ஞாயிறு, 18 நவம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப்ரகாசிகைக் கீர்த்தனைகள்

வெண்பா

ஆழமண்டவும்படரவாமடுவிலோலமிட்ட
வேழமண்டவுக்கராவேசிதைந்து - வீழமண்ட
 சூழமண்டவாழியனைத்தூப்புலார்சேவிப்பர்
சோழமண்ட லந்தனில்வந்து
.

தரு-இராகம்- சங்கராபரணம்- தாளம்- சாப்பு.

பல்லவி

சேவித்தார்  எங்கள்திருவேங்கடநாதாரியர் - சேவித்தார்

அனுபல்லவி

வாவிகூவநிறைந்தகாவிரிவளநாட்டில்

மேவுசோழமண்டலத்தேவர் திருப்பதியை           (சேவி)

சரணங்கள்

திருப்பேர்நகரிலப்பக்     குடத்தானை - அம்பில்
     சேர்ந்தநாகத்தணையாந்  தடத்தானை - மிக

விருப்பமாங்கண்டியூரி   னிடத்தானை -அங்கே
       மிண்டியரசன் சாபந்தீர்   திடத்தானை --யின்ன

மருப்பரவியதஞ்சைமாமணிக்கோயில்வளர்ந்
      திருக்குமெனக்கரசை  யென்றஞ்சையாளியையும் (சேவி)
 

வடகரைப்புள்ளம்பூதங்குடி    கொண்டே வளர்
     வல்வில்லிராமனடி    யிணைகண்டே -- பணிந்

தடைவுடனாதனூர்   தனிற்பண்டே -- படி
  
     யாண்டளக்குமய்யர்க்கு வெகுதொண்டே - செய்து
தடமீதுவந்துகவித்தலத்திற்கண்ணனுக்கே
 யன்பிடுவார்கூடலூர்க்காவிரிப்பெருநீர்வண்ணனைக்கண்டு (சேவி)

மணந்தரும்பொற்றாமரைப் படர்ந்தையே -செழு
    மாமணிசேருந் திருக்    குடந்தையே - மலர்
அணிந்தகோமளவல்லி  மடந்தையே-  வாழு
    மன்பர்க்கேயிவரரு     ளுடந்தையே -- யென்று
தணிந்தேவணங்கியானந்தவெள்ளம்பெருகக்கொண்டு
     பணிந்தாராராவமுதத்தைப்பருகியனுபவித்து      (சேவி)

நந்திபுரவிண்ணகர     நாதனைத் - திரு
     நறையூர்நம்பியாம்வேதப்   பாதனை - யருள்
தந்ததிருச்சேறையின்    மீதனை - யெங்கள்
      தண்சேறைவள்ளலாம்வி   நோதனைப் -- பணிந்
துந்திருவிண்ணகரிலும்பர்கள்தொழவரும்
    அந்தவிண்ணகர்மேயப்பனடியைக்கண்டுஞ்   (சேவி)

கண்ணமங்கையிற்பத்த    ராவியே-- கண்டு
     கண்ணாலாநந்தவாரி    தூவியே - செய்ய
கண்ணன்மகிமையைக்கு     லாவியே - திருக்
     கண்ணங்குடியதனை     மேவியே - நல
மென்னுஞ்சிலையினாலிலங்கைதீயெழச்செற்ற
      அண்ணலுடனேநாகையழகியாரையுங்கண்டு  (சேவி)

திருக்கண்ணபுரத்துறை     கின்றானை -- அங்கே
     சேர்ந்துகருவரைபோல்  நின்றானை - வலம்
பெருக்குந்தொண்டர்வினையை வென்றானை - நல்ல
     பேறாஞ்சிறுபுலியூர  னென்றானை - அந்த
அருண்மாகடலமுதத்தையும்வெள்ளியங்குடியில்
      வருகோலவில்லிராமனையுமனதுட்கொண்டு   (சேவி)

திருவணியழுந்தூரில்     வந்தனை - செய்து
   தெய்வத்துக்கரசை    முகுந்தனை - யின்னந்
திருவிந்தளூரதனைச்    சிந்தனை - கொண்டு
   சேர்ந்து மருவினிய    மைந்தனைப் -- புகழ்
விரவுதலைச்சங்கத்தில்விண்ணோர்நாண்மதியையும்
     பரவியெம்பெருமானைப்படியளந்தோனேயென்று  (சேவி)

நலமேவியதுளவத்   தோளனை --நாளும்
    நான்மறைபரவிய  தாளனை - யென்று
நிலமையாகியகிருபை  யாளனை -- வள
    நேர்வயலாலிமண    வாளனைத் - தமிழ்க்
கலியன்முன்னிலையாகக்காணும்பரிவுகொண்டு
    நலதிருவாலிதிருநகரிதனிலேகண்டு                 (சேவி)

விருத்தம்

புயலாலிணைகளேசொல்லும்பூமேனியவனைவண்டு
செயலாலிகூறுகின்றதிருத்துழாய்மார்பினானை
வயலாலிதனிலேயேத்திவருகவிவாதிசிங்கர்
கயலாலிசையுஞ்செய்நன்னாங்கையில்வந்துபரவினாரே.

தரு - இராகம் -முகாரி - ஆதி.

கண்ணிகள்

நாங்கூர்ப்பதியினில் - மணிமாடக்கோயில்
   நந்தாவிளக்கையுமேத்திப் - புகழ்
வீங்கும்வைகுந்தவிண்ணகரிற்பின்னைசெவ்
     வித்தோள்புணர்ந்தானைப்போற்றி                       (1)

அரிமேயவிண்ணவர்குருமணியென்னா
    ரமுதத்தைவந்தனைநீடித் - தமிழ்
மருவுந்திருத்தேவனார் தொகைமேவிய
    மாதவப்பெருமானைப்பாடி.                                  (2)

சீர்புருஷோத்தமத்தண்ணனைவான்செம்பொன்
    செய்கோயில்வானவர்கோனைத் - தொழு
வார்திருத்தெற்றியம்பலத்திற்செங்கண்
    மாலானவானந்தத்தேனை.                                   (3)

மின்மணிக்கூடத்திற்கடுமழைகாத்த
     வேந்தினைக்காவளம்பாடி - நாகத்
தின்னடுக்கந்தீர்த்தானையெம்மண்ணலைத்
     திருவெள்ளக்குளத்திலேகூடி                                  (4)

பார்த்தன்பள்ளியிற்செங்கண்மாலவனைப்
     பணிந்தருள்பெற்றவிசேஷம் -  மிகுஞ்
சீர்த்தியாங்காழிச்சீராமவிண்ணகர்
     தில்லைத்திருச்சித்ரகூடம்                                      (5)

வந்துவிளங்கியகோவிந்தராஜனை
    மங்களாசாஸனங்கூறி - யங்கே
முந்துபரமாசாரியனாநாத
    முனியென்னும்பிரானருள்வீறி                                (6)

கொண்டுவீரநாராயணபுரத்திற்
     குருகாவலப்பன்பிரானைத் -  தேவ
மண்டலம்போற்றுந்திருமுட்டமேலாதி
    வராகநயினாரென்கோனை                                  (7)

திருப்பதிகளின்மீதிற்சிறந்தவான்சுடரைச்
    சேவைசெய்துமுகந்தாரே - அன்பு
பெருக்கியபேரருளாளரைச்சேவிக்கப்
       பெருமாள்கோயில் வந்தாரே.                            (8)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக