வியாழன், 22 ஏப்ரல், 2010
திருப்புல்லாணி சித்திரை உத்ஸவம் 2ம் நாள் இரவில்
பங்குனி மாதம்தான் விலாவாரியாக எழுதியாச்சே! அதையே சித்திரையிலும் எழுத வேண்டுமா என நினைத்து படங்களை மட்டும் இங்கு இடுவோம் என நினைத்தால், "அவன்" என்னைக் கொஞ்சமாவது எழுத வைக்கிறான். பாருங்களேன்! இன்று இரண்டாம் திருநாள்! சிவகங்கை சமஸ்தான மண்டகப்படிசமஸ்தானம் சார்பில் யாராவது ஒருவர் வருவார். மண்டகப்படிகளிலேயே மிகவும் சீக்கிரமாகப் புறப்பாடு ஆகிவிடும் மண்டகப்படி இது. ஏழரை மணிக்கெல்லாம் புறப்பாடு சாற்றுமுறைத் துவக்கத்துடன் ஆரம்பமாகி விட்டது. அப்படிப் புறப்பாடு ஆனவுடன்,,நடுவில் எங்கும் நிற்காமல், தேரடியில் ராஜ மரியாதை(அதாவது அவர்கள் பிரதிநிதியாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு) ஆன பிறகே மற்றவர்கள் கண்டருளப் பண்ண முடியும். இது தொன்று தொட்டு வரும் மரபு. கோவிலுக்கும் தேரடிக்கும் நடுவில் தேசிகன் ஸந்நிதி, வானமாமலை மடம் ஆகியவை இருந்தாலும் பெருமாள் திரும்பி வரும்போதுதான் இங்கு ஒரு நிமிடம் நின்று கண்டருளப்பண்ணப் படும் உபகாரங்களை ஏற்றுக் கொண்டு செல்வார். ஆனால் இன்றோ, கோவிலை விட்டுக் கிளம்பி சரியாக தேசிகன் ஸந்நிதி வாயிலில் திடீரென ஜெனரேட்டர் பழுதாகி நின்று விட்டார். சுமார் 20 நிமிடங்கள் கழித்தே பழுது சரியானது. எங்களுக்கெல்லாம் ஒரு கற்பனை! ஒருவேளை ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ ராமனுக்கு மட்டுமே கேட்கிற அளவில் தான் இயற்றிய "ரகுவீரகத்ய"த்தை ஸேவிக்க, அதைக் கேட்பதற்காகவே ராமனும் தாமதம் செய்தானோ என்று. வெளிக்கதவை மட்டும் பூட்டிவிட்டு ததியாராதன கைங்கர்யங்களை கவனிக்கச் சென்றிருந்த தேசிகன் ஸந்நிதி ஆராதகர் ஸந்நிதி வாயிலில் ராமன் நிற்பது தெரிந்து ஓடிவந்து கதவைத் திறந்த சில நிமிடங்களில் பழுதும் சரியானது. தன் சரிதத்தைப் பூராவும் கேட்டுவிட்டாரோ என்னவோ ராமனும் திருவீதிப் புறப்பாட்டைத் துவக்கி தொடர்ந்தார். சில படங்கள் இங்கு!
லேபிள்கள்:
திருப்புல்லாணி உத்ஸவங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆஹா.. ராமன் அழகு அப்படியே கட்டிப்போடுகிறது.. சிம்ம வாஹனத்தில் ராஜகம்பீரத்துரன் இருக்கார்..
பதிலளிநீக்குஎன்ன ப்ரு பொருத்தம் பாருங்கள் இன்று..
பதிலளிநீக்குசிம்ஹ வாகனம்!!
ராஜசிம்மம் போன்று பெருமாள்!!
இதற்கெல்லாம் மேலாக, நம் கவிதார்க்கிக சிம்மம்.. தன் மகாவீர வைபவத்தை எம்பெருமான் பக்கலிலே நின்று சேவித்த வைபவத்தை என்னவென்று சொல்வது!!
ஸ்ரீவில்லிபுத்தூரிலே, தேசிகரைத் தேடி வந்து, கோதா ஸ்துதி கேட்டு வாங்கிய நம் ஆண்டாளைப் போலவே இன்று அவள் மனத்துக்கினியான், ரகுவீர கத்யத்தினை..தேசிகரின் வாயிலாகவே கேட்டு மகிழ்ந்தான் போலும்..
ஸ்ரீ ராமரையே இழுக்க .....
பதிலளிநீக்குபசு ரொம்ப என்ன புண்ணியம் செய்ததோ!
தேசிகருக்கு காத்துக் கிடக்கும் இராமன் புகைப்படம் சூப்பர்! :)
பதிலளிநீக்குகுட்டிப் பசங்களும் தான்!
/சிம்ம வாஹனத்தில் ராஜகம்பீரத்துரன் இருக்கார்//
பதிலளிநீக்குயப்பா ராகவ்வு, சிம்ம வாகனம் Scarf எல்லாம் கட்டி இருக்கு! கொஞ்சம் உத்துப் பாரு! யாரு துப்பட்டாவோ, தெரியலை, ஆனா அழகா இருக்கு! :)
அண்ணா, என்னோட மத்த ரெண்டு கமெண்ட் காணோம்.. பப்ளிஷ் பண்ண மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குraghav, ennoda comments-um missing! annan-thambi comments eppdi miss aagalaam? :)
பதிலளிநீக்குpubleesh pannungo! :)