சனி, 24 ஏப்ரல், 2010
ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ஸ்ரீராமன்.
இன்றைய 4ம் நாள் உத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி. காலை 10.30 மணிக்கு வீதிப் புறப்பாட்டிற்குப் பிறகு ஆச்ரமம் எழுந்தருளிய இராமன் அங்கு விசேஷ திருமஞ்சனம் கண்டருளி, மாலையில் சாற்றுமுறை கோஷ்டிக்குப் பின், கோவிலிலிருந்து வந்து இணைந்து கொண்ட பெருமாளுடன், ஆளுக்கொரு கருட வாகனத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளி ஆஸ்தானம் சென்றடைந்தார். ததீயாராதன கைங்கர்யங்களுடன் மண்டகப்படி வேலைகளும் சேர்ந்து இன்று பூரா பிஸி. இப்போதுதான் (11.30 ) முடிந்து வீட்டிற்குள் நுழைந்தேன். சோர்வு மிகுதியால் இரண்டே படங்கள் இப்போது. இரண்டாவது படம், கிட்டத்தட்ட இப்போதைய அடியேன் மனநிலையை பிரதிபலிக்கும். நாள் பூராவும் கூட இருந்தவர் இனி அடுத்த வருடம் தான் வரப்போகிறார். மீண்டும் அந்த பாக்யத்தை அடியேனுக்கு அளிப்பாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதனாலே மனதுக்குள் ஒரு வெறுமை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெறுமையா? அப்படித் தெரியவில்லையே!
பதிலளிநீக்குஅவன் எப்போ வருவானோ என்ற எதிர்பார்ப்பில் அலங்காரத் தோரணங்களும் விளக்கொளியும்
மின்னும்படியான குதூகலம் தானே தெரிகிறது!
சௌந்தர்
இது புறப்பாடு ஆரம்பித்த பிறகு எடுத்த படம். அதுவரை சுமார் 100 - 150 பேர்கள் வந்தும் போயும் இராமனைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் கிளம்பியதும் அங்கிருந்த நிலையைத் தான் குறிப்பிட்டேன். ஒருவர் கூட இல்லை பாருங்கள்.
பதிலளிநீக்கு