுகை கேயியிரு வரமை வைகற்
கோளதுமூ ளவனியிருள் செகுக்கு முள்ளக்
கோகனத மலர்பரதன் யோக மேறு
முடிசுடரு மதியொளியா யயோத்தி மீளும்
வேகமதி லரியகலல் பொறுப்பார்க் குந்தா
ணிலைப்பிரிதல் பொறுப்பரிதா மிறையு மென்ற
வாகுதெளி யுபநிடத மகுடந் தானே
யாகுதிருப் பாதுபுகழ்ப் பாடு வாமே.
140. தோடணி தாணிலை! தோடமு றத்தான்
காடடர் சித்திர கூடம கன்றே
கூடளி பத்திரை யூட்டிடு கன்றை
நாடிடு நாரினி னாடினை நாடே. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக