தரு-இராகம்- ஆனந்தபைரவி-தாளம்-ரூபகம்
பல்லவி
கண்டீரவர்வாதிகள்கண்டீரவர்சேஷகிரி
கண்டாமணிரூபகர்கண்டரேபிரசண்டரே
அனுபல்லவி
மண்டலமீதில்வரதராஜர்பாதம்
வந்தனைசெய்யுமனந்தகுருமைந்தர்
அண்டியபேர்க்கருளேசெய்யும்வேதாந்தா
சாரியபரசூரியரேகாணும் (கண்டீ)
சரணங்கள்
தத்துவத்திரயசுளகமிரகஸ்யத் திரயசுளகமென்றிரண்டு
தத்துவமாதிரிகைரகஸ்யமாதிரிகை தத்துவபதவிரகஸ்யபதவி
தத்துவநவநீதம்ரகஸ்ய நவநீதமென்னுமின்னந்
தத்துவரத்தினாவலி சரளரகஸ்யரத்தினாவலி
பத்தரெல்லாஞ்சொல்லும் ப்ரதிபாத்தியஸங்கிரகமிசை
மற்றினனம்ரகசியரத்தினாவலியிருதயமுஞ்சொலிமகிமைசேர் (கண்டீ)
பரமபதசோபானமும் பகரும்பிரதானசதகம்
தருமபயப்ரதானசாரம் சம்பிரதாயபரிசுத்தியும்
உரமிகுந்த உபகாரசங்கிரகமுமுசிதமாகிய
திரசாரசம்க்ஷேபந் திருமடியடைவுடனிவையெல்லாங்
கரதலாமலகமாய்க்கண்டமணிப்பிரவாளப் பிரபந்தங்கள்
தரணிமேல்ரகஸ்யார்த்த்ங்களின்சம்பிரதாயங்களும் பிரபலமே (கண்டீ)
வெற்றிவிரத்திகூரத்தாழ்வான்வித்தைதனிற்பட்டரென்பார்
நத்திமிக்கானஞானத்தினில் ஞானத்தொருமூர்த்திநிகராய்ப்
பத்திதான்ஒருவடிவுகொண்டாரென்றேபன்னிப்பன்னிச்
சத்துக்களதிசயிக்கவே க்ஷமையிற்பூமியென்றே தரிசன
னத்தர்கள்கொண்டாடு மிராமானுஜன்னிவர்தாமென்றேபிர
சித்தராய்வைபவப்ரகா சிகைவிளங்குந்தேசிகசிகாமணி (கண்டீ)
சத்காரகாளகூடந் தருணிகுணபஞ்சபாபுசங்கி
தக்கராஜதானியுங்கும்பீபாகஞ் சமனாகயெண்ணிப்பரிகரி
சற்குருவாஞ்சருவதந்திரசுவதந்திராரியர்தாமிவரே
மிக்கானசீர்வைஷ்ணவர்விளங்கவேயெம்மைவிற்கவும்பெறுவர்
எக்காலுமென்றேதானினை யுஞ்சாந்தாதிகுணபரிபூரண
கற்கடகவிந்துமேகம்போற் கவிமாரிபொழிதிவ்யவாக்குள்ளார் (கண்டீ)
வைதிககர்மானுஷ்டிப்பு
வெண்பா
வாக்குமிகவுண்டாம்வரதரரருள்பெறுவ
தாக்குமவர்கருணையாநந்தந் --தேக்கும்
வனசரிகையைச் சொல்லிவாழ்த்துந்தூப்புல்லார்
தினசரிகையைச்சொல்வதே.
தரு-இராகம்-கல்யாணி-தாளம்-சாப்பு
பல்லவி
தினசரிகைகளைச் சொல்லுவோஞ் -- சொல்லியேயெங்கள்
வினைகள்யாவையும் வெல்லுவோம்
அனுபல்லவி
வனமாலிகாலங்கிருத மஞ்சுளகந்தரரென்னும்
பனகசயனரடி பணிகவிவாதிசிங்கர் (தின)
சரணங்கள்
பெருமைசிறந்த கலைக்கு -- முதலானவர்
பிரமமுகூர்த்தந் துவக்கு -- எழுந்திருந்து
திருவடிகளை விளக்கிச் -- சுத்தாசமனஞ்
செய்தருளவரன் முறைக்கு -- இசைந்துநல்லா
தரவுடனென்னுயிர் தந்தளித்தவரெனும்படி
குருபரம்பரையாய்க்கொண் டடிபணிந்திடும்பிள்ளை (தின)
உதயகாலத்திற் சிந்தித்துத் -- தோத்திராதிகளை
யுறுதியாயனு சந்தித்து -- யோகசமாப்தியதை
பூர்வகமாய் வந்தித்துச் -- சங்கற்பஞ்செய்து
அபிகமனத்தை சிந்தித்துத் -- திருக்காவேரி
நதிக்கேகவெழுந்தருளிநாடிச்சுருதிசொன்ன
ததிசவுசாசமனதந்ததாவனாதிசெய்குரு (தின)
தீர்த்தமுறையைப் போற்றி -- நீராட்டஞ்செய்து
திருப்பரிவட்ட நேர்த்தி -- யாய்த்தரித்தேபின்
ஊர்த்துவபுண்டரங்கள் சார்த்திப் -- பவித்திரபாணி
யுடனனுஷ்டான மேத்தித் -- தொண்டர்வினையை
மாற்றுமெம்பெருமானைமங்களாசாஸனஞ்செய்து
கீர்த்திமிகுங்கோயிலுக்கெழுந்தருளுந்தேசிகன் (தின)
தரணிசொல்முப்பத்தி ரண்டு -- என்றபசாரத்
தையும்பரிகரித்துக் கொண்டு -- சேவாக்கிரமத்தில்
திருவடிதொழுவ துண்டு -- அங்கங்கேதானே
சிறந்ததற்காலங் கண்டு -- பிரபந்தங்களாந்
திருப்பள்ளியெழுச்சிநந்திருப்பாவைகத்தியமுதல்
வரப்பெறுந்தோத்திரங்களைவழுத்தும்வேதாந்தகுரு. (தின)
அருளையுள்ளத்திற் றரித்து -- ஆபாதகேச
மாகக்கொண்டு முச்சரித்துக் -- கண்டுபெரிய
பெருமானைநமஸ் கரித்து -- உடனேதீர்த்தப்
பிரசாதமுஞ்சுவீ கரித்துத் -- தம்முடையன்பு
பெருகியாராதனமாம்பேரருளாளரையும்
வருமயக்கிரீவரையும்வந்திக்குங்கண்டாவதாரர். (தின)
அபிகமனத்தை யெடுத்து -- வியாக்கியானகூட
மதனில்வந்தே யடுத்து -- அவரவர்க
ளபேக்ஷாகுணங்கள் கொடுத்துச் -- சீபாஷியமுத
லானகிரந்தங்கள் தொடுத்து -- மணிப்பிரவாள
விபவரகசியார்த்தங்கள்விளங்கப்பிரஸாதித்தங்கே
சுபமேவுஞ்சருவதந்த்ரசுவதந்தராரியர் செய்யுந் (தின)
தக்கசிஷ்யர்மனத்தியா னத்தைப் -- பொருந்திக்கொண்டு
சமர்ப்பித்தஉபதா னத்தைப் -- பாத்திரமேயத்
தஸ்கரகிராகிய மானத்தைக் -- கொண்டுமேயாரா
தனஞ்செய்தருளி ஞானத்தை -- விளக்கவந்தார்
முக்கியமாமகத்தியசாகம்முதலாந்திரவியமுடனே
மிக்கதளிகையைச் சமர்ப்பிக்குநிகமாந்தகுரு. (தின)
உச்சிதவைசுவ தேவாதி -- களைச்செய்து
உண்மையாகமந்த்ர மோதி -- யாகாந்தரத்தில்
இச்சையைச்சமர்ப்பித்து மேதி - னியிற்புகழும்
இராமாநுஜானுபவ ரீதி -- ஆழ்வார்கள்சொல்லும்
மெய்ச்சுருதிப்பொருள்களுமேன்மையாம்புராணவகை
அச்சுதகுணவர்ணனையாவுந்தொண்டர்க்கருள்குரு. (தின)
காலாழுநெஞ்சழியு மென்னும் -- சொல்லின்படியே
கண்டனுபவித்தவர் முன்னுஞ் -- சாயங்காலத்தில்
மாலாயனுஷ்டானத்தின்பின்னும் -- அருளாளரை
மங்களாசாஸனஞ்செய்துன்னும் -- அந்தரங்கத்தில்
மேலானதொண்டருக்குமிகுந்துசூக்ஷுமார்த்தங்கள்
லாலாமுதமுண்டவர்சல்லாபமாயருளிச்செய்யும் (தின)
கண்வளர்தலென்பது முண்டு -- சுபத்தினீகனாங்
கண்ணனைமனதினுட் கொண்டு -- யோகநித்திரை
பண்வளர்வந்தவர் கண்டு -- எழுந்திருந்தே
பண்டுபோலேநாள்தோறுங்கொண்டு -- மாலுக்கேசெய்வார்
எண்வளரும்பிரபந்தங்களெங்கணும்பிரசித்தமாக
விண்வளரும்நிலவென்னவிளங்கும்வேங்கடநாதர் (தின)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக